…
…

…
‘மாயா’ என்றால் என்ன….?
” Maya ” connotes a “magic show, an illusion where things
appear to be present but are not what they seem”
இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டுவது தான் “மாயா”…
இளம் வயதில், மிக நீண்ட காலத்திற்கு, நானும் கூட RSS தேசபக்தர்களைக்கொண்ட ஒரு சேவை அமைப்பு என்று தான் நினைத்துக்
கொண்டிருந்தேன்…
ஆர்.எஸ்.எஸ். தேசபக்தர்களைக் கொண்ட ஒரு அமைப்பு என்று இன்று கூட சமுதாயத்தில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்…
இன்றும் கூட பல ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தங்களை தேசியவாதியாகத்தான் கருதிக்கொள்கின்றனர்…. கம்யூனிஸ்ட்டுகளைப் போல, சராசரி ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் மிகுந்த நேர்மையாளராகவும், லட்சியவாதியாகவும்தான் இருக்கின்றனர்…….
ஆனால் – இது வெறும் மாயை….
அதன் புத்திசாலித்தனமான உயர்மட்டம் உலகுக்கு ஷோ காட்டுவதைப்
போலவே இத்தகைய தொண்டர்களுக்கும் “தேசபக்தி” என்கிற போர்வையில் வேறு எது எதையோ சொல்லிக் கொடுத்து அவர்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது. அதன் சொந்த தொண்டர்களையே “மாயை”யில் மிதக்க விட்டிருக்கிறது….
உண்மையில், தேசத்தை துண்டாட வித்திடும் ஒரு இயக்கம் அது என்பதை விவரமாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை –
அதன் உண்மை சொரூபத்தை புரிந்து கொண்டவர்களுக்கு இருக்கிறது.
அந்த வழியில் என் கருத்தை விவரமாக எடுத்துச் சொல்ல வேண்டும்
என்று கொஞ்ச நாட்களாகவே நினைத்து வந்தேன். அதற்கான நிறைய பழைய ஆவணங்களைப் பார்த்து வந்தேன் … விவரங்களை சேகரித்து வந்தேன்…
அந்த நான் கண்ட அந்த சரித்திர ஆவணங்கள் ஆர்.எஸ்.எஸ். பற்றி
சொல்லும் சில விவரங்கள் –
After the formation of the RSS, which portrays itself as a social movement,
Hedgewar kept the organisation from having any direct affiliation with the political organisations then fighting British rule…
….
Golwalkar did not want the British to ban the RSS. He complied with all the
strictures imposed by the Government during the Second World War, even
announcing the termination of the RSS military department.
The Home Department did not see the RSS as a problem for law and order in
British India…
….
The Bombay Government report further noted that in December 1940, orders
had been issued to the provincial RSS leaders to desist from any activities that
the British Government considered objectionable, and the RSS, in turn, had
assured the British authorities that “it had no intentions of offending against the orders of the Government”
….
Golwalkar later openly admitted the fact that the RSS did not participate in the
Quit India Movement.
…
RSS leaders openly admired Adolf Hitler and Benito Mussolini.Golwalkar took
inspiration from Adolf Hitler’s ideologies….
…
After the Tricolor was adopted as the National Flag by the Constituent Assembly
of India on 22 July 1947, the RSS viciously attacked the Tricolor and the
Constituent Assembly’s decision.
…
RSS said openly that –
The people who have come to power by the kick of fate may give in our hands
the Tricolor but it [will] never be respected and owned by Hindus.
The word three is in itself an evil, and a flag having three colours will ertainly produce a very bad psychological effect and is injurious to a country
………
The Rashtriya Swaysevak Sangh initially did not recognize the Constitution of
India, strongly criticising it..
………………….
நான் ஒரு விவரமான கட்டுரையை எழுத முனைந்துகொண்டிருக்கையில்,
ஆங்கிலத்தில் யோகேந்திர யாதவ் எழுதி, தமிழில் திரு.சாரி அவர்களால்
மொழி பெயர்க்கப்பட்ட ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது….
நான் எழுத நினைத்தது அத்தனையையும்,
இன்னமும் அதற்கு மேலாகவும் அழகாக, விளக்கமாக, தெளிவாக-
எழுதி இருக்கிறார் யோகேந்திர யாதவ். அதை அற்புதமாக தமிழில் தந்திருக்கிறார் திரு.சாரி.
அந்த கட்டுரையை நமது வாசக நண்பர்களுடன் இங்கே பகிர்ந்து
கொள்கிறேன்…. இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள்
நூற்றுக்கு நூறு நானும் சொல்ல விரும்பியவையே…
————————————
தேச விரோத அமைப்பா ஆர்எஸ்எஸ்?
……………
டெல்லியில் நடந்த ஆர்எஸ்எஸ் இயக்க மூன்று நாள் மாநாடு, அதன் முக்கிய நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டது. தாங்கள் கவர நினைத்தவர்களை – தோற்றத்தை மாற்றி ஈர்த்துவிட்டது.
பணிவடக்கமுள்ள இந்திய ஊடகங்களும் விமர்சகர்களும் சந்தேகம் ஏதும்
படாமல், ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தேவைப்பட்ட, அது விரும்பியபடியிலான கேள்விகளையே கேட்டனர். ஒரு கடுமையான, ஆழமான கேள்வி ஆர்எஸ்எஸ் அமைப்பை நோக்கிக் கேட்கப்பட வேண்டிய நேரம் இது. அது, தேச விரோத அமைப்பா ஆர்எஸ்எஸ்?
