தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்ட வைரமுத்துவும், டாக்டர் ராமதாஸ் அவர்களின் பாராட்டத்தக்க பக்குவமும் …


திரு.வைரமுத்து, ‘தமிழை ஆண்டாள்’ என்கிற தலைப்பில், கட்டுரை
வாசித்தபோது, ஆண்டாளைப் பற்றி அவதூறு கூறியதும், அதன்
விளைவாக கிளம்பியுள்ள கண்டனங்களும் ஒருபுறம் இருக்க –

இதைப்பற்றி டாக்டர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை
அவரது பாராட்டத்தக்க, பக்குவமான அணுகுமுறையை
வெளிப்படுத்துகிறது….

முதலில் டாக்டர் ராமதாஸ் அவர்களின் அறிக்கை –
( https://minnambalam.com/k/2018/01/10/77 )

———————————————————————————

வைரமுத்து பத்தாயிரம் முறை யோசித்திருக்க வேண்டும்!

————-

ஆண்டாள் பற்றிக் கவிஞர் வைரமுத்து வெளியிட்ட கருத்துக்குக் கடும்
கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில் இந்த விவகாரம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (ஜனவரி 10) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆண்டாள் வாழ்ந்த மண்ணில், அவரை வணங்குபவர்கள் வாழும் மண்ணில் அவர் குறித்த அடிப்படையற்ற சர்ச்சைக் கருத்தைப் பயன்படுத்துவதற்கு முன் வைரமுத்து பத்தாயிரம் முறையாவது யோசித்திருக்க வேண்டும்” என்று வைரமுத்துவுக்கு
யோசனை தெரிவித்திருக்கிறார்.



தினமணி நாளிதழில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரையில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான
ஆண்டாளை இழிவுபடுத்தும் வகையில் அவர் குறிப்பிட்டதாகக்
கண்டனங்கள் எழுந்தன.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ்,
“எழுதிய கட்டுரையின் தலைப்புக்குச் சற்றும் தொடர்பில்லாத வகையில்
ஆண்டாள் குறித்த கற்பனை மற்றும் யூகங்களை கவிஞர் திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கட்டுரையில் ஆண்டாளின் சிறப்புகளைப் பற்றி அடுக்கிக்கொண்டு வரும்
கவிஞர் வைரமுத்து இடையிடையே சில வினாக்களைத் தொடுத்து, அதற்கு பதிலளிப்பதாகக் கூறி ஆண்டாளைக் குலமறியா பெண்ணாக சித்தரிக்க முயன்றிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

“அதன் அடுத்த கட்டமாக, அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட Indian Movement: some aspects of dissent, protest and reform என்ற நூலில் ஆண்டாள் குறித்து,‘‘Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple’’ என்று குறிப்பிடப் பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி ஆண்டாளை வணங்குபவர்களையும், அவரது பாடல்களை நேசிப்பவர்களையும் காயப்படுத்தியிருக்கிறார்.

இது சர்ச்சையான பிறகு தமக்கு எதிரான கொந்தளிப்பைக் குறைக்கும்
வகையில் தமது வரிகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால்
வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் இந்த விளக்கம் காயப்பட்ட மனங்களுக்கு எந்த வகையிலும் மருந்தாக அமையாது’’ என்றும் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் ஆண்டாள் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆண்டாளைப் பற்றி அறியப்படாத நாட்டில் ஆய்வு என்ற பெயரில் அவரைப் பற்றி எவர் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதிப் பட்டம் பெற்றுச் செல்லலாம் என்று கூறியுள்ள ராமதாஸ், “ஆனால், ஆண்டாள் வாழ்ந்த மண்ணில், அவரை வணங்குபவர்கள் வாழும் மண்ணில் அவர் குறித்த அடிப்படையற்ற சர்ச்சைக் கருத்தைப் பயன்படுத்துவதற்கு முன் வைரமுத்து பத்தாயிரம் முறையாவது யோசித்திருக்க வேண்டும்” என்று சொல்லியுள்ளார்.

மேலும், “இந்தக் கருத்தை பக்தர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று வைரமுத்து குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது, இப்படி ஒரு சர்ச்சை ஏற்படும் என்பதை அறிந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதை அவர் தவிர்த்திருக்க வேண்டும்” என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.

