அடுத்த பிரதமர் “நாக்பூர்” -காரராமே…? RSS-ன் மாற்று யோசனை….!!!


திருவாளர் நிதின் கட்கரி நாக்பூர்காரர். RSS-தலைமைக்கு மிக நெருக்கமானவர்..
அவர்களது முழு நம்பிக்கைக்கு பாத்திரமானவர்…
மத்திய கேபினட் அமைச்சரான பிறகும் கூட, ரெகுலராக
RSS நிகழ்ச்சிகளில் கூச்சப்படாமல், அரை டிராயருடன் கலந்து கொள்பவர்…!!!

RSS தலைமை, திருவாளர் நரேந்திர மோடியின் மீது வைத்திருந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் வெகுவாக குறைந்து விட்டது…. தொழிலதிபர்களுடன் அவர் வெளிப்படையாக நெருக்கம் காட்டுவதை RSS தலைமை ரசிக்கவில்லை….அது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இரண்டின் செல்வாக்கையும் மக்கள் மத்தியில் வெகுவாக குறைத்து விட்டது என்று நம்புகிறது. அவர்கள் சார்பில் எடுக்கப்பட்ட சர்வேயும் பாஜகவுக்கு தனிப்பட்ட மெஜாரிடி கிடைக்க வாய்ப்பே இல்லை என்றும், அதிகபட்சம் 200 சீட்டுகள் கிடைக்கலாம் என்றும் சொல்கிறது.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெளிப்படும் வங்கிக் கடன் மோசடிகளும், ரபேல் விமான சர்ச்சைகளும், ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் வாங்கி விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப்போகும் குஜராத்தி வர்த்தகர்களும், மத்திய அரசுக்கு கெட்ட பெயரை வாங்கித் தந்திருக்கின்றன என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைமை உணர்கிறது.

மோடிஜியின் தலைமைக்கு மரியாதையும், செல்வாக்கும்,
மக்களை கவர்ந்திழுக்கும்
திறனும் நீர்த்துப் போய் விட்டன என்பதும் புரிகிறது….

எனவே, மே 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக 200 சீட்டுகளுக்கு மேல் ஜெயிப்பதற்கு வாய்ப்பில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைமை கருதுகிறது….

தனிப்பட்ட மெஜாரிடி கிடைக்காத நிலையில், தனிப்பட்ட பெரிய கட்சி (largest single party ) என்கிற தகுதி மட்டுமே தங்கும். அத்தகைய நிலையில், வாய்ப்பு கிடைக்கும் எந்த பக்கம் வேண்டுமானாலும் போகக்கூடும் என்கிற நிலையில்
உள்ள கட்சிகளை வளைத்திழுக்கும் சாமர்த்தியம் மோடிஜிக்கு இல்லையென்று ஆர்.எஸ்.எஸ். தலைமை நினைக்கிறது.

மோடிஜியின் arrogance-உம், கடந்த காலத்தில் கூட்டணி கட்சிகளை அனுசரித்துப் போகாத அனுபவமும் மற்ற கட்சிகள் பாஜகவுடன் (தேர்தலுக்குப் பிந்தைய) கூட்டணி சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்க ஆர்வம் காட்டாது.

இங்கே மோடிஜியின் இந்த பலவீனமே, திருவாளர் கட்கரியின் பலமாக மாறுகிறது. கட்கரிக்கு இதர அரசியல் கட்சிகளுடன் நல்ல அனுசரிப்பு உண்டு. சிரித்துக்கொண்டே, தோளில் கைபோட்டு பேசக்கூடிய அளவிற்கு அவருக்கு சில கட்சித்தலைவர்களுடன் நெருக்கமும் உண்டு.

எனவே, பாஜக தனிப்பட்ட மெஜாரிடி பெறவில்லை என்கிற சூழ்நிலையில் – Plan B -யாக கட்கரிஜியை பிரதமர் வேட்பாளராக்க தயாராக்குகிறது ஆர்.எஸ்.எஸ். தலைமை. கட்கரிஜிக்கும் இதைப்பற்றிய யோசனைகள் கூறப்பட்டு விட்டனவாம்.

இப்போதிலிருந்தே, அவர் இதர கட்சிகளுடனான நட்புறவை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடத்துவங்கி விட்டாரென்று தெரிகிறது.

வருகின்ற மே 2019 தேர்தலில் ஒரு விசித்திரமான சூழ்நிலையை பாஜக கட்சியினரே சந்திக்க வேண்டியிருக்கும்… தனிப்பட்ட மெஜாரிடியை பெற்றேயாக வேண்டும் என்று மோடிஜியும், அவரை அண்டி இருக்கும் அடுத்தடுத்த மட்டங்களும் வெகு தீவிரமாக முயற்சிகளில் இறங்கும்.

அதே சமயம், பாஜகவிற்கு 200 சீட்டிற்கு மேல்
கிடைத்து விடக்கூடாதென்று
சாமியையும், சுப்ரமணிய சுவாமியையும்
வேண்டிக்கொண்டு –
கட்கரிஜிக்கு வேண்டிய ஒரு கூட்டம்
ரகசியமாக வேலை செய்து கொண்டிருக்கும்….

