பாஜக 200+(ப்ளஸ்) … பாஜக 200- (மைனஸ்)… என்ன வித்தியாசம்….???


இந்த தேர்தலைப்பொறுத்த வரையில் 200 என்பது
ஒரு மிக முக்கியமான குறியீடாக
கருத்து கணிப்பாளர்களால் கருதப்படுகிறது.
பாஜகவுக்கு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில்
200- க்கு பக்கமாக சீட்டுகள் கிடைக்கும் என்று
சில கருத்து கணிப்புகள் சொல்கின்றன….

4-வது கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில்,
இந்த கருத்து கணிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

பாஜகவின் – தேர்தலுக்கு முந்தைய (NDA)கூட்டணி கட்சிகள்
வெற்றி பெறக்கூடிய எண்ணிக்கையாக கூறப்படுவது –

சிவசேனா-(மஹாராஷ்டிரா) – 10-15,
நிதிஷ்குமாரின் ஜனதாதள் -பீஹார் (JDU )- 8-10
ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி- 3-4
அகாலி தள் (பஞ்சாபில் காங்கிரஸ் பலமாக இருப்பதால்..)- 3-4 ,
தமிழகத்தில் அதிமுக கூட்டணி கட்சிகள் -5
மற்ற உதிரிக்கட்சிகள் அனைத்துமாக சேர்த்து – 8-10

ஆக மொத்தம் – சுமார் 40 சீட்டுகள்.
பாஜகவின் 200 ப்ளஸ் இந்த 40 -ஐயும் சேர்த்தால்
240-250 தான் கிடைக்கிறது.
மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்த பட்ச
தேவை – 273 எம்.பி.க்கள்.

எனவே, NDA-வுக்கு வெளியிலிருந்தும் கட்சிகளின்
ஆதரவை இழுக்க வேண்டியிருக்கும்.

பாஜகவுக்கு 200-க்கு மேல் சீட்டுகள் கிடைத்தால் –
அதால் ஆட்சியமைக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்தால் –
சுலபமாக வந்து ஒட்டிக்கொள்ளக்கூடிய சில கட்சிகள் உண்டு.

தெலங்கானாவின் சந்திரசேகர் ராவு – 14-15 சீட்டுகள்.
ஆந்திராவின் ஜெகன் ரெட்டி – 15-18 சீட்டுகள்.
இன்னும் உதிரியாக சேரக்கூடிய சிலவற்றை சேர்த்தால் –
273 என்கிற மேஜிக் எண்ணை அடையலாம்…
ஆட்சியையும் கைப்பற்றலாம்.

———————

ஒருவேளை பாஜகவுக்கு 200-க்கும் குறைவாக என்றால் …
காங்கிரசின் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி பெறக்கூடிய
எண்ணிக்கை 150-200 -க்கும் இடையே இருக்கும்…
காங்கிரசுடன் அணியுடன் சேர்ந்தால் கூட்டணி ஆட்சியமைக்க
இயலும் என்கிற நம்பிக்கை வந்தால் –

அதனுடன் (தேர்தலுக்கு பிந்தைய ) கூட்டு சேர
முன் வரக்கூடிய கட்சிகள் –

த்ரினமூல் காங்கிரஸ் – 25-30,
அகிலேஷ் யாதவின் SP கட்சி – 30-35
தெலுகு தேசம் – 5-8
ஆம் ஆத்மி – 5-8

யார் ஆட்சியமைத்தாலும் அவர்களுடன் சேரக்கூடிய கட்சிகள் –

-ஆந்திராவில் ஜெகன் ரெட்டியின் கட்சி – 15-18
-தெலங்கானாவின் ச.சே.ராவ் கட்சி – 14-15

வெளியிலிருந்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு
தரக்கூடிய கட்சிகள் –

மாயாவதியின் BSP – 30-35
இடது சாரி கட்சிகள் – 10 -15

ஆக மொத்தம் – 273 ஐ சுலபமாகத் தாண்டி விடும்.

எனவே 200 ப்ளஸ் என்பது ஒரு phsychological barrier.
பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால்,
200 ப்ளஸ் அதற்கு அவசியம் தேவை…

கிடைக்குமா….?????
A Million Dollar Question…!!!

.
————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to பாஜக 200+(ப்ளஸ்) … பாஜக 200- (மைனஸ்)… என்ன வித்தியாசம்….???

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    சமூகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆய்வுகளுக்கான மையம் (CSEPR) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை,

    பாஜக கூட்டணிக்கு 206 தான் என்கிறது.

