…
…
இதுநாள் வரை காங்கிரசை ஆதரித்தோ, குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றோ நான் எங்கும் எழுதியதாக என் நினைவில் இல்லை…ஆனாலும் பல பாஜக நண்பர்கள் நான் அப்படிச் சொன்னதாக நினைக்கிறார்கள்..!!!
யெஸ்… குஜராத்தில் ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெற்றால், பாஜகவின் அகங்காரம், மமதை, ஆட்சியில் தனி மெஜாரிடியுடன் இருக்கிறோம் – என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற திமிரில் நடக்கும் சில வெறிச்செயல்கள் ஆகியவை குறைய வாய்ப்பு இருக்கிறது என்று எழுதி இருந்தேன்.
பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமாகவும், சாதாரண, நடுத்தர மக்களுக்கு விரோதமாகவும் சட்டங்களை உருவாக்குவது மட்டுப்படலாமென்றும் எழுதி இருந்தேன்….
இதில் என்ன தவறு…? பாஜக ஒழிய வேண்டுமென்று நான் சொல்லவில்லை. மெஜாரிடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிக்கு முழு 5 ஆண்டுகளுக்கும் ஆட்சி செய்ய உரிமை உண்டு. ஆனால், அதிகார போதையில் மக்கள்
விரோத செயல்களில் ஈடுபட முற்படும்போது, நாட்டு மக்களின் நலனைக்கருதி, அது ஒரு கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம் என்பது என் கருத்து.அதற்காக பாஜகவை கண்டித்து எழுதினால், நான் காங்கிரஸ்காரன் ஆகி விட மாட்டேன்…. இன்று மட்டுமல்ல – என்றும் நான் நிச்சயம் எந்த கட்சிக்காரனாகவும் ஆக மாட்டேன்.
இந்த விமரிசனம் தளத்தை தொடர்ந்து படித்து வருபவர்கள் எனது இந்த கருத்துகளை அறிவார்கள். இருந்தாலும் –
கடந்த இரண்டு தினங்களாக நான் எழுதிய இடுகைகளுக்கு பெரும் அளவில் பின்னூட்டங்கள்… பல பாஜக அன்பர்கள் மீண்டும் மீண்டும் பலவித சந்தேகங்களை எழுப்புகிறார்கள்…
சாம்பிளுக்கு நண்பர் ராமநாதனின் பின்னூட்டம் ஒன்று கீழே –
—————————-
From Mr.Ramanathan-
KM sounds neutral, but i see he has particular
hatred towards BJP.
Also I read KM suggesting, implicitly, Congress
could have been better from all his posts.
—————————–
நண்பர் ராமநாதனுக்கும், அவர் மூலம் மற்ற நண்பர்களுக்கும் நான் மீண்டும் மீண்டும் சொல்ல விரும்புவது –
நான் சுயேச்சையான எண்ணங்களோடு தான் வாழ விரும்புகிறேன்..
நான் காங்கிரஸ் ஆதரவாளனுமல்ல… பாஜக எதிரியும் அல்ல…!!!
எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்திருந்து, என் சுதந்திரத்தன்மையை நான் ஏன் இழக்க வேண்டும்…?
எந்த கட்சி தேவை, எதை ஆதரித்து ஓட்டுப்போட வேண்டும் – என்பதைப்பற்றி எல்லாம் தேர்தல் சமயத்தில்
தீர்மானித்தால் போதுமானது என்பது என் கருத்து.
மற்ற சமயங்களில், எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்திருந்து, அது செய்யும் தவறுகளுக்கு கூட வக்காலத்து வாங்கும் நிலை நமக்கு ஏன்…? அதெல்லாம் கட்சிக்காரர்களின் தலையெழுத்து…!
எனக்கு தவறு என்று தோன்றுபவற்றை, அது பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி – விமரிசிக்கும் உரிமையை தக்கவைத்துக்கொள்ளவே நான் விரும்புகிறேன். நாளையே மோடிஜியை ஆதரித்து எழுதவோ, ராகுல் காந்தியை
விமரிசிக்கவோ எனக்கு நிச்சயமாக உரிமை உண்டு. நாம் யார்க்கும் அடிமை அல்ல… நமது மனசாட்சியே நமது எஜமானர்.
இதே நிலையைத்தான், நான் மற்ற நண்பர்களுக்கும் பரிந்துரைப்பேன்.
என் நிலையை, ஓரளவு தெளிவுபடுத்தி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.
இருந்தாலும், நண்பர் ராமநாதனுக்கும், இன்னும் சந்தேகம் தெளியாத சில நண்பர்களுக்கும் சேர்த்து –
நான் ஏற்கெனவே “மோடிஜி ஏன் விமரிசிக்கப்படுகிறார்” என்கிற தலைப்பில் எழுதியிருந்த ஒரு இடுகையை இங்கே மறுபதிவு செய்கிறேன். இதுவாவது அவர்களது சந்தேகத்தைப் போக்கும் என்று நம்புகிறேன்….
————————————————————————————————
…
…
” மோடிஜி ஏன் விமரிசிக்கப்படுகிறார்…. ? ”
—————
ஒரு இடுகைக்கான பின்னூட்டத்தில் நண்பர் புதியவன் அவர்கள்
எழுதி இருந்தார்…
// உங்களுடைய இடுகைகளில் மோடியைப் பற்றிய கருத்துக்கள்
பலவற்றை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
‘நன்மையை மட்டும் கருதித்தான் அந்த முடிவை எடுத்திருக்கிறார்’
என்று நான் நம்புவதால்.
காலம்தான் எது சரி எது தவறு என்று காட்டும் என நினைக்கிறேன்.
