ரூ.2000 நோட்டு செல்லாதா ? – வதந்திக்கு வலு சேர்க்கும் மந்திரி…


2000 ரூபாய் நோட்டு கொடுத்தால், பல கடைக்காரர்கள் வாங்க மறுக்கிறார்கள்- முக்கியமாக சிறு கடைகளில்… மளிகைக்கடைகளிலும் கூட…!

இதற்கு காரணம் தொடர்ந்து சில மாதங்களாக பரவி வரும் செய்திகள்…

2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது என்றும், ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட பல கோடி பெறுமானமுள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் சில மாதங்களாக
செய்திகள் பரவி வருகின்றன. அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு செய்தி இதனை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்தது.

கீழ்க்கண்ட செய்தி / தலைப்புகளை பாருங்கள்…
..


..

இந்த செய்திகளின் அடிப்படையில், ஏற்கெனவே 500, 1000 ரூபாய் நோட்டுகள் விஷயத்தில் செய்தது போல், மத்திய அரசு திடீரென்று, எந்த நிமிடமும் 2000 ரூபாய் நோட்டுகளையும் செல்லாததாக அறிவிக்கக்கூடும் என்கிற பயம் காரணமாக, பொது மக்களும், வியாபாரிகளும் தங்கள் கையில் 2000 ரூபாய் நோட்டு சேருவதை தவிர்க்கிறார்கள்.

மத்திய அரசு இது குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிட்டு, பொதுமக்களின், வியாபாரிகளின் – அச்சத்தை போக்கியிருக்க வேண்டும்….அதைச் செய்யவில்லை.

எரிகிற நெருப்பில் இன்னும் எண்ணையை விடுவது போல், குழப்பத்தை தீர்ப்பது போல் பாவலா செய்து, குழப்பத்தை இன்னும் அதிகரித்திருக்கிறார்கள் நேற்றைய அறிவிப்பின் மூலம்.

நேற்று, மத்திய நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி கூறி இருப்பது….(ஆதாரம் – இன்றைய தினமலர் செய்திகள்…)

—————
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாபசா…?
அருண் ஜெட்லி விளக்கம்…
(தினமலர் – 23/12/2017)
—–

2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படும் என்பதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுத்துள்ளார். இது குறித்து அவர் நேற்று கூறுகையில் –

“2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறித்து பலவிதமான யூகங்கள் உலா வருகின்றன. இது போன்ற வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. அவையெல்லாம் தவறானவை.”

———-
வாபஸ் ஆகாது என்று உறுதி அளிக்கா விட்டாலும், அமைச்சர் இத்தோடு நிறுத்தி இருந்தாலாவது பரவாயில்லை. மேலும் தொடர்ந்து கூறுகிறார் –
———–

“இது தொடர்பாக அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் அரசு தரப்பில் அறிவிக்கப்படாத வரையில் மக்கள் இதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.

இதற்கு என்ன அர்த்தம்…?
அரசு “செல்லாது என்று அறிவிக்கும் நேரம் வரை செல்லும்” – அதானே…?

மக்களை அடிமுட்டாள்கள் என்றே மந்திரி நினைத்துக் கொண்டிருக்கிறாரா…? திடீரென்று ஒரு நாள் நள்ளிரவில் பிரதமரோ / நிதியமைச்சரோ தொலைக்காட்சியில் தோன்றி, அந்த அறிவிப்பை வெளியிட மாட்டார்கள் என்பதற்கு மந்திரியிடமிருந்து ஏன் உத்திரவாதம் இல்லை…????

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to ரூ.2000 நோட்டு செல்லாதா ? – வதந்திக்கு வலு சேர்க்கும் மந்திரி…

  1. விடாது கருப்பு's avatar விடாது கருப்பு சொல்கிறார்:

    திருட்டுப்பயலே -2
    எப்போது ரிலீஸ் ஆகும் சார் ?

  2. R KARTHIK's avatar R KARTHIK சொல்கிறார்:

    அடி வாங்கி வாங்கி மரத்துப்போயிடுமோ? பழகிடும்.

