…
…
(big defaulter companies ) பெரிய கம்பெனிகளுக்கான, கடன்கள் எதுவும்
தள்ளுபடி செய்யப்படவில்லை என்கிற நிதியமைச்சரின் அறிவிப்பை –
கேள்வி கேட்கிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி.
விவரமாக, கீழ்க்கண்ட புள்ளி விவரங்களுடன் நிதியமைச்சரின்
கூற்றை மறுத்திருக்கிறார் திரு.அபிஷேக் மனு சிங்வி….
பாஜக அரசு ஏற்கெனவே கீழ்க்கண்ட கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது….
2014-15 -ல் ரூபாய் 49,018 கோடிகள்…
2015-16-ல் ரூபாய் 57,586 கோடிகள்…
2016-17 -ல் ரூபாய் 81,683 கோடிகள் ..
ஆக மொத்தம் ரூபாய் 1,88,287 கோடிகள்…
இதற்கான ஆதாரங்கள் பொது தளத்தில் ஏற்கெனவே இருக்கிறது. இந்த நிலையில் எந்த கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கூறி நிதியமைச்சர் யாரை முட்டாளாக்கப் பார்க்கிறார்…? என்று கேட்கிறார் சிங்வி.
50 “டாப்” கார்பரேட் கம்பெனிகள் சேர்ந்து ஒட்டுமொத்தமாக
8.35 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனாக (NPA) பாக்கி வைத்திருக்கின்றன.
இதில் 3 குஜராத் கம்பெனிகளான –
ரிலையன்ஸ் (அனில் அம்பானி),
அடானி மற்றும் எஸ்ஸார் ஆகியவை
மட்டுமே 3 லட்சம் கோடிகள் பாக்கி வைத்திருக்கின்றன.

…
மேற்கண்ட 3 கம்பெனிகளில் டெலிகாம் துறையில் ஈடுபட்டிருக்கும்
ஒரு கம்பெனி, தன் மீது 45,000 கோடி கடன் பாக்கி இருக்கும்
நிலையிலேயே, நஷ்டத்தில் நடக்கும் தங்கள் டெலிகாம் வர்த்தகத்தை
மூடப்போவதாக அறிவித்திருக்கிறது.
இந்த கம்பெனிக்கு தான், பாஜக அரசு ராணுவ சாதன உற்பத்திக்கான
30,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள புதிய காண்டிராக்டுகளை கொடுக்க
உத்தேசித்திருக்கிறது.
45,000 கோடி வாராக்கடனை வைத்து விட்டு, வியாபாரத்தை மூடும்
ஒரு நிறுவனத்திற்கும் 30,000 கோடிக்கு புதிய காண்டிராக்டுகளை
பாஜக அரசு கொடுக்க முன் வருவதை எந்த அடிப்படையில் நியாயப்படுத்த முடியும்…???
நிதியமைச்சர், இந்த குற்றச்சாட்டுகளுக்கான உரிய விளக்கத்தை கொடுத்து மக்கள் மனதில் எழும் சந்தேகங்களை தீர்ப்பாராக…!
அதையும்,
நம்புகிற மாதிரியான,
நிஜ விவரங்களாக கொடுத்து தீர்ப்பாராக…!!!



Anil Ambani group to file Rs 5,000 crore defamation suit against Abhishek Singhvi https://m.economictimes.com/comment/61868385.cms …..ராேஷக்காரர்கள் …?
இந்திய அரசு நிறுவனமான ஹெச்ஏஎல் ( Hindustan Aeronautics Limited ) – ஐ கூட்டு
சேர்த்துக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டிய போர் விமானத்தின்
தயாரிப்புகளில், அரசு நிறுவனத்தை ஒதுக்கி விட்டு, அம்பானி நிறுவனம்
கூட்டு சேருகிறது. அடிமை மீடியாக்கள் கை கட்டி, வாய் பொத்தி – கழிசடைகளாகி
நிற்கின்றன. எது எதற்கோ கிழியும் அர்னாபின் வாய் இதற்கு மட்டும் அடைத்துப்போய் விட்டது. மீடியாக்கள் விலைக்கு வாங்கப்படுகின்றன அல்லது
பயமுறுத்தப்படுகின்றன. எத்தனை நாட்கள் நீடிக்கப்போகிறது இந்த நிலை ?
https://economictimes.indiatimes.com/industry/auto/news/nissan-sues-india-over-outstanding-dues-seeks-over-770-mln/articleshow/61875710.cms
Who will be held responsible for this legal suit.
Sridhar,
The news report is not sufficient enough to understand the matter fully.
As such I am unable to make any comments on that.
-with best wishes,
Kavirimainthan
//பாஜக அரசு ராணுவ சாதன உற்பத்திக்கான
30,000 ரூபாய் பெறுமானமுள்ள //
என்று இருக்கு. 30,000 கோடி என்று வரனும், சரி செய்து விடுங்களய்யா. இரண்டாவதில் சரியாக இருக்கு.
நன்றி அறிவழகு.
சரி செய்தாகி விட்டது.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Very strange!! After reading your article, there appeared below three “related articles’ earlier by you, describing Abhishek Manu Singhvi as a ‘liar’ and a congress ‘fraud lawyer’. These computers are really mischievous nowadays!!
முத்துசெல்வம்,
பாவம்… கம்ப்யூட்டர் என்ன செய்யும்… அதற்கென்று ஆக்கப்பட்டுள்ள
ப்ரோகிராம் படி அது செயல்படுகிறது…
by the by – இந்த இடுகை காரணமாக, நான் அபிஷேக் சிங்வி குறித்து முன்னதாக கூறியுள்ள விஷயங்கள் எதுவும் மாறவே இல்லை. அவரைப்பற்றிய நமது எடைபோடலும் அதே பார்வையில் தான் தொடர்கிறது.
இந்த இடுகையில், நான் சொல்வதற்கு அடிப்படையாக எடுத்துக்கொண்டது
புள்ளி விவரங்களை மட்டும் தான். அது யார் மூலம் வந்தாலும் சரியான
விவரங்கள் தான்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்