உடனே ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட வேண்டும்… கவர்னர் பதவியை அசிங்கப்படுத்தும் இந்த வெறியர்…


எவ்வளவோ உயர்ந்த மனிதர்கள், கல்வியாளர்கள்,
சமூக செயல்பாட்டாளர்கள் அமர்ந்து கௌரவம் தந்த கவர்னர் பதவி
இன்றைய ஆட்சியில் – பெண் பித்தர்களும், ஜாதி, மத வெறியர்களும்,
முன்னாள் பொறுக்கிகளும், போக்கிரிகளும் – அமர்ந்து ஆசைதீர சுகங்களை அனுபவிக்கும், வெறிகளை தீர்த்துக்கொள்ளும் – இடமாக மாறி விட்டது…

இதற்கு முன்னால், மேகாலயாவின் கவர்னர் பொறுப்பில் அமர்த்தப்பட்ட
பாஜக-ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் – திருவாளர் ஷண்முகநாதன் பெண் பித்து
பிடித்த காரணத்திற்காக அங்கிருந்து அசிங்கமான முறையில்
துரத்தியடிக்கப்பட்டதை மக்கள் இன்னமும் மறக்கவில்லை.

அதற்குள் இன்னொரு மதவெறியர்
அதே பீடத்தில்….

இன்று அவர் வெளியிட்ட ஒரு ட்விட்டர் செய்தியைப்பற்றிய
தலைப்புச் செய்தி கீழே –

26/11/2008 அன்று மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான அனைத்து உயிர்களையும் நினைத்து இந்திய மக்கள் அனைவரும் வருந்தி,
அவர்களின் தியாகத்தை மதித்துப் போற்றும் இந்த வேளையில்,

இவரைப்போன்ற சில விசேஷ ஜந்துக்களுக்கு மட்டும் எப்படி இந்தவித
எண்ணங்கள் எல்லாம் உதிக்கின்றனவோ – தெரியவில்லை…

32 வருட கால ஆர்.எஸ்.எஸ்.அனுபவம், நன்கு படித்த ஒருவரை இந்த
அளவிற்கு மதவெறியராக மாற்றி இருக்கிறது என்றால், அந்த அமைப்பு இந்த நாட்டின் நிம்மதியைக் குலைக்க இன்னும் என்னென்னவெல்லாம் செய்யுமோ என்கிற அச்சம் எழுகிறது…

இப்போது எழுந்துள்ள மேகாலயா கவர்னரின் நடத்தை
குறித்த சர்ச்சையின்போது, அண்மையில் பிபிசி -செய்தித் தளத்தில் வெளிவந்த – அவசியம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு கட்டுரை எனது நினைவிற்கு வந்தது….

சிந்தனைக்கு உரிய அந்த கட்டுரையின் சில பகுதிகளை நண்பர்கள்
அவசியம் பார்க்க வேண்டுமென கீழே தருகிறேன்… …..

———————————————————————————
https://www.bbc.com/tamil/india-46330514
—————————

அயோத்தி ராமர் கோவில் சர்ச்சை: அடுத்த தேர்தலில் மோதிக்கு
ஆபத்தாக அமையுமா?

சுஹஸ் பல்ஷிகார்
பிபிசிக்காக

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத், டெல்லியில் கடந்த செப்டம்பரில்
தொடர்ந்து பல உரைகளை ஆற்றினார். இந்த உரைகளை கேட்டு பலரும்
ஊடகங்களில் ஆர்எஸ்எஸ் மாறிவிட்டது என்ற முடிவுக்கு வந்தனர். இந்த
மதிப்பீடு ஆர்எஸ்எஸ்-ன் உண்மையான அரசியல் நிலையை
புறக்கணித்துவிட்டது.

அதேவேளையில், தசரா கூட்டத்தில் பேசிய மோகன் பக்வத், அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தை உயர்த்தி, இதில் ஆர்எஸ்எஸ்-ன் நிலை மாறவில்லை என்று அழுத்தமாக தெரிவித்தார்.