அதுபோல, சில ‘மதச்சார்பற்ற சம்பந்தமான’ கருத்துக்களையும் நான்
ஏற்றுக்கொள்ளவில்லை. //
———————————————————
————————-
புதியவன்,
உங்கள் பின்னூட்ட கருத்துகளுக்கு நன்றி.
– நாம் எங்கே, ஏன் மாறுபடுகிறோம்
என்பது உங்களுக்கு தெரிகிறதா…?
என் பார்வையில் –
1) மோடிஜியின் முதலும், முக்கியமானதுமான குறிக்கோள்,
” தன்னையும், தன் கட்சியையும் promote செய்வது.
பாஜகவின் ஆதிக்கத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்பது –
அந்த கட்சியில் தன்னுடைய இருப்பை பிரதானமாக்கி
இருத்திக் கொள்வது. ”
இதற்குப் பிறகு தான் –
நாடு, நாட்டின் வளர்ச்சி, மக்களின் முன்னேற்றம்
எல்லாமே…. அதெல்லாம் குறிக்கோள் அல்ல என்று
சொல்ல மாட்டேன் – ஆனால்,
மற்ற எல்லாமே இரண்டாம் பட்சம் தான்.
தன் குறிக்கோளை அடைய அவர் பயன்படுத்திக் கொள்வது,
வளர்ச்சி நிரம்பிய செயல்பாடுகளை /சாதனைகளை என்றால் அதில்
கவலைப்பட அதிகம் இல்லை…
ஆனால், தன் குறிக்கோளை அடைய
அவர் பயன்படுத்திகொள்வது மக்களின் மத உணர்வுகளை…
அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய விஷயங்களை…!
2) பல சமயங்களில் அவர் செயற்கையாக பேசுகிறார்…
தன் உரைகளில் நாடக பாவத்தோடு ஒரு உணர்ச்சி வசப்படுதலை
உருவாக்கிக் கொள்கிறார். இது இயற்கையானது அல்ல.
எதிரே இருப்பவர்களை வசப்படுத்த அவர் பயன்படுத்தும்
ஒரு tactics – தந்திரம்.
ஹிந்தி மொழி தெரிந்த,
ஆனால், பாஜக ஆதரவு நிலையில் இல்லாத –
பொது மனிதர்கள் தொடர்ந்து கவனித்தால்,
இதை புரிந்து கொள்ள முடியும்.
உங்களுக்கு ஹிந்தி தெரியாது என்பதால்,
அவர் உரைகள் எதையும் உங்களால் நேரடியாக புரிந்துகொள்ள
இயலாது என்பதால் – அவரை சரியாக எடைபோடும் திறனில் –
சிறிது குறை இருக்கலாம்.
அவரது வேடத்தை உணர்ந்து கொள்ள முடியாதவர்கள்
( உண்மையில் அவர்கள் தான் மெஜாரிடியினர்…) –
அவரது தேசபக்தியை பாராட்டி, இந்த தேசத்தை உய்விக்க
“வாராது வந்த மாமணி” என்று பரவசம் கொள்வார்கள்.
முந்தாநாள் அவர் குஜராத்தில் ஆற்றிய உரையை நான் live ஆக
பார்த்தேன். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களைப்போல்
மேடையில் நடித்துக் காண்பித்தார்… பேசிக் காண்பித்தார்…
ஒரு முறை அல்ல… இரண்டு முறை.
அதே போல் 26 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்து விட்ட
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் ‘இமிடேட்’ செய்து பேசிக்
காண்பித்தார்.
இரண்டு முன்னாள் பிரதமர்களையும் இவர் மேடையில்
ஏளனப்படுத்தினார்… அவமதித்தார்…
ஒருவரை குறை கூறுவது வேறு…. அவமதிப்பது வேறு..
நீங்கள் இந்த வித்தியாசத்தை நிச்சயம் அறிவீர்கள்…
இந்த நாட்டின் பிரதமர் –
பொது மேடையில் இவ்வாறு நடந்துகொள்வது
மிக மிகக் கேவலமான செயல்.
குஜராத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக,
எத்தகைய கீழ்நிலைக்கும் செல்லும்
அவரது செயலைக்கண்டு –
தீவிர பாஜக/மோடிஜி ஆதரவாளர்களைத் தவிர
மற்ற அனைவரும் அருவருக்கவே செய்வார்கள்.
3) குஜராத் பிரச்சாரத்தில் முந்தாநாள் சொன்னார்…
“நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது எனது பல
திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
காரணம் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை…”
மே 2014-ல் இவர் பிரதமராக பொறுப்பேற்று 15 நாட்களுக்குள்ளாக,
நர்மதா நதியில் சர்தார் சரோவர் அணையின் உயரத்தை
அதிகரித்துக் கொள்ள மத்திய அரசின் அனுமதியை வழங்கினார்.
இதில் நான் தவறு எதையும் காணவில்லை.
ஆனால், பிரதமராக, இவர் தமிழ்நாட்டின் பிரச்சினையில் என்ன செய்தார்…?
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை ஆனால்,
கர்நாடகாவில் வரவிருக்கும் தேர்தலில் அந்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் –
கோர்ட்டில் விஷயம் நிலுவையில் இருப்பதால்
மத்திய அரசு தலையிடுவதற்கில்லை என்று முதலில் சொன்னவர்கள்,
சுப்ரீம் கோர்ட்டே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும்படி
உத்திரவிட்டபோது –
இதில் உத்திரவிட சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை.
அந்த அதிகாரம் பாராளுமன்றத்திற்கு தான் இருக்கிறது என்று சொல்லி
முட்டுக்கட்டை போட்டார்.
