மறைக்கப்பட்ட மதிப்பீடுகள்.. சாட்டிலைட் தகவல்களின் அடிப்படையில் ஆய்வு …..!


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட பிறகான, உடனடியான அடுத்த 2 மாதங்களில் நம் நாட்டின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட பெரும் மாறுதல்களைப்பற்றிய உண்மையான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்று சொல்லி, சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund ) சார்பில் புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது….

இது குறித்து, ஆங்கிலத்தில் the wire வலைத்தளத்தில் வெளிவந்த கட்டுரை ஒன்றை தமிழில், மின்னம்பலத்தில் பிரகாசு அவர்கள் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த அறிக்கை கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்டுள்ளது என்பதால், அதனை நமது வாசக நண்பர்களும் படிக்கும் பொருட்டு கீழே தந்திருக்கிறேன். அதில் கூறப்படும் கருத்துகளை ஏற்றுக்கொள்வதும்-கொள்ளாததும் – அவரவர் விருப்பம்.

பண மதிப்பழிப்பு செய்யப்பட்ட காலத்தில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் அமைப்பு சாரா துறைகள் கணக்கில் கொள்ளப்படவில்லை – என்பது தான் கட்டுரையின் சாராம்சம்.

———————-

பகல் 1, வியாழன், 20 டிச 2018
சிறப்புக் கட்டுரை: பணமதிப்பழிப்பு காலத்தில் மறைக்கப்பட்ட மதிப்பீடுகள்!

நரேந்திர மோடி அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம், அந்த சமயத்தில் 2 விழுக்காடுப் புள்ளிகளாகக் குறைந்திருக்கலாம் என்று சர்வதேச நாணய நிதியத்தின்
புதிய ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதாரவியலாளர் கீதா கோபிநாத் மற்றும் அவருடன் மேலும் சில ஆய்வாளர்கள் இணைந்து
இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு தொடர்பான புதிய குடும்ப ஆய்வு மற்றும் *சேட்டிலைட் டேட்டா ஆன் ஹியூமன் ஜெனெரேட்டட் நைட்லைட் ஆக்டிவிட்டி மற்றும் பல்வேறு ஆய்வுத் தரவுகளைக் கொண்டு இந்த
ஆய்வறிக்கையை ஐஎம்எஃப் தயாரித்துள்ளது.

இந்தத் தரவுகளைக் கொண்டு பணமதிப்பழிப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட மாவட்ட ரீதியான தாக்கங்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சேட்டிலைட் டேட்டா ஆன் ஹியூமன் ஜெனெரேட்டட் நைட்லைட் ஆக்டிவிட்டி ஆய்வில், செயற்கைக் கோள் புகைப்படங்களில் இரவு நேரங்களில் ஒளி விளக்குகளின் வெளிச்சத்தில் மிளிரும் பகுதிகளின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்விலும் இந்தியாவில் 2016ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3 விழுக்காடு அளவுக்கு வேலைவாய்ப்பு வளர்ச்சி குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு வளர்ச்சி வீதத்தில் 2.2 விழுக்காடு புள்ளிகள் சரிந்திருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

“பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் 2016ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் 3.3 விழுக்காடு சரிந்துள்ளது” என்று தேசிய பொருளாதாரப்
பணியகம் மதிப்பிட்டுள்ளது. இது கூர்ந்து பரிசீலிக்கப்படவில்லை. விவாதம் மற்றும் கருத்து நோக்கங்களுக்காக மட்டும் இது விநியோகிக்கப்பட்டது.

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி காலாண்டுக்கு 1.5 விழுக்காடு (ஆண்டுக்கு 6 %) என்ற வீதத்தில் உயர்ந்தால், 2016ஆம் ஆண்டு 4ஆவது காலாண்டில் பொருளாதார செயல்பாடுகள்
முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 0.5 விழுக்காடு சரிந்துள்ளது என்பதை இந்த மதிப்பீடு குறிக்கிறது. இது 2016ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பரில் 3 விழுக்காடு வீழ்ச்சி
கண்டிருப்பதையும், அதற்கு முந்தைய மாதமான அக்டோபரில் எந்த வீழ்ச்சியும் இல்லையென்பதையும் இதன்மூலம் அறிய முடிகிறது” என்று இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் கோபிநாத்துடன் இணை ஆய்வாளர்களாக –

இந்திய ரிசர்வ் வங்கியின் மூலோபாய ஆய்வுக் குழுத் தலைவராக உள்ள பிரச்சி மிஸ்ரா,
ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆய்வாளராக உள்ள அபினவ் நாராயணன்,
ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் கேப்ரியல் சோடோரோவ்-ரெய்ச் போன்றோரும் பங்கேற்றுள்ளனர்.

பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட காலத்தில், அதனால் ஏற்பட்ட சரிவுகள் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் குறிப்பிடப்படவில்லை என்பதைத்தான் இந்த ஆய்வு
வெளிப்படுத்துகிறது. நாட்டின் அமைப்பு சாரா பொருளாதார நடவடிக்கைகளை அளவிடுதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, அரசு அறிக்கையில் அமைப்பு சாரா துறைகளைப் பற்றிய மதிப்பீடுகள் சரியாக கண்டுகொள்ளப்படவில்லை என்பதையே ஐஎம்எஃப் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகளில் அமைப்பு சாரா துறைகளின் மூலமான வேலைவாய்ப்புகள் 81 விழுக்காடாகும். மொத்த உற்பத்தியில் 44 விழுக்காடு அளவுக்கு ரொக்கப்
பணப் புழக்கத்தின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட காலத்தில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் அமைப்பு சாரா துறைகள் கணக்கில் கொள்ளப்படவில்லை
என்று மேலும் சில ஆய்வுகளின் அடிப்படையிலும் ஐஎம்எஃப் மதிப்பாய்வு செய்து சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆய்வானது முழுமையாகக் குறுகிய கால தாக்கம் பற்றியது மட்டுமே. பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டின் நவம்பர் முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலத்தில்
பொருளாதார நிலை மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குறுக்கு வெட்டு வேறுபாடுகள் பணமதிப்பழிப்பு செய்யப்பட்டதற்கு பிந்தைய மேற்கண்ட 2
மாதங்கள் சிதைந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்பு வரி வசூல் அதிகரித்திருப்பதில் நீண்ட கால அடிப்படையிலான நன்மை கிட்டலாம். நிதி சேமிப்பு முறைகளுக்கு மக்கள் மாறலாம். பணமில்லா
பரிவர்த்தனை உயரலாம். இந்த நீண்டகால விளைவுகளை மதிப்பிடுவதற்குக் கூடுதல் தரவுகள் தேவைப்படுகின்றன. அதற்குக் காத்திருக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

( https://www.minnambalam.com/k/2018/12/20/18 )

.
———————————————————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மறைக்கப்பட்ட மதிப்பீடுகள்.. சாட்டிலைட் தகவல்களின் அடிப்படையில் ஆய்வு …..!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      Sharron,

      அற்புதமான கட்டுரை… நான் முன்னதாக பார்க்கத் தவறி விட்டேன்.
      சமயத்தில் சொல்லியதற்கு மிக்க நன்றி.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.