அப்போதில் இருந்து அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சனை தொடர்ந்து புகைந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக பல கருத்தரங்குகள், பேரணிகள் போன்ற பல நடப்பதை நாம் பார்க்க முடிகிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைக்கு மீண்டும் இந்த நாடு போய்விடுமா, அப்படியானால் அது எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று பல கேள்விகள் எழுகின்றன.

மிக முக்கியமான கேள்வி: புதுயுகத்தில் அயோத்தியா விவகாரம் இந்திய
அரசியலை எந்த திசையில் எடுத்து செல்லும்?

1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு ராம ஜன்மபூமி
இயக்கத்தின் வேகம் குறைந்தது. இதற்கு ஒரு காரணம், இந்த இயக்கத்தின் செயல்களுக்கு பிறகும் பாஜகவால் அருதி பெரும்பான்மையை பெற முடியவில்லை. எனவே, மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க இதுபோன்ற விஷயங்களை பின்னுக்கு தள்ள வேண்டும் என்று பாஜக முடிவெடுத்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு, இந்து மத சாஸ்திரம் சிறு வட்டாரங்களில் பாராட்டப் பட்டாலும், பொது மக்கள் உள்முக சிந்தனையுடன் இருக்க, இந்த சம்பவம் ஊடகத்தினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

எனினும், அடிக்கல் நாட்டு விழா, கோவில் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டது, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் தேதியை கொண்டாடுவது என அயோத்தியாவின் நினைவுகள் உயிர்ப்புடன் வைக்கப்பட்டன. இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளும் மக்களுக்கு இந்த சம்பவத்தை நினைவு படுத்தியது.

தான் சொந்த அரசாங்கமே அதிகாரத்தில் இருக்க, இந்த சர்ச்சையை
மீண்டும் உருவாக்க ஆர்எஸ்எஸ் ஏன் முயற்சிக்கிறது?

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே பிரச்சனைகளை தீர்த்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ராமர் கோவில் கட்ட வழி வகுக்கிறது என சிலர் கூறுகின்றனர். பல அப்பாவி ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள், தற்போது அதிகாரத்தில் உள்ள மோதி அரசாங்கம், ராமர் கோவிலை கட்டிவிட முடியும் என்று உண்மையிலேயே நம்புகின்றனர். ஆனால், அது நடக்காது.

இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில்
திடீரென இந்த பிரச்சனையை தீர்ப்பது என்பது சாத்தியமல்ல. மேலும்,
4 ஆண்டுகளால் ஏதும் செய்யாத மோதி அரசு, தற்போது ஏன் இந்த
தேவையற்ற பிரச்சனையை இழுக்கப் போகிறது?

அப்படி இருக்க, அடுத்த தேர்தல் நெருங்கும் தருணத்தில் ஏன் இந்த சர்ச்சையை கிளப்ப வேண்டும்? இதற்கான பதில் மூன்று கோணங்கள் இருக்கிறது.

முதலில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவில் இருப்பவர்கள் ராமர் பக்தர்கள்
என்பதை தாண்டி தேர்தல் கணக்குகள் போடும் அரசியல்வாதிகள்.

கடந்த தேர்தலில், அரசியல் குழப்பம் நிறைந்த சூழலில், திடீரென மோதி
தலைமை வகிக்க, பாஜக வெற்றி பெற்றது.

இந்த முறை மோதியின் மாயை குறைந்துள்ளது, பாஜக-வே ஆட்சியில்
இருப்பதால் தோல்விகளுக்கு யாரையும் குறைக்கூறவும் முடியாது. பல
இடங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. எனவே காங்கிரஸை சபித்து
பாஜகவால் ஓட்டு கேட்க முடியாது.

இந்த மாதிரியான சூழலில், உணர்ச்சிகரமான விவகாரங்களை வைத்து,
இன்னும் ஒரு முறை ஆட்சியை பிடிக்கலாம் என ஆர்எஸ்எஸ்-பாஜக
கணித்திருக்கும்.

