இவர்கள் இந்தியர்கள் இல்லையோ ….?


இனி எல்லாருக்கும் நல்ல காலமே…என்று மகிழ்ந்தனர் மக்கள்.

இந்திய மக்கள் அனைவருக்கும் வீடு…
100 சதவீதம் மின் இணைப்பு …
70 கோடி ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ வசதி…

( அச்சே தின்…!)
கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது…

ஆனால் …?

கடந்த 19 வருடங்களாக பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் –
சூரத் நகரின் – சாலைகளில், பாலங்களின் அடியில் –
குடும்பம் குடும்பமாக -இந்த வசதிகளில் எதுவுமே
கிடைக்காமல் வசிக்கும் இந்த ஏழை-பாழைகள்…

என்ன பாவம் செய்தார்கள் இந்த (அப்)பாவிகள் …?

இதில் சில குடும்பங்கள் 20 வருடங்களாக இங்கேயே,
இதே நிலையிலேயே இருக்கின்றன…

இன்றும் குஜராத்தில் ஏன் இந்த அவல நிலை…?
யார் காரணம் இவர்களின் இந்த நிலைக்கு….?

.
—————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to இவர்கள் இந்தியர்கள் இல்லையோ ….?

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா .. இந்த அவலம் அங்கே மட்டும் தானா ..? இந்தியா முழுக்க இதே நிலை பல இடங்களில் ..!

    — அந்தக் காலங்களில் விடியற்காலையில் அதாங்க பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் ” நல்ல காலம் பொறக்குது — நல்ல காலம் பொறக்குது — நல்ல காலம் பொறக்குது என்று சிறு கை உடுக்கை கொண்டு அடித்து — ஜக்கம்மா சொல்றா — ஜக்கம்மா சொல்றா — என்று குடு-குடுப்பைக்காரர்கள் குறி சொல்லி வருவார்கள் — அதில் நம் மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும் ஏனென்றால் அவர் சொல்வதில் ஒன்றிரண்டு பலிக்கும் என்கிற நப்பாசை — !
    ஆனால் ” இந்த ஸ்பெஷல் நல்ல -காலம் { அச்சே தின்…! } பலிக்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த இடுகை — ! ஆனால் பாஜக அரசின் விளம்பரத்திற்காக மோடி அரசு ரூ.4,343 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது — என்பதும் நமக்கு ஒரு ” அச்சே தின்…! ” தானே –?
    இந்த தேர்தலிலாவது — இனி எல்லாருக்கும் நல்ல காலமே…என்று மகிழ்வார்களா மக்கள்…?

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்…. குஜராத்தில் 19 வருடங்கள் ஆட்சி செய்தும் ஏழைகள் இருக்கிறார்கள். உண்மைதான். கர்நாடகாவில் 50 வருடங்கள் காங்கிரஸ்ஆட்சி செய்தும் ஏழைகள் இருக்கிறார்கள். 30 ஆண்டுகள் வங்காளத்தை ஆட்சி செய்த கம்யூனிஸ்டுகளால் ஏழைகளை ஒழிக்க முடிந்ததா? இந்தியா முழுவதும் 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தும் ஏழைகள் இருக்கின்றார்கள். ஏழைகள் இருக்கத்தான் செய்வார்கள். தமிழகத்தில் வாக்குக்காக பிச்சை எடுக்க ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை லட்சங்கள் இருக்கிறார்கள். குடித்துச் சாவதற்கு எத்தனை லட்சங்கள் இருக்கிறார்கள்? இது மனிதர்கள் சம்பந்தப்பட்டது. முன்னேறணும் என்று நினைப்பவர்கள் முன்னேறுவார்கள். காசு பிச்சை எடுத்து அன்றைய பொழுதை ஓட்டினால் போதும் என்று நினைப்பவர்கள், தேர்தல் கூட்டங்களுக்கு பிரியாணிக்கும் 350 ரூபாய் காசுக்கும் போய் வாழ்க்கையைத் தொலைப்பார்கள். இதை எந்தக் கட்சி வந்தாலும் சரி செய்யமுடியாது.

