ஆர்.கே.நகர் – டாக்டர் சு.சுவாமி ஜோக்ஸ்….!!!


” இடுக்கண் வருங்கால் நகுக ”

இது இங்கு எதற்கு என்கிறீர்களா…?
ஆர்.கே.நகரில் தமிழ்நாட்டின் மானம் பறிபோகிறதே என்று வருத்தப்படும் நண்பர்களுக்கு, அவர்கள் மனவருத்தத்திலிருந்து சிறிது விடுதலை பெற உதவவே இந்த இடுகை.

இன்று ஆர்.கே.நகர் ரிசல்ட் வரத்துவங்கியதும், தன்னை மதிக்காத தமிழக பாஜகவை மட்டம் தட்டும் நோக்குடன் டாக்டர் சு.சுவாமி கீழேயுள்ள ட்விட்டர் செய்தியை வெளியிட்டாலும் வெளியிட்டார்- அவரது தளத்தில் எக்கச்சக்கமான காமெடிகள் அரங்கேறி வருகின்றன. தமிழர்களின் நகைச்சுவைத்திறனுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள் அங்கே கண்கூடாக
காட்சியளிக்கின்றன….!!!
..

..

ஆர்.கே.நகர் கேவலம் பற்றிய வருத்தமெல்லாம் பறந்து விடும் அந்த காட்சிகளை பார்த்தால் …!!!

டீசண்டான இரண்டு சாம்பிள்களை மட்டும் கீழே தருகிறேன்….

..

..

..

முழு அனுபவத்தையும் பெற விரும்புபவர்கள் டாக்டர் சு.சுவாமி அவர்களின்
ட்விட்டர் பக்கத்தை நாடலாம் …. 🙂 🙂 🙂

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to ஆர்.கே.நகர் – டாக்டர் சு.சுவாமி ஜோக்ஸ்….!!!

  1. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    சுப்பிரமணிய சுவாமியை விடுங்கள். அவரால் பாஜகவுக்கு பைசா பிரயோசனம் கிடையாது. இதனை மோடி அவர்கள் புரிந்துகொண்டுதான் ஆட்சி அதிகாரத்தில் வைக்கவில்லை எதையாவது செய்து செய்தியில் இருக்கவேண்டும் என்பதே சு.சுவாமியின் சிந்தனை.

    “தமிழ்நாட்டின் மானம் பறிபோகிறதே ” – எனக்கென்னவோ இதில் கொஞ்சம் சந்தேகம் உண்டு. பணம் மட்டும் இத்தகைய வெற்றியைத் தந்திருக்கமுடியுமா? கிட்டத்தட்ட 40,000 வாக்காளர்கள் (ஜெ.வுக்கு வாக்களித்தவர்களைத் தவிர) திமுகவுக்கு வாக்களிக்கவில்லை. சென்றமுறை திமுகவுக்கு வாக்களித்தவர்களில் 75 சதவிகிதம் பேர் இந்தமுறை திமுகவுக்கு வாக்களிக்கவில்லை. (இத்தனைக்கும் இந்தமுறை கம்யூனிஸ்ட், வி.சி போன்ற கட்சிகளும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. பெரும் எழுச்சியை (?)ப் பெற்ற காங்கிரசும் திமுக கூட்டணியில் இருந்தது) இதுதான் எனக்கு தேர்தல் முடிவு சொல்லும் செய்தி. இதற்குக் காரணம்,

    1. திமுகவின் மீதும் ஸ்டாலின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை. திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த மக்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஸ்டாலின் சொன்னது அவரது நகைச்சுவை உணர்வு காரணமாக இருக்கும்.
    2. வாக்களிக்கும் மக்களில் 60% பேர், தங்கள் வாக்குகளை விற்பதற்கு வெட்கப்படுவதில்லை. .அவர்களுக்கு யார் வந்தாலும் கவலையில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் யாராவது 2000 ரூபாய் கொடுத்து அவர்களது வாக்கினை வாங்கிக்கொள்ளலாம்.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ” இடுக்கண் வருங்கால் நகுக ” – பாஜகவுக்கு எந்தப் பிரச்சனையும் வந்தமாதிரி எனக்குத் தோணலை காமை சார். பாஜகவுக்கு 10% வாக்குகள் தமிழ்னாட்டில் கிடைக்கும் என்று பாஜக தீவிர உறுப்பினர்கூட நம்பமாட்டார்.

