ஆர்.கே.நகர் தேர்தல் பற்றி ராஜ்தீப் சர்தேசாயின் கேள்விகள் …!!!



ஆர்.கே.நகர் தேர்தலும், அதன் முடிவுகளும் அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்று விட்டன… எப்படி…?

பிரபல ஆங்கில தொலைக்காட்சி அரசியல் விமரிசகர் ராஜ்தீப் சர்தேசாய், சில கேள்விகளை /அலசல்களை தனது ட்விட்டர் செய்திகளின் மூலம் எழுப்பி இருக்கிறார்…

—————————–

– டெல்லி தர்பாரை துணிச்சலுடன் எதிர்த்து நிற்போரையே, பொதுவாக தமிழ்நாடு ஆதரிக்கிறது. EPS / OPS, திமுக மூன்றுமே டெல்லியுடன் மென்மையாக இருப்பதற்கான விலையை கொடுத்திருக்கின்றன.

– இந்தியாவின் ஒரு மூலையில், மோடி/ஷா மேஜிக் துளியும் வேலை செய்யாத ஒரு இடமாக தமிழ்நாடு இருக்கிறது…

– பணம் – பாடுகிறதோ, ஆடுகிறதோ இல்லையோ -நிச்சயமாக பேசுகிறது… தினகரனின் வெற்றி அதை உறுதி செய்கிறது.

– ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளின் விளைவாக எடப்பாடி பழனிசாமியின் அரசு கவிழுமா?

-திமுகவின் கூட்டணி கொள்கையில் மாற்றம் வருமா…?
-திமுக இனி பாஜகவுடன் நெருக்கம் கொள்ளுமா அல்லது பழையபடி காங்கிரசுடன் கூட்டணியை தொடருமா?

-அம்மாவின் வாரிசாக டி.டி.வி.தினகரன் ஆவாரா?

——————————-

ராஜ்தீப் சர்தேசாயின் அலசல்கள் /கேள்விகளுக்கு சுருக்கமான விளக்கமாக நான் சொல்ல நினைப்பது –

– தமிழ்நாட்டில் பாஜகவுக்கான ஒரிஜினல் ஆதரவு மிகக்கொஞ்சமே – என்றாலும், டெல்லியில் பாஜக ஆட்சியில் இருப்பதால், அதனோடு ஒட்டிக்கொண்டால், சில ஆதாயங்களை பெறலாம் என்கிற ஆசையில் இருக்கும் தனிப்பட்ட மனிதர்களும், தலைவர்களும், சில கட்சிகளும் இங்கே நிச்சயம் உண்டு. அவர்கள், பாஜகவுக்கான அடிப்படையை தமிழ்நாட்டில் அமைத்து தருவார்கள்.

– எடப்பாடி அரசு, மத்திய பாஜகஅரசு / மோடிஜி விரும்பும் வரையில் நீடிக்கும். அதனை கவிழ்க்க தினகரனோ, திமுகவோ – தீவிரமாக முயற்சி எடுத்தால், அதிகபட்சம், சட்டமன்றம் தற்காலிகமாக சில மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஜனாதிபதி /கவர்னர் ( பாஜக ஆட்சி…! ) கொண்டு வரப்படும்…. 2019 பாராளுமன்ற தேர்தலையொட்டியே தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம்.

– திமுக அநேகமாக பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடும்…. அதற்கான சூழ்நிலையை பாஜக ஏற்கெனவே உருவாக்கி விட்டது என்றே தோன்றுகிறது.

– தமிழ்நாட்டில் – 2ஜி வழக்கு முடிவையொட்டி, திமுகவுடன் ஒட்டிய விசிக, மதிமுக, வலது கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பாடுதான் திண்டாட்டம்….

—————————————————————————————-

இதெல்லாமே யூகம் தான்.
அரசியலில் எதுவும் நடக்கலாம்…

நாளைய தினமே – யார் வேண்டுமானாலும்,
யாருடன் வேண்டுமானாலும் சேரலாம்…
இதிலெல்லாம் – மானமாவது, வெட்கமாவது…!!!

இறுதியாக, ஆர்.கே.நகர் தேர்தல் ரிசல்ட் பற்றி –

திருவாளர் தினகரன் இப்போது தாய்க்குலத்தின் ஆதரவை பெற்ற தனித்தலைவனாகி விட்டார். தெரிந்தோ, தெரியாமலோ – அது அவருக்கு “குக்கர்” சின்னத்தை பெற்றுத் தந்தவர்கள் செய்த உதவி ..!!!


