மோடிஜி confirms… தமிழகத்திலிருந்து பாஜகவுக்கு 30 M.P.சீட்டுக்கள் நிச்சயம்…..!!!

கொஞ்சம் அரசியல் – கொஞ்சம் காமெடி….மோடிஜி மீட்டிங்….!!!

வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில், தமிழ் நாட்டிலிருந்து, பாஜக குறைந்தது 30 எம்.பி. சீட்டுகளையாவது பெற வேண்டும் என்று மோடிஜி சொல்லி இருக்கிறார்… அதற்கான முன் முயற்சிகளில் அவரும் முனைப்பாக இருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக – வெளிவந்திருக்கும் செய்தியிலிருந்து சில பகுதிகள் (காமெடி அதன் உள்ளடக்கம்…)

————–

“தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃப்ரன்ஸில் கடந்த சில நாட்களாக பேசி வருகிறார் பிரதமர் மோடி.

சென்னை தி.நகரில் தென் சென்னை தொகுதி நிர்வாகிகளுக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மோடிஜியிடம் கேட்கும் கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதேபோல மோடியும் ஆங்கிலத்தில் பதில் சொல்வார் என்பதையும் சொல்லியிருந்தார்கள்.

‘எல்லோருக்கும் பேச வாய்ப்பு வழங்க முடியாது. முடிந்தவரை நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வார்’ என்பதை, நிர்வாகிகளுக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டார்கள்.

மாநில நிர்வாகிகள் அந்தக் கூட்டத்துக்கு வந்தாலுமே மோடியிடம் சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் மட்டுமே கேள்வி கேட்பார்கள் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் மாநில நிர்வாகிகள் யாரும் கேள்வி கேட்கவே இல்லை.

நிகழ்ச்சி தொடங்கியதுமே, கூட்டத்தைப் பார்த்து வணக்கம் சொன்ன மோடி,

‘ யாருகிட்ட ஆரம்பிக்கிறது ? உங்க கேள்வியை ஸ்டார்ட் பண்ணுங்க…’ என்று சொன்னார்.

பெண் நிர்வாகி ஒருவர்தான் ஆரம்பித்தார்….

‘தமிழ்நாட்டில் நம்ம கட்சி 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மாநில நிர்வாகிகள் பேசிட்டு இருக்காங்க. அதுக்கு சாத்தியம் இருக்கா ஜி?’ என்று கேட்டார்.

அதற்கு பிரதமர் மோடி, ‘அவங்க சொல்றது இருக்கட்டும். நானும் சொல்றேன். 30 தொகுதி இல்ல… அதுக்கு மேலயும் ஜெயிக்கலாம். அதுக்கு நீங்கதான் மனசு வைக்கணும்.
30 தொகுதி ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை மாநில நிர்வாகிகளுக்கு வரும் போது உங்களுக்கு ஏன் வரவில்லை?

உங்களுக்கும் நம்பிக்கை வந்தால் நிச்சயமாக நாம தமிழகத்தில் நாம் 30 தொகுதிகள் ஜெயிக்கலாம். பூத் கமிட்டி அமைக்கும் அளவுக்கு நம் கட்சி தமிழகத்தில் வளர்ந்து இருக்கிறதே….!!!

காங்கிரஸ் கட்சி கூட இதுவரை தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளுக்கு எல்லாம் பூத் கமிட்டி அமைத்திருக்க மாட்டார்கள். நாம் அமைத்திருக்கிறோம்…(!!!)
இதுவே நமது முதல் வெற்றிதான். அதனால் நம்பிக்கையோடு உழையுங்கள்.” என்று ஆங்கிலத்தில் சொன்னார்.

அடுத்து ஒரு நிர்வாகி எழுந்தார். “பெட்ரோலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வாய்ப்பு இல்லையாஜி?’ என கேட்டார். ( வீடியோ கான்ஃபரன்ஸ் என்பதால் அந்த ஆசாமி தப்பினார்…!!!)

அதற்கு மோடி, ‘அந்த கவலை உங்களுக்கு எதுக்கு? அதை ஜி.எஸ்.டி. கமிட்டி பார்க்கும். நீங்க உங்க வேலை என்னவோ அதைப் பாருங்க” என்று சொல்ல அந்த நிர்வாகி கப் சிப்…. 🙂

‘தமிழ்நாட்டு மக்கள் நம் மீது கோபமாக இருக்கிறார்கள். எதைச் சொல்லி நாம் அவர்களிடம் ஓட்டு கேட்பது?’ என்று ஒரு நிர்வாகி கேட்டார்….. 🙂 🙂

அதற்கும் நிதானமாக பதில் சொன்னார் மோடி….

‘ எதை வைத்து நீங்கள் மக்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள் என தெரியவில்லை. 🙂

வாக்கு கேட்பதில் இரண்டு வகை இருக்கிறது.