வெளிப்பார்வைக்கு இது வித்தியாசமான கேள்வியாகவே தோன்றும்.
‘தேசியவாதம்’, ‘இந்தியத்தன்மை’, ‘இந்துத்துவம்’ என்பதெல்லாம்
ஆர்எஸ்எஸ்ஸின் அடிப்படை முழக்கங்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின்
அகமும் புறமும் எனக்குத் தெரியும். நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவக்குகளும் பல பிரச்சாரகர்களும் எனக்குப் பரிச்சயம்.
கொள்கையும் நடத்தையும்
ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் தொண்டரும் தன்னை தேசியவாதியாகத்தான்
கருதிக்கொள்கிறார். கம்யூனிஸ்ட்டுகளைப் போல, அந்தக் கால சோஷலிஸ்ட் இயக்கத்தவர்களைப் போல சராசரி ஆர்எஸ்எஸ் தொண்டரும் மிகுந்த நேர்மையாளராகவும், லட்சியவாதியாகவும்தான் இருக்கிறார். தேசியப் பேரிடர் காலங்களில் எந்தவித எதிர்பார்ப்பும், அங்கீகாரமும் இல்லாமல் மீட்பு – நிவாரணப் பணிகளில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஈடுபடுவதை நானே அறிந்திருக்கிறேன்.
அந்த இயக்கம் ‘அதிதீவிர தேசியவாதியாக’ இருக்கிறது என்பதுதான் இப்போதைய விமர்சனமே. எனவே, அது தேசியவாத அமைப்புதானா என்று கேட்பது மூர்க்கத்தனமானது.
அதேசமயம், இக்கேள்வியை மிகத் தீவிரமாகவும் நியாயமாகவும் விவாதிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா என்கிற தேசத்தைக் கட்டமைப்பதில் ஆர்எஸ்எஸ்ஸும் அதன் பரிவாரங்களும் விடுக்கும்
சவால்களை நாம் விவாதிப்பதே இல்லை. ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பின்
சித்தாந்தமும், தேசத்துடன் அதற்கு இருந்த, இருக்கிற, இருக்கப்போகிற
தொடர்பும் விவாதிக்கப்பட வேண்டியவை.
சுதந்திரத்துக்கு முந்தைய காங்கிரஸ்
கடந்த காலம் தொடர்பான சந்தேகத்துக்கிடமில்லாத சில உண்மைகளை
நினைவுகூர்வோம். 1925-ல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தேசிய
இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் பங்கெடுத்தது கிடையாது. அதன் சார்பு
அமைப்பான இந்து மகாசபை போன்றவை தேசிய இயக்கத்தையே
எதிர்த்தன. “இனி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமாக இருப்பேன்”
என்று நான்கு முறை கருணை மனு போட்டதன் பிறகே அந்தமான்
சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சாவர்க்கரின் சித்தாந்தங்கள்தான்
ஆர்எஸ்எஸ் உருவாக்கியவர்களை மிகவும் கவர்ந்தவை.
சிறையிலிருந்து விடுதலையானதும் பிரிட்டிஷ் அரசு கொடுத்த உதவித்
தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களுடைய ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தவர்தான் சாவர்க்கர்.
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்துச் செயல்பட்டவர் இந்து மகாசபையின் மற்றொரு தலைவர் சியாமபிரசாத் முகர்ஜி.
காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் சேராமல்
ஒதுங்கியிருந்தது. முஸ்லிம் லீக் கேட்பதற்கு முன்னதாகவே, தேசத்தை
இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கேட்டவர்கள் இந்து தேசியவாதிகள்.
மகாத்மா காந்தி படுகொலையில் ஈடுபட்ட நாதுராம் கோட்சேவின் பின்னணி ஊர் அறிந்த ரகசியம். இந்தக் காரணங்களுக்காக அதை தேச விரோத அமைப்பு என்று இப்போது முத்திரை குத்திவிட முடியாது.
சுதந்திரத்துக்குப் பிந்தைய காங்கிரஸ்
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஆர்எஸ்எஸ் என்ன செய்தது என்பது முக்கியமானது. ஆனால், இதற்கான பதிலும் எதிர்மறையானது என்பதுதான் துரதிருஷ்டவசமானது. இந்தியக் குடியரசின் சில முக்கிய
அடையாளங்களை மதிக்க மறுத்த அமைப்புகளில் ஒன்று ஆர்எஸ்எஸ்.
அவை – தேசியக் கொடி, தேசிய கீதம், இந்திய அரசியலமைப்புச் சட்டம்.
அது எப்படியென்றால், நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு
இப்போதுதான் முதல் முறையாக ஒரு ஆர்எஸ்எஸ் தலைவர் கூறுகிறார்,
“அரசியல் சட்டத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று. அவருக்கு
முன் இப்பொறுப்பை வகித்தவர்கள் இதற்கு நேர் எதிரான கருத்தைத்தான்
கூறி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி அரசியல் சட்டம் வலியுறுத்தும்
முக்கியமான அம்சங்களான சமத்துவம், மதச்சார்பின்மை,
கூட்டாட்சிமுறை, ஜனநாயகம் ஆகிய எதுவுமே ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு
உவப்பானவை அல்ல. 1992-ல் நடத்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு அரசியல்
சட்டப்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவையே உடைத்ததுதான்.
