…
…
மிகப்பிரமாதமாக, ஆழமாக, யோசனை செய்து, திட்டம் போட்டு துல்லியமாக நிறைவேற்றும் சிலர்…. அவர்களின் பின்னணியில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த சிலர்… மிக அதிக வீரியமுள்ள ஒரு குழுவின் செயல்பாட்டை வெளிக்கொண்டு வந்திருக்கிறது ஒரு ஆங்கில செய்தி வலைத்தளம்….
எந்த நேரமும் அதன் மீதும், அதை எடுத்து எழுதுபவர்கள் மீதும் நீதிமன்ற தடை வரக்கூடும்… கிரிமினல் வழக்கும் பலநூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்குகளும் வரக்கூடும். அதன் மீது ஏற்கெனவே ஒரு தடை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
வெளிவந்திருக்கும் சில உண்மைகளை – இயன்ற வரை சட்டபூர்வமாக நமது வாசக நண்பர்களின் பார்வைக்கு கொண்டு வர உதவுவதே இந்த இடுகையின் நோக்கம்.
எழுச்சி நாயகர் பதவியேற்றதை தொடர்ந்து தீவிரமாக செயலாற்றத் துவங்கி இருக்கிறது அவருக்கு மிக நெருக்கமான சில நபர்களைக் கொண்ட ஒரு இயக்கம். “லாப-நோக்கம் அற்ற” ட்ரஸ்ட் என்று சொல்லி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், வெளிநாட்டு நிதி உதவிகளை பெறும் வகையில் உள்துறை அமைச்சகத்திலிருந்து அனுமதி பெறப்பட்டிருக்கிறது.
தேசத்தின் உச்ச பாதுகாப்பு அலுவலரின் மகன் தான் இதன் அதிகாரபூர்வ சூத்திரதாரி. கூடவே, கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு
ஆர்.எஸ்.எஸ்.-லிருந்து அதன் சார்பாக கட்சியை நிர்வகிக்க பாஜகவுக்கு
அனுப்பப்பட்ட ஒரு சீனியர் நிர்வாகி….
நான்கு மிக முக்கியமான மத்திய அமைச்சர்கள் இதன் நிர்வாகத்தில்
உள்ளடக்கம்.
எழுச்சி நாயகர் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு வெளிநாடுகளுக்கு பயணம் செய்தபோதெல்லாம், அவருக்கு மாபெரும் எழுச்சிக் கூட்டங்கள் திரண்டு வரவேற்பளித்தன… உற்சாகக்குரலில் “…..” “…..”
என்று ஆர்ப்பரித்தன. எல்லாமே இயற்கையாகவே நிகழ்ந்த உந்துதல்கள் என்று
பலரும் நினைத்தனர்.
ஆனால் இவற்றின் பின்னே – பல மாதங்களுக்கு முன்னதாகவே திட்டம் போட்டு, தேவையான பெருமளவு நிதி திரட்டப்பட்டு,
ஆர்.எஸ்.எஸ்.-லிருந்து வந்த செயல் நாயகர் சில மாதங்கள்
முன்னதாகவே சென்று தங்கியிருந்து செய்த ஏற்பாடுகளின் விளைவு
என்பது சாதாரண மக்களுக்கு தெரியாது… பெரும்பாலான
ஊடகங்களுக்கு கூடத்தான். இந்த வலைத்தளத்தில் ஏற்கெனவே ஒருமுறை அவரது செயல்பாடுகள் குறித்து கூறப்பட்டிருக்கிறது.
அதிகார பீடத்தில் உள்ளவர்கள் ஆசியோடு – இந்த ட்ரஸ்ட் இன்னும் என்னென்ன விதங்களில் செயல்படுகிறது, இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள், சட்டபூர்வமாகவே சட்டத்தை உடைத்து எப்படியெல்லாம் அவர்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்கிற பின்னணிகளை எல்லாம் அறிய நேரிடும்போது பிரமிப்பு ஏற்படுகிறது.
சிறுபிள்ளைகளாக இருக்கும்போது, கூட இருக்கும் நண்பர்களுடன்
சில பிரச்சினைகள் வரும்போது, “சத்தியமா சொல்லுடா”
என்பார்கள்.. சொல்பவன் மனதிற்குள் “அ” என்பதை சைலெண்டாக
சொல்லிக்கொண்டு “(அ)சத்தியமா சொல்றேன்” என்பான்,
ஏமாற்றிவிட்ட பெருமையோடு. அதுபோல் –
“மற்றவர்களையும் சாப்பிட விட மாட்டேன்” …என்கிற கோஷத்தின் பின்னே ..
” எனக்கு வேண்டியவர்களைத் தவிர” … என்கிற கடைசி
வார்த்தையொன்று உரத்த கோஷங்களுக்கிடையே மக்கள் காதில்
விழாதபடி மெல்ல சொல்லப்பட்டது போலும்….
டெக்னாலஜி வளர வளர, அரசியல்வாதிகளின் சிந்திக்கும் முறைகளும்
மாறுபடுகின்றன. புதிது புதிதாக, எந்தவித சட்டங்களையும் சுலபமாக
வளைக்கவும், மீடியாக்களின் பார்வையிலிருந்து சுலபமாக தப்பி பல
அத்துமீறல்களை புரியவும், பதவியையும், அதிகாரத்தையும் –
நிரந்தரமாக தங்கள் வசப்படுத்த பல உத்திகளில் ஈடுபடுவதையும்
பார்க்கும்போது, பிரமிப்பாக இருக்கிறது.
“ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது கூற முடியுமா …?” என்கிற கேள்வி
இனி எழாதபடி பல குற்றச்சாட்டுகள் எழும்பி விட்டன. இனி இவற்றை
அடக்குவது எப்படி, மறைப்பது எப்படி என்பதில் முழு பலமும் இறங்கும்.
அவற்றை எல்லாம் தாண்டியும் உண்மைகள் வெளிவரும் என்று
நம்புவோம்.
இவ்வளவு தானா என்று கேட்க வேண்டாம்… இது ஒன்றும் கடைசி
இடுகை இல்லையே…இது வெறும் முகவுரை தான்… போகப்போக, மற்ற எல்லாவற்றையும் விவரமாக விவாதிப்போம்.
————————————————————————————————————-
வளர்ந்து வரும் புதிய நாயகர்கள்….!!!
இந்திய அரசியலில் புதிதாக வெளிப்பட்டிருக்கும் சில செயல்
நாயகர்களை இங்கு அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது…
எதிர்காலத்தில் அவர்கள் நிறையவும் பேசப்படுவார்கள்…!!!
திரு ஷௌர்யா தோவல்