    நடக்கட்டும் நடக்கட்டும்.

  3. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    EVM இருக்கச்ச எதப்பத்தியும் என்னத்துக்கு கவல.

  4. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    இது ஒரு மறைமுக அறிவுறுத்தலாக ” அவர்களுக்கு ” இருக்குமாே …? வேறு அன்ராடங்காய்ச்சிகள் இந்த நாேட்டை எங்கேவைத்திருக்கிறார்கள் …வேலை வாய்ப்பு சுருங்கி ஒரு வருடமாகுது … இது பற்றி பயம் காெள்ள வேண்டியவர்கள் ரேஞ்சே வேற ….!

  5. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    (2000 ரூ life) இதற்கு, கள்ளப்பணம் அச்சடிப்பதைத் தவிர்க்கவும், பொதுவாக அச்ச உணர்வு ஏற்படுத்தவும் (அதாவது கேஷ் வைத்திருப்பதை) ரெண்டும் கெட்டான் பதில் சொல்லியிருப்பாரா? இதுபோலவே, இப்போது வங்கிகளில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணத்துக்கும் ஆபத்தாக, சில பல வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

    டிஎன் சேஷன் தன் அதிகாரத்தை வைத்து நல்லது செய்ய முயற்சித்தார். எல்லோரும் அதிகாரத்தை வைத்து நல்லது செய்ய முயற்சித்தால் தேவலை.

  6. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    கனிமாெழி… ராஜாவுக்கு பிரமாண்ட வரவேற்பு … காேபாலபுரத்தில் ” இருவருக்கும் ” விருந்து …! காெண்டாட்டம் …!!

    மாட்டுநேசன் லல்லு …. ஜெயிலு …!

  7. tamil_alagu's avatar tamil_alagu சொல்கிறார்:

    Please ban 2000rs……
    Everybody will welcome!!!!!

  8. BVS's avatar BVS சொல்கிறார்:

    இது ஒரு ஆங்கில இதழில் வந்துள்ள விமரிசனம்:

    If the CBI and its prosecutors fail in the high court to establish criminality in the nexus between the politicians and businessmen, the BJP will have to face some serious questions in the 2019 elections. So far, in every TV debate the BJP has invoked the 2G scam to put down the Congress.

    From here on, Modi’s claim of attacking cronyism will sound evermore hollow. If Judge Saini felt the CBI and its prosecutors were “directionless and diffident”, there must be some reason for it.

    What signals do you send to the investigative agencies if an accused undergoing trial in the 2G case is a promoter of one of India’s largest business groups and is given special permission to travel with the prime minister on a foreign tour? The BJP will have to answer many questions until 2019.

  9. mani's avatar mani சொல்கிறார்:

    When Raja and kanimozhi were acquitted it is because .the charges were not
    proved properly by the prosecutors so benefit of doubt was applied. But nobody can deny the
    money trail of rs 200 crores to kalaignar TV. some big industrial houses who were close to
    both Congress and BJP are involved in the 2G scam that is why all are acquitted. But
    govt agencies should appeal in the higher courts so that true justice prevail. Then only we
    can be sure that BJP Iis really against corruption. Otherwise they will be just like congress
    and their slogan corruptfree india isa mere propaganda material for election. They should
    appeal against the verdict and as Lalu has been convicted now all the conspirators should be
    convicted in 2g case also.

    • BVS's avatar BVS சொல்கிறார்:

      BJP has neither any present Alliance or Future Alliance Plans with Lalu.
      In fact, they are keen that Lalu is punished. So the case has reached its logical conclusion.
      ஆனால், 2ஜி யில்நாம் இப்போது முடிவாக பார்ப்பது, பாஜக திமுகவுடன் வைக்கப்போகும் கூட்டணியின் அச்சாரம். அப்பீல், நிச்சயமாக செய்யப்படும்.
      ஆனால், மீண்டும் இதே போல் ஒரு செல்லாத அப்பீலை போடுவதில்
      பாஜக அரசாங்கத்திற்கு என்ன சிரமம் ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.