    ஆனால், எந்த அரசு, நம்மை மேம்படுத்தும் இடம் நோக்கிச் செல்கிறது, சென்றது என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      // குஜராத்தில் 19 வருடங்கள் ஆட்சி செய்தும் ஏழைகள் இருக்கிறார்கள். உண்மைதான். கர்நாடகாவில் 50 வருடங்கள் காங்கிரஸ்ஆட்சி செய்தும் ஏழைகள் இருக்கிறார்கள். 30 ஆண்டுகள் வங்காளத்தை ஆட்சி செய்த கம்யூனிஸ்டுகளால் ஏழைகளை ஒழிக்க முடிந்ததா? //

      நீங்கள் பாஜகவின் பலவீனத்தை, இயலாமையை, வெத்து வேட்டை,
      வாய்ப்பேச்சு வீரத்தை ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் … அதற்கு பதிலாக காங்கிரசையோ, திமுகவையோ – எடுத்துக் கொள்வீர்கள்… அவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்டு திசை திருப்ப முயற்சிப்பீர்கள்… இது உங்கள் வழி – தெரிந்தது தான். இந்த தடவை கம்யூனிஸ்டுகளையும் சேர்த்துக் கொண்டீர்கள்…. கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்கத்தில், 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக, விலைவாசியை எப்படி கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். பல தடவை கல்கத்தா சென்ற
      நான் நடைமுறையில் அதைப் பார்த்தேன்.

      ஆட்சியாளர்களுக்கு – மக்கள் மீது உண்மையான அக்கறை வேண்டும்….

      ஆனால் ஒரு விஷயம் – மற்ற எந்த கட்சியும் இவற்றை ஒழித்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளவில்லை. அனைவருக்கும் வீடு கொடுத்து விட்டதாகச் சொல்லிக்கொள்ளவில்லை…100 சதவீதம் மின் இணைப்பு தந்து விட்டதாக விளம்பரம் செய்து கொள்ளவில்லை….”அச்சே தின்” தந்து விட்டதாக கூறிக்கொள்ளவில்லை…

      இவர்கள் – 19 வருட ஆட்சிக்குப் பின்னும் தங்கள் சொந்த மாநிலத்தில் கூட உருப்படியாக எதையும் செய்யாமலே “குஜராத் மாடல்” என்று பெருமையோடு விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்….

      அகில இந்தியாவிலும் இதே அளவுகோல் தான்….
      “ஸ்வச்ச பாரத்” திட்டத்திற்காக, மாதம் எவ்வளவு ரூபாய் நீங்கள்
      நேரடியாகவும், மறைமுகமாகவும் பணம் கொடுக்கிறீர்கள் என்பது
      உங்களுக்கு தெரியுமா…? யோசித்திருக்கிறீர்களா…? அதை விளம்பரப்படுத்தும் அளவிற்கு – வேலை நடந்திருக்கிறதா…?

      “அவர்கள் செய்தார்களா – ” என்று கேட்கும் நேரம் இது அல்ல.

      இவர் செய்தாரா …? என்று 5 வருட முடிவில் கணக்கு பார்க்கும் நேரம் இது.
      இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா…? நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா…? பின் ஏன் தவறுகளை மூடி மறைக்கிறீர்கள்…?
      தேர்தல் நேரத்தில் நிறைகுறைகளை எடைபோட்டு, தவறுபவர்களை
      மாற்றுவது தானே ஜனநாயகம்…?

      படித்தவர்கள், சுயமாக யோசிக்கத் தெரிந்தவர்கள் எல்லாரும்
      இப்போது யோசிக்க மறுத்து, கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பது நியாயமா ..? சரியா…?

