ஒரு சந்நியாசியின் மூஞ்சியா இது…?
…
…
யோகி’கள் எப்படி மூர்க்கர்களாக இருக்க முடியும்
என்று கேட்கிறீர்களா …?
அரசியல் சாசன பதவியில் இருந்துகொண்டே,
சட்டத்தை மதிக்காதவரை “மூர்க்கர்” என்று சொல்லாமல்
வேறு எப்படி அழைக்கலாம்…?
————————–
கீழே –
தேர்தல்களில், ஜாதி, மதம் பற்றி பேசுவதைக்குறித்து சுப்ரீம் கோர்ட்
உத்திரவு –

…

..

..

..
————————–
ஆனால், நிஜத்தில் நடந்து கொண்டிருப்பது –
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தலுக்காக உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
அனுமான் ஒரு தலித்,
அதனால் தலித் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டு இருக்கிறார்.
ராஜஸ்தானில் பிரச்சாரம் செய்வதற்காக யோகி ஆதித்யநாத் களமிறங்கி உள்ளார். செய்யும் பிரச்சாரத்தில் முழுக்க முழுக்க மதம் பற்றி பேசும்
இவர் இந்த முறை ஜாதி குறித்து அதிகமாக பேசினார்.
தனது பிரச்சாரத்தில், அனுமான் ஒரு தலித். அவர் பழங்குடி இனத்தை
சேர்ந்தவர். இந்த யுத்தத்தில் அனுமார் படைதான் வெல்ல வேண்டும்
என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
நாங்கள் ராமர் படை, காங்கிரஸ் ராவண படை. ராமருக்கு வாக்களிக்க விரும்பினால் பாஜகவிற்கு வாக்களியுங்கள். ராவணன் வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.
——————————————————————–



அய்யா …! வாயு புத்திரனுக்கு ஏறபட்ட நிலையை நினைத்து : ஆணடவன் கட்டளை படத்தில் கண்ணதாசன் எழுதி சந்திரபாபு பாடிய பாடல் ” சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்த்து சிரிப்பு வருது ” முழு பாடலும் அருமையாயிருக்கும் …. ?
‘மூர்க்கர்’ எவ்வளவு மரியாதையான வார்த்தை.
இவரை தான் மோடிக்கு மாற்றாக கொண்டு வருவார்களாம்….தேவைப்பட்டால்.
அட கேடு காலமே…!
இதுவெல்லாம் இந்த நாட்டின் சாபக்கேடுகள்.
வேறு என்ன…?
அத்தனை ஆசைகளை வைத்துக்கொண்டு அது என்ன சந்நியாசி ?
வட இந்திய அப்பாவி கிராமவாசிகளை இவர்
கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்.
இவர்கள் எல்லாம் நம்ம ஊர்ப்பக்கம் வர மாட்டேனென்கிறார்களே;
அவர்களுக்கு தெரிந்திருக்கிறது இங்கே போணி ஆகாதென்று.
நடுநிலையாளர்கள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு இருக்கும் நண்பர்களே!! யோகி , மோடி வேறு யார் பேசினாலும் தவறுதான் அவர்களை பேசவைத்து யார் என் நீங்கள் ஏன் விமர்சனம் செய்வதில்லை , அதிலும் காங்கரஸ் கட்சியினர் ஜாதி,மத அரசியல் பேசி ஒட்டு கேட்கின்றனர் இவை உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ?? எத்தனையோ முஸ்லீம் அமைப்பு, கிருத்துவ அமைப்பு வெளிப்படையாக குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் ஒட்டு போடவேண்டும் என் சொல்கிறார்கள் அதிலும் டெல்லி இமாம் வெளிப்படையாகவே பேசிய பேச்சுக்கள் என்ன வென்று தெரியம்
ஜாதியையோ, மதத்தையோ சொல்லி எவர் ஓட்டு கேட்டாலும் அது அயோக்கியத்தனமே.
அது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி…. எந்த தலைவராக இருந்தாலும் சரி.
நீங்கள் ஒரு மதவெறியர் என்பதும் உங்கள் நோக்கம் துவேஷத்தை கிளறி விடுவதே
என்றும் தெரிகிறது…. நீங்கள் திரும்ப திரும்ப மத வேற்றுமையை கிளறும் விதத்தில் எழுதிக்கொண்டே
இருந்தால் – அதில் என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. அதை அனுமதிப்பதற்கும் இல்லை.
.
-காவிரிமைந்தன்
Just ignore comments from people who don’t recognize your nutral stand, don’t give platform – waste of your time
நீங்கள் சொல்வது சரி.
இந்த மாதிரி வெறியர்களுக்கு பதில் விளக்கம் சொல்வதெல்லாம் வேஸ்ட். கே.எம். சார் இவர்களை புறக்கணிப்பதே சரி.