ஆனந்தமான இடம் – மகிழ்ச்சியான மக்கள்…!!!


 

உலகிலேயே ஆனந்தமான இடம் –
மகிழ்ச்சியான மக்கள்…!!!

அடுத்து நான் செல்ல
மிகவும் ஆவலாக உள்ள
ஒரு இடத்தைப் பற்றிய சில காணொளிக்
காட்சிகளை கீழே தந்திருக்கிறேன்…

மகிழ்ச்சி என்பது எதை வைத்து
தீர்மானிக்கப்படுகிறது…?

அதிக வருமானம் கிடைக்கும் இடமா…?
அல்லது அதிக வசதிகள் இருக்கும் இடமா…?
அல்லது அதிக கேளிக்கைகள் நிகழும் இடமா…?

பொதுவாக நாம் இதில் எதாவதொன்றைத்தானே
தேர்ந்தெடுப்போம்…?

ஆனால், உலகில் ஒரு நாடு –
ஒரே ஒரு நாடு மட்டும் –

அதன் மக்கள் அதிக அளவு மகிழ்ச்சியுடன்
வாழ வேண்டும் என்பதையே
கொள்கையாக, லட்சியமாக,
நடைமுறையாக – வைத்திருக்கிறது.

GDP (Gross Domestic Product) என்பதை,
இந்த நாடு வகைப்படுத்தியிருக்கும்
விதமே தனி.
மக்களின் அதிக பட்ச மகிழ்ச்சியையே
GDP -க்கானஅடிப்படையாக
அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சரி – அதை எப்படி கணிப்பார்கள்…?

அதற்கான 4 அடிப்படை காரணிகளும்
மன்னரால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன…
என்ன அவை…?
பாருங்களேன் இந்த காணொளிகளை –
உங்களுக்கே புரியும்.

கிழக்கு இமயமலையில்,
சுமார் 7000 அடி உயரத்தில்
திபேத், சிக்கிம், அருணாசல் பிரதேசம்,
அஸ்ஸாம், மேற்கு வங்கம் –
ஆகியவற்றிற்கு இடையில்,
அமைந்துள்ள –

சுமார் 8 லட்சம் மக்களை மட்டுமே
கொண்ட ஒரு தனி முடியாட்சி நாடு….!!!

பூடான் – பற்றிய சில
குறு காணொளிக் காட்சிகள் கீழே –

நீங்கள் தவற விடாமல் பார்க்க வேண்டுமே
என்று குட்டி குட்டி காணொளிகளாக
சேர்த்திருக்கிறேன்….

.
———————————————————————————————————-

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஆனந்தமான இடம் – மகிழ்ச்சியான மக்கள்…!!!

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! கண்டிப்பாக சென்று வாருங்கள் – ! முன்பு 06/03/2017 விகடனில் பூடான் பற்றி ஒரு விரிவான கட்டுரை வந்தது .. அதன் ஆரம்பமே ….

    // இந்தியாவின் அருகில் உள்ள நாடு பூட்டான். ஆசியாவின் ‘ஸ்விட்சர்லாந்து ‘ எனச் சொல்வார்கள். பணமும் பவிசும் இல்லாத எளிமை நிறைந்த மக்கள். அரசும் எளிமையானது. மன்னர் ஆட்சி முறைதான். மக்கள் மகிழ்ச்சி மட்டுமே அரசின் இலக்கு. மீத்தேனும் கிடையாது… அணு ஆயுதமும் தயாரிக்காது… எந்த நாட்டுடனும் போர் புரிந்ததில்லை. விவசாயம்தான் முக்கியத் தொழில்… இந்த நாட்டில் மக்களின் மகிழ்ச்சியைப் பாதுகாக்க ‘Happiness’ என்ற தனித்துறை இயங்குகிறது // ..என்று நல்ல பல தகவல்களை அறிய :– https://www.vikatan.com/news/india/82848-bhutan-the-worlds-happiest-country.html

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி செல்வராஜன்.

      செல்ல விருப்பம் தான். ஆனால் இப்போதைக்கு
      சாத்தியமில்லை. எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ – பார்ப்போம்…!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    Sir,
    What happened to you?

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    தலைப்பில் எழுத்துப் பிழை இருக்கு. ஆனந்தமயமான அல்லது ஆனந்தமான என்று வந்திருக்கணும்.

    அரசியல் இடுகைகள் வந்து நாளாகிவிட்டதுபோல் தோன்றுகிறது. நலம் தானே?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      நன்றி புதியவன். கவனக்குறைவு – அவசரத்தில் கவனிக்கத் தவறி விட்டேன்.
      சரி செய்கிறேன்.

      நலமே… உங்கள் அன்புக்கு நன்றி.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அன்பு நண்பர்களுக்கு,

    மிக அவசரமான ஒரு குடும்பப் பொறுப்பு
    காரணமாக திடீரென்று 2 நாட்கள்
    வெளியூர் செல்ல வேண்டியதாகி விட்டது.
    கணிணி பக்கம் போகவே முடியவில்லை.

    சொல்லாமல் சென்றது என் தவறு தான்.
    மன்னிக்க வேண்டுகிறேன்.

    நிறைய அன்பு உள்ளங்கள்
    நலம் விசாரித்திருக்கின்றன…
    நான் கொடுத்து வைத்தவன்…!
    நலம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும்
    என் உளமார்ந்த நன்றிகளை
    தெரிவித்துக் கொள்கிறேன்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.