சொராபுதீன் என்கவுண்டர் வழக்கு – மன்னிப்பு கேட்ட நீதிபதியின் பெருந்தன்மை பிரமிக்க வைக்கிறது ….!!!


ஒரு வழக்கின் முடிவில் தீர்ப்பு கூறும்போது, அந்த தீர்ப்பை கூறும் நீதிபதி இந்த அளவிற்கு மனம் விட்டுப்பேசியதாக, சரித்திரமே இல்லை.

எந்த வழக்கு, எந்த தீர்ப்பு ….?

வழக்கின் போக்கைப் பற்றி நாம் விமரிசனம் செய்தால், இன்றைய ஆட்சியாளர்களின் நோக்கில் அது சட்டவிரோதமாக பார்க்கப்படலாம். ஆகவே, நான் எந்தவித விமரிசனமும் செய்யாமல், சொராபுதீன் வழக்கு குறித்து நேற்றும், இன்றும் பத்திரிகைகளில் வெளிவந்த சில செய்திகளை மட்டும், விமரிசனம் தள வாசக நண்பர்களின் வசதிக்காக இங்கு தொகுத்து தருகிறேன்.

———————————————————————————————–

நேற்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்திரவு பிறப்பித்த பின்னர், தனது தீர்ப்பிற்கு தானே வருத்தம் தெரிவித்து அந்த நீதிபதி கூறுகிறார் –

” I feel sorry that a family had lost its Son (Sorabuddin) and daughter in law (Kausar Bi) and it is unfortunate that a mother has lost her son (Tulsiram),

– BUT I AM HELPLESS ON THE EVIDENCE.
I AM REALLY SORRY BUT THE WAY IN WHICH EVIDENCE WAS
BROUGHT BEFORE ME, I COULD NOT HELP…..

the THREE MAIN WITNESSES in the case TURNED HOSTILE and
circumstantial evidence is not substantive enough.

“OUT OF 210 witnesses, 92 TURNED HOSTILE”

( 210 சாட்சிகளில் 92 பேர் தங்கள் சாட்சியத்தை மாற்றிக்கொண்டு விட்டார்கள்… 3 மிக முக்கியமான சாட்சிகளும் திடீரென்று வழக்கிற்கு விரோதமாக திரும்பி,
சாட்சியத்தை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

3 பேர்கள் கொல்லப்பட்டது உண்மை. அவர்கள் குடும்பம் தங்களது பிள்ளைகளையும், மருமகளையும் இழந்தது உண்மை.

ஆனால், என் முன்னால் வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. குற்றங்கள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட இவை போதவில்லை…
இந்த தீர்ப்பிற்கு – நான் வருந்துகிறேன்… ஆனால் எனக்கு வேறு வழி இல்லை….)

( ஹிந்து ஆங்கில நாளிதழ் 22/12/2018 )
———————————————————————————————–

இந்த வழக்கு கடந்துவந்த பாதையைப்பற்றி ஒரு தொகுப்பு-

——————
இது தமிழ்-ஒன்-இந்தியா செய்தி நிறுவனம் தரும் செய்தி –

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அனைவரும் விடுதலை.. சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கு கடந்த பாதை
By Veerakumar

Updated: Friday, December 21, 2018, 12:52 [IST]மும்பை: சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக, இன்று தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், அந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

Sohrabuddin Sheikh Fake Encounter Case, a timeline
2005- நவம்பர் 22: சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கவுசர் பீ மற்றும் கூட்டாளி துளசிராம் பிரஜாபதி ஆகியோர், ஹைதராபாத்திலிருந்து பஸ்சில் சென்றபோது மகாராஷ்டிரா மாநிலம்
சாங்கிலி பகுதியில் வைத்து குஜராத் போலீசாரால் பிடித்து செல்லப்பட்டனர்.

நவம்பர் 26: சொராபுதீன் போலீசாரால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார்.

நவம்பர் 28: கவுசர் பீ, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.

2006, டிசம்பர் 28: துளசிராம் பிரஜாபதி, சப்ரி கிராமம் அருகே என்கவுண்டர் செய்யப்பட்டார்.

2010 ஜனவரி: என்கவுண்டர் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைத்தது, உச்ச நீதிமன்றம்.

ஜூலை 23: சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

ஜூலை 25: அமித்ஷாவை சிபிஐ கைது செய்தது

அக்டோபர் 29: அமித்ஷாவிற்கு குஜராத் ஹைகோர்ட் ஜாமீன் வழங்கியது

2012, செப்டம்பர் 27: குஜராத்திலிருந்து மும்பைக்கு, வழக்கை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

2014, டிசம்பர் 30: அமித்ஷாவை வழக்கிலிருந்து விடுவித்தது மும்பை செஷன்ஸ் நீதிமன்றம்.

