…
…

…
மார்ச் 10, 2014 தேதியன்று, சுப்ரீம் கோர்ட் ஒரு உத்திரவு பிறப்பித்தது.
பதவியில் உள்ள MP மற்றும் MLA -க்கள் மீதான கிரிமினல் வழக்குகள்
அனைத்தும், அதிவிரைவாக நடத்தப்பட்டு, ஒரு வருட காலத்திற்குள்
முடிக்கப்பட வேண்டும் என்று.
மே, 2014 தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசும்போது மோடிஜி
பொதுமக்களிடையே வாக்குறுதி கொடுத்தார். பாஜக பதவிக்கு வந்தால்,
கிரிமினல் அரசியல்வாதிகளின் மீதான வழக்குகள் விரைவு
படுத்தப்பட்டு, ஒரு வருடத்திற்குள் பாராளுமன்றம் முற்றிலுமாக
“சுத்தப்படுத்தப்படும்” என்று.
மோடிஜி பிரதமர் ஆன பிறகு, நாட்டை சுத்தப்படுத்த “ஸ்வச்ச பாரத்”
திட்டத்தை அறிவித்தார். அதனை நிறைவேற்ற பெரும் அளவில்
முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் உத்திரவையும், தான் பொதுமக்களுக்கு
கொடுத்த வாக்குறுதியுமான ” பாராளுமன்றங்களையும்,
சட்டமன்றங்களையும் சுத்தப்படுத்துவது ” குறித்து ஆர்வம் காட்டவில்லை. இதுவரை எந்தவித முயற்சிகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
கிரிமினல் அரசியல்வாதிகளில் மற்ற கட்சிகளைப்போலவே,
பாஜகவிலும் உண்டு என்பதும்,
அவர்கள் மீது கை வைத்தால், கட்சிக்கு பாதிப்புகள்
ஏற்படலாம் என்பது காரணமோ என்னவோ தெரியவில்லை….
நேற்றைய தினம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணக்கு வந்த வேறு ஒரு
வழக்கின்போது, சுப்ரீம் கோர்ட் சில கேள்விகளை எழுப்பியது…
சில உத்திரவுகளையும் பிறப்பித்துள்ளது. இன்றைய நாளிதழ்கள்
எதிலும் அது சரியான முறையில் விவரிக்கப்படவில்லை.
2014 தேர்தலின்போது, தேர்தல் கமிஷனிடம் தங்கள் மீது கிரிமினல்
வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று 1,581 வேட்பாளர்கள்
பிரமாண பத்திரத்தில் (affidavit) தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த வழக்குகளின் இன்றைய நிலை என்ன…?
இவற்றில் எவ்வளவு வழக்குகள் ஒரு வருடத்திற்குள் முடித்து
வைக்கப்பட்டன ? எவ்வளவு பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டது
போன்ற விவரங்கள் சுப்ரீம் கோர்ட் மத்திய அரசிடம் கேட்டுள்ளது.
விசாரணைகளினூடே, விசாரணைகள் ஓராண்டிற்குள் முடித்து வைக்கப்பட
மத்திய அரசு தலையிடுவதற்கில்லை… இவை சம்பந்தப்பட்ட
மாநில அரசுகளின் எல்லைக்குள் வருபவை என்று மத்திய அரசு
சொல்லி இருக்கிறது.
இதை மிகவும் கடுமையாக ஆட்சேபித்த சுப்ரீம் கோர்ட் –
முன்னதாக வழக்கு விசாரணைக்கு வந்த சமயத்தில், அரசியல்வாதிகள்
மீதான கிரிமினல் வழக்குகளை ஒராண்டுக்குள் முடித்து வைக்க
வேண்டும் என்கிற கருத்து தங்களுக்கு முற்றிலும் ஏற்புடையதே
என்று சொல்லி விட்டு, இப்போது அதை மாநிலங்களை காரணம்
காட்டி, பொறுப்பிலிருந்து நழுவக்கூடாது என்று சொல்லி இருக்கிறது.
மேலும், இது நாடு முழுவதற்குமான ஒரு பொது பிரச்சினை என்பதால்,
இந்த பொறுப்பை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு,
அரசியல்வாதிகள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைவாக
விசாரித்து ஒரு வருடத்திற்குள் முடிப்பதற்கென்றே, நாடு முழுவதும்,
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு விசேஷ நீதிமன்றம் அமைக்கப்பட
வேண்டும்.
அரசியலையும், பொது வாழ்வையும் கிரிமினல்களின் பிடியிலிருந்து
விடுவிப்பதற்கான இந்த விசேஷ நீதிமன்றங்களை அமைக்கும்
பொறுப்பை மத்திய அரசே ஏற்க வேண்டும்.