அரசியல் சட்டத்துக்கு விசுவாசமான தேசபக்திதான் தேசிய அரசியல் வாழ்க்கையின் இதயம் என்றால், ஆர்எஸ்எஸ் அந்த நிலைக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
இந்திய தேசியவாதத்துக்கு நேரெதிர்
இந்திய தேசியவாதத்துக்குப் பொருத்தமில்லாத வகையில் அதன்
சித்தாந்தங்களும் செயல்களும் இருப்பதால் அது ‘ஐரோப்பிய இறக்குமதி’
அமைப்பு என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது. இப்போது எவராலும்
ஆதரிக்கப்படாத ‘தேச-அரசு’ என்ற சித்தாந்தத்தை ஆர்எஸ்எஸ்
ஸ்வீகரித்துக்கொண்டுள்ளது. ஒரு தேசத்தின் கலாச்சார எல்லைகளும்
அரசியல் எல்லைகளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இதன் அடிப்படை.
ஒரே மாதிரியான இனம், மதம், மொழி, கலாச்சாரம் கொண்டதுதான் அரசு
என்று ஐரோப்பாவில் கருதப்படுகிறது.
இந்தியாவில் அதையே ‘இந்தி’, ‘இந்து’, ‘இந்துஸ்தான்’ என்று சாவர்க்கர் முழங்கி அடையாளப்படுத்தினார்.
இந்தியாவிலேயே வளர்ந்த தேசியவாதம், ஐரோப்பிய தேசியவாதத்தை
ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே கலாச்சார – அரசியல் எல்லைகளாக
இருக்க வேண்டும் என்பதற்காக சிந்தப்பட்ட அர்த்தமற்ற ரத்த பலிகளை இந்தியா ஏற்கவில்லை.
கலாச்சாரம், மொழி, மதம் ஆகியவற்றில் ஆழமான வேற்றுமைகள் இருந்தாலும் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்தி வளர்ச்சி காண்பதுதான் இந்திய தேசியத்துவம்.
பன்மைத்துவத்தில் விரியும் உலகம் இப்போது இந்தியாவின் தேசியவாத
மாதிரியைக் கைக்கொள்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்போ ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்த, பிரிவினையை வளர்க்கும் தேசியத்துவத்தைப் பிடித்துத் தொங்குகிறது.
பெரும்பான்மைச் சமூகத்தைப் பிற சமூகங்களிலிருந்து பிளவுபடுத்தும் அதன் செயல் இந்திய தேசியத்துவத்துக்கு மிகப் பெரிய தடையாக விளங்குகிறது.
செயல்பாட்டு முரண்பாடு
தேச ஒருமைப்பாட்டுக்காகப் பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் ஒரு அமைப்பு, நம்முடைய தேச ஒற்றுமைக்கே ஆபத்தாக உள்ள பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகாண நேரமோ, ஆற்றலோ ஒதுக்காமல் இருப்பது விந்தையாக இல்லையா?
உதாரணத்துக்கு கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் காவிரிப் பிரச்சினை, பஞ்சாபுக்கும் ஹரியாணாவுக்கும் தண்ணீர்ப் பிரச்சினை, தெலங்கானா, விதர்பா
ஆகியவற்றில் பதற்றங்கள், பஞ்சாபி-இந்தி, கன்னடம்-மராட்டி மொழி
மோதல்கள், வட கிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக பெங்களூருவில்
வன்முறைத் தாக்குதல், இந்தி பேசுவோர் மீது மும்பையில் தாக்குதல்
ஆகியவற்றைத் தீர்க்க ஆர்எஸ்எஸ் எடுத்த முயற்சிகள் என்ன?
ஏதாவது ஒரு விவகாரத்தில் மதம் சம்பந்தப்பட்டால் மட்டுமே
ஆர்எஸ்எஸ் தேசியவாதிகள் தலையிடுகின்றனர்.
அதற்காக இந்து மதம் மீது அவர்களுக்கு அக்கறை என்றும் கூறிவிட முடியாது. வைதீக இஸ்லாமும் வைதீக கிறிஸ்தவமும் தங்களுடைய கருத்துகளை
அப்படியே மற்றவர்கள் மீது திணிப்பதற்கு ஒப்ப, வைதீக இந்துத்துவத்தைத்தான் ஆர்எஸ்எஸ் நெருக்கமாகக் கருதுகிறது.
ஆனால் உண்மையான இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கை, மனிதாபிமானம்
மற்றும் எல்லா மதங்களையும் உயர்வாக நினைக்கும் சமநோக்குப்
பார்வைதான்.
இந்தியாவின் தேச ஒற்றுமைக்கு பெரிய ஆபத்தாக இருப்பது
இந்து-முஸ்லிம் இடையிலான மோதல்கள்தான். எனவே, இந்து-முஸ்லிம்
இடையே பதற்றத்தை அதிகப்படுத்துகிறவர்களை தேச விரோதிகளாகவும்,
தேசத் துரோகக் குற்றம் இழைப்பவர்களாகவும்தான் கருத வேண்டும்.
பிரிவினைவாதிகள் இந்தியாவின் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானவர்கள். இடதுசாரி தீவிரவாதிகள் இந்திய அரசின் இறையாண்மைக்கு சவாலானவர்கள். ஆர்எஸ்எஸ் விடுக்கும் சவாலோ இன்னும் ஆழமானது. அது இந்தியா என்ற நாட்டின் கருப்பொருளையே வேறுவிதமாகச் சித்தரிக்கிறது.