ஆனால், ஓட்டு போட வேண்டிய மக்கள் –
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ…. 🙂 🙂 🙂

.
————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to அடுத்த பிரதமர் “நாக்பூர்” -காரராமே…? RSS-ன் மாற்று யோசனை….!!!

  1. Dhamodharan Subramaniam's avatar Dhamodharan Subramaniam சொல்கிறார்:

    even pranab mukherjee our ex – president, has an outside chance of becoming PM.

  2. Dhamodharan Subramaniam's avatar Dhamodharan Subramaniam சொல்கிறார்:

    i strongly believe BJP will get less than 200 seats and allies will force BJP to look for another PM candidate. Even Sushma Swaraj also has a chance.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      சார்… யார் இந்த சுஷ்மா சுவராஜ்? லலித் மோடியைத் தப்பிக்கவிட்டு, பிறகு அவருக்கு வேறு நாடு செல்ல அனுமதி வாங்கித் தந்தவரா? அப்புறம் கூலாக இது மனிதாபிமான உதவி என்று சொன்னவரா?

      தனிப்பட்ட முறையில் எனக்கு, சுப்பிரமணியம் சுவாமியை ஏன் நிதியமைச்சராக ஆக்கக்கூடாது, அவர் ‘செய்வேன்’ என்று சொன்னதைச் செய்வதற்கு சந்தர்ப்பம் தரக்கூடாது என்று தோன்றுகிறது? அவர்தானே வருமான வரியைவிட வேறு வழியில் நிதி திரட்டமுடியும் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறார்.

  3. புரட்சி தமிழன்'s avatar புரட்சி தமிழன் சொல்கிறார்:

    ராகுல் காந்தியும், மூன்றாவது அணி காமெடியும் இருக்கும் வரையில், பி.ஜெ.பி க்கு மீண்டும் பலமான வாய்ப்பே இருக்கிறது.

  4. புரட்சி தமிழன்'s avatar புரட்சி தமிழன் சொல்கிறார்:

    அய்யா,
    பி.ஜெ.பி யை விரும்பாதவர்கள் வேறு எந்த கட்சிக்கு வாக்கு அளிக்க முடியும்.
    ராகுல் காந்திக்கா? சிரிப்பு தான் வருகிறது…

    • Mani's avatar Mani சொல்கிறார்:

      புரட்சி தமிழன்

      //பி.ஜெ.பி யை விரும்பாதவர்கள் வேறு எந்த கட்சிக்கு வாக்கு அளிக்க முடியும்.
      ராகுல் காந்திக்கா? …//

      bjp யை பிடிக்காதவர்கள் ராகுல் காந்திக்கு தான் ஓட்டு போடவேண்டும்
      என்று இங்கு யாராவது சொன்னார்களா என்ன ? வேறு எவருக்கு வேண்டுமானாலும் போடுங்களேன்.

      //சிரிப்பு தான் வருகிறது//

      எனக்கு கூட உங்கள் பெயரை பார்த்தால் ‘ சிரிப்பு தான் வருகிறது’.,
      அப்படி நீங்கள் என்னவெல்லாம் புரட்சி பண்ணி இருக்கிறீர்கள் என்று
      கொஞ்சம் இங்கே சொல்லுங்களேன். நாங்களும் தெரிந்துகொண்டு சிரிக்கிறோம்.

      • புரட்சி தமிழன்'s avatar புரட்சி தமிழன் சொல்கிறார்:

        ராகுல் காந்தி பெயர் எனக்கு சிரிப்பை வரவழைத்தாள் உங்களுக்கு கோபம் வருவது ஏனோ?

        • Mani's avatar Mani சொல்கிறார்:

          புரட்சி தமிழன்

          அடுத்த பகுதிக்கும் பதில் சொல்லலாமே –

          // எனக்கு கூட உங்கள் பெயரை பார்த்தால் ‘ சிரிப்பு தான் வருகிறது’.,
          அப்படி நீங்கள் என்னவெல்லாம் புரட்சி பண்ணி இருக்கிறீர்கள் என்று
          கொஞ்சம் இங்கே சொல்லுங்களேன். நாங்களும் தெரிந்துகொண்டு சிரிக்கிறோம்.//

          • புரட்சி தமிழன்'s avatar புரட்சி தமிழன் சொல்கிறார்:

            இப்பொழுது எனக்கு Rahul காந்தியின் பெயரை விட உங்கள் கோபத்தை நினைத்தாள் தான் அதிக சிரிப்பு வருகிறது

    • Mercy's avatar Mercy சொல்கிறார்:

      Mr please see the next article and read Mahatma Gandhi’s words.

  5. venkat's avatar venkat சொல்கிறார்:

    this is a possibility only if BJP comes short of majority and alliance parties insist an alternate leader.
    I don’t think BJP will project someone else other than Modi before election.
    this is my opinion… anything can happen in politics.

    I am equally impressed with Nitin’s performance.

  6. Sanmath AK's avatar Sanmath AK சொல்கிறார்:

    KM Sir,

    Gadkari is well connected with business community even before Modi came to power circles. He is a trade-friendly guy. Also he was the next choice for RSS to deal with business community after Pramod Mahajan. There are certain parties which are attacking Modi, they will be Gadkari’s target. So there are high chances of Gadkari to be projected in case BJP do not get majority

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.