    பாஜக will become nobody’s child in Tamilnad. அதனுடைய ஆதரவுத் தளம் உருவாகணும்னா, அவங்க ‘நமக்கு’-அதாவது தமிழ்’நாட்டுக்கு என்ன செஞ்சிருக்காங்க என்பதைப் பொறுத்துத்தான் அது மெதுவாக உருவாகும் (முன்னால் காங்கிரசுக்கு உருவான அடித்தளம் அது சுதந்திரத்துக்குப் பாடுபட்ட கட்சி என்பதுதான்). பாஜக தமிழ்’நாட்டுக்குன்னு ஒண்ணும் செஞ்சமாதிரி தெரியலை. அதுனால தேர்தல்ல அவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க கட்சியாக இருக்கமாட்டார்கள். அவர்கள் வாக்குகள், காங்கிரசைத் தாண்டுவதற்கே பலப் பல வருடங்கள் ஆனாலும் ஆச்சர்யமில்லை.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நான் நினைப்பது, திமுகவுக்கு 25% வாக்கு (பொதுத்தேர்தல் வரும்போது). திமுகவை வரவிடாத கட்சிக்கு 35% வாக்கு, மற்ற உதிரிகளுக்கு 8%க்கு மிகாத வாக்கு. (அதாவது 5 கட்சிகள் இருந்ததுன்னா, மொத்தம் 15% வாக்கு அவங்களுக்கு). மீதி வாக்குகள், இதே விகிதத்துல முதலிரண்டு கட்சிகளுக்கும் வரும். தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்துக்காக, பாஜகவுக்கு வாக்களிக்க எந்த வித காரணமும் இன்றுவரை கிடைதாது (மத்திய அரசைச் சொல்லவில்லை. மாநில அரசாட்சிக்கு)

  3. NS Raman's avatar NS Raman சொல்கிறார்:

    This is a victory of A1 and A2.
    A1 video and A2 MONEY helped in this election.

    Rest of all parties, democracy including election commission are only Spectators.

    BJP is below nam tamilar and nota very interesting aspect but not a surprise

  4. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    ஆர்.கே . நகரில் ” தமிழ் நாட்டின் ” மானம் பறிபோகிறது … ? இதற்கு முழு முக்கிய காரணம் எது — யார் என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டிய சூழலில் நாடு நிலையாளர்கள் இருக்க வேண்டும் …. தினகரன் பிளஸ் அதிமுக இரண்டும் வாங்கியுள்ள வாக்குகள் — அம்மா கால வாக்கு வாங்கி அப்படியே இருப்பதை தான் காட்டுகிறது …. மற்ற அனைத்துக்கட்சிகளும் ஆதரவு கொடுத்தும் டெபாசிட் இழந்த திமுகவின் பரிதாப நிலை — மகா கேவலம் ….

    பணநாயகம் என்பது மட்டும் காரணமாக அமையவில்லை — அதையும் மீறி இங்கே உள்ள ” அடிமைகள் ஆட்சி ” பிஜேபி கைப்பாவையாக — மக்கள் விரோத போக்குகளுக்கு தலையாட்டி நடந்துகொண்டதும் — ஒரு முக்கிய காரணம் — என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் — !!!

    ” மன்னார்குடி மாபியா ” என்கிற செல்ல பட்டப்பெயரை சூட்டியவர் – இதே சு. சுவாமிதான் — அவரே ஜெயாவின் இறப்புக்கு பிறகு இதே மாபியா கூட்டத்திற்கு வக்காலத்து வாங்குவது அவருடைய பிசினஸ் பிழைப்பைக் காட்டினாலும் — மத்திய ஆட்சியின் தமிழக செயல்பாடுகள் மாற வேண்டும் என்ற அக்கரையில் — எச்சரிக்கை அளிப்பதாக எடுத்துக்கொண்டு செயல் பட்டால் — காலூன்ற ஓரளவு இடம் கிடைக்கும் …. இபிஎஸ் — ஓபிஎஸ் கூட்டணி சேர்ந்தும் — மக்களின் ஆதரவு …??? குறியாக இருக்கிறது — இருக்கும் …. தங்களின் அடிமைத்தன செயல்களை மாற்றிக்கொள்ளும் வரை !!! பிரனீஷ்

  5. Sharron's avatar Sharron சொல்கிறார்:

    Very sad to see RK Nagar election result. Why everyone is behind TTV’s money? Even Vishal is behind TTV. [May be the whole cine field] The twitter Kamal and Rajini are keeping quiet. Why?

