…
…

…
மீண்டும் கூட்டணி மாறுகிறாரா திருமாவளவன்…?
ஆர்.கே.நகர் தேர்தலின்போது, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த திருமா அவர்கள், தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும்
திமுகவை குறை கூறுவதும், தினகரனை உயர்த்திப்பேசுவதும், எதற்கு அறிகுறி….?
ஹிந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் –
சற்றும் எதிர்பார்க்காத நிலையில், தேவையே இல்லாமல் –
தினகரனை புகழ்ந்தும், திமுகவை கடுமையாக குறை கூறியும் பேசி இருக்கிறார் திருமாவளவன்…
அவரது பேட்டி, அவர் தினகரனுடன் கூட்டு சேர்வதற்கான அச்சாரமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது…
அவரது ஆங்கில நாளிதழ் பேட்டியிலிருந்து சில பகுதிகள் – தமிழில் –
—————————
ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம், ஜெயலலிதா அவர்களின் உண்மையான அரசியல் வாரிசு தான் தான் என்பதை தினகரன் நிரூபித்திருக்கிறார். இனி அண்ணா திமுக அவர் பின்னால் அணி திரளும்… பெரும்பாலான
அமைச்சர்களும், எம்.பி.க்களும், எம்.எல்.ஏக்களும் விரைவில் அவருடன் சேருவார்கள்….
..
திமுகவின் நடத்தையும், செயல்பாடுகளும், அது தினகரனுடன் ரகசியமாக கூட்டு வைத்திருக்கிறதோ என்று நினைக்கும் விதத்தில் இருந்தது….
லோக்கல் திமுக தலைவர்களிடமும், தொண்டர்களிடமும் காணப்பட்ட அலட்சியத்தையும், ஆர்வமற்ற தன்மையையும் பற்றி நான் அவர்களிடமே கூறினேன். திரு.ஸ்டாலினிடம் கூட நான் இது பற்றி கூறினேன்.
..
மதுசூதனனுக்கு தொகுதியில் செல்வாக்கு இல்லை. திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தொகுதியில் அறிமுகமான முகமாக இல்லை. இந்த நிலையில் தினகரன் தான் நட்சத்திரமாக ஒளிர்ந்தார்.
..
அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் பக்குவப்பட்ட தலைவராக, தினகரன் உருவாகி இருக்கிறார்…
பணம் இந்த தேர்தலில் கடைசி பட்சமாகத்தான் இருந்தது…( 🙂 🙂 🙂 )
————————————————————————————————-
AIADMK will rally behind Dhinakaran: Thirumavalavan –
Says sidelined leader has emerged as true political heir of Jayalalithaa…
Predicting that the victory of T.T.V. Dhinakaran in the Dr. Radhakrishnan Nagar Assembly constituency would in
due course help him establish himself as the leader of the ruling AIADMK, Viduthalai Chiruthaigal Katchi (VCK)
leader Thol. Thirumavalavan on Sunday said the DMK was defeated because its cadres did not fully involve
themselves in the campaign.
“The Dravida Munnetra Kazhagam’s attitude even gave room for the assumption that it had a secret understanding
with Mr. Dhinakaran. The DMK leaders criticised the leadership of Chief Minister Edappadi K. Palaniswami and
Deputy Chief Minister O. Panneerselvam but spared Mr. Dhinakaran during the campaign,”
The VCK leader said when he noticed the indifference of the local DMK leaders and cadres, he warned them not to
underestimate the capacity of Mr. Dhinakaran.
I even informed DMK working president M.K. Stalin about the trend.
..
I thought the DMK would come second in the election, but I was shocked that it has been relegated to the third position,” he said.
Dhinakaran’s ‘star value’Contending that Mr. Dhinakaran had emerged as the true political heir of the late Chief Minister Jayalalithaa,
Mr. Thirumavalavan felt a cross-section of Ministers, MLAs, MPs and senior leaders would gradually rally behind
his leadership.
“AIADMK candidate E. Madhusudanan did not have an appeal among partymen and DMK’s Marudu Ganesh was not a prominent face in the constituency. The only person who had a star value was Mr. Dhinakaran, who came across as a mature person and handled all issues effectively,” he said.
“People sympathised with Mr. Dhinakaran because they realised that the aim of the BJP was to suppress the emergence of Sasikala in the AIADMK and to promote Mr. Palaniswami and Mr. Panneerselvam.
As far as I know, money was the last factor in the constituency.