இந்தச் செயல் தேச விரோதச் செயல் இல்லையென்றால், வேறு எதுதான்
தேச விரோதச் செயல்?
ஒரு காந்திய முடிவு
ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடைவிதிக்க வேண்டும் என்பதை நான் ஆதரிக்க மாட்டேன். தேசம் பற்றிய அதனுடைய சித்தாந்தமும் வழிமுறைகளும் கலாச்சார-அரசியல் நோயாக இருக்கிறது. இதைக் குணப்படுத்த வேண்டுமே தவிர தடைவிதிக்கக் கூடாது. நவகாலத்து இந்துவுக்கு ஏற்பட்ட தாழ்வுணர்ச்சியிலிருந்து இந்தக் கருத்து வெளிப்படுகிறது.
நம்முடைய மேற்கத்திய பாணி, மதச்சார்பற்ற கொள்கையிலிருந்து
இப்படித் தோன்றியிருக்கிறது. நான் சொல்வது வினோதமாகத் தோன்றலாம்.
ஆம், இந்தியாவின் பரந்துபட்ட கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ்
அறிந்துகொள்ளச் செய்ய வேண்டும். பன்மைத்துவம் மிக்க மரபுகளை
அதை உணரச் செய்ய வேண்டும்.
கலாச்சாரரீதியாகத் தங்கள் நாட்டின் ஐக்கியம் மீது மிகுந்த நம்பிக்கை
வைத்திருந்த ரவீந்திரநாத் தாகூர், காந்தி ஆகியோருக்கு இந்து மதம் குறித்து நல்ல புரிதல் இருந்தது. விஞ்ஞான பவனத்தில் கூட்டம் நடத்தி மேலும் பலரைச் சென்றடைய வேண்டும் என்று கருதாமல் தனக்குள்ளேயே ஆத்மபரிசோதனை செய்துகொண்டால்,
காங்கிரஸுக்கு காந்தி சொன்ன அறிவுரையை
சர்சங்கசாலக் மோகன் பாகவத்,
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் கூறக்கூடும். அது –
‘கலைந்துவிடுங்கள்…!’ என்பதாகத் தான் இருக்கும்.
.
———————————————————————————



அப்படியே கம்யூனிஸ்ட்டு மற்றும் முஸ்லீம் அமைப்புகள் பற்றியும் நடுநிலையோடு ஒரு கட்டுரை அல்லது விமரிசம் எழுதினால் மக்கள் நீங்கள் ஒரு நடுநிலைவாதி என நம்புவார்கள் மேலும் தங்கள் ஜெயலலிதா மற்றும் அவர் செய்த ஊழல் தவறுகள் இவைகளை பற்றி ஒரு கட்டுரை , விமரிசனம் எழுதவே இல்ல ஏனோ ???
Gnana Sekaran
முதலில் ஆர்.எஸ்.எஸ். போதையிலிருக்கும் உங்கள் நண்பர்களை அவர் மீட்கட்டும்.
Gnana Sekaran,
நீங்கள் எல்லா இடுகைகளுக்கும் மறுமொழி எழுதாமல், பாஜக /ஆர்.எஸ்.எஸ். பற்றி எழுதும்போது மட்டும்
வந்து குதிக்கிறீர்களே … ஏனோ…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஐயா,நீங்கள் பிஜேபி பற்றிய சரியான விமர்சனம் எழுதினால் நடுநிலையாக இருப்பவர்கள் வரவேற்கவே செய்வார்கள் இதில் மாற்று கருது இல்லை ஆனால் தாங்களோ எப்பவும் பிஜேபி என்கிற ஒரு கட்சியை மட்டும் தவறாக அல்லது அவர்களை மட்டுமே விமர்சனம் செய்வது ஏன் என் கேட்கிறேன்
எது நடுநிலை…?
நல்லதற்கும் கெட்டதற்கும் நடுவே போர் நடக்கும்போது – நடுநிலை என்கிற கேள்வி எப்படி வரும்..?
கெட்டதை எதிர்த்து தான் செயல்பட முடியும். அது தான் நேர்மையானவர்கள் செய்யக்கூடியது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம், ஒரே தலைவர் என்று அதிதீவிரமாக
செயல்படுவது, பன்முக பண்பாட்டை, இயல்பை கொண்ட மக்களை வதைத்து, இந்த நாட்டையே
சிதறடிப்பதில் தான் கொண்டு விடும். அதை எதிர்ப்பது மனசாட்சி உள்ளவர் ஒவ்வொருவரும்
செய்ய வேண்டிய செயல்.
அடிமைகளுக்கு மனசாட்சி கிடையாது… அவர்கள் தங்கள் எஜமானர்களின் மனசாட்சியாகத்தான்
செயல்பட முடியும். இங்கே பின்னூட்டமாக வருவது அதைத்தான் வெளிப்படுத்துகிறது.
