திமுக + பாஜக புதிய கூட்டணி வருகிறதா…?


இன்று வெளியாகியுள்ள தீர்ப்பிலிருந்து சில பகுதிகள் –

“I have absolutely no hesitation in holding that
prosecution has miserably failed to prove any charge
against any accused,”

 

 

 

7 வருடங்களாக நடந்து வரும் இந்த வழக்கின் துவக்கத்தில்
ஆர்வம் காட்டிய சிபிஐ – வழக்கின் பிற்பகுதியில், முக்கியமாக
இறுதி கட்டத்தில் குற்றச்சாட்டுகளை முன்னெடுத்துச் செல்வதிலும்,
சாட்சியங்களையும், வாதங்களையும் முன் நிறுத்துவதிலும்
கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை என்று நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் சுட்டிக்காட்டுகிறார்….

வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிப்பதற்கான முக்கிய காரணமாக,
அவர் சொல்வது – குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில் CBI ஆர்வம் காட்டவில்லை……
” has miserably failed “…. என்பது தான்….

இந்த miserable failure -க்கு காரணம் என்ன…?

அதன் அரசியல் தலைமையின் வழிகாட்டுதல், உத்திரவு இன்றி –
சிபிஐ – தானாகவே அலட்சியம் காட்ட வாய்ப்பிருக்கிறதா….. ?

அரசியல் தலைமைக்கு அதற்கான நோக்கம் எதுவும் இருக்கிறதா…?

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

..

..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to திமுக + பாஜக புதிய கூட்டணி வருகிறதா…?

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    போன இடுகையில் சுந்தர்ராமனுகு இட்ட பதிலை இங்கும் இடுகிறேன், இங்கும் இது பொருந்துவதால்….

    சுந்தர்ராமன்,

    // Subramanian Swamy‏ on twitter

    Govt must prove its bonafides by filing an immediate appeal in High Court
    5:39 AM 21 – Dec 2017 //

    பாஜகவில் மோடி மற்றும் அமித்ஷா அருகில் இருந்துகொண்டு எல்லா நாசகார அநியாங்களையும் அட்டூழியங்களையும் தெரிந்துகொண்டே இதை கேட்கிறாரே வேடிக்கையாயில்லை.

    நாமும் கேட்கிறோம், அரசு கண்டிப்பாக அப்பீல் போகணும் என்று. மேலும் கேட்கிறோம், 2002 படுகொலைகள் சம்பந்தமான மோடி மற்றும் அமித்ஷா வழக்குகளிலும் அப்பீல் போகணும் என்று.
    மறுமொழி

    மேலும், சுந்தரு,

    ‘சுசு’ சொல்வதைப் பார்த்தால் தீர்ப்புகள் இப்படித்தான் பெறப்படுகிறதோ? சுசுவுக்கே வெளிச்சம்.

    எல்லாம் கூட்டுக் களவாணிகள். நீ இத கண்டுக்காத நான் அத கண்டுக்க மாட்டேன் என்று, ‘poitical/poilticians fixing?’

    என்னா வாய் ஜாலங்கள். சாரி, அது இருந்தால் தான் அரசியல் பொழப்பே பண்ணமுடியும். இதில் பொது மக்கள் தான் உண்மையில் பாவம், தேவதூதன் வந்துவிட்டான் நம்மையெல்லாம் உய்வித்துவிடுவான் என்று. ஆனால், அந்த நம்பிக்கை தான் அப்பாவி பொது ஜனங்களை வாழவைத்துக் கொண்டிருகின்றது.

    இன்றில்லா விடில் நாளையாவது பதில் சொல்லியாகனும் சுந்தரு, கடவுள் இருக்கான்.

  2. Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

    அறிவழகு அவர்களே , ( பேர் சரிதானே) , – நான் கிட்டத்தட்ட ஒரு வருஷம் முன்பே , அருண் ஜெட்லீ பற்றி நிறைய தடவை இந்த பதிவிலேயே எழுதியிருக்கிறேன், அவர் ஒரு பெரிய சுமை , ஆனால் டெல்லியில் நிறய ஆட்களுடன் உறவில் உள்ளவர் ( ப. சிதம்பரம் உள்பட ) .