ஆண்டாள் குலமறியாத பெண் என்பதையும் ஏற்க முடியாது என்கிறார் ராமதாஸ். ஆண்டாளின் பாசுரங்களில் மிகத் தெளிவாக “பட்டர்பிரான் கோதை”, “வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை” என்று பலவாறாக கோதையின் சுய அடையாளம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

“எங்கோ இண்டியானா பல்கலைக்கழக நூலில் இடம்பெற்றுள்ள கருத்தை மேற்கோள் காட்டிய கவிஞருக்கு ஆண்டாள் பாசுரத்தில் இடம் பெற்றுள்ள அவரது அடையாளங்கள் தெரியாமல் போனது மிகவும் துரதிருஷ்டவசமானதுதான்” என்று சொல்லும் ராமதாஸ், “கவிஞர் வைரமுத்து தமிழுக்குக் கிடைத்த தலைசிறந்த எழுத்தாளர், கவிஞர் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதுவரை வேறு எவரும் சாதிக்காத வகையில் குடியரசுத் தலைவர் விருதை
6 முறையும், குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதையும் பெற்றவர் அவர். ஆண்டாளை நன்கு அறிந்த அவர் இப்படி ஓர் ஆராய்ச்சியில் இறங்கியிருக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

“காலத்தால் அழிக்க முடியாத இலக்கியம் படைத்த ஆண்டாள் தமிழர்களின் அடையாளம் ஆவார். இது ஒருபுறமிருக்க சமூக பொறுப்புள்ளவர்கள் மக்களின் உணர்வோடு விளையாடும் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். கருத்துரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப் பட்டுள்ளது என்றாலும் கூட, அது மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க
வேண்டும்.

தமிழகம் நல்லிணக்கத்தின் பூமி. அது காப்பாற்றப்பட வேண்டும். எனவே, எந்தவொரு மதம், எந்தவொரு சமுதாயம், எந்தவொரு நம்பிக்கை குறித்தும் வெறுப்பு கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்து, தமிழகத்தில் அமைதி, ஒருமைப்பாடு, நல்லிணக்கம் ஆகியவை தழைத்தோங்க பங்களிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

—————————————————————————————–

இது குறித்து நான் இன்னுமொரு கருத்தையும் வெளியிட விரும்புகிறேன்–

சிலசமயம் சமூகத்தில் – அயோக்கியர்களும், ஊழல்வாதிகளும், சுயநலவாதிகளும், ஜெயிப்பதை பார்க்கும்போது இதையெல்லாம் கட்டுப்படுத்த, ஒழுங்குபடுத்த எந்த சக்தியும் இல்லையா என்கிற வருத்தம் / ஆதங்கம்
ஏற்படுவதுண்டு….அண்மையில் ஒரு இடுகையில் கூட நாம் இதுகுறித்து
விவாதித்தோம்.

அந்த ஆதங்கத்தை போக்குவது போல் சில சம்பவங்கள் நடப்பதும் உண்டு…. இவையெல்லாம் தாமாகவே நடப்பனவா அல்லது யாராவது ஒழுங்குபடுத்துகிறார்களா – என்பது ஒரு சுவாரஸ்யமான விவாதத்திற்கு வழி கோலும்….

இங்கு திரு.வைரமுத்து விவகாரத்தில் ஒரு natural justice இயல்பாகவே
கிடைக்குமென்று எனக்கு தோன்றுகிறது….

கடந்த சில காலமாகவே ஞானபீட விருதைப் பெற வேண்டுமென்று, வைரமுத்து தீவிர சுய முயற்சிகள் எடுத்து வருவதையும்,

இதற்காக அவர் டெல்லியில் பல அதிகார மட்டங்களிலும், பாஜக-விலும் லாபி (lobby) செய்து வருவதாகவும், எழுத்தாளர் ஜெயமோகன் கூறி இருந்தார்….

பாஜக எம்.பி. தருண் விஜய் அவர்களை முன்வைத்து, திருவள்ளுவர் சிலை குறித்து வைரமுத்து எடுத்த முயற்சிகளும்,
பின்னர் பிரதமர் மோடி அவர்களின் கவிதையை தமிழில் மொழிபெயர்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மோடிஜி மீது ஐஸ் மழை பொழிந்ததும் இதை உறுதி செய்தன….!!!

வைரமுத்து இந்த வகையில் ஞானபீட விருதைப் பெறுவது
மிகக்கேவலமானது என்று விமரிசித்துள்ள ஜெயமோகன், கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட இந்த அவார்டு விஷயம்,

எப்பாடுபட்டாவது தடுக்கப்பட வேண்டுமென்றும் எழுதி இருந்தார்….