கிட்டத்தட்ட 20-25 நாட்களுக்கு ஆர்.கே.நகரில் உள்ள பெரும்பாலான தாய்க்குலத்திற்கு, நாள் அடிப்படையில் சம்பளம் கொடுத்து, வெறுமனே குக்கருடன் வலம் வரச்செய்த தினகரனின் சாமர்த்தியம் யாருக்கு வரும்…?
சம்பளம் கொடுத்த முதலாளி சொன்னதை அவர்கள் செய்தார்கள்…இதில் தவறு எதையும் நான் காணவில்லை….!!!

ஒரு விஷயத்தை இங்கு சொல்லியே ஆக வேண்டும்….

அரசியல்வாதிகளுக்கு எந்தெந்த “தகுதி”கள் தேவையோ, அவை அனைத்தையும் மற்ற அனைத்து அரசியல்வாதிகளையும் விட “அதிகமாக” பெற்று “முதல் இடத்தில்” இருக்கும் திருவாளர் தினகரன் இந்த தேர்தலில் ஜெயித்ததில் எந்தவித
அதிசயமும் இல்லை என்பது தான் நம் கருத்து.

ஆனால், இதைப்பற்றி, பெரியதாக யாரும் கவலையோ, வருத்தமோ கொள்ளத் தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன். நமக்கு இது ஒன்றும் புதிதுமல்ல.

ஏற்கெனவே பல வருடங்களுக்கு முன்னரே “திருமங்கலத்தில்” பார்த்தது தானே..? இந்த ஃபார்முலாவை ஒரு தொகுதியாக இருந்ததால் மட்டுமே நடைமுறைப்படுத்த முடிந்தது. 234 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கும்போது -இந்த ஃபார்முலாவை நிச்சயமாக செயல்படுத்த இயலாது….

ராஜ்தீப் சர்தேசாயின் ட்விட்டர் செய்திகள் பற்றியும்,
நமது இடுகை விளக்கம் பற்றியும் –
தங்களது கருத்தை பின்னூட்டங்களின் மூலம் தெரிவிக்கும்படி
நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.

—————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ஆர்.கே.நகர் தேர்தல் பற்றி ராஜ்தீப் சர்தேசாயின் கேள்விகள் …!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    “EPS / OPS, திமுக மூன்றுமே டெல்லியுடன் மென்மையாக இருப்பதற்கான விலையை ” – அப்படி எனக்குத் தோன்றவில்லை. மத்திய அரசுடன் இணைந்து இருந்தபோதும் திமுக, அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தேர்தலில், ‘நம் கட்சி’ என்ற எண்ணம், இரட்டை இலையை விட்டுவிட்டு தினகரனுக்கு வாக்களித்தவர்களுக் குற்ற உணர்வைக் கொண்டுவரவில்லை. ரெட்டை இலையும் குக்கரும் ஒன்றுதான் என்றே பெரும்பாலானோர் கருதியிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. இரண்டாவது, காலம்தான் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும். வேறு எதுவுமல்ல. மக்களே யார் சரி என்று நினைத்துத் தேர்ந்தெடுப்பர். இப்படித்தான் அதிமுக வளர்ந்திருக்கிறது. ‘கூட்டுத் தலைமை’ என்பதெல்லாம் அதிமுகவைப் பொறுத்த அளவில் சரிவராது. ஒரு தலைமை, மற்றவர்கள் அனைவரும் அதற்குப் பணிவது என்ற முறைதான் அதிமுகவுக்கு சரிப்படும்.

    வெறும்ன, பணத்தால் வெற்றி என்று இதனைக் கடந்துபோக முடியாது. மக்களின் குணத்தைப் பொறுத்துத்தான் தலைவர்கள் தோன்றுகின்றனர். இன்னும் ஒரு தேர்தலில் தெரிந்துவிடும், மக்கள் யாரை அதிமுகவுக்குத் தலைமை ஏற்கச் சொல்கின்றனர் என்று.

    பாஜக, (காங்கிரஸ் போல), பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் ஒரே சமயத்தில் நடந்தால் அது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், தமிழகம் பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழகம், தனக்கான மானிலக் கட்சியைத்தான் ஆதரிக்கிறது என்றே தோன்றுகிறது. திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டால், ‘திமுகவின் ஆதரவுத் தளமும்’, ‘பாஜகவின் ஆதரவுத் தளமும்’ வேகமாகக் கரையும். பிரதமர் மோடி அவர்கள் (பாஜக வை represent செய்கிறவர்) கருணானிதியைச் சந்தித்ததையே யாராலும் ஜீரணிக்க முடியாது. (காரணம், இரண்டு கட்சிகளின், so called கொள்கைகள் இரு துருவங்கள்). மோடி அவர்களின் மேஜிக் (அப்படி ஒன்று இருந்தால்), தமிழ் நாட்டில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      // “EPS / OPS, திமுக மூன்றுமே டெல்லியுடன் மென்மையாக இருப்பதற்கான விலையை ” //
      -இதில் இடையே “தற்போதைய” என்கிற வார்த்தையை சேர்த்து படியுங்களேன்… அப்போது ஒருவேளை சரியாகத் தோன்றலாம்…. 🙂 🙂