கடந்த 4 ஆண்டுகளில், லவ் ஜிகாத் மற்றும் பசு பாதுகாவலர் போன்ற
விவகாரங்கள் இந்து மத குழுக்கள் இடையே மத பேரினவாதத்தை
புகையுடன் வைத்திருந்தன.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்து சமய அமைப்பிற்குள்
வாழ்கின்றனர். மத உணர்வுகளை வைத்து இந்த மக்கள் தொகையை
பிரித்து, அரசியல் சக்தியாக்க ஒழுங்கமைத்தால் தேர்தல் அரசியலில்
வெற்றி பெறலாம் என்ற பழைய கணக்கு.

ராமர் கோவில் வைத்து திடீரென்று அரசியல் செய்வது, அடுத்த
தேர்தலுக்கான பின்னணி வேலை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தன் செயல்திறன் வைத்து ஓட்டுகளை பெறுவோம் என்பதில் பாஜக
நம்பிக்கையுடன் இல்லை என்பதையும் இது குறிக்கிறது.

ராமர் கோவில் விவகாரம் சமீபத்தில் எழுந்ததற்கு மறுபக்கத்தில், தற்போது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தங்கள் வேலையை பிரித்து கொண்டிருப்பதற்கு தொடர்புண்டு.

மோதி அரசாங்கம் மத்தியில் வந்த பிறகு, பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ஆனால், பொதுவாக மோதி எதற்கும் வாய் திறக்க மாட்டார்.

அப்படி இல்லையென்றால், அனைத்தும் அரசியல் சாசனத்தின்படி நடக்கும் என்று
அறிக்கை விடுவார். இதனை பார்த்து, இந்துக்களையும் முஸ்லிம்களையும்
பிரிக்க மோதிக்கு தேவை இல்லை என்று பலரும் நினைத்துவிட்டனர்.

ஆனால், உண்மை என்ன என்றால், ஆட்சிக்கு வந்த பிறகு ஆர்எஸ்எஸ்
மற்றும் பாஜக தங்கள் வேலையை பிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

பொருளாதார திட்டங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் கட்சி
மற்றும் அரசாங்கம் வழிநடத்தும். இதில் ஆர்எஸ்எஸ் தலையிடாது.

மறுபக்கத்தில், பொதுமக்கள் கருத்தை பிரிப்பது, ஆக்கிரோஷமான
நிலைகளை எடுப்பது போன்ற கலாசார விவகாரங்களை ஆர்எஸ்எஸ்
வழிநடத்தும். ஆனால், இந்த விவகாரங்களில் அரசாங்கம் அமைதி
காக்கும்.

ஆர்எஸ்எஸ்-ன் ஆக்கிரோஷமான அரசியலை புறக்கணிக்க முயற்சிக்கும்
அரசு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை உறுதி
செய்யும்.

இவ்வாறு பிரிந்து வேலை பார்ப்பதினால், பசு விவகாரம், கலப்பு காதல்
திருமணங்கள், இந்து மதத்தை எதிர்ப்பவர்களை கொலை செய்தவர்கள்
போன்ற விஷயங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் அரசுக்கும் தொடர்பில்லை
என்று பாஜகவால் கூற இது அனுமதியளிக்கிறது.

நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் உழைத்துக் கொண்டிருப்பதாகவும் அரசு
கூறிக் கொள்கிறது. ஆனால், ஆர்எஸ்ஸ் தான், பாஜகவின் உண்மையான
ஆதாரம்.

இதற்காக பல பாஜக பணியாளர்கள் செயல்பட்டு, மேலும் மேலும் இந்து
சக்தியை சேர்ப்பார்கள். தாங்கள் உருவாக்கிய ராமர் கோவில் ஆதரவாளர்களை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக எப்படி கையாள்கிறார்கள் என்பதை சார்ந்தே, இந்த இயக்கம் எந்த திசையில் போகும் என்பது தெரியும்.