காவிரிமைந்தன் அவர்களே , நீங்கள் தான் அடிமை நாங்கள் இல்லை உங்களுக்கு யார் எஜமான் ( வெளிநாட்டு அமைப்பு , மிஷினரி , அர்பன் நக்ஸ்ல்…etc
தற்போது எல்லாம் தங்கள் ஏனோ கட்டுரை விமரிசம் எழுதாமல் மற்றவர்கள் எழுதிய கட்டுரையை பிரசுரம் செய்வது ஏனோ ? தங்களால் முடியவில்லையா ?/
Gnana Sekaran,
//தற்போது எல்லாம் தங்கள் ஏனோ கட்டுரை விமரிசம் எழுதாமல்//
-தவறாக கூறுகிறீர்கள். நானும் எழுதிக்கொண்டு, மற்றவர்கள் எழுதியதையும் போடுகிறேன். நல்ல, பயனுள்ள, சுவாரஸ்யமான – விஷயங்கள் எங்கிருந்தாலும், நமது விமரிசனம் தள நண்பர்கள் அவற்றையும் வாசிக்க வேண்டும் என்பதற்காக….!!! இதில் உங்களுக்கு ஏதேனும் நஷ்டமா…? உளைச்சலா … ?
இந்த இடுகை கூட, முதல் பகுதி நான் எழுதியது தானே…?
//தங்களால் முடியவில்லையா ?//
ஆம். இங்கு புரையோடிக்கிடக்கும் புண்களை அகற்ற என்னால் மட்டும் முடியாது.
மற்றவர்களின் துணையும் எனக்கு தேவைப்படுகிறது…அதனால் தான்…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
எனக்கு எந்த மனஉளைச்சலுக்கு இல்லை தங்களுக்கு தான் modi phobia என்கிற வியாதியினால் அவதிப்படுகிறீர்கள் என் நினைக்கிறேன்
நான் மட்டுமா…? இந்த நாட்டு மக்கள் அனைவரையும் பாதித்திருக்கும் ஒரு தொற்று நோய் அது….!
வாழ்த்துக்கள்
அய்யா,
அப்படியே அல்-கொய்தா,லக்ஷர்-ஈ-தொய்பா பற்றியும் ஒரு கட்டுரை வரைந்தால், எல்லாருக்கும் ஒரு புரிதல் ஏற்படும்.
பு.தமிழன்,
கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஜெயில் வாசம் செய்த உங்கள் தலைவருக்குத்தான் இதைப்பற்றீ எல்லாம் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.அவரையே கேளுங்களேன். உங்களுக்கும் கொஞ்சம் புரிதல் ஏற்படும்.
WHom you mean? Its just for the viewver knowledge only i requested…
கொலைத்தலைவரின் அடிமைச் சீடர்கள் !
சபரிமலை விவாகத்தில் தங்களின் கருத்துக்கள் எதுவும் இல்லை, ஒரு இந்து மதத்திற்கு எதிரான ஒரு கருது என்றல் உடனே நீங்கள் அனைவரும் நடுநிலைவாதியாகிவிடுகிறீர்கள் , மற்ற மதத்தினர் என்றால் அமைதியா இருப்பது அல்லது கட்டுரை, விமர்சனம் எழுதாமல் தவிர்ப்பது , இவை நடுநிலை இல்லை
இந்த வலைத்தளம், மத நல்லிணக்கத்தை வளர்க்க செயல்படுகிறது…
வேறுபாடுகளைத் தூண்டி விட அல்ல.
இங்கே எதை எழுத வேண்டும் என்று தீர்மானிப்பது நானாகத்தான் இருக்க முடியும்…
மதவெறியாளர்கள் அல்ல.
நீங்களும், நீங்கள் சார்ந்த கட்சியும் மத வெறுப்புணர்வை தூண்டுவதற்கு கிடைக்கிற சந்தர்ப்பங்கள்
அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறீர்கள்.
சுப்ரீம் கோர்ட்டில் இந்த விஷயம் விவாதிக்கப்படும்போது, மத்திய அரசு ஊமைக்கோட்டானாய் இருந்தது ஏன்..?
விஷயம் வீதிக்கு வரும் … கட்சியை வளர்க்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தானே…?
இந்து மதத்தை பற்றி எழுதினால் அது மத வெறி இல்லை அனால் மற்ற மதத்தை பற்றி எழுதினால் அது மத வெறியா காவிரிமைந்தன்?? இதில் இருந்து தெரிகிறது நீங்கள் நடுநிலையற்றவர் என
மூர்க்கர்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது;
கே.எம்.சார் ஏற்கெனவே சொல்லி இருப்பது –
//இந்த வலைத்தளம், மத நல்லிணக்கத்தை வளர்க்க செயல்படுகிறது…
வேறுபாடுகளைத் தூண்டி விட அல்ல.//
அய்யா …! ஆர் .எஸ் .எஸ் . பற்றி திரு . யோகேந்திர யாதவ் விலாவாரியா மாய்ந்து ..மாய்ந்து எழுதி அதை திரு . சாரி அவர்கள் தமிழாக்கம் செய்ததை நீங்கள் பதிவாக்கி போட்டுள்ளதற்கு ஏதும் கூறாமல் அந்த , இந்த இயக்கத்தைப் பற்றி ஏன் எழுதுவது இல்லை என்று கேள்வி கேட்பதும் … பதிவாகியுள்ளதற்கு நேரிடையான பதிலோ — விவாதமோ இன்றி வேறு விஷயங்களைப் பற்றி கருத்து போட்டு திசை மாற்றும் வேலை தான் நடக்கிறதே ஒழிய இடுகையின் உள்ளீடான கருத்தியலுக்கு யாரும் விவாதம் செய்யாமல் இருப்பது ஏன் …. ? ” மாயாவின் ” மகிமையே அதுதான் என்கிறீர்களா …?