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. ravikumar's avatar ravikumar சொல்கிறார்:

    Dinakaran proved that he is much more intelligent than any of EpS, Ops, MKS and etc

  3. சந்திரசேகரன்'s avatar சந்திரசேகரன் சொல்கிறார்:

    பிஜேபி ஐ எதிர்போரை எல்லாம் தமிழக மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என்றால் ஆர்.கே நகர் தொகுதியில் இன்று வெற்றி பெற்றிருக்க வேண்டியவர் கலைகோட்டுதாயம் தான்.
    ஆனால் நடந்தது வேறு, பிஜேபி தமிழகத்தில் காலூன்ற இன்னும் பல காலமாகும் என்பதற்கு காரணம் அவர்கள் தமிழக பிரச்சனைகளை மறந்து மோடியின் துதிபாடிகளாக மாறியதுதான்.
    மற்றபடி ஆர்.கே நகர் தொகுதி முடிவுகளை தீர்மானித்தது பணமா,ஸ்டாலின் அவர்கள் டிடிவியின் ஸ்லீப்பர் செல்லாக மாறியதா, ஈபிஎஸ் ஓபிஎஸ் தலைமையின் தோல்வியா இல்லை குக்கரை இலைக்கான மாற்றாக மக்கள் ஏற்றுக்கொண்டதா?
    இதற்கான பதில் வாக்களர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
    மற்றபடி அலசப்படும் அனைத்துமே அலசுபவர்களின் சார்புக்கேற்பவே அதில் ராஜ்தீப் சர்தேசாயும் ஒருவர் அவ்வளவே….

    • செந்தில், கோவை...'s avatar செந்தில், கோவை... சொல்கிறார்:

      மக்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டார்கள்….
      அதிமுக விற்கு மூட்டையை அவிழ்க்க மனம் வரவில்லை…

      • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

        நான் அப்படி நினைக்கவில்லை. அதிமுக பிரமுகர்களிடையே கூட, இப்போதைய தலைமையிடம் நம்பிக்கை (ஈபிஎஸ் ஓபிஎஸ்) இல்லை. இதற்குக் காரணம், அதிமுகவிற்கு ஒரு தலைமைதான் இருக்கவேண்டும். இரண்டுபேர் இருக்கும்போது, அங்கு அவ நம்பிக்கையும், பிரச்சனையும்தான் தோன்றும். என் மனதில் ஓபிஎஸ் சரியான தலைவராகத் தோன்றுகிறது. ஈபிஎஸ்மேல் எனக்கு ஈர்ப்பு இல்லை. அதனால் அதிமுக தொண்டர்கள், காசு வாங்கிய பொதுமக்கள், மற்றவர்கள், தினகரனுக்கும் இரட்டை இலைக்கும் வாக்களித்திருக்கிறார்கள். பொதுவாக அதிமுகவின் பாணி, தமிழ்னாட்டு நலனை மட்டும் எண்ணிச் செயல்படுவது, தேவையில்லாமல் மத்திய அரசை எதிர்க்காமல் இருப்பது.

        எனக்கு இதில் (தேர்தல் ரிசல்ட்) ஒரு தனிப்பட்ட திருப்தி.

        அதிமுக, ஜெ தலைமையில் ஒரு இடைத்தேர்தலில் (திமுக ஆட்சியின்போது), சாதிக்கட்சிக்குக் கிடைத்த சாதி வாக்குகளினால் டெபாசிட் இழந்தது. அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது (அதாவது இடைத்தேர்தலில் பணத்தை வாங்கிக்கொண்டு ஆளும் கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள், ஒரு பகுதி, சாதியை மட்டும் மனதில் கொண்டு வாக்களிப்பவர் – இப்படி இருந்தால், எதிர்க்கட்சி காணாமல் போய்விடுமோ என்ற எண்ணம்). அது அதிமுகவுக்கு கறைதான்.