தற்போதுள்ள சமூக சூழல், அயோத்தியா சர்ச்சைகளை தோண்டி எடுக்க
சாதமாகவே அமைகிறது. நிலையற்ற கலாசார சூழலில் ‘நாம் இந்துக்கள்’,
மற்றும் ‘நாம்’ ‘நம் நாட்டில்’ அநீதியை சந்திக்கிறோம் போன்ற
நம்பிக்கைகளை எளிமையாக பரப்ப முடிகிறது.

இந்த வகையில், அயோத்தியா இயக்கத்தின் இந்த கட்டம், இளம் மற்றும்
வருங்கால தலைமுறையினரின் மனதில் வகுப்புவாத அரசியலுக்காக
விதைகளை தூவி செல்லலாம்.

அயோத்தியாவின் அரசியல் நீண்டு கொண்டே போக, இந்த மத அரசியலுக்கு எதிர் அரசியல் இல்லையே என்ற குழப்பமும் உள்ளது.

கோவில் கட்டப்படுகிறதா இல்லையா என்பது ஒரு விவகாரம், ஆனால்,
ஆர்எஸ்எஸ்-ஆல் தொடங்கப்பட்ட இந்த போருக்கு, எதிர் போட்டி யாரும்
இல்லை.

ஆர்எஸ்எஸ், தனது அரசியல் பாதையை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவாக வைத்துவிட்டது. இந்த அரசியலில் அடுத்த அடி எடுத்து வைக்க அங்கு எதிர்ப்பவர்கள் யாருமில்லை. இது எதிர்காலத்தில் இந்திய ஜனநாயகத்தின் சிதைந்துபோகும் பயணத்தின் அறிகுறிகளா?

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to உடனே ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட வேண்டும்… கவர்னர் பதவியை அசிங்கப்படுத்தும் இந்த வெறியர்…

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //இந்த மத அரசியலுக்கு எதிர் அரசியல் இல்லையே என்ற குழப்பமும் உள்ளது.//
    உங்கள் பாயிண்ட் சரியானதுதான். ஆனால் இதற்கு மாற்றுக் கருத்து இருக்கும். அந்த இன்னொரு கோணத்தில் நான் எழுதுகிறேன்.

    ஆனால், 26/11 பற்றி பாகிஸ்தான் ஸ்பான்சர்ட் என்று சொல்வதில் தவறு இல்லையே. யூத கட்டிடம் குறிவைக்கப்பட்டது. மற்றபடி, இஸ்லாமிய கட்டிடங்கள் குறிவைக்கப்படவில்லை. ஆனால் பொதுமக்களில் பிரிவுபடுத்தி பயங்கரவாதச் செயல் நடத்தப்படவில்லை.

    /அடுத்த தேர்தலுக்கான பின்னணி வேலை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை// – காங்கிரஸ் பலப் பல வருடங்களாக, ‘சிறுபான்மையினர்’ என்ற லேபிளில் அரசியல் நடத்தியதல்லவா? திமுகவும் இதனைத்தானே செய்தது. அதற்காக திமுக இந்துக்களைப் பழித்தும் பேசியதல்லவா? இன்றைக்கும் அந்த இரண்டு கட்சிகள் செய்வது மாறியிருக்கிறதா? அப்போது மனதளவில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் ஏன் பாஜக இப்போது செய்வதைப் பற்றிக் கவலைகொள்ளப் போகிறார்கள்? கத்திக்கு எதிர் கத்தி என்பது சரியில்லை என்றாலும், ஜனநாயகத்தில் வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது?

    தமிழ்நாட்டில், தனியார் கல்லூரிகள் என்பதே ‘சிறுபான்மையினர்’ என்ற லேபிளை வைத்துத்தானே தொடங்கப்பட்டது. சட்டம் கொடுத்த சலுகை, பெரும்பான்மையினரைப் பாதிப்பதைப் பற்றி சட்டம் கவலைப்படவில்லை. ஒருபுறம் அரசின் சலுகை, பெரிய அரசியல் கட்சிகளின் ‘வாக்குகளுக்கான’ சலுகைகள், வெளிநாட்டிலிருந்து சிறுபான்மையினருக்காக பாய்ந்தோடிவரும் நிதி ஆதாரம். மறுபுறம் பாஜக, சதவிகித அளவில் குறைந்துவரும் பெரும்பான்மையினர்.