செல்வராஜன்,
இப்போது ஒரு புதிய ஃபார்முலா கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இங்கே இடுகையில் சீரியசாக எதையாவது சொன்னால், அதை திசை மாற்றுவதற்காக வேறு எதையாவது
கிளப்புவது…அதையே மையமாக வைத்து விவாதத்தை தொடர்வது….
நீங்கள் சொல்வது போல் – இடுகையில் வந்த விஷயம் மறக்கடிக்கப்படும்…
இதிலும் அப்படித்தான்… ஆர்.எஸ்.எஸ். பற்றி இவ்வளவு செய்திகள் இடுகையில் கூறப்பட்டிருக்கிறதே.
யாராவது, அதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார்களா…?
இடுகையில் சொல்லப்படும் கருத்துகளை, செய்திகளை அவர்களால் மறுக்க முடியவில்லை… மறுப்பதற்கோ,
விவாதிப்பதற்கோ அவர்களால் முடியவில்லை – என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
-காவிரிமைந்தன்
KM sir is in need to increase his TRP rating, as he agreed few days ago. so, he has gone back to his old days of jaundice vision – searching articles that are anti bjp, anti modi, anti amit, anti rss etc.,
it is his blog. he can cut and paste whatever he likes.
‘sontha saraku’ onnum illai… cut and paste articles from here and there.
What’s wrong in that..?
Yes, he is bringing back someone’s articles here to limelight every-one to know more people to read about all your ”Ejamaner’s” Anti-Indian activities.
Would you please come out to write about what the article’s speak?
///‘sontha saraku’ onnum illai… cut and paste articles from here and there.///
Please scroll up, KM sir reply to another bakht same like sickening question.
வெங்கிட்டு (என்கிற கொலைகாரர்களின் பக்தரே),
உங்களிடம் “சொந்த சரக்கு” எதாவது இருந்தால், கே.எம்.சார் இந்த இடுகையில் எழுதியிருக்கும் விஷயங்களை குறித்து அறிவுபூர்வமாக விவாதித்து, மறுத்து எழுதி இருக்க வேண்டும்.
உங்கள் மோடி பஜனைக்கூட்டம் முழுவதுமே, திட்டுவதில் தான் குறியாக இருக்கிறீர்களே தவிர, ஆதாரபூர்வமாக, அனுபவபூர்வமாக, புத்திபூர்வமாக
எதாவது எழுதுகிறீர்களா ?
உங்களைக் கேட்டு என்ன பயன்… சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் ?
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட கும்பல்கள் …..
வெட்கங்கெட்டுப்போய் அவர்களை தலைவராக ஏற்றுக் கொள்கிறீர்களே
அவமானமாக இல்லை ? இங்கே பேச வேறு வந்து விட்டீர்கள்.
//KM sir is in need to increase his TRP rating,//
வாசகப் பெருமக்கள் கே.எம். சாருக்கு ஏற்கெனவே மிகவும் கவுரமான ஒரு இடத்தை கொடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு மோடி பஜனையைத்தவிர எதாவது தெரிந்திருந்தால் பார்த்திருப்பீர்கள். மாதக்கணக்காக தமிழ்மணத்தில் நம்பர் -1 ஆக விமரிசனம் வலைத்தளம் தான் இருக்கிறது.
போய் நல்ல கருங்கல் சுவராகப் பார்த்து முட்டிக்கொள்ளுங்கள்.
Venkat,
//‘sontha saraku’ onnum illai… cut and paste articles from here and there.//
Go and see above. K.M.sir has already replied to another foolish remark.
//Gnana Sekaran,
//தற்போது எல்லாம் தங்கள் ஏனோ கட்டுரை விமரிசம் எழுதாமல்//
-தவறாக கூறுகிறீர்கள். நானும் எழுதிக்கொண்டு, மற்றவர்கள் எழுதியதையும் போடுகிறேன். நல்ல, பயனுள்ள, சுவாரஸ்யமான – விஷயங்கள் எங்கிருந்தாலும், நமது விமரிசனம் தள நண்பர்கள் அவற்றையும் வாசிக்க வேண்டும் என்பதற்காக….!!! இதில் உங்களுக்கு ஏதேனும் நஷ்டமா…? உளைச்சலா … ?
இந்த இடுகை கூட, முதல் பகுதி நான் எழுதியது தானே…?
//தங்களால் முடியவில்லையா ?//
ஆம். இங்கு புரையோடிக்கிடக்கும் புண்களை அகற்ற என்னால் மட்டும் முடியாது.
மற்றவர்களின் துணையும் எனக்கு தேவைப்படுகிறது…அதனால் தான்…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன் //
thoongubavarai yezhuppalaam. Ungalaipol kaNgalai moodikkonu iruppavargalai yezhuppavEy mudiyaathu.
Mr.VENKAT,
I have a suggestion for you.
A Very Simple suggestion.
இந்த காலங்களில் ஒரு வலைத்தளம் ( BLOG ) துவங்குவது மிக மிக எளிது.
யார் வேண்டுமானாலும் துவக்கலாம்.
அஞ்சு காசு செலவு கிடையாது…
என்ன – கொஞ்சம் அறிவு வேண்டும்…
அசந்து விடப்போகிறீர்கள்… வேறெதற்கும் இல்லை…
சும்மா – CUT & PASTE செய்யத்தான்… அதற்கு தேவையான அளவு
அறிவு இருந்தால் போதும்…
உங்கள் கூற்றுப்படி – எனக்கு அவ்வளவு தானே இருக்கிறது…!!!