    அது இன்னும் குறைந்து, ஆட்சி அமைக்க வாய்ப்பே ஏற்படாத எண்ணிக்கை பெற்று, இந்த நாட்டை இறைவன் காப்பாற்ற வேண்டும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      அறிவழகு,

      உங்களுக்கு பிரார்த்தனையில் நம்பிக்கை இருந்தால் அதைச் செய்யுங்கள்.
      ஆட்சியில் தற்போது இருப்பவர்கள், அதை அவ்வளவு சுலபமாக
      பறிபோக விடுவார்களா…? அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள
      அவர்களால் இயன்றது அனைத்தையும் செய்வார்கள்…
      எனவே, அவ்வளவு சுலபமாக ஆட்சி மாற்றம் வந்து விடும்
      என்று நினைத்து விடாதீர்கள்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    இந்த இடுகையின் கருத்து பதிவை விட — இதற்கான புகைப்படம் தான் அபாரம் …! — பல வண்ணங்களில் — பயங்கர சிக்கலில் psychological barriers — உளவியல் தடைகள் … ! இந்த உளவியல் தடைகள் என்பது யாருக்கு என்பதை விளக்குங்களேன் …!!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      சிலவற்றை யூகத்திற்கே விடுவது தான் சுவாரஸ்யம்.

      அல்லவா… ???

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    உங்கள் அனுமானத்தின் பிரகாரம், உ.பியில் பாஜக ஒரு சீட்டுகூட வெற்றி பெறாது என்பதுதான். (மாயாவதி 35-40, அகிலேஷ் 30-35). இது கொஞ்சம் அதீதமாகத் தோன்றுகிறது. பாஜக 200க்குக் கீழே போனால், அது ஆட்சி அமைக்கக்கூடாது என்பது என் எண்ணம். அதுவும்தவிர, மோடி அவர்கள், வாஜ்பாய் போன்று மற்ற கட்சிகளை அட்ஜஸ்ட் செய்துபோகும் எண்ணம் கொண்டவரல்லர். அதனால் கூட்டணி, மோடி தலைமைக்கு சரிப்பட்டுவராது.

    எங்கே திமுக, பாஜகவுடன் சேர்ந்துவிடுமோ என்ற பயத்தில்தான் திருமா, கூட்டணி நிரந்தரமல்ல, வேறு கூட்டணி அமைய சாத்தியம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறாரோ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      // உங்கள் அனுமானத்தின் பிரகாரம், உ.பியில் பாஜக ஒரு சீட்டுகூட வெற்றி பெறாது என்பதுதான். (மாயாவதி 35-40, அகிலேஷ் 30-35).
      இது கொஞ்சம் அதீதமாகத் தோன்றுகிறது //

      பாஜகவுக்கு உ.பி.யில் ஒரு சீட்டு கூட கிடைக்காது என்று நான் சொல்லவே இல்லையே…!!!
      நான் அப்படிச் சொல்லி இருபேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா..?
      உ.பி.யில் பாஜக பெறும் சீட்டுகள் அதன் மொத்த எண்ணிக்கையில் அடங்கி விடுகின்றன..

      மாயாவதி 35 ப்ளஸ் அகிலேஷ் 30 = 65 என்று வைத்துக்கொண்டால், மீதி பாஜகவுக்கு பாக்கி இருக்கிறதே…!!!

      ———

      //அதுவும்தவிர, மோடி அவர்கள், வாஜ்பாய் போன்று மற்ற கட்சிகளை அட்ஜஸ்ட் செய்துபோகும் எண்ணம் கொண்டவரல்லர். அதனால் கூட்டணி, மோடி தலைமைக்கு சரிப்பட்டுவராது. //

      மோடிஜியை அநியாயத்திற்கு கௌரவப்படுத்த பார்க்கிறீர்கள்…
      மோடிஜியும், அமீத்ஜீயும் – மீண்டும் ஆட்சியை பிடிக்க – எதையும் செய்ய தயாராக
      இருப்பார்கள். ஆனால், கூட்டணி சேரவிருப்பவர்கள் தான் இவரது தலைமையை
      ஏற்க மறுப்பார்கள்…………………………………………என்பது என் அபிப்பிராயம்… 🙂 🙂 🙂

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • bandhu's avatar bandhu சொல்கிறார்:

        முழுமையாக ஒத்துக்கொள்கிறேன். ஆட்சி அமைக்க யாருடனும் கூட்டு வைத்துக்கொள்ள மோடி தயங்கமாட்டார் என்பதே என் எண்ணமும். மோடி எங்களுக்கு அடுத்த டாடி என்று கூட்டணி வைத்துக்கொள்ள தி மு க தயங்காது என்பது உண்மை.