2016, ஆகஸ்ட் 1: அமித்ஷாவை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2018, டிச. 3: சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜே.ஷர்மா முன்னிலையில், இறுதி வாதங்கள் துவங்கின.

டிச. 7: விசாரணை முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

டிசம்பர் 21: குற்றச்சாட்டுக்கு ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறி குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு.

https://tamil.oneindia.com/news/mumbai/sohrabuddin-sheikh-fake-encounter-case-timeline-337022.html

—————————————————————————————————————–

இது BBC செய்தித்தளம் தரும் செய்தி –

சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை
21 டிசம்பர் 2018

சொராபுதீன் ஷேக் என்பவர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 22 பேரையும் விடுதலை செய்து மும்பையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் காவல் அதிகாரிகள்.

அரசு தரப்பால் உறுதியான ஆதாரம் எதையும் இந்த வழக்கில் முன்வைக்க முடியவில்லை.

“உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். ஆனால், எனக்கு வேறு வழியில்லை. தங்கள் முன்பு வைக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே நீதிமன்றங்கள்
செயல்படுகின்றன. அத்தகைய ஆதாரங்கள் எதுவும் இல்லை,” என்று நீதிபதி ஜே.எஸ்.சர்மா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

சொராபுதீன் வழக்கின் பின்னணி என்ன?

குற்றப்பின்னணி உடையவர் எனச் சொல்லப்படும் சொராபுதீன் ஷேக் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் காவல்துறை என்கவுன்டர் ஒன்றில் கொல்லப்பட்டார். அவருக்கு லஷ்கர் இ-தொய்பா
உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோதியை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் காவல்துறை தரப்பில்
கூறப்பட்டிருந்தது.

ஐதராபாத்தில் இருந்து மஹாராஷ்டிராவில் உள்ள சங்லிக்கு சொராபுதீன் மற்றும் அவரது மனைவி கௌஸர் பி, மற்றும் கூட்டாளி துல்சிராம் பிரஜாபதி ஆகியோர் குஜராத் காவல்துறையால்
கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

பின்னர் ராஜஸ்தான் மற்றும் குஜராத் காவல்துறை இணைந்து எடுத்த ஒரு கூட்டு நடவடிக்கையில் அஹமதாபாத் அருகே ஒரு என்கவுன்டரில் சொராபுதீன் கொல்லப்பட்டார். சில நாள்கள் கழித்து பனஸ்கந்தா மாவட்டத்தில் குஜராத் ஐபிஎஸ் அதிகாரி டிஜி வஞ்சாராவின் கிராமத்தில் சொராபுதீன் மனைவி கௌசர்பியும் கொல்லப்பட்டார்.

2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற ஷொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் போலியானது என்றும், இதில் அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு
தொடர்பு இருப்பதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட துல்சிராம் பிரஜாபதியும், 2006ஆம் ஆண்டு குஜராத் காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டார்.
அகமதாபாத்தில் இருந்து ராஜஸ்தான் செல்லும் வழியில் துல்சிராம் தப்பிக்கமுயன்றதாகவும் அவரை தடுக்கும் முயற்சியில் காவல்துறை துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் காவல்துறை
தரப்பில் கூறப்பட்டது.

2010-ல் இந்த வழக்கு சிபிஐயிடம் வந்தது. குஜராத் புலனாய்வுத்துறையில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் வி.எல் சோலங்கி, அமித் ஷா இந்த என்கவுன்ட்டர் வழக்கை முடிக்க வேண்டும் என
விரும்பியதாக சிபிஐயிடம் தெரிவித்திருந்தார்.

சிபிஐ விசாரணையில் ஒரு முக்கிய சேதி வெளிச்சத்துக்கு வந்தது. ராஜஸ்தானைச் சேர்ந்த பளிங்கு சுரங்கத்தின் முதலாளியான விமல் படானி சொராபுதீன் ஷேக்கை கொல்வதற்காக குலாப்சந்த்
கட்டாரியாவுடன் தொடர்பில் இருந்துள்ளார். அமித் ஷாவுக்கு இதற்காக 2 கோடி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளிவந்தது.

இந்த படுகொலைகளின் பின்னணியில் அமித்ஷா இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். பிறகு, உச்ச நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் விசாரணை தொடர்ந்தது. நீதிமன்ற
உத்தரவின்படி, அமித் ஷா மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்.

( சொராபுதீன் வழக்கில் 2010-ல் அமித் ஷாவுக்கு பிணை கிடைத்தபோது எடுக்கப்பட்ட படம் )

2012-ல் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தால் குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.