உங்களுக்கு நிச்சயம் அதைவிட அதிகமாகவே இருக்கும்….
ஒரு full மேய்ச்சல் விடுங்கள். எங்கெல்லாம், எதெல்லாம் கிடைக்கிறதோ
வெட்டிக் கொண்டு வந்து ஒட்டுங்கள்…
ஜாம் ஜாமென்று வலைத்தளம் நடத்துங்கள்…
நீங்கள் மோடிஜி பஜனை வேண்டுமானாலும் பாடலாம்…
அமீத்ஜி பஜனை வேண்டுமானாலும் பாடலாம்…
இல்லை வேறு எந்த கொலைக்குற்றம் சாட்டப்பட்ட
‘தலை’ பஜனையும் பாடலாம்.
அநாவசியமாக இங்கே வந்து மஞ்சள் காமாலை, பச்சை காமாலை என்று
வயிற்றெரிச்சல் பட்டுக்கொண்டிருக்க வேண்டாம்.
வலைத்தளம் பிய்த்துக் கொண்டு ஓடும்…
தகவல் சொல்லுங்கள்….
நானும் வருகிறேன்…நண்பர்களும் வருவார்கள்… பேசுவோம்…நிறைய…!!!
ஆனால் நான் – நாங்கள் – காமாலைக்கண்களோடு வர மாட்டோம்.
கருத்துகளோடு வருவோம்…
அறிவைக் கொண்டு போரிடுவோம்…
வயிற்றெரிச்சலோடு அல்ல…
உரிமையை காக்க…இந்த நாட்டின், இந்த சமூகத்தின் நலன்களை காக்க…
சீக்கிரமே சொல்லியனுப்புவீர்கள் என்று நம்புகிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
——————————————————————–
அன்பார்ந்த நண்பர்களுக்கு,
நான் உங்களுக்கு -முக்கியமாக…. அறிவழகு, செல்வராஜன், அரவிந்தன், மணி, போன்றோருக்கு – மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பாஜக தீவிர அபிமானிகள் படையெடுத்து வரும்போது, நீங்கள் எனக்கு அரணாக இருந்து பாதுகாப்பு தருவதற்கு மிக மிக நன்றி. அவ்வப்போது சூடாக நீங்கள் கொடுக்கும் “பஞ்ச்” என் பணியை சுலபமாக்கி, எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. இல்லையேல், பதில் கொடுக்கும் சுமை வேறு என் மீது சேர்ந்து கொள்ளும். கண்ணியமான முறையில், அறிவுபூர்வமாக எவ்வளவு சூடாக வேண்டுமானலும் பதில் கொடுங்கள்… நான் நன்றியுடன் வரவேற்கிறேன்.
.
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கே.எம்.சார்,
// நான் உங்களுக்கு – முக்கியமாக…. அறிவழகு, செல்வராஜன், அரவிந்தன், மணி, போன்றோருக்கு – மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பாஜக தீவிர அபிமானிகள் படையெடுத்து வரும்போது, நீங்கள் எனக்கு அரணாக இருந்து பாதுகாப்பு தருவதற்கு மிக மிக நன்றி.//
எங்கள் பாதுகாப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.
இனி கவலையை விடுங்கள். நீங்கள் எந்த re-action பற்றியும் கவலைப்படாமல் உங்கள் பாதையில் சென்று கொண்டே இருங்கள்.
தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள்.
எதிர்ப்பாளர்களை நாங்கள், நண்பர்கள் பார்த்துக் கொள்கிறோம்.
இனி அவர்களுக்கு சுடச்சுட பதில் கிடைக்கும் – நீங்கள் சொல்லியபடியே
“கண்ணியமான முறையில், அறிவுபூர்வமாக ” ; சரியாக இல்லாதபோது,
நீங்களே முறைப்படுத்துங்கள்.
எங்கே நம்ம ஆஸ்தான திசை திருப்பி நண்பர் புதியவன்…!
ஓ…! அவர் வேலையை மற்ற இரண்டு பேர் எடுத்துக் கொண்டார்களென்றா காணோம்…?
நண்ப செல்வா…!!
பொதுவாகவே ஆர்எஸ்எஸ் பக்தாள்களுக்கு அடிப்படை போதனையே;
பொய், உள்ளதை உள்ளபடி பேசாமை, அடாவடித்தனமாக காட்டு கத்தல் கத்தி விவாதத்தின் போக்கையே மாற்றுதல், விவாதிக்க வந்தவர்களை நிதானிக்கவிடாமல் செய்தல்…
இதுவெல்லாத்தையும் அவர்கள் மூலையில் ஏற்றி தான் அனுப்புகிறார்கள்.
உனக்கு எப்படி தெரியும் பார்த்த மாதிரி சொல்றியே என்றால்…அது தான் எல்லா டிவி விவாதங்களிலும் பார்க்கிறோமே…இங்கு நம்ம புதியவனும் அதை தானே செய்து கொண்டு இருக்கிறார்.
கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு.
ஆக, ஆர்எஸ்எஸ்/பாஜக அது பொய்யர்கள் கூடாரம் என்பதை மனதில் வைப்போம்.
யோசனை செய்வோம். இப்ப இந்த இடுகையில் சொல்லப்பட்டவைகளை இவர்கள் மறுக்க வந்தார்கள் என்று வைப்போம். பிறகு திருடன் கையில் தேள் கொட்டியது போல் ஆகாது…!?