        சிறுவயதில் விளையாடிய ட்ரேட் போல, ஒரு ஆட்டம் முடிந்து அடுத்த ஆட்டத்துக்கு சீட்டு குலுக்கி போடும் விளையாட்டு நடந்திருக்கிறது. கிட்ட தட்ட அனைத்து கட்சிகளும் பிஜேபி அல்லது காங்கிரஸ் உடன் கூட்டு வைத்துக்கொள்ள தயங்க மாட்டார்கள் (கம்யூனிஸ்ட்கள் தவிர. ஆனால், அவர்களுக்கு பெரிய எண்ணிக்கையில் சீட் கிடைக்காது என்பதால் ஆட்டத்தில் அவர்கள் இல்லை!) அதே சமயம், காங்கிரெஸ்ஸா பிஜேபியா என்று பார்த்தால் எல்லா கட்சியினரும் காங்கிரசையே விரும்புவார்கள். அங்கே தான் தடி எடுத்தவர்கள் யாரும் தண்டல் காரர்கள்!

    • Sharron's avatar Sharron சொல்கிறார்:

      Mr. Puthiyavan please read this.
      https://tamil.oneindia.com/news/delhi/nitish-kumar-may-get-a-chance-to-become-pm-if-nothing-goes-well-in-nda-349671.html
      Bihar CM Nithish Kumar may get a chance to become PM if nothing goes well in NDA

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        நன்றி ஷரோன். ஏற்கனவே படித்தேன். ஏற்கனவே பாஜகவை விட்டு முன்பு நிதீஷ்குமார் விலகிச்சென்றது, மோடி அவர்களுக்குப் பதில் தன்னை எதிர்க்கட்சிகள் பிரதமர் பதவிக்குப் பரிந்துரைக்கும் என்பதால்தான் என்றும் படித்த ஞாபகம்.

        என் அசெஸ்மெண்ட் சரியாக இருந்தால், பாஜக, ‘மோடி’ தவிர வேறு யாரையும் ஏற்றுக்கொள்ளாது என்றே நினைக்கிறேன். கட்சித் தலைவர் அமித்ஷா என்பதையும் நாம் நினைவில் கொள்ளணும். எதிர்கட்சியாக பாஜக அமருமென்றால், நிச்சயம் பாஜகவில் வேறு யாரோதான் எதிர்கட்சித் தலைவர். மக்கள் எப்படி தீர்ப்பளிக்கிறார்கள் என்பது மே 24ல் தெரிந்துபோயிடும்.

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    தற்போதைய செய்தி ஒன்று : — // மோடி ஆட்சியில் GDP-யை அதிகமாக காட்ட நடந்த தில்லாலங்கடி..! தோலுறித்த என்.எஸ்.எஸ்.ஓ..! // Updated: Wednesday, May 8, 2019, 17:18 [IST]

    Read more at: https://tamil.goodreturns.in/news/2019/05/08/bjp-government-used-flawed-data-to-calculate-gdp-to-show-lesser-gdp-growth-014479.html

    // மோடி அரசு GDP-யைக் கணக்கிட எத்தனை தவறுகள் செய்தார்கள்..? என்ன மாதிரியான தவறுகள் செய்தார்கள்..? // Published: Wednesday, May 8, 2019, 15:16 [IST]

    Read more at: https://tamil.goodreturns.in/news/2019/05/08/what-are-the-mistakes-that-bjp-government-done-to-calculate-their-gdp-014481.html
    அடக்கடவுளே …. // என்னங்க மோடி ஜி ஒன்னு ரெண்டு பொய்யா இருந்தா ஓகே, எல்லாமே பொய்யின்னா என்னத் தான் செய்யுறது..? //

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது // யாருக்கு ஓட்டு -? மோடி .., பாஜக .., அல்லது ….? // என்று 2014 ஏப்ரல் 10 ல் இருந்து 18 வரை ஐந்து பகுதி தொடர் வெளியீட்டுஒரு தரமான விவாதத்தை உருவாக்கிய தாங்கள் — இந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்தளவுக்கு முனைப்பு காட்டாதது ஏன் ..? என்று கேட்க கூடாது தான் —! ஏனென்றால் அந்த தொடரின் பகுதி ஒன்றில் துவக்கமாக …

    // துவக்கத்திலேயே ஒன்றைச் சொல்லி விடுகிறேன்.
    நான் ஏற்கெனவே பலமுறை இந்த தளத்தில் சொன்னது
    போல் – நான் எந்த கட்சியையும் சேர்ந்தவனல்ல..
    சார்ந்திருக்க எனக்கு விருப்பமும் இல்லை.