-இதில் நியாயம் எங்கே இருக்கிறது…?
நல்ல நோக்கம் எங்கே இருக்கிறது…?
4) நான் – மனிதர்களை படிப்பதை (study of human behaviour )
ஒரு வகை ஆர்வத்துடன், பல வருடங்களாக மேற்கொண்டு
வருகிறேன்.
(இது face reading மாதிரி அல்ல..
வெவ்வேறு இடங்களில்,
வெவ்வேறு
சந்தர்ப்பங்களில்,
வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு மனிதர்களுடன் ஒருவர்
நடந்து கொள்ளும் விதத்தை ஆராய்வது …)
என்னால் இவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை…
இவர் காமராஜரை போலவோ,
லால் பகதூர் சாஸ்திரியை போலவோ
ஒரிஜினல் அல்ல…. இவர் ஒரு “போலி” என்பது என் கருத்து.
தான் உள்ள அளவும்,
டில்லியில் தன் அதிகாரம் கொடிகட்டிப் பறக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் –
அனைத்து மாநிலங்களிலும்
தன் பேச்சை சிரமேற்கொண்டு நிறைவேற்றக்கூடிய மாநில
தலைமைகள் இருக்க வேண்டும் –
இது தான் அவரது விருப்பம், லட்சியம் – குறிக்கோள் எல்லாமே…!
இதற்காக அவர் எந்த நிலைக்கும் போகக்கூடும்…
எதையும் செய்யக்கூடும்…
எப்போதும் அவர் பேசுவதை மட்டுமே பிறர் கேட்க வேண்டும்…
அவரை யாரும் கேள்வி கேட்பதையோ, விவாதத்திற்கு
அழைப்பதையோ விரும்ப மாட்டார் – அனுமதிக்க மாட்டார்.
இதற்கான தந்திரம் – பொதுக்கூட்டங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும்
மட்டுமே பேசுவது… தனிப்பட்ட மீடியா சந்திப்புகளை, பேட்டிகளை
தவிர்ப்பது…! வெளியில் இவ்வளவு பேசும் ஒருவர், கடந்த
மூன்றரை ஆண்டுகளில், பாராளுமன்றத்தில் எவ்வளவு மணி நேரங்கள்
பேசி இருக்கிறார்… எத்தனை தடவை தொலைக்காட்சிகளுக்கோ,
நாளிதழ்களுக்கோ – பேட்டி கொடுத்திருக்கிறார்….?
இவையெல்லாம் எதை நோக்கி இட்டுச்செல்கின்றன…?
சரித்திரத்தை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் –
ஜெர்மனியில் ஃபாசிஸ்ட் இயக்கம் எப்படி வளர்ந்தது என்பதை
பார்த்தால் – சரித்திரம் திரும்புகிறதோ என்கிற உணர்வு
ஏற்படத்தானே செய்யும்…?
இவற்றில் நல்ல நோக்கம் இருக்கிறதா…?
மோடிஜியின் செயல்பாடுகளின் விளைவை நான் கடந்த இரண்டரை
வருடங்களுக்கு மேலாக விமரிசித்து வருகிறேன். அநேகமாக, அந்த
பதிமூன்றரை லட்ச ரூபாய், சுயபெயர் பொறிக்கப்பட்ட கோட்டு, சூட்டை
அவர் பொது நிகழ்ச்சியில் அணிந்துகொண்டதில் துவங்கியதாக
இருக்கலாம்.
500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்ட போது,
நான் இதே தளத்தில் எழுதினேன்… இதன் உண்மையான நோக்கம்
பொதுநலத்திற்காக என்பதை விட …
உத்திர பிரதேச தேர்தல் வருகிறது. பாஜகவின் பணத்தை
பாதுகாத்துக் கொண்டு, எதிர்க்கட்சிகளின்
முதுகெலும்பான பணபலத்தை உடைப்பதற்காக என்று.
துவக்கத்தில் நீங்கள் உட்பட பலர்,
என் விமரிசனங்களை கடுமையாக எதிர்த்தனர்.
ஆனால், காலம் செல்ல செல்ல இப்போது,
அதில் பலர் உண்மையை உணர்ந்து ஒப்புக்கொண்டும்,
வெளிப்படையாக பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் வருகின்றனர்.
உங்கள் பின்னூட்டங்களினூடேயே கூட
சில சமயங்களில் நான் அதைப் பார்க்க முடிகிறது.
எனக்கு மட்டுமல்ல, என்னைப்போன்ற கட்சிசார்பற்ற பலருக்கும் –
இந்த தேசத்தின் வளர்ச்சியும், ஜனநாயகத்தின் தொடர்ச்சியும்,
மக்களின் நிம்மதியான வாழ்வும் தான் முக்கியம்.
அது எந்த கட்சியாக இருந்தாலென்ன…?
எந்த தலைவராக இருந்தாலென்ன…?
யாருடைய சுயநலத்திற்காகவோ –
நாம் ஏன் எவருக்கும், எந்த குறிப்பிட்ட கட்சிக்கும்
அடிமையாக இருக்க வேண்டும்…?
இந்த நாட்டின் நலனில் அக்கறை இருப்பவர்களுக்கு –
தலைவரோ, கட்சியோ – அது யாராக இருந்தாலும்,
எதாக இருந்தாலும் முக்கியம் இல்லை.
நாட்டுக்கு உண்மையாக உழைப்பவர்கள் தான் தேவை.
இந்த நாடு என்பது குஜராத் மட்டுமல்ல….