குற்றப் பின்னணி உள்ள அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை
விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்குவது குறித்த திட்ட அறிக்கை
ஒன்றையும் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றங்கள்
அமைக்கும் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற
விவரங்களையும் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். இவை அடுத்த
6 வாரங்களுக்குள் உச்சநீதி மன்றத்திற்கு அளிக்கப்பட வேண்டும்.
இத்தகைய விசேஷ நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள், அரசு வக்கீல்கள்,
அலுவலர்கள் ஆகியோரை நியமிப்பது, மற்றும் கோர்ட்டுக்கு
தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குவது குறித்து,
சுப்ரீம் கோர்ட் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் நேரடியாக தொடர்பு
கொண்டு முடிவு செய்யும் என்றும் தெரிவித்திருக்கிறது.
உச்சநீதிமன்றம் மார்ச் 2014-ல் பிறப்பித்த உத்திரவு ஒரு பக்கம்.
2014 பாராளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தான் மக்களுக்கு
நேரடியாக அளித்த வாக்குறுதி மற்றொரு பக்கம்… ஆக இரண்டு
விதங்களினாலும், மோடிஜி அரசியலை சுத்தப்படுத்த வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறார்.
எனவே, விசேஷ நீதிமன்றங்களை உருவாக்குவது குறித்த விஷயத்தில்,
மேலும் தாமதம் ஏற்படாமல் செயல்பட வேண்டும்.
கட்சிக்குள் ஏற்படக்கூடிய விளைவுகளை மறந்து –
விரைவில் விசேஷ நீதிமன்றங்களை உருவாக்க – சுப்ரீம் கோர்ட்டுடன்
ஒத்துழைத்து, அரசியலை சுத்தப்படுத்த, அரிதாக கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை மோடிஜி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
“ஸ்வச்ச பாரத்” வெளியில் மட்டுமல்ல – – அரசியலிலும்,
அரசியல்வாதிகளிடையேயும் அது அதிமுக்கியம்…..!!!



This is simply passing the buck.The SC should use its supervisory powers to curtail the number of adjournments granted and take into considerations the number such granted by judges at thetime of their promotion and refuse to intervene in a case until it was disposed of and rectify any lapseat the time of appeals.Thiruvengadam
இது தெரியாத நண்பரே… கடைசியில் அரசின் கொள்கை முடிவு அது இது என்று எதையாவது சொல்லி இழுத்தடிப்பார்கள். அதற்கும் ஆட்சியையும் முடியும். மீண்டும் காங்கிரஸ் வந்ததும் அதே பல்லவியை பாடுவார்கள். பாப்போம் என்ன செய்ய போகிறார்கள் என்று
எவ்வளவாே … சாென்னார் …. அதெல்லாம் ….? இருக்கின்ற கிரிமினல்கள் அப்படியே இருப்பார்கள் பாேல தெரிகிறது … இனிமேல் கீழ்கண்டவாறு … இதுவாவது நடக்குமா எதிர்காலத்தில்….?
// குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் : தேர்தல் ஆணையம் //…. https://tamil.oneindia.com/news/tamilnadu/who-have-criminal-charges-may-have-lifetime-ban-contest-the-election-election-commission-300341.html ….. எந்த தடை விதித்தாலும் ….. வாரிசுகளை நிற்க வைத்து பின்னால் இருந்து வழி நடத்துவார்கள் … எத்தர்கள் …!
பாஜக இதனைச் செய்யலாம். நாட்டிற்கு நல்லது. செய்வார்களா என்பது சந்தேகம். ஏனென்றால், எல்லாக் கட்சிகளிலும் அங்கிங்கு எனாதபடி குற்றப்பின்னணி, குற்றவாளிகள் இருக்கின்றனர். (சமீப உதாரணம், ரெட்டி கையில் இருந்த புதிய ரூபாய் நோட்டுக்கள் எந்த வங்கியிலிருந்து வழங்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கமுடியாது என்று காரணம் காட்டி தப்பவிட்டது)
நீதிமன்றம், ஏன் இவ்வளவு வாய்தா, இழுத்தடித்தல் போன்றவற்றைச் செய்யவேண்டும்? அவர்கள் சட்டப்படிச் செய்கிறார்கள் என்றாலும் அது தார்மீக நெறிப்படி சரியா? ப.சி. தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்காமல் இன்னும் தொடங்காததன் காரணம் என்ன? எத்தனை வழக்குகளில் குற்றம் சாட்டப்படாமல் ஜெயிலில் இருந்து வாடுகின்றனர். அதற்கான தீர்வு ஏது? தல்வார் வழக்கிலேயே, அவருக்கு என்ன நிவாரணம் அளிக்கப்பட்டது? இது நீதிமன்றங்களின் தவறு இல்லையா? நீதிபதிக்கு ஏற்றவாறு தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லையா? அதனை யார் கேட்பது? ‘காவிரி பங்கீட்டில்’ நீதிமன்றம் எப்படி நடந்துகொண்டது?