    எந்த கட்சியையும் சாராதிருந்தால் தான் எந்த விஷயத்திலும்
    சுதந்திரமாக கருத்து சொல்ல முடியும் என்பது என்
    அபிப்பிராயம். இல்லையேல் சார்ந்திருக்கும் கட்சியின்
    தவறான முடிவுகள், செயல்களுக்கெல்லாம் அநாவசியமாக
    நாம் வக்காலத்து வாங்க வேண்டி இருக்கும்.

    தேர்தல்கள் வரும்போது, எதாவது ஒரு கட்சியை,
    அல்லது கட்சி சார்ந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க
    வேண்டிய அவசியம் வருகிறது. அப்போது எதாவது
    சார்பு நிலை எடுத்து தான் ஆக வேண்டும். ஆனால் –
    என்னைப் பொருத்த வரை, அந்த சார்பு நிலை அந்த தேர்தலோடு
    முடிந்து விடும்.

    இப்போது நான் எழுதுவதும் அந்த நிலையில் தான்.
    இன்னொரு விஷயம். இந்த ‘விமரிசனம்’வலைத்தளத்தின்
    மூலமாக, எந்தக் கருத்தையும் யார் மீதும் நான்
    திணிக்க விரும்பவில்லை. என் பார்வையில்,
    என் கோணத்தில், எனக்கு சரியென்று தோன்றுவதை
    இங்கு வெளிப்படையாகக் கூறுகிறேன். அவ்வளவு தான்.// உண்மைதானே …!!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      இந்த தேர்தலைப் பொருத்த வரையில், மோடிஜி ப்ளஸ் அமீத்ஜீ
      கைகளில் அதிகாரம் தொடர்வது இந்த நாட்டிற்கு நல்லதல்ல என்கிற
      ஒரே கருத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

      பதிலுக்கு யார் வர வேண்டும் என்பதில் இப்போதைக்கு எனக்கு
      சாய்ஸ் எதுவும் இல்லை…. ! தேர்தல் முடிவுகள் வரட்டும் -பார்ப்போம்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  6. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    பா ஜ க எவ்வளவு சீட் கிடைக்கும் ?
    முந்திய அளவு கிடைக்காது என்பதே உண்மை .
    காரணம் உ பி
    அங்கு மாயாவதி – அகிலேஷ் கூட்டணி வைத்து போட்டி .
    உ பி இல் பா ஜ கா விற்கு 30 சீட் கிடைக்கலாம் .

    பா ஜ க வில் மோடி ஒருவரே துருப்புச் சீட்டு .
    இதை நாக்பூர் விரும்பவில்லை .
    பா ஜ க வந்தாலும் மோடி வர மாட்டார் .

  7. Praba's avatar Praba சொல்கிறார்:

    Thro EVM BJP win above 200

  8. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    எல்லா அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் ஒரே ரகம் தான்.

    இதில் கூடுதல் குறைவு இருக்குமேயொழிய எல்லாரும் ஒன்றே.

    ஆனால், இந்த தேர்தலில் மத்திய மாநில அரசுகள் கண்டிப்பாக போயே ஆக வேண்டும்.

    அப்போது தான் ஜனநாயகத்தில் ஒரு பிடிப்பும் அந்த அரசுகளுக்கு ஒரு கடிவாளம் போட்டதாக ஆகும்.

    இல்லையெனில், தான் செய்த அட்டூழியங்களுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டதாக அவர்கள் கருதிக்கொண்டு இன்னும் அதிகமாக அவர்களின் அராஜகங்கள் தொடரும்.

    அது ஜனநாயகத்துக்கு நல்லதில்லை.

    • careless_guy's avatar careless_guy சொல்கிறார்:

      தாங்கள் பிஜேபி அட்டூழியங்கள் புரிந்ததாக கூறுகிறீர்கள்.அப்பொழுது எப்படி மறுபடியும் மக்கள் அவர்களையே தேர்ந்தெடுப்பார்கள்.
      மிகவும் குழப்புகிறீர்கள்.

      • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

        அதானே…! எப்படி தேர்ந்தெடுப்பார்கள்… நியாய உணர்வுள்ள மக்கள்.

        23ந்தேதி பார்ப்போம்.

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        careless_guy ,

        நன்றாக குழம்புங்கள் …
        பிறகு தன்னால் தெளியும் ….!!!

        .
        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.