…
…
நேற்றைய தினம் சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன –
—————————
கடந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில்,
மொத்தம் பதிவான ஓட்டுகள்
என்று தேர்தல் கமிஷனால் முதலில்
அறிவிக்கப்பட்ட எண்களுக்கும், ஓட்டு
எண்ணிக்கையின்போது வெளியிடப்பட்டுள்ள
அனைத்து கட்சிகளும் சேர்ந்து பெற்ற
மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கைக்கும்,
நாடு முழுவதுமாக சுமார் 370 +தொகுதிகளில்
வேறுபாடுகள் இருப்பதாக ஒரு தகவல்
வெளியாகியுள்ளது.
…

…
அதைக்குறித்த, தமிழ்நாட்டின்
சில தொகுதிகளைப்பற்றிய சில விவரங்கள் கீழே –
…

————————————————-
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன்
ஜனவரி – மார்ச் காலாண்டில் 5.8 சதவீதமாக
சரிந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில்
இல்லாத அளவுக்கு தற்போது பொருளாதார வளர்ச்சி
பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகவேகமாக வளர்ச்சியடையும் நாடு
என்ற பெயரை சீனாவிடம் இந்தியா இழந்திருக்கிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த
விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன.
கடந்த ஆண்டில் முதல் காலாண்டில் பொருளாதார
வளர்ச்சி 6.6 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டில்
அது 5.8 சதவீதமாக குறைந்துள்ளது.
———————————————-
இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத
அளவிற்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதமாக
அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில், நாட்டின் வேலைவாய்ப்பின்மை
2017-18 ஆம் ஆண்டில் 6.1 சதவீதமாக
அதிகரித்துள்ளது. இது நகர்புறங்களில் 7.8 சதவீதமாகவும்,
கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாக உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தேசிய மாதிரி ஆய்வு புள்ளியியல்
அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில்
2017-18 ஆம் நிதியாண்டில் வேலையில்லாதோர்
எண்ணிக்கை 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு
அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இதனை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து மோடி அரசு மீது
குற்றச்சாட்டுகளை குவித்தது.
இதையடுத்து அப்படியொரு தகவல்
வெளியிடப்படவில்லை என மத்திய அரசு
அன்று மறுத்தது.
தற்போது பாஜக அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ள
நிலையில், இன்று வேலைவாய்ப்பின்மை
45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு
அதிகரித்துள்ளது என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக
வெளியாகி உள்ளது.
.
————————————————————————————–
அதனாலென்ன – கிடக்கிறது விடுங்கள்…
இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது…?
.
—————————————————————————-



// கிடக்கிறது விடுங்கள்…
இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது…? //
உண்மை தான்.
ஊரே வெள்ளத்தில் போயாகி விட்டது. பிறகென்ன ?
அப்படி நினைக்கக்கூடாது. தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் செய்த பல தவறுகளை மோடி அவர்கள் உபயோகப்படுத்திக்கொண்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. மோடி அவர்களைக் குறிவைப்பதை விட்டுவிட்டு இராணுவத்தைச் சந்தேகப்பட்டதும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசியதும் பெரிய வெறுப்பை காங்கிரஸ் சம்பாதிக்கக் காரணமாகிவிட்டது என்று தோன்றுகிறது. தமிழகத்தில் தாங்கள் செய்த ஒவ்வொன்றையும் மோடி/பாஜக மீது சுமத்திவிட்டது திமுக/காங்கிரஸ், ஆரம்பத்திலிருந்தே. (நீட், மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் என்று ஒவ்வொன்றும்)
பார்ப்போம் ராகுல் எப்படி இதனை இனிமேல் ஹேண்டில் செய்யப்போகிறார் என்று. நல்ல தேசிய எதிர்கட்சி தேவை நமக்கு. இல்லைனா, பிளாக்லகூட ஹிந்தி உபயோகப்படுத்தணும் என்ற அளவில் வராமல் இருந்தால் சரிதான் (ஹிந்தி மீது வெறுப்பு இல்லை. ஆனால் நீ இதைத்தான் செய்யணும் என்று சொல்லும் ஆதிக்க உணர்வை வெறுக்கிறேன்)
முன்னமே பலதும் தெரிந்து இருந்தும் என்ன ஆகிவிட்டது ..// மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கைக்கும்,
நாடு முழுவதுமாக சுமார் 370 +தொகுதிகளில்
வேறுபாடுகள் இருப்பதாக ஒரு தகவல்
வெளியாகியுள்ளது.// என்பதை பற்றி தெரிந்துகொண்டதை தவிர …!