மத்திய அரசில், தேர்தல் கமிஷன், சிபிஐ, பி.எம்.ஓ. என்று
பல முக்கியமான இடங்களில் குஜராத்தியரை கொண்டு
நிரப்புவது ஏன்…? இது எதைக்குறிக்கிறது…?
இவற்றில் எல்லாம் நீங்கள் சொல்லும்
அந்த “நல்ல நோக்கம்” இருக்கிறதா…?
—————————————————————————–

…
// சில ‘மதச்சார்பற்ற சம்பந்தமான’ கருத்துக்களையும் நான்
ஏற்றுக்கொள்ளவில்லை. //
இதில் என் கருத்து –
” மதங்களுக்கிடையே போர் மூண்டால்
அதற்கு முடிவே இருக்காது….
நாம் கடந்து வந்த பாதையே, சரித்திரமே அதற்கு சான்று…
மதவெறியால் ஏற்படும் கடுமையான விளைவுகளை
ஒன்றுமறியாத அப்பாவி மக்களே அனுபவிக்க நேரிடுகிறது….
எல்லையற்ற துன்பங்களை
பெண்களும், குழந்தைகளும் எதிர்கொள்ள நேரிடுகிறது.
என் பார்வையில்-
” என் மதம் தான் உசத்தி – உன் மதம் மட்டம் ”
என்று சொல்பவர்கள் -ஒன்று மூர்க்கர்கள் அல்லது சுயநலவாதிகள்.
உலகில் அமைதியும், சமாதானமும் நிலவ ஒரே வழி,
அவரவர் சார்ந்த மதங்களில்,
அவரவர் விரும்பும் பாதையில் போக
அனைவரையும் அனுமதிக்க வேண்டும்.
ஆயிரம் மதங்கள் கூட
இங்கு பிணக்கு இல்லாமல் நிச்சயம் வாழ முடியும்.
அதற்கான மனம் இருந்தால் போதும்.
அதற்கு – மக்கள் மனதை விஷமாக்கும் அரசியல்வாதிகளையும்,
மத வெறியர்களையும் தனியே அடையாளம் கண்டு –
ஒதுக்க வேண்டும்… அவர்களை அடக்க வேண்டும்.
மத விஷயங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு,
அது எந்த மதமாக இருந்தாலும் சரி – அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.
மதவாதிகள் என்பவர்கள் –
தங்களது மதம் சார்ந்து செயல்படுபவர்கள்.
வெவ்வேறு மதங்கள் காட்டும் வழியும்,
பயணிக்கும் பாதைகளும் –
வெவ்வேறாக இருந்தாலும் கூட
அனைவருக்கும் சேர்த்து –
இறைவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும்.
அனைவரின் குறிக்கோளும், பயணமும் அவனை நோக்கியே –
என்கிற நிலையில் இருப்பவர்களை ஆன்மிகவாதி என்று சொல்வர்.
நான் இந்து மதத்தை சேர்ந்தவன் தான் …
ஆனால், நான் மதவாதி அல்ல… ஆன்மிகவாதி.
என்னால் எல்லா மதங்களையும்,
எல்லா மதங்களை சேர்ந்தவர்களையும்
நேசிக்க முடியும், முடிகிறது.
எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் பேர் இத்தகைய நிலைக்கு
வருகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு, உலகில் அமைதியும்,
சமாதானமும் நிலவும்.
அவசரமே இல்லை.
நிதானமாக யோசித்துப் பாருங்கள்…அதன் பிறகும்,
நான் சொல்வதில் உங்களுக்கு ஏற்பில்லை என்றால் –
விட்டு விடுங்கள்….. காலம் மாறும்…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்



இது பற்றி பிறகு …. 2 G. வழக்கு அனைவரும் விடுதலை ….! அவ்வளவு தான் ….! ஊ….ஊ….ஊ… மக்கள் பணம் …. ஊ….ஊ….ஊ…. ? இனி துணிச்சலா .. அடிக்லாம் ….?
Superb Sir…
நீங்கள் என்ன தான் தன்னிலை விளக்கம் அளித்தாலும் , எழுதும் வரிகளுக்கு இடையில் , மோடி மீதுள்ள வன்மம் தெரிகிறது , இது என் பார்வை , புரிதல் . ஒரு சாதாரண குடும்பத்தில் உள்ள குழப்பத்தை போக்கவே , என்னவெல்லாமோ செய்ய வேண்டியிருக்கிறது , ஒரு மாநிலம், ஒரு தேசம் – சுற்றிலும் அபாயம், எதிரிகள், குள்ள நரிகள் – இவர்களை எல்லாம் சமாளிக்க சில பல முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது . சில சமயம் சில வேஷம் போட வேண்டியிருக்கலாம் , அதில் ஓன்று அந்த பேர் பதித்த கோட் இருக்கலாம் .
என்ன எழுதினாலும் , அவரும் அவர் குடும்பமும் ஊழல் கறை படியாதவர்கள் . நீங்கள்” நான் அதை பார்க்க மாட்டேன், எனக்கு அதை பற்றின கவலை எனக்கு இல்லை ” என்ற முடிவு எடுக்கலாம் , அது உங்கள் முடிவு ,
அவருடைய சில அமைச்சர்கள் – மின்சாரம், ரயில், பாதுகாப்பு, நெசவு, வெளியுறவு போன்ற துறைகள் நன்றாக செயல் படுகிறது . சில துறைகள் – HRD , science & Tech , Ganga cleaning , Law – மிகவும் மட்டம் . AJ ஒரு மிகப்பெரிய பாரம் ,
கண்ணுக்கெட்டிய தூரம் வரை , மோடி தவிர நல்ல தலைவர்கள் யாரும் தென்படுவதாக தெரியவில்லை ( எனக்கு)…
Today’s news is not all that good – 2G case – have to wait and see as to whats happening .
