…

…
38 நிமிடங்கள்… கண்களை மூடிக்கொண்டு இந்த இசைப்பின்னணியோடு
வாழலாம்… இன்று ஞாயிறு விடுமுறை தானே…நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்..
சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்…
முடிந்தால், இசையை கேட்கும்போதே, அந்தந்த திரைப்படத்தை, காட்சியை உருவகித்துக்
கொள்ளுங்கள்… எந்த அளவிற்கு அந்த காட்சிகளை இந்த இசை மீண்டும் உங்களுக்கு
உருவாக்கிக் காட்டுகிறது பார்ப்போம்…..
அந்த திரைப்படங்களின் பெயர்களும் கீழே தரப்படுகின்றன…
தேவைப்படும்போது – உறுதி செய்துகொள்ள….
( நான் பார்க்காத 3 திரைப்படங்களைத்தவிர மற்ற
அனைத்தையும் என்னால் நினைவில் கொண்டு வர முடிந்தது…!!! )
தயாரித்து அளித்த திரு.Shameer Mohamed அவர்களுக்கு
நமது மனம் நிறைந்த நன்றிகள்.
0:00 – 1:52 – அழகி
1:53 – 2:21 – தளபதி
2:22 – 6:25 – இதயத்தை திருடாதே
6:26 – 10:13 – மௌன ராகம்
10:14 – 15:11 – இதயம்
15:12 – 16:25 – தேவர் மகன்
16:26 – 20:35 – நாயகன்
20:36 – 21:56 – சலங்கை ஒலி
21:57 – 23:11 – பன்னீர் புஷ்பங்கள்
23:12 – 24:24 -அஞ்சலி
24:25 – 25:56 – சிந்து பைரவி
25:57 – 29:29 – முதல் மரியாதை
29:30 – 32:22 – வருஷம் 16
32:23 – 35:40 – பல்லவி அனுபல்லவி
35:41 – 38:23 – காதலுக்கு மரியாதை
.
———————————————————————————————————



Why music only? No voice. I am unable to enjoi. It is a disappointment.
R.Gopalakrishnan,
இதுவும் ஒரு ரசனையே….
வாத்திய இசையை மட்டும் கேட்டு, பாடலை, காட்சியை –
நினைவுபடுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்…
சுவாரஸ்யமாக இருக்கும்… 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
உயிராேடு கலந்து கிடக்கின்ற இவரது ராகங்களுக்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு ….. !
சீசர் , சாக்ரட்டீஸ் , கர்ணன் , வீரபாகு , சிவன் , வீரபாண்டிய கட்டபாெம்மன் , வா.உ.சி , பாரதியார் , இன்னும் பலரையும் நான் பார்த்து இருக்கிறேன்…. ! நீங்கள் …?
பள்ளி மாணவன், காலேஜ் மாணவன், பள்ளி ஆசிரியர், காலேஜ் ஆசிரியர், ,பிரின்சிபால், டாக்டர், வக்கீல்,ஏழையாக, பணக்காரன், தொழிலதிபர், போலீஸ், திருடன், கொள்ளைக்காரன், தாத்தா, தந்தை, மகன், அண்ணன், தம்பி, நண்பன்,காதலன், ரிக்க்ஷகாரன், கோமாளி, முட்டாள், கொலைகாரன், ஊமையன், நொண்டி, குருடன், குமரன் முதல் கிழவன் ராணுவ வீரன் வரை இன்னும் பலரையும் …இவர்களில் யாராவது ஒருவரையும் நான் தற்பாேதும் ஏதாவது ஒரு சில நாட்களில் பார்த்துக் காெண்டே இருக்கிறேன் …ஒரு தனிப்பட்ட மனிதனின் மூலமாக …
அவன்தான் என்றும் மறையாமல் இன்றும் தனது 91 வது பிறந்த நாளை காெண்டாடிக் காெண்டு ” சாெல்லாதே யாரும் கேட்டால் எல்லாேரும் தாங்க மாட்டார் ” என்று எனது காதில் நாட்டின் அவலத்தை கூறிக்காெண்டு இருக்கும் ….நடிகர் திலகம் சிவாஜி கணேசன் … வாழ்க நீ எம்மான் … !
ஆம் செல்வராஜன்.
நம்மைப் போன்றவர்கள் என்றைக்கும் சிவாஜியை மறக்க மாட்டோம்…. சிவாஜி நம் நினைவுகளுடன் ஒன்றாக கலந்து விட்டார்.
இனி எந்த அரசாக இருந்தாலும், குறைந்த பட்சம் ஆண்டுக்கொரு நாளாவது சிவாஜியை நினைவுகொள்ள தமிழக அரசு வழி செய்துவிட்ட வரைக்கும் சந்தோஷம் …!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கோபுரங்கள் சாய்வதில்லை கேட்டு பாருங்கள்…