ஒன்று நம் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பது. இன்னொன்று எதிராளியின் மைனஸ்களை சொல்லி கேட்கலாம்… 🙂 🙂

உங்களால் முடிந்தால் நம் சாதனைகளை சொல்லுங்கள். இல்லை என்றால் காங்கிரஸின் ஊழல்களை சொல்லி வாக்கு கேளுங்கள்…. 🙂 🙂

காங்கிரஸ், திமுக இல்லாத ஆட்சி தமிழ்நாட்டில் அமைப்போம் என்பதற்கான காரணங்களை சொல்லி வாக்கு கேளுங்கள்…. ( நடப்பது பாராளுமன்ற தேர்தல் குறித்த கலந்தாலோசனை கூட்டம்… இதில் எப்படி தமிழ் நாட்டில் ஆட்சி அமைப்பது …? )

அதேபோல நமது நல்ல திட்டங்களில் ஏதாவது ஒரு சில திட்டங்களை மட்டும் தொடர்ந்து மக்கள் மனதில் பதிய வையுங்கள். இப்போது ஒதுக்கப்பட்டிருக்கும் பூத்-துக்கு நீங்கள்தான் பொறுப்பு.

நாளை அந்த தொகுதிக்கு நீங்களே கூட வேட்பாளராக நிறுத்தப்படலாம்… 🙂 🙂 ( செத்தார் அந்த ஆள்… பாவம் பூத் கமிட்டி ஏஜெண்டாக எதாவது சம்பாதிக்கலாம்
என்று நினைத்து வந்தால், பாஜக சார்பாக எம்.பி. சீட்டுக்கு நிற்கச்சொன்னால் கோடிக்கணக்கான செலவுகளுக்கு எங்கே போவார் அந்த ஆள்…? )

அதனால், நீங்கள் போட்டியிட்டால் எப்படி உழைப்பீர்களோ அப்படி உழையுங்கள். அறிமுகமானவர்களுக்கு மட்டுமல்ல… இந்த முறை கட்சிக்காக உண்மையாக உழைக்கும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதை மனதில் வைத்துப் பாடுபடுங்கள்…’ என்று மோடி சொல்ல…

நிர்வாகிகள் கைதட்ட ஆரம்பித்தார்கள்….
‘இது கைதட்டுவதற்கான இடம் இல்லை…. 🙂 🙂

நம் கட்சி கூட்டம். நாளை நம்மை பார்த்து மக்கள் கைதட்ட வேண்டும். அதற்காகத்தான் இந்த கூட்டம்.

தேர்தல் முடியும் வரை நான் அடிக்கடி பேசுவேன். இப்போது விருப்பப்பட்டவர்கள் கேள்வி கேட்கிறீர்கள்.

இனி எதிர்வரும் கூட்டங்களில் உங்களில் யாரையாவது எழுப்பி நான் கேள்வி கேட்பேன். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்..’ 🙂 🙂 என்று பேசி முடித்தார். கிட்டதட்ட 45 நிமிடங்கள் மோடியுடன் கலந்துரையாடல் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எல்லோருமே கழுத்தில் கட்டாயமாக பிஜேபி துண்டு போட வேண்டும் என்பது சொல்லப்பட்டிருந்தது. கூட்ட அரங்கில் துண்டு இல்லாமல் வந்தவர்களுக்கும் துண்டு கொடுத்துதான் உட்கார வைத்தார்கள்…. 🙂 🙂

மாநில நிர்வாகிகளை பற்றி எதுவும் புகார் சொல்லி விடுவார்களோ என்று சிலர் பயத்தோடும் உட்கார்ந்திருந்தார்கள். ஆனால், நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.”

( மின்னம்பலம் செய்திகளை ……அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை….)

பாராளுமன்ற தேர்தல் வரும் வரையில் அடுத்த 5 மாதங்களுக்கு, நாட்டிலுள்ள 545 தொகுதிகளுக்கும் இதே போல் மோடிஜியை வைத்து பூத் கமிட்டி மெம்பர்களுடனும் உரையாடி, உறவாடி கட்சியை வெற்றி பெறச்செய்து விடலாம் என்று நினைக்கும் பாஜக நிர்வாகிகளின் அதீத நம்பிக்கையை எண்ணி வியந்து பூரிப்படைகிறோம்….

நாட்டின் நலனைக்கருதி, அவர்கள் தொடர்ந்து இதே முறையில் செயல்பட வேண்டுவோம்…!!!

——————————————————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to மோடிஜி confirms… தமிழகத்திலிருந்து பாஜகவுக்கு 30 M.P.சீட்டுக்கள் நிச்சயம்…..!!!

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    /// நாட்டின் நலனைக்கருதி, அவர்கள் தொடர்ந்து இதே முறையில் செயல்பட வேண்டுவோம்…!!! ///

    குசும்பு…!

    நாமும் வேண்டுகிறோம்.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கருணாநிதியை, ‘கரையான் புற்றெடுத்து கருநாகம் குடிவந்ததுபோல்’ என்று திமுகவை கபளீகரம் செய்துகொண்டார் என்று சொல்வார்கள்.