  6. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    இன்று [ 25 – டிசம்பர் ] தனது 92 வது பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் பிரதமர் திரு . வாஜ்பாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் …. ! இதே நேரத்தில் அவர் ” உடல்நலம் குன்றிய நிலையில் நியூயார்க்கில் மருத்துவமனையில் இருந்தபோது திரு வாஜ்பாய் எழுதிய“மரணத்தோடு மோதிவிட்டேன்” என்ற தீரமான கவிதையின் சில பகுதிகள்:

    மரணத்தின் வயது என்ன?
    இரண்டு கணம் கூட இல்லை.
    வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
    இன்று நேற்று வந்தவை அல்ல.

    வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.
    மனதைத் தொலைத்து விட்டு
    மீண்டும் நான் வருவேன்.
    கேவலம் மரணத்திடம்
    ஏன் பயம் கொள்ள வேண்டும்? … என்ன ஒரு அருமையான வரிகள் — உண்மைக்கு கவிஞன் …. !
    இந்த கவிதையை பார்க்கும் போது — நமது மீசை கவிஞன் பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகிறது — “காலா உன்னைச் சிறு புல்லென மதிக்கிறேன்! – என்றன்
    காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்” இன்று பாடினானே அதே துணிச்சல் — மரணத்தை துச்சமென நினைத்த திரு வாஜ்பாய் நீடுழி வாழ்க … !!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வாஜ்பாய் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால், இன்று நாம்
      எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் தோன்றியே இருக்காது.

      மீண்டும் ஆக்டிவ்’வாக செயல்பட முடியாது போனாலும் பரவாயில்லை.
      அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டுமென்று வேண்டுவோம்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  7. mani's avatar mani சொல்கிறார்:

    ஆர் கே நகர் வாக்காளர்க\ளில் பெரும்பாலோர் பணம் வாங்கி
    பழக்கப்பட்டுவிட்டார்கள் . வோட்டு என்பது ஜனநாயக கடமை
    என்பது மாறி தீபாவளி போனஸ் மாதிரி ஆகிவிட்டது. எவன் வந்தால்
    எனக்கென்ன குடிக்க காசு வந்துச்சா போன்ற வாக்காளர்கள்
    இருக்கும் தொகுதி அது. HIGHEST BIDDER யாரோ அவரே வெற்றி பெறுவார்.
    இதை நன்கு உணர்ந்த தினகரன் கொடுக்க வேண்டியதை கொடுத்து
    MLA ஆகி விட்டார். . இதே நிலைமை மற்ற 234 தொகுதிகளுக்கும்
    வந்தால் தமிழகம் அதோகதிதான்.

  8. chandramouly.venkatasubramanian's avatar chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    onnume puriyele Tamil nattile ennamo nadakku ,marmama irukkudhu

  9. dumilisai's avatar dumilisai சொல்கிறார்:

    enga EVM sariya velai senjiruntha ,,naanga thaan jeyichiruppom..

  10. subramanian's avatar subramanian சொல்கிறார்:

    ஏதோ ஒரு திறமை – மற்றவர்களிடம் இல்லாத – தினகரனிடம் இருக்கிறது இந்த திறமைசாலிகள்தாம் தமிழகத்திற்கு தலைவர்களாவதற்கு தேவை

  11. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    சுப்ரமணியன்,

    கீழே இருப்பது, இன்று காலை நான் எழுதியிருக்கும் இடுகையில் இருப்பது –

    ————————————
    // ஒரு விஷயத்தை இங்கு சொல்லியே ஆக வேண்டும்….
    அரசியல்வாதிகளுக்கு எந்தெந்த “தகுதி”கள் தேவையோ, அவை அனைத்தையும் மற்ற அனைத்து அரசியல்வாதிகளையும் விட “அதிகமாக” பெற்று “முதல் இடத்தில்” இருக்கும் திருவாளர் தினகரன் இந்த தேர்தலில் ஜெயித்ததில் எந்தவித
    அதிசயமும் இல்லை என்பது தான் நம் கருத்து. //

    ———————————
    இப்போது உங்களுக்காக இன்னும் சில வார்த்தைகளையும் சேர்க்க விரும்புகிறேன்.

    புத்திசாலி, திறமைசாலி, சாமர்த்தியசாலி, கெட்டிக்காரர், அசகாய சூரர் –
    இவையெல்லாம் –

    “நல்லவர்” என்கிற வார்த்தைக்கு ஈடானவை அல்ல…!!!

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  12. Suraj's avatar Suraj சொல்கிறார்:

    Nice Jokes Mr. Swami Ji

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.