புரிந்து கொள்ளுங்கள்.
அய்யா … ! உங்கள் ” வசிஷ்டர் ” வாயை திறந்து விட்டார் ..?
ரொம்ப நாட்களாக இந்த தலத்தில் பி.ஜே.பி ஆதரவாளர்களின் கருத்துக்கள் இல்லாமல் ரொம்ப போர் அடித்தது. கா.மை சார் , எதை எழுதினால் , இந்த பி.ஜே.பி ஆதரவாளர்களை இழுக்கலாம் என்று நன்கு அறிந்தவர்.
அதனால், மேற்கொண்டு இந்த பார்முலா பின்பற்றப்படும்.
அய்யா …! முன்னாள் பிரதமர் – இந்நாள் பிரதருக்கு : — // “மோடிஜி, நீங்க நல்லா இருக்க ஒரு அட்வைஸ் சொல்லட்டா” மன்மோகன் சிங் உருக்கம்..! //
Read more at: https://tamil.goodreturns.in/news/2018/11/27/manmohan-singh-advice-prime-minister-narendra-modi-013121.html … இதை நடுநிலையோடு ஏற்றுக்கொள்ள ஒரு மனபக்குவம் வேண்டும் … அப்படித்தானே …?
செல்வராஜன்,
முன்பு – திரு.மன்மோகன் சிங் அவர்களைக்கூட நாம் இங்கே எவ்வளவோ விமரிசனம் செய்திருக்கிறோம்.
ஆனாலும் அவர் ஒரு ஜென்டில்மேன்… அவரை விமரிசிப்பது நமக்கும் கௌரவமாக இருந்தது…
ஆனால் இப்போது……..அய்யகோ… !!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
KM Sir don’t get upset. We are here to appreciate your writing. So keep going and keep on going.
கா.மை. சார்… இடுகை வெளியானபோதே படித்துவிட்டேன். எனக்கு ஆர்.எஸ்.எஸ். பற்றி சரியான புரிதல் இல்லை. I feel they are alien to Tamilians. (உடைலியே பாருங்க. தமிழக கலாச்சாரத்துக்கு அந்நியர்கள். அந்த மாதிரி, தமிழ் கலாச்சாரத்துக்கு அந்நியமான உடைகளை அணிபவர்களை நான் தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்றே நினைப்பதில்லை). அதனால் என்னுடைய கருத்துன்னு எதையும் சொல்லலை.
//வைதீக இஸ்லாமும் வைதீக கிறிஸ்தவமும் தங்களுடைய கருத்துகளை
அப்படியே மற்றவர்கள் மீது திணிப்பதற்கு ஒப்ப, வைதீக இந்துத்துவத்தைத்தான் ஆர்எஸ்எஸ் நெருக்கமாகக் கருதுகிறது// – ஆர் எஸ் எஸ், எந்த வைதீக இந்துத்துவத்தை project செய்கிறது? மற்ற மதங்களை விமரிசிப்பது அல்லது எரிச்சல் உண்டாக்குவது தவிர, ‘இந்து மதம்’ என்பதற்கு ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ன? நான் அப்படி எதுவும் ‘இந்து மதம்’ சார்பாக அவர்கள் செய்ததாக படித்ததில்லையே.
//இந்தியாவின் தேச ஒற்றுமைக்கு பெரிய ஆபத்தாக இருப்பது
இந்து-முஸ்லிம் இடையிலான மோதல்கள்தான். // – இதனை நான் நம்பவில்லை. தேச ஒற்றுமைக்கு பெரிய பிரச்சனை என்று நான் கருதுவது, வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு மத சம்பந்தமாகப் பாயும் பணம், மத மாற்றம், இந்திய தேசத்தின் பிரச்சனைகளின்போது எதிரி நாட்டு சார்பாக, மதரீதியாக அல்லது கொள்கை ரீதியாகப் பேசுவது. (உதாரணம் தா.பாண்டியன் கூறியதாக வாட்சப்பில் வரும், “இந்தியா-சீனா போர் நடந்தால் நாங்கள் கம்யூனிசம் சார்பில்தான் பேசுவோம், இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை” என்று வந்த செய்திகள்போன்று)
யோகேந்திர யாதவின் கட்டுரையை, அவரது எண்ணம் என்ற அளவில் படிக்கிறேன்.
இதில் சொல்லப் பட்டுள்ள பல விஷயங்கள் ஏற்புடையதாக இருந்தாலும்… ஒரு
முரண்பாட்டை சுட்டி காட்டலாம் என்று விழைகிறேன்.
இதில் திரு யோகேந்திர யாதவ் அவர்கள்,
///ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடைவிதிக்க வேண்டும் என்பதை நான் ஆதரிக்க மாட்டேன். ///
///காங்கிரஸுக்கு காந்தி சொன்ன அறிவுரையை
சர்சங்கசாலக் மோகன் பாகவத்,
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் கூறக்கூடும். அது –
‘கலைந்துவிடுங்கள்…!’ என்பதாகத் தான் இருக்கும்.///
என்று சொல்கிறார்.
இரண்டும் நேர் எதிர் அல்லவா…?
இந்த தேச விரோத அமைப்பை “கலைந்துவிடுங்கள்” என்று அறிவுரை கூறுவதாக இருந்தால்… தடை செய்யவும் அதே காரணங்கள் போதுமல்லவா…!