அத்தகைய தீவிரமான முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டிய தேவைஇல்லாத நிலையை வைரமுத்து அவர்களே இப்போது உருவாக்கிக் கொண்டு விட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது…..!!!

ஆண்டாள் பற்றி அவர் கிளப்பிய இந்த சர்ச்சைக்கு பிறகு தமிழக பாஜக சும்மா இருக்குமா…? சேர வேண்டிய செய்திகள் ஞானபீட விருதை தீர்மானிப்பவர்களை சென்றடையும்.

எனவே, ஜெயமோகன் அதிகம் சிரமப்படாமலே –
வைரமுத்துவுக்கு “நியாயம்” கிடைத்து விடுமென்று தோன்றுகிறது…..!!!

——————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்ட வைரமுத்துவும், டாக்டர் ராமதாஸ் அவர்களின் பாராட்டத்தக்க பக்குவமும் …

  1. Raghavendra's avatar Raghavendra சொல்கிறார்:

    வைரமுத்து காசு வாங்காமல் எந்த நிகழ்ச்சிக்கும் வர மாட்டார்.
    மார்கழி மாதத்தில், ஆண்டாளைப் போற்றி நடக்கும் ஒரு நிகழ்ச்சி.
    தினமணி ஆசிரியர் இவரை இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டதே தவறு.
    அசிங்கப்படுத்தி விட்டார்.
    ஒரு நாத்திகர் வேறு எப்படி பேசுவார் ? சந்து கிடைத்தபோது சிந்து பாடி விட்டார்.

  2. rajamanickam's avatar rajamanickam சொல்கிறார்:

    sir that is gnana pitam not sahithiya academy. he is lobbying and he has to satisfy his maoist and anti social bosses in the name of anarchists. so he played a dual game

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி ராஜமாணிக்கம்.

      எழுதும்போது, தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன்… அது ஞானபீட விருது தான். சரி செய்து விட்டேன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. rajamanickam's avatar rajamanickam சொல்கிறார்:

    kaveri mainthan sir,
    u should condemn him sir. i expect a strong condemnation from you.

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இடுகை ஏற்கெனவே நீண்டு விட்டதால், அங்கே இதை போட முடியவில்லை.
    ஜெயமோகன் பக்கத்திலிருந்து, ஒரு கடிதத்தின் பகுதியை, வைரமுத்து அவர்களின் ஞான பீட விருது முயற்சியை பற்றி நண்பர்கள் அறிவதற்காக கீழே தந்திருக்கிறேன்.

    ———————————————————

    வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

    வைரமுத்துவின் ஞானபீடமுயற்சிகளைப் பற்றி மலையாளம் தமிழ் இரு மூலங்களிலிருந்து அறிந்தேன். அதை பொதுவில் வைக்கவேண்டும் என்றும் ஒரு தமிழ் எழுத்தாளர் என்னிடம் கேட்டுக்கொண்டார். வைரமுத்து அதற்காக முயல்கிறார் என்பதும் அதன்பொருட்டே பாரதிய ஜனதாவின் பிரமுகர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறார் என்றும் தெரியாத எவரும் தமிழில் இல்லை. அவர் எப்போதுமே எல்லா வழியிலுமே சுயமுன்னேற்றத்திற்காக முயல்பவர், ஆகவே அதில் அதிர்ச்சி கொள்ளவும் ஏதுமில்லை

    ஞானபீடம் ‘நல்ல’ எழுத்துக்காக அளிக்கப்படுவது அல்ல. ஒரு காலகட்டத்தின் குரலாக, ஒர் இலக்கியச்சூழலின் அடையாளமாக, ஒரு உச்சசாதனையாளாக கருதப்படும் ஒருவருக்கு அளிக்கப்படுவது. வைரமுத்து அவ்வாறு இந்தியச்சூழலில் அடையாளப்படுத்தப்படுவார் என்றால் அது தமிழுக்கு மிகப்பெரிய சிறுமை. எளிதில் களையப்படக்கூடியது அல்ல அது. அதையே நான் குறிப்பிட்டேன்.

    ….

    ஏனென்றால் வைரமுத்து தமிழின் ஓர் அதிகார மையம் என்பதனாலேயே இங்கே அவரைப்பற்றி எதிர்மறையாக எதுவுமே எழுதப்பட்டதில்லை. அது பொதுவான தமிழ்க்குணம், அதிகாரமற்றவர்களைச் சீண்டுவதும் அதிகாரத்தை போற்றுவதும். இது அவருக்கு துணையாக ஆகிறது.