இது பாேல் நீங்கள் எத்தனை முறை விளக்கம் தந்துள்ளீர்கள் … இதுதேவையா ….? உங்கள் கருததை நீங்கள் கூறுகிறீர்கள் … அதற்கு அவர்கள் ஒரு கூட்டமாக ஓடிவந்து மாய்ந்து… மாய்ந்து விவாதம்செய்கிறார்கள் … சரி அதாேடு மேட்டர் ஓவர் … அப்பறம் எதற்கு இது ….?
உங்களின் இந்த பலவீனமே .. அவர்களின் பலம் என்பது உங்களுக்கு புரியும் …. அதனால்தான் அவர்கள் இங்கே வந்து மாெய்க்கிறார்கள் … ஆநாகரீகமாக பாஜக மற்றும் திரு மாேடி அவர்களைப்பற்றி தினமும் பதிவிடுகிற மற்ற தளங்களின் பக்கம் கூட இவர்கள் செல்லுவதில்லை …சென்றாலும் உங்களைப் பாேல அவர்கள் சுய விளக்கம் அளிப்பதில்லை ….
இதில் வேறு ஏதாே ஒன்று மறைப் பாெருளாக இருக்கிறது …. இவர்களைப் பாேன்றவர்கள் உங்கள் தளத்தில் வந்து ஒரு சார்பு பிரச்சாரம் மேற்க்காெள்ள நீங்களே ” வழியமைத்து ” காெடுக்கிறீர்களாே என்கிற சந்தேகம் எழுகிறது ….
இதையே யாம் நாசுக்காக முன்பாெரு பின்னூட்டத்தில் ஓரு சாெலவடையை உதாரணமாக காட்டியருந்தேன் …. எது எப்படியாே … நல்லதாக நடந்தால் சரி… எம்மீது உங்களுக்கு காேபம் ஏறபடலாம் … யதார்த்தத்தை கூறுவதால் ….
Ok Pranish , Noted your message to KM Sir .
In a way I tried to tell this in this site only as to why Ambani owned TV is hell against Modi…is there some design . The more you get Modi, he does seems to draw people. In fact , if Barka was there in NDTV now, she would have got few more votes to BJP . The more negative publicity , more benefits for Modi.
please read as the more you hate Modi – he does seems to draw people
2 ஜி தீர்ப்பு –
– பாவம் சாதிக் பாஷா … அவசரப்பட்டு விட்டார்…
(அல்லது – அவசரப்பட்டு விட்டார்கள்…??? )
நமது சிபிஐ-யின் செயல்திறன் பற்றிய over-estimation-உம்
அவரது பரிதாப முடிவிற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
– கிழக்கே உதிப்பது சூரியன் தான் என்பதை எப்படி நிரூபிப்பது
என்று இனி அரசு வக்கீல்கள் தெரிந்து கொள்ள வேண்டும்…
– அடுத்ததாக, திருவாளர் கபில் சிபல் அவர்கள் டெல்லி உயர்நீதிமன்ற
நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும்… அப்பீலில் வருமே..!
– “ஜீரோ லாஸ்” தியரியை காங்கிரஸ்காரர்களே நம்ப மாட்டார்கள்.
உள்ளுக்குள் அவர்களுக்கே இந்த தீர்ப்பு ஆச்சரியத்தை உண்டு பண்ணக்கூடும்.
இருந்தாலும், இதைக்கொண்டாடி மகிழ்வார்கள் – கூட்டணி தர்மம்…!!!
( பிற்பாடு இதற்காக வருந்தவும் கூடும் …!!!)
– இனியொரு 10 வருடங்களுக்கு இந்த வழக்கைப்பற்றி திமுக கவலைப்பட
வேண்டியதில்லை…. அதற்குப் பிறகும் சுப்ரீம் கோர்ட்டில் இன்னுமொரு
10 வருடங்கள் கால அவகாசம் கிடைக்கும் – எனவே இதைப்பற்றிய
கவலையை சுத்தமாக விட்டு விடலாம்….
கடைசியாக –
இந்த தீர்ப்பு வந்ததற்கான பின்னணியும், இதன் பின்னர் நிகழக்கூடிய முக்கியமான விளைவு ஒன்றைப் பற்றியும் எனக்குள் ஒரு கருத்து தோன்றுகிறது…
மிக முக்கியமான கருத்து… தமிழக அரசியலை சுத்தமாக மாற்றக்கூடிய விஷயம்.
ஆனால், அது என்னுடைய யூகம் மட்டுமே. அதற்கான எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை….இப்போதைக்கு நான் அதை வெளிப்பட சொல்ல விரும்பவில்லை….
பொறுத்து பார்ப்போம்….
நண்பர்கள் அதை யூகிக்க முடிந்தால், பின்னூட்டத்தில் சொல்ல விரும்பினால் –
தாராளமாகச் சொல்லலாம்.
(ஆனால், எதை எழுதினாலும், நீதிமன்றத்தையோ, அதன் தீர்ப்பையோ
அவமதிக்கும் வண்ணம் எதையும் இங்கு எழுதக்கூடாது என்பதை தயவுசெய்து
கருத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்..)
மதவெறியால் ஏற்படும் கடுமையான விளைவுகளை
ஒன்றுமறியாத அப்பாவி மக்களே அனுபவிக்க நேரிடுகிறது
உண்மை சார்.
Yes agree with you!
