…
…
உன்னை சொல்லி குற்றமில்லை
எம்மைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமம்மா
கடவுள் செய்த குற்றமம்மா ….
ஒரு இன்றைய செய்தி –
புயலால் உருக்குலைந்து போன நாகை மாவட்டம் வேதாரண்யம்
பகுதியில் மின்சாரம் விநியோகிப்பதற்காக மின் கம்பங்கள் நடும் பணி
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்பணிகளை இரண்டு அமைச்சர்கள் மேற்பார்வையிட்டனர்.
அவர்களில் ஒருவர் –
..

..
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம்
மின்கம்பங்களை விமானம் மூலம் நட வேண்டும்….என்று யோசனை
கூறி இருக்கிறார்….
அப்போது உடனிருந்த மற்றொருவர்….
..

..
அது சாத்தியமில்லை. அவ்வாறு செய்தால் விவசாயம் அழிந்து விடும்
என்று கூறி இருக்கிறார்…….
இதைத் தொடர்ந்து முதலில் யோசனை கூறியவர் மீண்டும் –
..

..
” வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான்.
கடலுக்கு அடியில் நகரத்தையே நிர்மாணிக்கிறான்.
after all – நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா?
மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக இதற்கான வழிமுறைகளை
கண்டுபிடிக்க வேண்டும் ” என்று கூறி இருக்கிறார்.
————————————————————–
நமக்கு எழும் சில சந்தேகங்கள் –
பாதிக்கப்பட மக்களுக்கு என்று –
எதை எதையோ நிவாரணமாக அனுப்பிக்கொண்டிருக்கும்
தமிழக அரசின் சார்பில் –
இரவும் பகலுமாக சீரமைப்பு பணிகளில் அயராது ஈடுபட்டிருக்கும்
அந்த அல்லலுற்ற தொழிலாளர்களுக்கு –
ஒருவேளை காமிக் நிவாரணம் கொடுப்பதற்காகவே இவர்கள் அங்கே
அனுப்பி வைக்கப்பட்டிருப்பார்களோ…?
அவர்கள் நிஜமாகவே யோசித்து, சீரியசாகத்தான்
இந்த யோசனைகளை கூறுகிறார்களா…?
தாங்கள் பேசுவதைக் கேட்கும் மக்கள் என்ன நினைப்பார்கள்
என்கிற உணர்வே இவர்களுக்கு இல்லையா…?
இவர்கள் வீட்டில் இருப்பவர்களோ, நண்பர்களோ –
வேறு யாருமே இவர்களுக்கு இதைப்பற்றி எடுத்துச் சொல்ல
மாட்டார்களா…?
அல்லது அமைச்சர் உத்திரவிட்டால் – எதுவும் நடக்கும்
என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா…?
அவர்களைப்பற்றி மீடியாக்களில் வெளிவருகிற
விமரிசனங்களை எல்லாம்
அவர்கள் படிக்கவே மாட்டார்களா…?
இவர்களைப் போன்றவர்களை எல்லாம் கட்சியிலும், ஆட்சியிலும்
வைத்துக்கொண்டு அதையும் மீறி – தமிழக அரசின் நிர்வாகத்தை
அத்தனைக்காளலம் நடத்த –
– அந்த “அம்மா” என்ன பாடுபட்டிருப்பார்…?
” தெய்வமே…” “தெய்வமே…”
“எப்படித்தான் தாங்கினாயோ – நீ இருந்தவரையிலும் ….!!! ”
உன்னால் முடிந்தது… ஆனால் –
எங்களால் முடியவில்லையே… தாயே…!!! 🙂 🙂 🙂
.
———————————————————————————————–



அய்யா …! இவருக்கு இதைப்போல ” உளறுவதே ” வேலை … நிறைய உளறுகளுக்கு சொந்தக்காரர் உதாரணத்திற்கு : — அம்மா இட்லி சாப்பிடவில்லை, நாங்கள் உங்களிடம் பொய் சொன்னோம் என்றார்.
மறந்த முதல்வர் ஜெயலலிதா கொள்ளையடித்தார் என்றும் அந்த கொள்ளையை தினகரன் மற்றும் 18 எம்.எல்.ஏக்கள் பங்கு போட்டு வைத்துள்ளனர் என்றார்…. விடுமுறை கிடைக்கும் என்பதற்காகவே மாணவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்கிறார் … டெங்குவால் தமிழகம் முழுவதும் பலர் உயிரிழந்து கொண்டிருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்குவால் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவித்தார். … துணை முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து டெங்கு பாதிப்பை எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி என்பதற்குப் பதிலாக மன்மோகன் சிங் என கூறினார்
பிரதமராக மோடி பதவியேற்று இவ்வளவு ஆண்டுகள் ஆனபிறகும் அவரை பிரதமராக ஏற்றுக்கொள்ள திண்டுக்கல் சீனிவாசனுக்கு மனமில்லை போலும்?
இப்போது இப்படிவிமானம் மூலம் நடலாம் என்கிறார் …!!!
உண்மையில் இவர்கள் யாரையும் வாய் திறக்காமல் வைத்து இருந்த மேடம் ஜெயலலிதா உண்மையில் பாராட்ட தக்கவர் … ! சக மந்திரிகள் .. கட்சிக்காரர்களை மட்டுமா அவர் அவ்வாறு வைத்து இருந்தார் — இல்லை மற்ற கட்சியினரையும் ஏன் மத்தியில் ஆளுபவர்களையும் கூட அவ்வாறு தான் வாய் திறக்காமல் வைத்திருந்தார் .. அப்படித்தானே …?
Divert people from serious issues
example of ideal admin station and disaster management…. they are our neighbors too…
சேஷன்,
இந்த வீடியோவின் நீளம் – 1 மணி 55 நிமிடம் …
முழு வீடியோவையும் பார்க்க நேரம் கிடைக்கவில்லை…
சிலவற்றை மட்டும் சுருக்கமாகக் கூறி விடுகிறேன்…
தமிழகத்தோடு இதை எந்தவிதத்திலும் ஒப்பீடு செய்ய முடியாது…
காரைக்காலின் மொத்த மக்கள் தொகையே – வெறும் 2.23 லட்சம் மட்டுமே..
நிர்வகிப்பது வெகு சுலபம்….
திருமதி பேடி – 40 ஆண்டுக்காலம் அரசு அதிகாரியாக பணியாற்றியவர்…
எனவே systematic ஆக பணி புரிவது அவரது இயல்பு.
விளம்பரப் பித்தர்…
இந்த வீடியோவும் அதற்கு ஒரு உதாரணம்.
பொதுவாக அவரைப்பற்றி எனக்கு விமரிசனங்கள் உண்டு.
அது இங்கே வேண்டாமென்று நினைக்கிறேன்.
உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்