இவர்களுக்குத்தான் எவ்வளவு இயல்பாக – இசை வசப்படுகிறது …!!!


திரு.இளையராஜா அவர்களும், திரு.வாலி அவர்களும் – சேர்ந்து
உரையாடிக்கொண்டே உருவாக்கிய ஒரு பாடல் “காற்றில் வரும்
கீதமே “… சில வருடங்களுக்கு முன்னர் திரையில் இந்த பாடல்
காட்சியை பார்த்தபோதே (ஒரு நாள், ஒரு கனவு.. ) மிகவும் உணர்வு பூர்வமாக, அற்புதமாக இருந்தது. அது உருவாகிய விதம் பற்றிய ஒரு ஆடியோ-வீடியோ இப்போது கிடைத்தது. கீழே –

இப்படி உருவான இந்த இனிமையான பாடல், திரையில் எப்படி
வந்தது என்பதையும் காண வேண்டாமா…?

இந்த அற்புதமான இசை அனுபவத்தை நமக்கு கொடுத்த அந்த படைப்பாளிகள் அனைவருக்கும், அதனை அனுபவிக்கும் இந்த நேரத்தில் நமது நன்றியையும்
பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வோம்.

—————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to இவர்களுக்குத்தான் எவ்வளவு இயல்பாக – இசை வசப்படுகிறது …!!!

  1. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    அந்த இசை … பாடல் வரிகள் …. காட்சியமைப்பு …. ஆகா .. அற்புதம் .. இது பாேன்ற பாடல்களை கேட்பதே சுகம் …!!!

  2. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    அய்யா…! ” குங்குமச்சிமிழ் ” என்ற படத்தில் எஸ்.பி.பி மற்றும் ஜானகியின் குரல்களில் இசைஞானி இளையராஜாவின் மனதை வருடும் இசையில் `நிலவு தூங்கும் நேரம்… நினைவு தூங்கிடாது…’ பாடலுக்கு என்றும் முதல் இடம்தான். மவுத் ஆர்கானில் இந்தப் பாடலின் இசை உயிர் ராகம்…. !

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      பிரனீஷ்,

      உங்கள் விருப்பம் –

      கூடவே ஒரு என் விருப்பமும் –

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    பாடலின் பிரசவத்தைக் கேட்பதே ஒரு சுகம். ஏற்கனவே கேட்டிருந்தாலும் திரும்பக் கேட்பதில் ஒரு மகிழ்ச்சி.

    இதுல கண்ணதாசன் மற்றும் வாலி அவர்களின் திறமை மிகச் சிறந்தது. இருவரும், டியூன் வர வர, வார்த்தைகளைச் சொல்லுவார்கள். முழுமையாகக் கேட்கும்போது மொத்தமாக எழுதிய பாடல் போன்று கொடுத்த சிச்சுவேஷனுக்குக் கச்சிதமாக இருக்கும்.

    பகிர்வுக்கு நன்றி. இதையெல்லாம் இந்தத் தலைமுறை நிச்சயமாக மிஸ் செய்கிறது.

  4. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    கா.மை சார்.. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். வாலி அவர்கள் ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’ என்ற பாடலை போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பி அதை டி.எம்.எஸ் அவர்கள் பாடியது. ‘நீருக்குள்ளேயே எருமையை வைத்து விலை பேச முடியுமா? சென்னைக்கு வாருங்கள், திரை இசைப் பாடல்கள் எழுதும் வாய்ப்புக்கு முயற்சியுங்கள்’ என்று டி.எம்.எஸ் மூலமாக விதி, ஸ்ரீரங்கத்தில் இருந்த ரங்கராஜன் அவர்களை சென்னைக்கு வரவழைத்து, வாழ்க்கையின் எல்லாக் கஷ்டங்களையும் அவரைப் படவைத்து, வாலியின் நல்ல நேரத்தை 60களில் காண்பித்துக்கொடுத்தது. அவருடைய ‘நானும் இந்த நூற்றாண்டும்’ பல்வேறு செய்திகளைச் சொல்லி, கஷ்டம், வறுமை போன்றவை எப்போதும் நிரந்தரமல்ல, உழைப்பைக் காண்பித்தால் புகழும், செல்வமும் தானாக வந்துசேரும் என்பதைச் சொல்லும். இளையராஜா அவர்களின் வாழ்க்கையும் அதுபோலத்தான். இருவரும் சரஸ்வதி கடாட்சம் மிக்கவர்கள் என்பதில் துளியளவு சந்தேகமும் இல்லை.

  5. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    அய்யா …! எம்ஜிஆரின் முக்கிய படம் ஒன்று … பல எதிர்ப்புகளை சந்தித்த பின்வெளிவந்தது … அப்பாேது திரு வாலி அவர்கள் எம்ஜிஆரிடம் : நான் இல்லையென்றால் உங்கள் படம்வெளிவந்திருக்காது என்று கூறியவுடன் அவருக்கு ஒன்றும் புரியாமல் எப்படி என்றுகேட்க .. படத்தின்பெயர் உலகம் சுற்றும் வாலிபன் என்பதில் … வாலி என்ற என்பெயரை நீக்கினால் படம் …வெளிவருமா என்றுகேட்டு … அசரடித்தார் … அதுதான் வாலி …!!!

    • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

      It was not like that. MGR has swinging mood. ஒரு தடவை வாலிமீது கோபத்தில், இந்தப் படத்தில் (உ.சு.வா) உங்கள் பெயரைப் போடப்போவதில்லை (அவர் பாட்டெழுதியிருந்தபோதும்) என்று சொன்னபோது, வாலி, ‘என் பெயர் இல்லை என்றால் படமே வெளிவராது’ என்றார். எம்ஜியார், அது எப்படி என்று கேட்டபோது, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்று வெளியிடாமல் ‘உலகம் சுற்றும் பன்’ என்றா வெளியிடுவீர்கள் என்று பதில் சொல்லி, எம்ஜியாரை சிரிக்க வைத்து சமத்காரமாய் தன் நட்பைத் தொடர்ந்தார். இது வாலி அவரது ‘நானும் எனது நூற்றாண்டும்’ புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

  6. chandramouly.venkatasubramanian's avatar chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    Nice composition&combination
    which film?

  7. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    CVS,

    முதல் பாடல் – படம் ” ஒரு நாள் – ஒரு கனவு ”
    அடுத்தது – ” குங்குமச் சிமிழ் ”
    கடைசியானது – “இதயம் ஒரு கோவில் ”

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.