I remember during earlier parliment election, congress hired Manish tiwari, and what he was doing was to comment negatively on whatever modi says.
But what happened finally it gave modi extra ordinary publicity, and his name reached through out india.
Now recent gujarat elections manishakar iyer helped modi using his negative comments.
So i dont know who will help modi for the next parlimentary elections.
But defenetly congress will hire some guy for this to help modi, lets wait & watch.
So sincerely i request you all, if you hate him, please dont use his name for anything
BJP is wrong is the right statement, rather than saying MODI is wrong.
Dont draw publicity to him.
If you say MODI, MODI then his vote count will increase…….
நானும் எந்த கட்சியின் ஆதரவாளன் அல்ல. எந்த கட்சிக்கும் இது நாள் வரை என் வாழ் நாளில் கோசமோ கொடியோ பிடித்ததும் இல்லை.
ஆனால்,
பாஜகவின் மீது குறிப்பாக மோடி மீது அவர் தன் நடவடிக்கைகள் மீது கூட்டி கழித்து பார்த்தால் மற்ற அனைத்து தலைவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்திரா காந்தியை விடவும் படு மோசமானவராகவும் பயங்கரமானவராகவும் பொய்யராகவும் தான் தெரிகிறார்/கிறது.
காங்கிரஸ் ஊழல் செய்திருக்கின்றது. இந்திராவின் படுகொலையின் போது அட்டூழியம் செய்திருக்கின்றது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், பாஜகவின் காலங்களில் குறிப்பாக இப்போது நடக்கும் ஆட்சியின்
மீது நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் பீதி காங்கிரஸ் காலங்களில் நிச்சயம் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.
இதற்காகவே இந்த ஆட்சி போக வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஊழல் கிடக்கு கழுத. அதனால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் தான். ஆனால் நாட்டில் அமைதியான சூழல் நிலவவில்லை என்றால் ஊழலை காரணம் காண்பித்து அமைதியின்மையை ஏற்றுக் கொள்ள முடியுமா?
இன்று வெளிவந்த 2ஜி தீர்ப்பு சம்பந்தமாக ஜெட்லியின் கருத்து எனக்கு 2002 குஜராத் படுகொலையின் போது மோடி மீதான வழக்கின் தீர்ப்போடு ஒப்பிட்டுப் பார்க்க தோனுகிறது.
//2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு காங்கிரஸ் கூட்டணி அரசின் நேர்மைக்கான சான்று அல்ல என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். //
இந்த கருத்து அவர் கருத்து மட்டும் அல்ல. இது பாஜகவின் கருத்தும் கூட.
எனில்,
மோடியை அமித் ஷாவை விடுவித்த தீர்ப்போடு ஒப்பிட்டு அவர்கள் உத்தமர்கள் இல்லை என்று அவரும் பாஜக ஆதரவாளர்களும் அறிவிப்பார்களா…..?
Mr. Elango , You are entitled for your opinion – linking supreme court judgement with a trial court acquittal. But look who is saying , AJ is saying this, his walking friend Mukul Rustogi was a corporate lawyer , and he is the AG of the Govt , who hails this 2 G judgement . There is a equation between AJ and Mukul – and the special public prosecutor is Anand Grover – who is the husband of Indirani Jaisingh – who is a known Modi biter ( hater ) – Anand Grover is the person who knocked the supreme court’s door at the mid night to get the hanging stopped for Yakup Memon, Now 2G judge says , the case was not supported with evidence and arguments ( by Rustogi, Anand ) – We don’t know why Ravishankar Prasad kept quiet . So there is a strong web which we don’t understand – at least I don’t understand . If some one clarifies it would be great.
But Subramanya swami will not leave it – watch the fun.
‘Mr. Elango……?’
அவர் மீது உங்களுக்கு ஒரு கிலி ஏற்பட்டிருக்கு அப்படித் தானே.
இதிலிருந்தே நீங்கள் எதையும் சரியாக கவனிப்பவரல்ல என்று புரிகிறது. சரியாக பாருங்கள் யார் சொல்லியிருக்கா என்று.
You are absolutely a right example for “a blind bakht”. Keep it up.
மேலும், ஏன் திரும்பவும் இங்கிலிபீஸு….! இனி இந்த இங்கிலிபீஸுல தொடர்ந்தால் கண்டுக்கப்போறதில்லை.
சுந்தர்,
கடைசியாக ஒரு கேள்வி.
2002 குஜராத் படுகொலை மோடி சம்பந்தமான தீர்ப்புக்கு எதிராக அரசு மேல் முறையீட்டுக்கு ஏன் செல்லவில்லை.
இப்படியும் ஒரு கேள்வி எழுகிறது.
குஜராத்தில் பாஜக அல்லாத மாற்று அரசு வந்தால் ஒரு வேலை அப்பீலுக்கு போனாலும் போகலாம் என்று தான் உம்ம தலைவரு இந்த தேர்தல்ல அழது புலம்பியதோ.
யார் கண்டா……!
Also I saw Jagan Reddy along with Raja in the supreme court – or is it some one else?
2 G. வழக்கு …! கற்பனை …?
ஒரு கற்பனைக்கா இவ்வளவு மக்களின்
பணத்தைசெலவழித்து இவர்கள் எல்லாம் சம்பளம் வாங்கிகிட்டு இருந்தார்கள் …? இதை கூறவா இத்தனை ஆண்டுகள் …? சந்தி சிரிக்கும் … சனநாயகம் …? ….