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        தவறாக நினைக்காதீர்கள். என் மனதில் தோன்றுவதைத்தான் எழுதியிருக்கிறேன். நியாயம் என்று ஒன்று உண்டல்லவா?

        கா.மை. சார்… எல்லாக் கட்சிகளும் ஆட்சி முடிவில் தேர்தல் அறிக்கையாக அது தருவோம் இது தருவோம் என்று சொல்கிறார்கள். சென்ற தேர்தல் அறிக்கையைப் பார்த்தால் எதையுமே செய்ததில்லை என்று தெரியும். இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. ஆனாலும் காங்கிரஸ், திமுக நிச்சயம் நாட்டுக்கு எதுவுமே செய்யவில்லை.. அவங்களோட 2004, 2009 தேர்தல் அறிக்கையைப் பாருங்கள். அதே பாயிண்டுகள் இப்போதும் இருக்கும். அதனால் தேர்தல் கால விளம்பரங்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.

        //“ஸ்வச்ச பாரத்” திட்டத்திற்காக, மாதம் எவ்வளவு ரூபாய் // – உண்மை. கொடுக்கும் அளவு செய்யவில்லை என்பது உண்மைதான். எவ்வளவு வரி படித்தவர்கள், வேலை பார்ப்பவர்கள் கட்டுகிறோம். அது யாருக்குப் போய்ச்சேருகிறது தமிழகத்தில்? இலவசம் என்று தங்கள் வாக்கை விற்கும் தேசத்துரோகிகளுக்குத்தானே போகிறது. நம்மால் என்ன செய்யமுடிகிறது? நம்முடைய வரி, அரசியல்வாதிகளின் வாக்கு வங்கிக்காக யாருக்கெல்லாமோ தத்துக்கொடுக்கப்படுகிறது. இதுதான் அகில இந்திய அளவிலும் நடக்கிறது. நான் எடைபோடுவது, 10 ஆண்டுகள் தொடர்ந்து இருந்த காங்கிரஸ், திமுக மத்திய அரசு தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன செய்தது,? மோடியின் பாஜக 5 வருடங்களில் என்ன செய்தது என்பதைத்தான்.

        //இவர் செய்தாரா …?// – எல்லாம் செய்யவில்லை. அடித்தளமாக சிலவற்றைச் செய்திருக்கிறார். தேர்தல் சமயத்தில் 100% செய்தோம் என்றுதான் விளம்பரப்படுத்துவார்கள். அதில் பெரிய குற்றம் காண முடியாது. நான் இந்திரா காலத்திலிருந்து அரசியலைக் கூர்ந்து கவனிக்கிறேன். கரீபீ கட்டாவோ என்று எத்தனை லட்சங்கள் அப்போது அவர் செலவழித்தார் என்பதை இப்போது நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. வாஜ்பாய் அரசு ‘ஒளிர்கிறது இந்தியா’ என்று சொன்னதையும் நீங்கள் கவனத்தில் வைக்கவில்லை. காங்கிரஸ், திமுக தேர்தல் சமயங்களில் கொடுத்த, கொடுக்கும் விளம்பரங்களையும் நீங்கள் கவனத்தில் வைக்கவில்லை.

        //மற்ற எந்த கட்சியும் இவற்றை ஒழித்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளவில்லை// – கா.மை சார்… மறதி இருக்கலாமா? எல்லோருக்கும் 2 ஏக்கர் நிலம் தந்துவிட்டோம், அனைத்து ஏழைகளுக்கும் கான்க்ரீட் வீடு என்று பலப்பல பாராட்டுக்கூட்டங்கள் நடத்தி, வாடகை மனிதரான திருமாவளவன் போன்றவர்கள் ஜால்ரா அடிக்க கருணாநிதி நடத்திய கூட்டங்களையும் விளம்பரங்களையும் மறக்கலாமா?