    //வருங்கால தலைமுறையினரின் மனதில் வகுப்புவாத அரசியலுக்காக
    விதைகளை தூவி செல்லலாம்.// – இதுவும் சரியான பாயிண்டுதான். வகுப்புவாத அணுகுமுறை ஒரு வகுப்பினரால் கடந்த 10-15 வருடங்களாக அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது. இன்னொரு வகுப்பு 25 வருடங்களுக்கும் மேலாக இதனைச் செய்கிறது. இதனைப் பற்றி விளக்கமாக எழுதலாம். அதனால் இந்துக்களுக்கான கட்சி என்று பாஜக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது.

    நீங்க, காந்தி சொன்ன அணுகுமுறையை மனதில் வைத்து எழுதறீங்க. நேரிடையாக இதனைக் குற்றம் சொல்ல இயலாது. பெரியவன் எப்போதும் பொறுத்துப்போகணும், விட்டுக் கொடுப்பவன் வெற்றி பெறுகிறான் என்பதுபோல. ஆனால் அரசாட்சி என்பது அப்படி நடத்தப்படுவதல்ல. காந்தீயக் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் நடத்தினால் நோட்டாவைவிட குறைவான வாக்குகள்தான் கிடைக்கும். இது வாக்குவங்கி அரசியல். மக்களுக்கான ஜனநாயகம். அதனை அப்படித்தான் அணுகவேண்டும்.

    உங்களுடைய கண்ணோட்டம் இந்த வாதங்களுக்கு எப்படி இருக்கும்?

    • மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

      //வருங்கால தலைமுறையினரின் மனதில் வகுப்புவாத அரசியலுக்காக
      விதைகளை தூவி செல்லலாம்.//

      பா ஜ க விற்கு இது ஒன்றுதான் பாயிண்ட் – வேறெதுவும் இல்லை .
      மக்களை திசை திருப்புவது , உணர்ச்சிகளை தூண்டி விடுவது ,
      மக்களை யோசிக்க விடாமல் எதோ கட்டுக்கதையை சொல்வது
      பா ஜ க வினர் விவாதம் செய்வது இப்படித்தான் .

      முதலில் எதிரியை பேச விடாமல் செய்ய வேண்டும் –
      அதற்காக அபாண்டமாகவும் பேசலாம் .

      இரண்டாவது தங்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது .
      இருக்கவே இருக்கு – சமூக விரோதி , ஆண்டி இந்தியன் etc .

      மூன்றாவது மேம்போக்காக பேசுவது – விவரம்
      தெரிந்தவர்களிடம் இவர்களால் பேச முடியாது .

      உதாரணம் வேண்டுமானால் ஐயப்பன் கோவில் விவகாரம் .
      இதை கேரளா பா ஜ க நிர்வாகியே ஒப்புக் கொள்கிறார் .

      • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

        சகோ. மெப்பொருள்,

        என்ன இவ்வளவு அப்பாவியா இருக்கீக…! அவர்களின் அடிப்படை போதனையே, பொய், பொய் மட்டுமே அல்லாது வேறில்லை.

        சமீபத்திய மாண்புமிகு பிரதமர் அவர்களின் உட்டாலக்கடி திட்டம், “1 மணிநேரம் – ஒருகோடி கடன் திட்டம்” திபாவளி பரிசு.

        சத்தியம் தொலைக்காட்சியில் ‘சத்தியம் சாத்தியமே’ விபரம் காண்க.

        கலந்துகொண்ட அனைத்து கருத்தாளர்களும் குறை சொல்கிறார்கள்.

        ஆக இந்த் நாட்டை ஒரு வழி பண்ணாமல் போகமாட்டார்கள் போலிருக்கு.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      ஒளிவு மறைவு இன்றி, நேரடியாகவே சொல்கிறேனே….