இனி திமுக வுக்கு இரண்டு சான்ஸ் ….!! எதன் மீது சவாரி என்பது காலம் கூறும் …. இருந்தாலும் இதுவரை அனுபவித்த சவாரி பாேல மற்றதும் இருக்குமா என்கிற குழப்பம் ஏற்பட்டே தீரும் …. என்ன இருந்தாலும் முரசாெலி மாறனின் சாமர்த்தியம் வருமா … அப்பாேதைய பாஜக ஆட்சியில் இலாக்கா இல்லாத மந்திரியாக இருந்தவராச்சே ….!
பாவய்யா … மக்கள் ….? எம்மீது பகவானும் பரிதாபப்பட மாட்டேங்குறாரே … !!!
இன்று குஜராத் தேர்தல் முடிவை வைத்து மோடி மற்றும் பாஜக வை தோலுரிக்கும் போராளிகள் ஹிமாச்சல் தேர்தல் முடிவை பற்றி பேச மறுப்பது அல்லது மறந்த மாதிரி இருப்பது எந்தவிதமான நியாயம் என்று தெரியவில்லை.
மோடியின் மீதான எதிர்பார்ப்புகள் தொடர்ந்து ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும் பாஸிஸ்ட்டுகளுடனும் நாஜிக்களுடனும் ஒப்பிடும் அளவிற்கு இந்திய ஜனநாயக கட்டமைப்புகள் தகர்ந்துவிடவில்லை. நடுநிலையாளர்கள் கூறுவது போல் ஒரு 5 ஆண்டு காலத்திற்குள் இந்திய ஜனநாயக கட்டமைப்பை தகர்த்து ஒற்றை சர்வாதிகரத்தை மோடி நிலைநிறுத்திவிடுவார் என்பதெல்லாம் சற்று அதிகம்.
மோடியின் மீதான அவரது செயல்கள் மீதான விமர்சனங்கள் பிறரின் செயல்களில் உள்ள குறைகளை பார்க்க விடாமல் செய்துவிடுகிறது
அதனால் தான் டீக்கடைகாரர் என்றும் மரணவியாபாரி என்று நீசத்தனமானவர் என்றும் வர்ணித்தவர்களெல்லாம் இன்று புனிதர்களாகிவிட்டனர்.
விமர்சகர்களின் பார்மாவையில் ஹிமாச்சல் வெற்றி இருட்டடிப்பு செய்யப்பட்டதேன் என்று புரியாத புதிராகவே இருக்கிறது…..
என்ன இருந்தாலும் … கலைஞருக்கும் , அவரை சார்ந்வர்களுக்கும் ஒரு ” ராசி ” இருக்கிறது … எந்த ஒரு வழக்கு., கமிஷன் பாேன்றவைகளில் தண்டனை பெறாமல் தப்பிவிடுவதில் …
சர்க்காரியா…ஜெயின் கமிஷனாகட்டும் , தா.கிருஷ்ணன் , அண்ணாநகர் ரமேஷ் , சாதிக்பாட்சா , மதுரை லீலாவதி பாேன்றவர்களின் காெலை வழக்குகளிலாகட்டும் தண்டனை இன்றி விடுவிக்கப்பட்டதும் ஒரு சில உதாரணங்கள் ….
இந்த 2 G. வழக்கு மூலம் மக்களுக்கு நிறைய நபர்கள் நீரா ராடியா, ஜெகத் காஸ்பர், பர்கத் பாேன்ற பெயர்களும் … பல கம்பெனிகளின் பெயர்களும் அத்துபடி ஆனதுதான் மிச்சம் … இவைகளைவிட ” ஒரு லட்சத்து எழுபத்திஐய்தாயிரம் காேடிக்கு ” எத்தனை பூஜ்யம் என்பதையும்தெரிந்துக் காெள்ள ஒரு வாய்ப்பை தந்த ஊழலுக்கு ஒரு வணக்கம் …. என்ன ஒரு வருத்தம் என்றால் நமக்கில்லை விசாரித்தவருக்கு … ஏழு வருடங்களில் ஒரு சாட்சிக்கூட வரவில்லை என்று அங்கலாய்த்தாரே அது தான் … உச்சம் …!
மங்களம்… சுப மங்களம் … !!!
அது ‘ராசி’ இல்லை பிரனீஷ். சாமர்த்தியம்.
டாக்டர் ராமதாஸ் வெகுண்டெழுந்துள்ளதை கவனித்தீரா. விஞ்ஞான முறைப்படி நடந்துள்ளது. அது அவர்களுக்கே உரிய தொழில் நுட்பம்.
பாவம் மன்னார்குடி குடும்பம், தத்தக்கா பித்தக்காவென்று… அடிக்க தெரிந்தவர்களுக்கு தப்பிக்க தெரியவேணாம். கோபாலபுரத்தில் போய் பாடம் கற்றுக்கொள்ளுங்களப்பா.
சுந்தர்ராமன்,
// Subramanian Swamy on twitter
Govt must prove its bonafides by filing an immediate appeal in High Court
5:39 AM 21 – Dec 2017 //
பாஜகவில் மோடி மற்றும் அமித்ஷா அருகில் இருந்துகொண்டு எல்லா நாசகார அநியாங்களையும் அட்டூழியங்களையும் தெரிந்துகொண்டே இதை கேட்கிறாரே வேடிக்கையாயில்லை.
நாமும் கேட்கிறோம், அரசு கண்டிப்பாக அப்பீல் போகணும் என்று. மேலும் கேட்கிறோம், 2002 படுகொலைகள் சம்பந்தமான மோடி மற்றும் அமித்ஷா வழக்குகளிலும் அப்பீல் போகணும் என்று.
மேலும், சுந்தரு,
‘சுசு’ சொல்வதைப் பார்த்தால் தீர்ப்புகள் இப்படித்தான் பெறப்படுகிறதோ? சுசுவுக்கே வெளிச்சம்.