அதானே; கே.எம்.சார் மோடிஜியை போய் ஏன் செய்யவில்லை என்று கேட்கலாமா ? உடனே நீங்கள் அவர் செய்ய வேண்டாமா, இவர் செய்ய வேண்டாமா, நீதிமன்றம் செய்ய வேண்டாமா என்று கேட்டு திசை திருப்பாமல் இருக்கலாமா ? பாஜகவையோ, மோடிஜியையோ குறை கூறி எதாவது எழுதப்பட்டால் அதை வரவேற்பது போல் துவங்கி இறுதியில் பின்னூட்டம் முடியும்போது, ஊரில் இத்தனை அயோக்கியர்கள் இருக்கும்போது இவர்கள் இப்படி இருப்பதில் அதிசயமில்லையே என்று
கேட்பது தானே உங்கள் சாமர்த்தியம். நல்ல சாமர்த்தியம் சார். நீங்கள் எழுத ஆரம்பித்தபோது வித்தியாசமாக இருந்தது. இப்போது உங்கள் தந்திரம் எல்லாருக்குமே புரிகிறது. ஃபார்முலாவை மாத்துங்க சார்.
புதியவன்,
இந்த இடுகை, கிரிமினல் அரசியல்வாதிகளை பொது வாழ்விலிருந்து எப்படி அகற்றுவது என்பது குறித்தது… இதற்கு சுப்ரீம் கோர்ட் மார்ச் 2014 -லேயே சில உத்திரவுகளை பிறப்பித்திருந்தது. அதனை சிரமேற்கொண்டு நிறைவேற்றி, ஒரு வருடத்திற்குள் அரசியலை சுத்தப்படுத்துவேன் என்று சொல்லி ஓட்டு கேட்டது திருவாளர் ந.மோடி அவர்கள். பதவிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் எடுக்காதவர், இப்போது மீண்டும் சுப்ரீம் கோர்ட் அதை நிறைவேற்ற உரிய வழிமுறைகளையும் சொல்லிக் கொடுக்கும்போது –
மோடிஜி அதனையாவது பயன்படுத்திக்கொண்டு, இந்த தேசத்தின் “அரசியலை” சுத்தப்படுத்த வேண்டும் என்று நான் சொல்ல வந்ததற்கு நீங்கள் சொல்லும் கருத்து – கேட்கும் கேள்வி –
// நீதிமன்றம், ஏன் இவ்வளவு வாய்தா, இழுத்தடித்தல் போன்றவற்றைச் செய்யவேண்டும்? அவர்கள் சட்டப்படிச் செய்கிறார்கள் என்றாலும் அது தார்மீக நெறிப்படி சரியா? … ‘காவிரி பங்கீட்டில்’ நீதிமன்றம் எப்படி நடந்துகொண்டது? அதனை யார் கேட்பது? //
நீங்கள் எழுதியிருப்பது உங்கள் மனசாட்சிக்காவது சரியென்று தோன்றினால் – சரி.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Basically he is a lier.
இதை மக்களுக்கு(பக்தர்கள் எனும் மாக்களுக்கு) சவாலாகவே சொல்லலாம். பொய்யையும் பொய்யான தகவல்களையும் வரலாற்று திரிபுகளையும் எத்துனை தடவை அவர் செய்துள்ளார் என்று. எத்துனை தடவை அவர் செய்தாலும் பக்தாஸ் எனும் மாக்கள் திருந்தப் போவதில்லை. எம் கவலை மத அடிப்படையுலுள்ளவர்களை பற்றியே. இவர்கள் கண் திறந்துவிட்டாலே இந்த மாதரியான பொய்யர்களும் அரசியல்வியாதிகளும் செல்லா காசாகிவிடுவார்கள்.
இப்போது யாராவது இவரை இது விஷயத்தில் நெருக்கினால் நேராக குஜராத் தேர்தல் மேடையில் போய் நிற்கப்போகிறார். நான் இதை செய்யாவிட்டால் என்னை தூக்கில் போடுங்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கப்போகிறார்.
இதையும் கூட இந்த மாக்களிடம் கேட்கலாம், இவர் எத்துனை தடவை தன்னை தூக்கில் போட சொல்லியுள்ளார் என்று.
இதெல்லாம் ஒரு பொலப்பு.
correction: liar – பொய்யர்
குளவிகள் கூட்டில் கைவாய்ப்பதற்குக்கு அவர் என்ன முட்டாளா ? ஒரு காலுக்கும் அதை செய்யமாட்டார். அதையும் மீறி அவர்கள்மீது (பிஜேபி கங்கிராஸ் உள்பட அணைத்து கட்சியினர் ) கைவைத்தால் அவ்வாறு அந்த பதவியில் நீடிக்க விடமாட்டார்கள் இதுதான் உண்மை. அல்லது மக்கள் திசைதிருப்ப படுவார்கள் .