    நாம் இன்னுமும் ,- 2G வழக்கின் தீர்ப்பை அப்பீல் செய்வார்கள் என்று நம்புகிறேன் . மோடி விழித்து கொள்வார் என நம்புகிறேன் ( அப்படின்னா தூங்கினாரா – என்ற உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது ) .

    நீங்கள் இன்னமும் குஜராத் சம்பவங்களை – பற்றியே பேசி பேசி – எங்கோ போகிறீர்கள் . எனக்கு இதை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை . அதை பற்றி தனியே – தொடக்கத்தில் இருந்து பேசினால் , நானும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் ,ஆனால் அதற்கான தளம் இது இல்லை , நேரமும் இது இல்லை .

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      சுந்தர் ராமன்,

      தொடக்கத்தில் இருந்து பேசுவதற்கு நீங்கள் அதாவது பாஜக ஆட்கள் யாரும் சரியானவர்கள் இல்லை. நீங்கள் கூட கேட்கின்ற கேள்விக்கோ ஒரு இடுகையின் கருவுக்கோ நின்று பதில் சொல்பவர் இல்லை. இந்த தளத்தில் கூட எத்தனை தடவை கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஓடி இருக்கிறீர்கள். அது உங்களுக்கு எல்லாம் அடிப்படை பாடமாக இருக்கலாம்.

      நான் கேட்ட கேள்விக்கு கூட எப்படி திசை திருப்புகிறீர்கள் பார்த்தீர்களா.

      அருன் ஜெட்லி சொன்னதை வைத்து, 2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதனால் மட்டும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊழல் செய்யவில்லை என்றாகாது என்ற அவரின் கருத்தை வைத்து, மோடியும் அமித் ஷாவும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதனால் அவர்கள் அந்த குற்றங்களை செய்யவில்லை என்றாகாது, ஆகவே அப்பீல் போவார்களா என்று கேட்டேன்.

      வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டதை வைத்து தானே ஐயா மோடியை இந்த உயரத்தில் கொண்டு வைக்க முடிந்தது. அது மட்டுமல்ல இன்னும் பல பொய் பிரச்சாரங்களும் கட்டமைப்புகளும் கூட தான்.

      ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள், அருன் ஜெட்லியை வசைபாடுவதை தவிர்த்து.

      உங்களிடம் விவாதம் வைக்கனும்….ம்.

      காற்றடித்து கோபுரத்தில் ஒட்டிய சருகு போல நீங்கள் எல்லாம் ஒட்டி இருக்கிறீர்கள். அது சருகு தான் என்று மக்கள் எல்லோரும் அறிய ஆரம்பித்தது விட்டார்கள். கூடிய சீக்கிரம்
      அதே மக்களால் துடைத்து எறியப்படுவீர்கள்.

  3. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    I could see the slow and half minded acceptance of reality(still with reluctance) from
    Mr.Sundararaman.

  4. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    சிபிஐ பல வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான முக்கியமான காரணம், சிபிஐ விசாரிக்கும் எந்த வழக்கிலும், சிறு சிறு முன்னேற்றங்கள் கூட ஆவணங்களாக பதிவு செய்யப்படும்…. ஆனால் இந்த வழக்கில்….??? ஒரு முறை சட்டசபையில் ஜெயலலிதா சிபிஐ ஒன்றும் வானத்தில் இருந்து வந்ததில்லை … அதிலும் மனிதர்கள் தான் பணியில் இருக்கிறார்கள் என்றார் … உண்மை …. !!
    என்ன தமிழ்நாட்டில் பாஜக ” சவாரி ” செய்ய இரண்டு குதிரைகள் ரெடி….? எதில் ஏறி பவணி என்பதை காலம் தான் …கூறும் …!!!

  5. NS Raman's avatar NS Raman சொல்கிறார்:

    2G case is a big chance for BJP. against Congress. For DMK alliances for 40 seats why BJP should miss the big chance. So I don’t see any logic on your topic.

    CBI may be good in criminal case investigation. In the recent past Arushi case big blow to CBI.

    2G case is a complicated economic crime. You need a different investigation approach and involvement of forensic auditor than a regular police officer.
    Also understanding and approach methodology of trail court and sc judges are entirely different in this complicated case.

    In nut shell BJP lost a good opportunity against Congress and also fight against. Corruption.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.