      நான் – காந்திஜி வழியில்,
      ‘மனிதம்’ – (மனிதாபிமானம்) தான் முக்கியமென்று நம்புகிறேன்.
      -மனிதம் தான் வெல்ல வேண்டுமென்று விரும்புகிறேன்…

      நீங்கள் – RSS வழியில்,
      ‘மதம்’ – தான் முக்கியமென்று நம்புகிறீர்கள்…
      ‘மதம்’ தான் முக்கியமென்று சொல்கிறீர்கள்…
      மதா’பிமானம் – மன்னிக்கவும் – “மதவெறி” தான்
      ஜெயிக்குமென்று நம்புகிறீர்கள்…

      இந்த சமுதாயம் அமைதியாக,
      மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக – வாழ –

      எது சரி…?
      எது வேண்டும்…?
      எது ஜெயிக்க வேண்டும்…?
      எது நிலைக்க வேண்டும்….?
      மனிதமா…..? அல்லது மதமா….?

      உங்களிடமிருந்து இதற்கு நேரிடையான பதில் வராது என்பதை
      என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

      இல்லையென்றால் – இடுகையின் முக்கிய பகுதியான,
      மேகாலயா RSS ஆளுநரின் பெருந்தன்மையான
      ட்விட்டர் செய்தியைப் பற்றி –

      ஒரு வார்த்தையாவது உங்கள் மறுமொழியில்
      கண்டித்து ( அல்லது பாராட்டியாவது…)
      சொல்லி இருப்பீர்களே….!

      உங்கள் திறமையான பின்னூட்டத்திற்கு என் பாராட்டுகள்…!

      .

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        கா.மை சார்… உங்கள் உடனடி மறுமொழிக்கு நன்றி.

        There is no doubt that மனிதாபிமானம்தான் மிக முக்கியமானது. இது எந்த ஒரு சமுதாயத்துக்கும் தேசத்துக்கும் பொருந்தும். ‘slaughter of innocents சரி. except Muslims என்றது தவறு. இதைத்தானே ‘பொதுமக்களை பிரிவுபடுத்தி தாக்குதல் நடைபெறவில்லை’ என்று சொல்லியிருக்கேன். கவர்னர் இப்படி எழுதியது அதாவது Except Muslims என்ற வார்த்தைப் பிரயோகம் தவறுதான். தாக்குதல்களின்போது பொதுமக்கள்தான் பாதிக்கப்பட்டனர். அவர்களை மதரீதியாகப் பிரித்துப் பேசமுடியாது.

        ஆனால் பொதுவாக நான் பாஜகவின் ஆட்சியில் ஹிந்துக்களுக்கான பங்கு இருக்கிறது என்று நம்புகிறேன். இது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. திமுகவினரிடம் இல்லை. (அதுக்காக அவங்களுக்கு வாக்களிப்பேனா? யார் ‘மாற்று’ என்பதை உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்றபடிதான் என் முடிவு இருக்கும். ஜெ. வைப்போன்ற ஒருவர் வருவாரா? பார்ப்போம்)

        • Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

          //கவர்னர் இப்படி எழுதியது அதாவது Except Muslims என்ற வார்த்தைப் பிரயோகம் தவறுதான். //

          புதியவன் அவர்களுக்கு கவர்னரை கண்டிக்க இப்போதும் மனமில்லை.
          அந்த திமிர் பிடித்த, மதவெறி பீடித்த கருத்தை, வெறும் “வார்த்தை பிரயோகம்” என்பதற்குள் அடக்கி விட்டார்.
          கவர்னர் செய்தது தவறா அல்லது குற்றமா ?
          RSS /BJP -யை ஆதரித்து வெளிப்படையாக எழுத புதியவனுக்கே கூசுகிறது.
          வெட்கமாக இருக்கிறது போலும்; எனவே இங்கே வார்த்தைகளில் ஒளிந்துகொள்கிறார்.
          பரவாயில்லை புதியவன்; எவ்வளவோ பேரை பார்த்து விட்டோம் நீங்கள் வெளிப்படையாகவே எழுதுங்கள். உங்கள் மனதிற்காவது திருப்தி கிடைக்கட்டும்.

          • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

            ராஜகோபாலன்…. Please do not assume things. பாஜகவை ஆதரிக்கணும்னு நினத்தால் ஆதரிப்பேன். எதிர்க்கணும்னு நினைத்தால் எதிர்ப்பேன். எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை எழுதுகிறேன். இந்த கவர்னர் யாருன்னே இப்போதான் தெரிந்துகொள்கிறேன். இவரை நான் எதுக்கு ஆதரிக்கணும்? ‘நாமார்க்கும் குடியல்லோம்’ (except ஜெ இருந்தபோதான அதிமுக அரசு மற்றும் எம்ஜிஆர் தலைமை தாங்கிய அதிமுக. அது தமிழக நலனைக் குறிவைத்தது என்பதால், தீய சக்தியை விலக்கிவைத்தது என்பதால் நான் அந்த அரசுகளின்மீது மட்டும் சாஃப்ட் கார்னர்).
            உண்மையைச் சொல்லணும்னா நான் இதுவரை இரண்டு கட்சிகளுக்குத்தான் வாக்களித்திருக்கிறேன் (அந்த வாய்ப்பு கிடைத்தபோது… ஏன்னா நான் இங்கு பெரும்பாலும் இருந்ததில்லை). ஒன்று காங்கிரஸ் (அதிமுக கூட்டணியில் இருந்தபோது), இரண்டு அதிமுக.

  2. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    ஒரு பக்கம் அரசியல்சாசன பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவரின் மனதில் இந்த அளவிற்கு வன்மமா ? மத வெறியா ? என்று தோன்றுகிறது.
    ஆனால், கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை
    தலைவராகக் கொண்ட கட்சியிலிருந்து ஸ்பான்சர் செய்யப்படுபவர் இப்படி இருப்பதில் அதிசயம் ஏதும் இல்லையே; அந்த கட்சியில் ஒருவர் முக்கிய பிரமுகர் ஆகவேண்டுமென்றால், அதற்கான தகுதியே மதவாதம் தானே ? என்றும் தோன்றுகிறது. நம்மைப்போன்றவர்களுக்கு இது கொடூரமாகத் தோன்றும்; ஆனால் அந்த கட்சிக்காரர்களுக்கு இவர் இன்னொரு ஹீரோ.

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! பிபிசி -செய்தித் தளத்தில் வெளிவந்த செய்தி இல்லாமல் … மேகாலயாவின் கவர்னர் அவர்களின் செய்தியோடு மட்டும் பதிவு இருந்திருந்தால் ” பின்னூட்டங்கள் ” எப்படி இருந்திருக்கும் …? இதில் இயக்கவியல் மற்றும் கருத்தியல் இரண்டும் வெவ்வேறா அல்லது இணைகளா… வேறுபடுத்த முடியாதவைகளா …?

    அப்படியென்றால் இந்த செய்தி எந்த ரகம் …? : — // ராமர் கோவில் கட்டவில்லை எனில் மோடியால் இனி ஆள முடியாது.. அயோத்தியில் சிவசேனா பூஜை! //
    …..
    Read more at: https://tamil.oneindia.com/news/lucknow/shivasena-holds-massive-function-ram-temple-ayodhya-335039.html

  4. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    எதற்கும் ஒரு எல்லை உண்டு. இந்த வன்ம, குரோத, துவேச ஆர்எஸ்எஸ்/பாஜக அரசியலுக்கும் கூடிய சீக்கிரம் ஒரு முடிவு வரும்.

    இவர்கள் இப்படியே செயல் பட்டு பொருளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இந்த நாட்டை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் போது… இன்று இவர்கள் பின் செல்லும் இளைஞர்கள் கூட்டம்… விழித்துக் கொண்டு திருப்பி அடிக்கும் போது… ஆர்எஸ்எஸ் சிலீப்பர் செல்கள் கூட… அதாவது புதியவன் போன்ற வேஷம் போடும் நல்லவர்களால் கூட…அதை தடுக்க முடியாது.

    நாடு சரியான திசையில் திரும்பவும் வந்து சேரும் என்று நம்புவோம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.