    அதுபோல் தமிழகத்தில் ஒன்று நடக்கப்போகிறது என என் மனம் சொல்கிறது. அப்படி நடந்தால், தினகரன் நிச்சயம் ‘வருங்கால முதலமைச்சர்’ போட்டியில் இருப்பதற்கு மிகுந்த வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், ஜெ. பாடுபட்டு வளர்த்த, கோலோச்சச் செய்த கட்சியை, தங்கள் சொந்தக் குற்றங்களால் யார் தாரை வார்த்தாலும் ‘அதிமுக விசுவாசிகள்’ கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

    திமுகவை மிரட்டி (கருணாநிதியின் மனைவியை சி.பி.ஐ அறிவாலயத்தில் விசாரித்ததைச் சொல்கிறேன்) அதிக சீட்டுகள் வாங்கிய காங்கிரஸ், அதனால் பயன் பெறவில்லை, அவர்களின் வாக்கு பலம் தமிழகத்தில் கொஞ்சம்கூட அதிகமாகவில்லை. அந்தக் கதைதான் ’30 சீட்டுகள் ஜெயிக்கும்’ என்று கற்பனைக் கதைகள் எழுதும் நாவலாசிரியருக்கும்.

    தமிழர்கள், ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்? இதற்கு நியாயமான 3 காரணங்கள் யாரேனும் சொல்லட்டும். நான் பதில் சொல்கிறேன். என்னைப் பொருத்தவரையில், தமிழகத்தின் நலனுக்கு எதிராகத்தான் பாஜக இதுவரை நடந்துவந்துள்ளது. 2014ல், தொடர்ந்து 10 வருடங்கள் ஊழல் சேற்றில் நாற்றமெடுத்தது மத்திய காங்கிரஸ், திமுக அரசு. அந்தக் கோபத்தில் பாஜகவுக்கு வாக்கு பலம் ஏற்பட்டது. இந்த ஐந்து வருட ஆட்சிக்காலத்தில், தமிழகத்துக்கு என்று நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கெடுதல்கள் செய்ததுதான் பாஜகவின் வரலாறு. அதனால் பாஜகவுக்கு தமிழர்கள் வாக்களிக்க ஒரு முகாந்திரமும் இல்லை. (அவர்கள் இந்தியாவுக்குச் செய்த ஒரு சில நன்மைகளும் இருக்கின்றன. அதைச் சொல்லும் இடம் இதுவல்ல)

  3. avudaiappanna's avatar avudaiappanna சொல்கிறார்:

    nalla muyarchi paarattukkal

  4. Prabakar's avatar Prabakar சொல்கிறார்:

    Modi again PM, with help of EVM.

  5. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நிதின் கட்கரி, மேகதாது அணை விஷயத்தில் தமிழகத்துக்குச் சாதகமாகப் பேசியுள்ளதைக் கவனித்தீர்களா கா.மை.சார்?

    இதனை நான் அவரது நியாயமான கருத்து என்ற அளவில் எடுத்துக்கொள்கிறேன். இது மோடி அவர்களின் நிலையைவிட நியாயமான ஸ்டாண்ட். ஆனால் செய்திகளில், இது மத்திய அரசின் கருத்து என்ற ஜால்ரா சத்தம் கேட்கிறது. அந்த மாதிரி திசை திருப்பும் வேலையை யாராவது செய்வதைப் பார்க்கும்போது எரிச்சல் ஏற்படுகிறது (மத்திய அரசின் கருத்து என்றால், நிர்மலா சீதாராமன் கர்நாடகா சார்பாகப் போராடியதும் மத்திய அரசின் கருத்தா? இதுவரை எந்த ஒரு நிகழ்விலும் தமிழகத்தின் சார்பாக நியாயமானவற்றிர்க்குக் கூட பிரதமர் வாயைத் திறந்ததில்லை)

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      இல்லை புதியவன்… நான் அப்படி நினைக்கவில்லை……
      அவர் “பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்”
      என்கிற மாதிரியான ஒரு நிலையை வெளிப்படுத்துகிறார்..

      முதலில் – எந்த சூழ்நிலையில் அவர் இதை தெரிவித்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும்…

      பாராளுமன்ற நடவடிக்கைகள் தடைபடுவதை தவிர்ப்பதற்காக – வேறு வழியில்லாத சூழ்நிலையில் இதைச் சொல்லி இருக்கிறார்.

      இன்னொரு சந்தேகம்… அவர் இதை ஏன் பாராளுமன்றத்திலேயே ஒரு வாக்குறுதியாக அளித்திருக்கக்கூடாது……? தமிழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தவுடனேயே இதைச் செய்திருக்கலாமே… ஏன் இத்தனை தாமதம்…?

      நியாயமாக நடக்கிறார்கள் என்றால் – ப்ரொஜெக்ட் ரிப்போர்ட் தயாரிக்க அவரது அமைச்சகம் அனுமதி தருவதற்கு முன்னால், அதை காவேரி நிர்வாக ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவும்,
      அங்கே விவாதித்து முடிவெடுக்கவும் சொல்லி இருக்க வேண்டும்….

      இதெல்லாம் ஒரு வகை சமாளிப்புகள் …என்றே நான் நினைக்கிறேன்…

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.