        பாஜகவை விட்டால் இப்போது வேறு யார் இருக்கிறார்கள்? எத்தனை அமைச்சர் பதவிகளைக் கைப்பற்றி 2004, 2009ல் செய்த ஊழல்களைவிட அதிகமாகச் செய்யும் பசியோடு இருக்கும் திமுக, காங்கிரஸா? இல்லை, எப்படியாவது ஆட்சியில் பங்குபெற்று தன்னுடைய கணக்கை ஆரம்பிக்கத் துடிக்கும் மாயாவதி/யாதவ் கூட்டணியா? இல்லை… வாக்குவங்கி அரசியலை மட்டும் நம்பும் மம்தா பானர்ஜியா?

        பாஜகவுக்கு மக்களின் எதிர்வினை உண்டு. அவர்கள் பல இடங்களில் தோற்பார்கள். அதற்கு எதிர்க்கூட்டணி மட்டும் காரணமல்ல, அவர்கள் நாம் நினைத்த அளவிற்கு டெலிவர் செய்யவில்லை. ஆனாலும் இன்றைக்கு பாஜகவின் மேல் உள்ள நம்பிக்கை, வேறு எவர் மேலும் எனக்குக் கிடையாது. எனக்குத் தோன்றுவது, பாஜக 220-240 சீட்டுகள் பெறலாம். இதுதான் அவர்கள் டெலிவர் செய்யாததற்கான தண்டனை என்று நினைக்கிறேன்.

        இப்போ வாடகைக்கு இருக்கும் வீடு பிடிக்கவில்லை. ஆனால் வேறு உருப்படியான வீடுகளே கிடையாது என்ற நிலையில், இருக்கும் இடத்தில் இன்னும் கொஞ்ச காலம் இருந்து, வீட்டைச் சரிப்படுத்துவார்களா என்று பார்ப்பதில் தவறே இல்லை.

        பாஜக வை, சைனாவின் ‘கூட்டுத் தலைமை’யோடு ஒப்பிட்டு நீங்கள், யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று கேட்டால் என்னுடைய பதில் வேறு.. பாஜக VS கொள்ளைக் கும்பல் (காங்கிரஸ்+திமுக) என்று ஒப்பிட்டுக் கேட்டால் என் பதில் வேறு.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி, பதில் எழுதியதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் கா.மை. சார்…. உங்கள் எண்ணவோட்டத்தை அறிந்துகொள்ள முடிகிறது. என்னவேண்டுமானாலும் பாஜகவைத் திட்டுங்கள், அவர்களின் உண்மையான குறைகளை எழுதுங்கள். ஆனால் வாக்கினை பாஜகவைத் தவிர நீங்கள் யாருக்காவது போட நினைத்தால், நிற்பவர்களில் நேர்மையானவருக்குப் போடுங்கள். அப்போ, அந்த நேர்மையானவர், ‘நேர்மைக்கு வாக்களிக்கணும்’என்று நினைக்கும் வாக்காளர்கள் இங்கு இருக்கிறார்கள் என்று நினைப்பார். இது போகப் போக நல்லவர்கள் அரசியலுக்கு வர உதவியாக இருக்கும். ஆனால் எந்தக் காரணம் கொண்டும், காங்கிரஸ்+திமுக கூட்டணிக்கு வாக்களித்து நாட்டிற்குத் தீங்கு செய்துவிடாதீர்கள். இது என் வேண்டுகோள்.

  3. Thiruvengadam's avatar Thiruvengadam சொல்கிறார்:

    The only difference is Rahul has both foreign and local advisers and loud media which gives more publicity to what he says even by whitewashing the defect as in his statements.Unfortunately Modi has only himself to speak about his government.Anybody who watches the trends in global economic politics a person who indirectly promoted self reliance in his country is anathemaHow ever effort of this govt was nullified by mafia tactics and tammanyhall strategies in Rajya Sabah and subversion of subordinate govt servants may come out only in the future.A.T.Thiruvengadam

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.