        ஆனால் இந்த இடைத் தேர்தலில், அதிமுகவின் இரு பிரிவுகளே 75%க்கும் அதிகமான வாக்குகள் வாங்கி, சென்னையிலேயே (படித்தவர்கள் இருக்குமிடம், திமுக வாக்கு வங்கி என்று கருதப்படும் இடம்) ஸ்டாலின் தலைமையிலான திமுகவை டெபாசிட் இழக்கச் செய்துள்ளனர். இது எனக்குத் திருப்திதான்.

  4. venkat's avatar venkat சொல்கிறார்:

    i admire dinakaran’s organization skill. spending money is easy. he knew the trick of whom to give, how to give and what to give. Looks like his grass root level support is strong or he bought those ADMK grass root level organizers!

    Either way this week would have shook all other camps!

    • D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

      Yes, people look up to a strong leadership (not necessarily good, bad or wise). Among the current leaders, Dhinakaran wins hands down, for all wrong reasons though. I expect that the entire AIADMK will have to rally round Dhinakaran for survival sake. It is very unfortunate for TN. One silver lining is Rajini’s entry into politics. He is the only hope for TN to get out of corrupt and dynastic Dravidian rule.

  5. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    தோற்ற கட்சியினர் அனைவரும் தினகரனோடு ஆர் .கே. தொகுதி மக்களையும் சேர்த்து கடுமையாக விமர்சிக்கிறார்கள் — அதுவும் தமிழிசை தன்மானம் பற்றியெல்லாம் கூறி மக்களை வசைப்பாடுகிறார் — பணம்- பணம் என்று அனைவரும் புலம்புவது மிகவும் வேடிக்கையான ஒன்று — இங்கே மட்டும்தான் பணம் கொடுத்தார்கள் என்பதும் மற்ற எந்த தேர்தலிலும் — எங்கேயும் — எந்தக்கட்சியும் பணம் கொடுக்காததை போலவும் பேசுவது வியப்பளிக்கிறது …

    பணம் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்றால் – மக்களை குறை கூறுவதை விடுத்து — தேர்தல் ஒழுங்காக நடக்க சீர்திருத்தங்களுக்கான செயல்களை மேற்கொள்ள வேண்டியது அரசு தான் ….

    பலருக்கும் பல விதவிதமான கருத்துக்கள் — ஒருவர் மக்களின் மனநிலை என்கிறார் — கும்பல் மனநிலை என்கிறார் — ராஜ்தீப் சர்தேசாய் எங்கோ இருந்துகொண்டு ட்விட்டர் செய்திகளின் மூலம் கேள்விகளாக எழுப்புகிறார் … இதெல்லாம் ஒப்புக்கு கூறும் கருத்துக்கள் — கும்பல் மனநிலை — மனோபாவம் காரணியென்றால் – பல தேர்தல்களில் முடிவு வேறு விதமாக அல்லவா மாறியிருக்கணும் —
    உண்மையின் பக்கம் வரவே பயப்படும் செயல் —

    களத்தில் உள்ள மக்களின் நிலை :
    இங்கேயுள்ள அடிமை ஆட்சி — ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த பல திட்டங்களை — பிஜேபி அரசின் தமிழக மக்கள் விரோத போக்கை நடைமுறை படுத்தியதால் – வந்த வினை என்பது காரணம் — அனைத்து தேர்தல்களிலும் – அனைவரும் பணம் கொடுப்பது நடைமுறை என்றாகிவிட்ட போது பண நாயகம் என்று புலம்புவதை விடுத்து — மக்கள் நலனை நினைக்க வேண்டும் — மானியங்கள் ஒழிப்பு — ரேஷன் குறைப்பு — விலைவாசியேற்றம் — கழுத்தை நெறிக்கும் வரிகள் போட்டது — செல்லா நோட்டு — கல்விக்கொள்கை — எரிபொருள் திட்டம் என்று மக்கள் பாதிப்பு நடவடிக்கைகள் தான் — முழு முக்கிய காரணம் — மக்களின் வெறுப்பின் வெளிப்பாடு தான் — தினகரன் வெற்றி ….!!!

    //– திமுக அநேகமாக பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடும்…. அதற்கான சூழ்நிலையை பாஜக ஏற்கெனவே உருவாக்கி விட்டது என்றே தோன்றுகிறது.// …… இந்த கூற்று நடைமுறைக்கு வரும் பட்சத்தில் — ஒன்றுபட்ட அதிமுக வாக அணி உருவானால் — விறு- விறுப்புக்கு பஞ்சமிருக்காது — எது எப்படி நடந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்திலும் — ஜீவாதார உரிமைகளிலும் அடக்கி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் — ஆளுகின்ற கட்சிகளுக்கு கண்டிப்பாக ஏற்பட்டே ஆகணும் — ஆகும் என்று நம்புவோம் …. !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.