    …..

    எண்ணிப்பாருங்கள், இவ்வாறு இன்னொரு எழுத்தாளர் பாரதியஜனதாவிடம் உறவாடி விருதுக்கு அலைந்தால் தமிழ் இணைய உலகம் என்னென்ன வசைகளை எழுப்பும். சாகித்ய அக்காதமி விருதை திருப்பியளிக்காத இலக்கியவாதிகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னென்ன வசைகள் கொண்டு அவமதித்தனர். ஒருசொல்லேனும் வைரமுத்துவுக்கு எதிராக அப்போது எழுந்ததா?அன்றைக்குப் பொங்கியவர்களெல்லாம் இன்று எங்கே?

  5. jksm raja's avatar jksm raja சொல்கிறார்:

    நீங்கள் ரெம்ப வெள்ளந்தி சார்,

    ஏன் பிஜேபி வளர்ச்சிக்காக (இந்துக்களை சீண்டுவதற்காக ) சுயநலவாதி வைரமுத்துவுக்கு இந்த assignment கொடுக்கப்பட்டிருக்கக்கூடாதா என்ன ?

    இப்பொழுது பாருங்கள் வைரமுத்துவுக்கு எதிர்ப்பு காட்டியமாதிரியும் ஆயிற்று இந்துக்களை காக்க எங்களைவிட்டால் வேறு யாரும் இல்லை என்பதை காட்டியமாதிரியும் ஆயிற்று.

    வைரமுத்து சாதாரண ஆள் இல்லை . பணம் இல்லாமல் எதையும் பேசவும் மாட்டார் எழுதவும் மாட்டார். இந்தமாதிரியான சென்சிடிவ் மேட்டரை வைரமுத்து புரியாமலா இருந்திருப்பார்?

  6. Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

    Vaalga Subaveera pandiyan and Veermani …now variamuthu and kanimozi also joined in that fray . They are helping DMK to lose the election, making it sure that DMK lose the election.

  7. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கொள்கை என்று ஒன்றும் இல்லாத, பணத்துக்காக, பட்டத்துக்காக எதையும் செய்யக்கூடிய, வியாபாரிகளை, புரோக்கர்களைப் பற்றிய இடுகை தேவையில்லை என்றே நினைக்கிறேன் கா.மை சார்.

    வைரமுத்து, தன் சொந்தச் செலவில், அவ்வப்போது பாராட்டுக்கூட்டங்களைத் தனக்கு நடத்திக்கொள்வதும் (லெட்டர்பேட் சங்கங்கள் தலைப்பில்), லாபியில் ஈடுபட்டு என்ன என்ன பட்டங்களை வாங்கிக்கொள்ளலாம் என்று உழைப்பதிலும், இடத்திற்கேற்றவாறு பேசி ஜால்ரா தட்டுவதிலும் அவருக்கு நிகர் அவரேதான். கருணானிதி அவர்கள், தமிழை ரசிப்பதால், அதனை உபயோகித்து புரோக்கர் ஆனவர் வைரமுத்து (தவறான வார்த்தைப் பிரயோகம் இல்லை. விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்கள் கருணானிதியைப் பார்க்க நினைத்தபோது அதனை organize செய்தவர் வைரமுத்து). ‘தனக்கு பாட்டெழுதும் சந்தர்ப்பம் அந்தப் படத்தில் தரவில்லை’ என்ற ஒரே காரணத்துக்காக, படம் வெளிவந்தவுடன் அது ‘தோல்வி’ என்று பேசியவர் அவர்.

  8. Justin Robers's avatar Justin Robers சொல்கிறார்:

    பத்தாயிரம் முறை என்ன லட்சம் முறை யோசித்திருந்தாலும், கவிப் பேரரசுவின் சிந்தனையிலிருந்து இது மாதிரி வக்கிரம் தான் வெளிவந்திருக்கும்.

  9. Justin Robers's avatar Justin Robers சொல்கிறார்:

    பத்தாயிரம் முறை என்ன லட்சம் முறை யோசித்திருந்தாலும், கவிப் பேரரசுவின் சிந்தனையிலிருந்து இது மாதிரி வக்கிரம் தான் வெளிவந்திருக்கும். ‘உள்ளத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும்’ என இயேசுநாதர் சொல்லியிருப்பார்.

    வரலாறாய் வாழ்ந்து, இப்போதும் கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும், ஆண்டாள் அம்மையாரை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில், கோடிக்கணக்கான இந்திய சகோதரர்களை காயப்படுத்தி விட்டார்.

    • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

      உங்கள் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சியளித்தது.

    • முத்துசுப்ரமண்யம்'s avatar முத்துசுப்ரமண்யம் சொல்கிறார்:

      <> அருமையான, ஆழ்மனத்திலிருந்து வரும் எண்ணம்! இந்த வரிகளை வைரமுத்து அவர்கள் போன்றோர் படித்து உள்வாங்கிக் கொள்வார்களாக! மத, மொழி, கொள்கை வேறுபாடு பார்க்காமல் இந்தியர்களை இந்திய சகோதரர்களாகப் பார்க்கும் பக்குவம் தங்களைப் போல் எல்லா இந்தியருக்கும் வந்து விட்டால் நாட்டில் அமைதிக்கும் நல்வளர்ச்சிக்கும் குறைவே இருக்காது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஜஸ்டின் ராபர்ஸ்,

      மத நல்லிணக்கம்…. இதே கருத்தைத்தான் நான் பல இடுகைகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டு வருகிறேன். எல்லா மதங்களும் நல்ல விஷயங்களைத்தான் போதிக்கின்றன. அனைத்து மதங்களும் இறைவனிடத்தில் தான் அழைத்துச் செல்கின்றன. செல்கின்ற பாதைகள்
      வெவ்வேறாக இருந்தாலும், இறுதியில் நாம் அனைவரும் போய்ச்சேரும்
      இடம் ஒன்றே….

      இந்த பக்குவத்தை தான் அனைத்து மதத்தலைவர்களும் உருவாக்கப்பாடுபட
      வேண்டும். இங்கே அனைத்து மதத்தினருக்கும் இடம் இருக்கிறது…
      அனைத்து மொழியினருக்கும் இடம் இருக்கிறது. அனைவரும் ஒற்றுமையாக, ஆனந்தமாக வாழலாம்.

      இதற்கு குறுக்கே வருபவர்களையும், மாறாகப் பேசுபவர்களையும்
      ஒதுக்கி விட மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

      வரவேற்கப்பட வேண்டிய கருத்து உங்களுடையது… பாராட்டுகள்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  10. Thirumalachari Thiruvengadam's avatar Thirumalachari Thiruvengadam சொல்கிறார்:

    We have not come across anyonecriticisising eera in the North.There are quite a few mystic poets in all the lhe religions and the intensity of faith and devotion portrayed in lyrical outburst were appreciated. t is anirony only in Tamilnadu this habit of throwing mud on literary figures who with their devotional poems enriched the literature.annadasan wh o graduated from an atheist ti agnostic and theist never cast aspersion on any of them involving theirorigin.As a matter of fact most origins o past poets are unknown.hiruvengadam

  11. chandramouly.venkatasubramanian's avatar chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    Deivam nindru kollum vairamuthuvai,i’m sure,

  12. mani's avatar mani சொல்கிறார்:

    இந்து மதத்தினரின் குறிப்பாக வைணவர்கள் தொழும் ஸ்ரீ ஆண்டாளை
    இழிவாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்பதால் செய்த தவறு நேராகாது.

  13. srikanth's avatar srikanth சொல்கிறார்:

    You refer Ramdas of PMK and Jayamohan have condemned Vairamuthu. But you have not condemned so far. why. you have been passing opinion on other times. why silent now:

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஸ்ரீகாந்த்,

      தமிழ் அறிந்தவர்களுக்கு, நான் என் கண்டனத்தை
      இந்த இடுகையின் மூலம் தெரிவித்திருக்கிறேனா இல்லையா
      என்பது நன்றாகவே புரியும்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  14. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கனிமொழி, திருப்பதி உண்டியலைப் பற்றி எள்ளலுடன் பேசியதால், (அவருக்கு கிறித்துவ நாடார் வாக்குகள் அவர் நிற்கப்போகும், அல்லது அவருக்கான தொகுதியில் வேண்டும் என்பதால் இப்படி அவ்வப்போது பேசுவது கனிமொழி வழக்கம்) அது திமுகவின் மீது திரும்பக்கூடாது என்று வைரமுத்துவுக்கு இந்த அசைன்மென்ட் தரப்பட்டதா? அதனால்தான் ஸ்டாலின் வைரமுத்துவை யாரும் கண்டனம் செய்யவேண்டாம் என்று ஆதரவுக்கு வந்தாரா?

    முடிந்தால் கொஞ்சம் ஆராயுங்கள் கா.மை சார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.