…
திரு ராம் மாதவ்

…
திரு ஜெயந்த் சின்ஹா




” வாவ் “
இப்பாேதெல்லாம் இது பாேன்றவற்றை பற்றியும், ஊழல், அரசியல்வாதிகளைப்பற்றியும் படிப்பது
எழுதுவது என்றாலே ஒரு சலிப்புதான் ஏற்படுகிறது ….
இதையும் நியாயப்படுத்தவும் … அவர் செய்யவில்லையா … அந்த கட்சி ஆட்சி காலத்தில் நடக்காததா என்று சப்பைக்கட்டு கட்ட பலரும் பாய்ந்தாேடி வருவதும் ஒரு வாடிக்கையாகி பாேனது தான் … நம் நாட்டின் நிலை …
தற்பாேதெல்லாம் இது என்ன பெரிய புதுமையான செய்தி என்று நினைக்கின்ற “ரேஞ்சுகாகு” நம் மக்களை காெண்டுவந்து விட்டார்களே … இந்த பாவிகள் …. இதுவும் கடந்து பாேகும் என்று கூறுவதை தவிர வேறு ஒன்றும் தாேன்றாத அளவுக்கு மூளை சலவை செய்து விட்டார்களா … நம் மக்களை …?
“ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது கூற முடியுமா …?”
“இந்துத்(துவா) தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது!” – கமல்
இனியும் இந்த பட்டியல் நீலுமோ இப்படி,
இவர்கள் தேசத்துரோகிகள் இல்லை என்று சொல்லிவிடமுடியாது…!
பரவாயில்லையே …! வெளிநாடுகளிலும் காசை செலவழித்து கூட்டத்தை கூட்டுவது என்பது ஒரு பிளஸ் பாயிண்ட் தான் நம் அரசியல்வாதிகளுக்கு … பழக்க தாேஷம் … மாறவே ….. மாறாது … கூட்டத்தை பார்த்தால்தான் ” குஷி ” கிளம்புமாே … நமமவர்களுக்கு ….?
வெளிநாட்டில் கூட்டம் போட ஆட்களைச் சேர்த்தார்கள் சரி, அதனால் என்ன இப்போது?
நாட்டின் பாதுகாப்பிற்கு, உயர்விற்குக் கேடாக ஏதும் செய்தார்களா, செய்திருக்கிறார்களா?
தேசத்துரோகம் செய்துள்ளார்களா, வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கிக் குவித்துள்ளார்களா?
அதெல்லாம் இன்னை எனும்போது இது ஒரு பிரச்சனையே அல்ல. இப்படிக் கூட்டம் கூட்டுவது ‘ட்ரம்ப்’ற்குக் கூடத் தான் செய்யப்பட்டிருகிறது. இதெல்லாம் நவீன மார்கெடிங், கார்ப்பொரேட் தத்துவம். இது உங்களுக்குப் புரியாமல் இன்னமும் “சந்திரசேகர்” காலத்திலேயே இருந்தால் எப்படி சார்
அப்போ “வளர்ச்சி நாயகன்”, “எழுச்சி நாயகன்” என்றதெல்லாம் இல்லை, ஊதி பெருக்கப்பட பலூன் அப்படி தானே.
இப்படி வெளியில் வாருங்கள் என் ராசாக்களே.
இப்ப தான் கொஞ்சம் வெளிவர ஆரம்பித்து இருக்கு. இன்னும் கொஞ்ச நாளில் எல்லா காற்றும் வெளிவந்து விட்டால் அந்த பலூன மேல தூக்கி போட்டால் கூட நிக்காது.
இது ஒரு பொலப்பாய்யா…
t It is a biassedview.V KK enon organized meetings for Nehru.Industrialists arranged groups for other primr ministers.For odi a newcomer and first non congredd P certain spade workwas required to make the change visiblr and that too after 60 years of one party domination.Theatrical was part of the piblicityRecenyly there were reports some senior members of the congress thinktank went before the visit of Rahul Gandhi to organize meetings and platform for him to showcase himselfPublicity is part of politics and now it is done by paid professionals.Thiruvengadam
// Publicity is part of politics and now it is done by paid professionals.Thiruvengadam //
BUT WHO PAYS FOR THAT ;
WHY THERE IS NO transparency ?
That is the question.
அங்கு 65 வயதுப் பெரியவரின் ஜிம் சாகசங்கள் புகைப்படம். இங்கு தலைவர்களின் தகிடுதத்தங்கள். இன்டெரெஸ்டிங்.