திரு.ஸ்டாலின் பயணித்த Special விமானம் ….


10 நாட்களுக்கு முன்னதாக – மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஜெயித்து, 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் முதலமைச்சர்கள் திரு.ராகுல் காந்தியின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்….

இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விரும்பிய திமுக தலைவர் திரு. ஸ்டாலின் – தனியாக ஒரு chartered விமானம் ஏற்பாடு செய்துகொண்டு பயணித்து பதவியேற்பு விழாக்களில் கலந்து கொண்டார்.

அந்த விமானம் பற்றிய சில செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

அந்த விமானம், லண்டனுக்கு ஓடிப்போன தொழிலதிபர் விஜய் மால்யாவிற்கு சொந்தமானது என்றும் அதன் வாடகை மட்டும் ஒரு நாளைக்கு 24 லட்சம் என்றும் செய்திகள் சொல்கின்றன.
இதர செலவுகள் தனி – பறக்கும் தூரம், நேரத்திற்கு தகுந்தபடி சேர்க்கப்படும் …!!!

தமிழகத்தில், chartered விமானத்தில் பறக்கும் முதல் திமுக தலைவர் என்கிற பெருமையை திரு.ஸ்டாலின் பெறுகிறார்….

கலைஞர் பாவம், நிறைய பணம் சேர்த்தாரே தவிர, அதை அனுபவித்ததில்லை…மிகவும் சிக்கனமாக இருந்தார்…

ஆனால் புதிய தலைவர் ….. நல்ல தாராளம்….!!!

தமிழக அரசியல் நவீனமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாமா…?

——————————————————————————
புகைப்படங்கள் கீழே –

( மன்னிக்கவும். புகைப்படங்கள் பதிவதில் சில டெக்னிகல் பிரச்சினைகள் உருவாயின… இப்போது சரியாகி விட்டது.)

.
———————————————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to திரு.ஸ்டாலின் பயணித்த Special விமானம் ….

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    புகைப்படங்கள் வரலை. (அதாவது அட்டாச் செய்யலைனு நினைக்கறேன்).

    நிறையபேர் காசு சம்பாதிப்பாங்க. ஆனாலும் அனுபவிக்க முடியாதபடி நிலைமை இருக்கும் (கருணாநிதி சிக்கனமா இருந்தார்னு சொல்லாதீங்க. மற்றவர்களுக்குக் கொடுப்பதில் கருமியா இருந்தார். தனக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள பிரச்சார வேன், நடைவண்டி, இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சினிமாத் துறையினரால் பாராட்டுக்கூட்டம், மெரீனாவில் இரண்டு பக்கமும் கூலர்/சொகுசு மெத்தை என்று வாழ்க்கையை அனுபவிக்கவே செய்தார்). நீங்க ‘சிக்கனம்’ என்று சொல்றது, தன் சொந்த நடைவண்டியைத் தள்ளிக்கிட்டு வரும் வேலையாளுக்கு (உதவியாளருக்கு) அரசு செலவில் 5 கோடி பெறுமானமுள்ள வீட்டை ஒதுக்கினது, தன் சொந்த வேலைகளைச் செய்துதந்த காவல்துறைத் தலைவருடைய மகளுக்கு 5 கோடி பெறுமானமுள்ள அரசு வீட்டை ஒதுக்கினதைச் சொல்றீங்களோ? அதாவது சொந்தக் காசைச் செலவழிக்காமல், அரசுப் பணத்தைத் தாரைவார்த்ததை?

    கருணாநிதிக்கு ஒரு வேல்யூ (அனுபவமுள்ள அரசியல்வாதி) இருந்தது. ஸ்டாலினுக்கு இப்போ பந்தா தேவைப்படுது (பெரிய கட்சி என்ற ஹோதா காண்பிக்க, நாங்கள் பணக்காரர்கள் என்று மம்தா பானர்ஜி, நிதீஷ், மற்றும் இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்காத முக்கியஸ்தர்கள் முன்பு காண்பிக்கவேண்டியுள்ளது. மற்றபடி, இதெல்லாம் சம்பாதித்த சொத்தா என்ன…. ஆத்துல போற தண்ணி, அம்மா குடி ஐயா குடி கதைதான்.

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா எத்தனையோ முறை எழுதிவிட்டிர்கள் — மறுபதிப்பும் வந்தது அதில் இதுவும் ஒன்று : — // அரசியல்வாதிகளின் முறைகேடான விமான பயணங்கள் – மக்களை ஏமாற்றுவது எப்படி …?
    Posted on ஏப்ரல் 17, 2016 by vimarisanam – kavirimainthan // …… https://vimarisanam.wordpress.com/2016/04/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95-2/

    டிஜிட்டல் இந்தியாவில் // தமிழக அரசியல் நவீனமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாமா…? // …நவீனமாகித்தானே தீரணும் … ! லிஸ்டில் சேர்ந்து — சொல்லுவதை விட நடைமுறையில் காட்டுகிறார் . தானை தலைவரின் ” புதல்வர் …,, ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர்களுக்கு,

      புகைப்படங்கள் பதிவேறுவதில் சில டெக்னிகல் பிரச்சினைகள் இருந்ததால்
      அவை பதிவாகவில்லை.
      இப்போது அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. புகைப்படங்கள் மேலேயே பதிவாகி இருக்கின்றன. முன்பு பார்க்காதவர்கள் – இப்போது காணலாம்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    கொள்ளை அடித்த பணத்தை கருணாநிதி பதுக்கினார்.
    சுடாலின் செலவு செய்கிறார். மூன்று மாநில தேர்தலில்
    காங்கிரஸ் ஜெயித்தவுடன் (அதில் இரண்டு மாநிலங்கள் ஜஸ்ட் பாஸ் )
    அடுத்து மத்தியில் ஆட்சி காங்கிரஸ் பிடிக்கும் அதில் நல்ல
    “பசை” உள்ள மந்திரி பதவிகளை கெஞ்சி வாங்கி நல்ல “அறுவடை”
    செய்யவேண்டாமா ? அதற்குத்தான் தனி சொகுசு விமானம்.
    கருணாநிதி பிறந்த நாளில் உண்டியல் வைத்தார் . அவர் மகன்
    சொகுசு விமானத்தில் பறக்கிறார், அவ்வளவே வித்தியாசம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.