….



// தினகரனுக்கு முன்கூட்டியே வாழ்த்துச் சொன்ன திருமாவளவன்! – பெரியார் திடலில் நிகழ்ந்த சுவாரஸ்யம்! // விகடன் செய்தி … வாக்கு எண்ணிக்கை நடக்கும் போதே –
காலையிலேயே கூறிவிட்டார் – வாழ்த்துக்களை …. ! வற்றுகிற குளத்தில் பறவைக்கு என்ன வேலை ….? அடுத்து …
// திமுகவினரே விலை போனதாக சொன்ன துரைமுருகன்… என்ன செய்யப் போகிறது தலைமை… தயாநிதி அழகிரி கேள்வி? //
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/dhaya-alagiri-seeks-action-against-duraimurugan-306373.html இதுபோல துறை முருகன் கூறியது — செயல் தலைவரின் கட்டுப்பாட்டில் கட்சி இருக்கும் லட்சணம் நன்கு வெளிப்படுகிறது — பழைய அஞ்சாநெஞ்சனின் புதல்வர் செம ” கமெண்ட்களை ” டிவிட்டரில் தினமும் வெளுத்து வாங்குகிறார் — போட்டுத்தாக்கு ….?
திருமாவளவன் பேச்சுத் திறன் மிக்கவர். ஓரளவு நியாயமாகப் பேசக்கூடிய திறமை மிக்கவர் (ஆனால் பெரும்பாலும் அப்படிப் பேசியதில்லை). ஆனால், ‘ஓட்டு’, ‘தேர்தல் களம்’ என்று வரும்போது அவரது நிலைப்பாடு, நியாயமானதாக என்றுமே இருந்ததில்லை, அவர் நம்பிக்கைக்கு உரியவர் கிடையாது. அவரிடம் நல்ல VISION இல்லை. கொள்கை என்பது (தேர்தல் அரசியலில்) கிடையவே கிடையாது. அதனால்தான் அவர் ‘தலைவர்களின்’ நம்பிக்கையைப் பெறுவதில்லை. அப்படியும் அவரைச் சேர்த்துக்கொள்ளக் காரணம், ஒரு சமூகத்தின் REPRESENTATIVEஐ உதறிவிட்டோம் என்ற எண்ணம் வரவேண்டாமே என்ற பாவப்பட்ட உணர்ச்சிதான்.
திருமாவளவனுக்கு எந்தக் கட்சியோடு இருப்பது என்ற தெளிவு இல்லை. பாஜக அறவே வேண்டாம் என்று அவர் கட்சித் தொண்டர்களின் நிலைப்பாடாக எடுத்துவிட்டார். அதிமுக அவரை சேர்த்துக்கொள்ளவில்லை. திமுக, ஸ்டாலின் தலைமையில் ‘வந்தால் வா வராவிட்டால் போ’ என்ற மன நிலை. வேறு வாய்ப்புகள் இல்லை. தனியாக நின்றால் வருகிற வாக்குகள்கூட வராமல் பல்லிளித்துவிடும். அதனால் கிடைத்த இடங்களில் எல்லாம் அவர் துண்டைப் போட்டுவைக்கிறார். திருமாவளவன் நம்பிக்கைக்கு உரிய தலைவர் அல்லர். (எனக்கு மனதில் தோன்றுவது, ‘வரவு’க்கு ஏற்றபடி அவர் வேலை பார்க்கிறார் என்று. ராஜபக்ஷேவைப் பார்த்து இளித்துக் கும்பிடு போட்டவர், முதல் ஆளாக ஜெ. அவர்கள் இட்லி சாப்பிடுகிறார் என்று அப்போலோவில் ஆஜர் போட்டவர்)
// பணம் இந்த தேர்தலில் கடைசி பட்சமாகத்தான் இருந்தது…//
This can be taken as
BEST JOKE OF THE YEAR
or
MOST HONEST WORDS OF A POLITICIAN
Best comedian of the Month goes to Thiruma
திருமா தினகரன் பக்கம் வருவதை நான் விரும்புகிறேன்.காரணம் திருமா,வைகோ போன்றவர்கள் யாரை ஆதிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயம் தோல்வி அடைவார்கள்.மன்னார்குடி மாபியா தினகரன் தண்டிக்கப்பட வேண்டியவர். தமிழகம் மீண்டும் மன்னார்குடி கும்பலிடம் மாட்ட கூடாது.