(நீதிபதி லோயா புகைப்படம்)

2014-ல் எப்படி நிலைமை மாறியது?
சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் 2014 மே மாதத்தில் விசாரணைக்கு ஆஜாராகுமாறு அமித் ஷாவுக்கு சம்மன் அனுப்பினார். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க கோரி அமித் ஷாவின்
கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

2014-ல் மத்தியில் ஆட்சி மாறியது. நரேந்திர மோதி நாட்டின் பிரதமாரானார். அதிலிருந்து இந்த வழக்கின் போக்கு முற்றிலுமாக மாறியது.

அதன் பின்னர் சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் 2014 ஜூன் 26 ஆம் தேதியன்று உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாற்றப்பட்டார்.

லோயா மரணம் குறித்த சர்ச்சையும், அமித் ஷா மீதான குற்றச்சாட்டுகளும் -நீதிபதி லோயா மரணம்: சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு.

இதன்பிறகு வழக்கு நீதிபதி லோயாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி லோயாவின் நீதிமன்றத்தில் அமித் ஷா ஆஜராகவேயில்லை. 2014 டிசம்பர் ஒன்றாம் தேதி நாக்பூரில் நீதிபதி லோயா இறந்தார்.

அவரது மரணம் தொடர்பான பல்வேறு ஊகங்களும் சர்ச்சைகளும் தொடர்கின்றன.

நீதிபதி லோயாவின் மரணத்திற்கு பிறகு சொராபுதீன் வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.வி. கோசவி, புலனாய்வு நிறுவனங்களின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி, 2014 டிசம்பரில் அமித் ஷாவையும், குலாப்சந்த் கட்டாரியா, விமல் படானி, அகமதாபாத் மாவட்ட வங்கியின் தலைவர் அஜய் படேல் மற்றும் இயக்குநர் யாஷ்பால் ஷர்மா ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தார்.

https://www.bbc.com/tamil/india-46644720

.
————————————————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to சொராபுதீன் என்கவுண்டர் வழக்கு – மன்னிப்பு கேட்ட நீதிபதியின் பெருந்தன்மை பிரமிக்க வைக்கிறது ….!!!

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    சாட்சிகளை திசை திருப்பி விட்டார்கள் –
    அதனால் குற்றவாளிகள் என்று தெரிந்தும் என்னால்
    தண்டிக்க முடியவில்லை – என்று பட்டவர்த்தனமாக கூறுகிறார்.
    கொலைகாரர்களை விடுதலை செய்கிறோமே என்றுஅவரது மனசாட்சியே அவரை உறுத்தி இருக்கிறது; பாராட்டிற்குரியவர் நீதிபதி.

  2. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    Excellent article presented in a chronological order. Those who have forgotten some of the facts
    of this case, may traverse back after reading this article.

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    /ஜூலை 23: சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்./ – இதன் காரணம் என்ன என்று என் புரிதலுக்காகச் சொல்லுங்கள் காமை சார்.

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      தலைவர் அமித்ஷா அவர்கள் ஏன் நீதி மன்றத்தில் ஆஜராகவில்லை….?

      நீதிமன்றத்தில் ஆஜராக சொன்ன நீதிபதி ஏன் மாற்றப்பட்டார்?

      நீதிபதி லோயா அவர்கள் யாரால் கொல்லப்பட்டார்? ஏன் கொல்லப்பட்டனும்?

      இவைகளுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள் புதியவன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      நிஜமாகவே உங்களுக்கு புரியவில்லையா…!!!

      உங்களுக்கு நிஜமாகவே தெரியவில்லை / கண்டுபிடிக்க முடியவில்லையென்று
      சொன்னால், நான் அவசியம் விளக்கம் சொல்கிறேன்…

      ரொம்ப சிம்பிள் – 🙂 🙂

      ——————

      ஜூலை 25: அமித்ஷாவை சிபிஐ கைது செய்தது –

      அதனால் –

      -ஜூலை 23: சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்…

      -that’s all….!!!

      ————————————

      பதிலுக்கு நீங்களும் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே….

      கொஞ்சம் யோசித்து…………………………………
      கீழ்க்கண்டவற்றிற்கான காரணங்களை என் புரிதல்களுக்காக
      விளக்குங்களேன்…!!

      “the THREE MAIN WITNESSES in the case TURNED HOSTILE”

      “OUT OF 210 witnesses, 92 TURNED HOSTILE”

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        இல்லை கா.மை. சார்… என் கேள்வி 2005ல் நடந்த சம்பவத்துக்கு, 2010 ஜனவரியில் சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்ட உடனேயே, அமித்ஷா வழக்கில் சேர்க்கப்படுகிறார். இது அவர் உள்துறைக்குப் பொறுப்பாளராக இருந்ததனால் நடந்ததா அல்லது நேரடியாக அவர் சம்பந்தப்பட்டு, அதுவரை போலீஸ் அவரை வழக்கில் தொடர்புபடுத்தாதனாலா என்பது என் சந்தேகம். இந்த வழக்கு எனக்கு நினைவில் இல்லாததால்தான் நான் கேட்டிருந்தேன்.

        சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறுவது அனேகமாக எல்லா வழக்குகளிலும் நடைபெறுவதுதான் (ஆளுங்கட்சி சம்பந்தப்பட்ட வழக்குகள். அவர்கள் ஆட்சியில் இல்லாதபோது சாட்சிகளாகச் சேர்க்கப்படுபவர்கள், அதற்குப் பிறகு, தாங்கள் யாருக்கு எதிராக சாட்சியம் கூறப்போகிறார்களோ அவர்கள் அதிகாரத்துக்கு வந்தால், பயத்தினால் பிறழ் சாட்சியாக மாறிவிடுவார்கள் (இல்லைனா அழுத்தங்களினால் அப்படி ஆகிவிடுவாங்க. சல்மான்கான் மற்ற வழக்குகளில் நடந்ததுபோல்).

        ‘பிறழ் சாட்சியாக ஆகிறார்கள்’ என்றாலே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ‘குற்றம் புரிந்திருக்கிறார்கள்’ என்பதற்கான ஆதாரமாகத்தான் கோர்ட் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது, அவர்கள் ‘சாட்சியாக’ ஆனதற்கு அப்போதைய அரசியல் அழுத்தங்கள் இருந்தன என்பதையாவது பதிவு செய்யவேண்டும். நம்ம கோர்ட்டுகள்ல, வழக்குகள், பலப் பல வருடங்களுக்கு நீட்டிப்பதால்தான், உண்மைக்குற்றவாளிகளை அனேகமாக எந்த வழக்கிலும் கண்டுபிடிக்க இயலாமல் போகிறது (5 ரூ, 100 ரூ திருடர்களெல்லாம் கரெக்டா மாட்டிக்குவாங்க).

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! “சொராபுதீன் மற்றும் பிரஜாபதி குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக பிரஜாபதியின் தாய் நர்மதா பாய்க்கு என்னுடைய வருத்தங்கள்…. என்றும் நீதிபதி கூறியிருக்கிறார் — மனிதாபிமானம் …? இது ஒரு தொடர்கதையாகி – இறுதியில் நீதிபதி மன்னிப்பு கோரும் நிலைக்கும் வந்துள்ளது — 2014-ஆம் ஆண்டு மர்மமான முறையில் லோயா கொல்லப்பட்டார் என்று செய்தி …. அதன் பின் மதன் கோசாவி கைகளில் வழக்கு சென்றது. 2017 ஜூன் மாதம் அமித் ஷா உள்ளிட்ட பெருந்தலைகள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது செய்தி …!!

    அதன் பின் விசாரிக்க வந்த நீதிபதி ரேவதி மொஹிடே, ஊடகங்கள் இந்த வழக்கு விசாரணை குறித்த செய்தி சேகரிக்க பெரும் கட்டுப்பாடுகள் விதித்தார். … ஏன்…? என்று எந்த ஊடகமும் கேட்க துணியலை …! தீர்ப்பு வழங்கும் இறுதி நாளில்கூட பல முக்கிய சாட்சியங்கள் மீண்டும் சாட்சியளிக்க விண்ணப்பித்து — குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களை மிரட்டியதாக தெரிவித்திருந்ததாகவும் … ஆனால் அதை நீதிமன்றம் ஏற்காது போனதும் … . அதுபோல, பிரஜாபதியின் தாய் நர்மதபாய், தான் மிரட்டப்பட்டதாக நீதிமன்றத்திடம் முறையிட்டிருந்ததும் . ஆனால் இவற்றில் எதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை…என்பதும் .செய்திகளில் அடிபடும் விஷயங்கள் … எல்லாம் ” ஆண்டவருக்கே ” வெளிச்சம் … அப்படித்தானே …? நாமும் நொந்துபோய் நமது அனுதாதாபத்தை தெரிவித்துக் கொள்வோம் …. !!! ஏதோ நம்மால் முடிந்தது அதானே …?

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! ஒரு நீண்ட நெடிய வரலாறு நமது ரிசர்வ் வங்கி கவர்னர்களை பற்றியது — அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்தியாக்கப்பட்டதால் அது இங்கே : — // ரூ.1,50,000 கோடி கார்ப்பரேட் கடனை விடச் சொன்ன நிதி அமைச்சகம், விடாமல் வசூலிக்க போராடும் Urjit Patel! ….

    Read more at: https://tamil.goodreturns.in/news/2018/12/21/what-are-the-reasons-fights-behind-urjit-patel-resignation-013203.html
    தயை கூர்ந்து நண்பர்கள் அனைவரும் கொஞ்சம் பொறுமையாக வாசிக்க வேண்டிய அளவுக்கு விவரங்கள் விலாவரியாக இருக்கிறது … வாசித்து பாருங்கள் ….!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.