எல்லாம் கூட்டுக் களவாணிகள். நீ இத கண்டுக்காத நான் அத கண்டுக்க மாட்டேன் என்று, ‘poitical/poilticians fixing?’
என்னா வாய் ஜாலங்கள். சாரி, அது இருந்தால் தான் அரசியல் பொழப்பே பண்ணமுடியும். இதில் பொது மக்கள் தான் உண்மையில் பாவம், தேவதூதன் வந்துவிட்டான் நம்மையெல்லாம் உய்வித்துவிடுவான் என்று. ஆனால், அந்த நம்பிக்கை தான் அப்பாவி பொது ஜனங்களை வாழவைத்துக் கொண்டிருகின்றது.
இன்றில்லா விடில் நாளையாவது பதில் சொல்லியாகனும் சுந்தரு, கடவுள் இருக்கான்.
Thanks for your post response.
in most of the cases you had put forward, you have given your opinion. absolutely welcome. others may have theirs. for instance, demonetisation.
He tried many things for TN, but separatist groups in TN did not allow. for eg. Neduvasal, Nutrino Research etc. Whatever stand DMK took, they backed off. Modi is pushing because of its good for TN.
Agreed, it is all perception, since there is no first/second person view. It is all third person view.
Please review your recent 25 articles and you have been critical of Modi and not of Rahul. you may be critical of Rahul too, but it is not showing up in your posts. This is usual in main stream media
Mainstream media has always been soft. For instance,
http://www.moneycontrol.com/news/india/every-city-in-bengaluru-another-gaffe-as-rahul-gandhi-inaugurates-indira-canteens-2360999.html
I doubt if it is gaffe. This guy may not even know if Bangalore is city or State. He neither knows History of India nor does understand Geography of India. Least to expect of him on other disciplines on Governance, Science, Foreign Policy etc.
Lastly, people expected too much from CBI on 2G. BJP may align with DMK for political survival in TN against its supporters wish. I hope people don’t develop too much expectations.
We can only wish, things will be under control and not let loose like in congress rule. Congress failed in foreign pollicy, defending country and brazenly encouraging corruption. BJP atleast doing well in foreign policy and defending country. Corruption, may be there, not visible till now. I believe corruption is not there in BJP rule.
ராமநாதன்,
நீங்கள் எழுதும் முதல் பின்னூட்டத்தை பார்த்து விட்டு, நீங்கள் என் இடுகைகளை புதிதாக படிப்பவரோ, இதுவரை நான் எழுதியது
எல்லாம் தெரியாதோ என்று நினைத்து தான் இவ்வளவு விவரமாக எழுதினேன்.
நீங்கள் யாரென்று இப்போது தான் புரிகிறது. தீவிர பாஜக ஆதரவாளர் என்பது முன்பே தெரிந்திருந்தால், ஏற்கெனவே என் இடுகைகளை எல்லாம் படித்து வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்திருந்தால், நான் இவ்வளவு நேரத்தை உங்களுக்காக செலவழித்திருக்க மாட்டேன்.
கருங்கல் சுவற்றில் முட்டினால் மண்டை தான் உடையும். தீவிர கட்சி வெறியில் இருப்பவர்களை convince செய்யும் முயற்சி
எனக்கு எதற்கு…?
இருந்தாலும், உங்கள் பின்னூட்டத்தில் எழுப்பியிருந்த சிலவற்றுக்கு மட்டும் இங்கே விளக்கம் அளிக்கிறேன்.
He tried many things for TN, but separatist groups in TN did not allow.
– நான் கேட்டது காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்பட்டது ஏன் என்று.. நீங்கள் சொல்வது நெடுவாசல் பற்றி….
Please review your recent 25 articles and you have been critical of Modi and not of Rahul.
ஆட்சியில் இருப்பது யார்…? மத்தியில் மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வருவது யார்…? நிறைவேற்றுவது யார்..? டிமானடைசேஷனுக்கு யார் பொறுப்பு…?
– ராகுல்காந்தியைப்பற்றி எழுதவில்லையே என்று கேட்கிறீர்கள்…? அவரா இதற்கெல்லாம் பொறுப்பு…?
Lastly, people expected too much from CBI on 2G.
– இப்படி நீங்கள் எழுதுவதே அபத்தமாக இல்லை…? மக்கள் அல்ல …. சிபிஐ கோர்ட் நீதிபதியே கூறுகிறார் – miserably failed – என்று…
BJP may align with DMK for political survival in TN against its supporters wish.
– ” பாஜக ஆதரவாளர்கள் விரும்பாவிட்டாலும் கூட பிழைப்புக்காக பாஜக திமுகவுடன் கூட்டு சேரும்” என்று சொல்கிறீர்களே -இதைவிட மானங்கெட்ட பிழைப்பு என்ன இருக்கிறது…?
இந்த லட்சணத்தில் பாஜக ஆதரவாளர் என்று காட்டிக்கொள்ள உங்களுக்கு அவமானமாக இல்லை…?
-காவிரிமைந்தன்
அய்யா…நான் தங்களில் மீண்டும் ஒரு ‘சோ’ அவர்களை காண்கிறேன்.
ஸ்ரீநிவாச முருகேசன்,
உங்கள் அன்புக்கு நன்றி.
ஆனால், அவருடன் என்னை ஒப்பிடுவது இமயமலையையும், பரங்கிமலையையும் – ஒப்பிடுவது போன்றது.
என் உயரம் நான் அறிவேன். நான் இந்த புகழ்ச்சிக்கு தகுதியற்றவன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்