இந்த குடிசைவாசி ஹெலிகாப்டரிலா…? இது கிரிமினல்களின் சதி… இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் …




தமிழ்நாடு எப்படி ஒரு கிரிமினல் மாநிலமாக
மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னொரு சாட்சி நக்கீரன் செய்தித்தளத்தின் வீடியோ – கீழே காணவும்…
( நன்றி – நக்கீரன் செய்தி தளத்திற்கு..)

எதாவது ஒரு தொண்டு நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டு,
சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு
பதியப்பட்டு, உயர்நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில்
உடனடியான ஒரு விசாரணக்கு ஏற்பாடு செய்யப்பட
வேண்டும்.

தமிழக அரசில் அங்கம் வகிக்கும் சிலர், முக்கியமாக
சுகாதார அமைச்சரவையை சேர்ந்தவர்கள் – இதில்
சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே
தெரிகிறது.

தமிழக எதிர்க்கட்சி தலைவர்களும், இதுவரை இதுகுறித்து
எதுவும் கூறாமல், வாய்மூடி மௌனம் சாதிப்பது, அவர்கள்
எத்தகைய சந்தர்ப்பவாதிகள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

1) பல சட்டங்கள், சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன….

2) மூளைச்சாவு அடைந்த ஒருவரை, பொய்யாக
உயர்சிகிச்சை அளிப்பதாக ஆவணம் தயார் செய்யப்பட்டு
டிஸ்சார்ஜ் செய்து –

யாருக்கும் சொல்லாமல், வேறு ஊரில்,வேறு
மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

3) குடிசைவாசிக்கு ஹெலிகாப்டர் வசதி செய்து தரப்படுகிறது. யார் செலவழித்தது…? ( இந்த கம்பெனிக்கு
காசோலையாகத்தான் பணம் கொடுத்திருப்பார்கள்… சுலபமாக கண்டுபிடிக்கலாம்…)

4) பிரைவேட் ஹெலிகாப்டரில் தஞ்சை அரசு
மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூட பயணிக்கிறார்..
யார் அனுமதியின் பேரில்…? யார் அந்த அரசு மருத்துவர்…?

அந்த அரசு மருத்துவர் தான் தொலைபேசி மூலம்
ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்தார் என்பது உண்மையா..?

5) ஒரு நோயாளி மூளைச்சாவு அடைந்து விட்டார்
என்பதையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி
நேரத்திற்கு பிறகு தான் அறிவிக்க முடியும் என்கிற விதிக்கு
மாறாக இந்த மருத்துவமனை செயல்பட்டது எப்படி…?

24 மணி நேரங்களுக்கு பிறகு சான்றிதழ் அளிக்கப்பட்ட
பின்னர், தான் மாற்று நோயாளி தயார் செய்யப்பட
வேண்டும். ஆனால், இங்கு மாற்று நோயாளி ஏற்கெனவே
தயார் செய்யப்பட்டு – நோயாளி அனுமதிக்கப்பட்ட 24 மணி
நேரத்திற்குள்ளாக உறுப்பு மாற்று ஆபரேஷனே செய்து
முடிக்கப்பட்டு விட்டது எப்படி… ?

6) உண்மையிலேயே இது விபத்தா…? அல்லது மாற்று
உறுப்புகளுக்காக நிகழ்த்தப்பட்ட விபத்தா…?

7) மோதிய வாகனம் எது…?
சொந்தக்காரர் யார்…?
ஓட்டியவர் யார்…?
அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது…?
இது குறித்து காவல்துறையிலிருந்து எதாவது அறிக்கை
உண்டா…?

8) இன்னும் லட்சத்து சொச்சம் பேர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும்போது, இவருக்கு மாற்று உறுப்புகள்
கொடுக்கப்பட்டது எப்படி…?

மிகப்பெரிய மோசடி, ஏமாற்று வேலை நடந்திருக்கிறது…
சம்பந்தப்பட்டவர் நல்ல உடல்நலம் பெற்று நீடூழி வாழட்டும்…

ஆனால், இந்த மோசடி கண்டுகொள்ளாமல் விடப்படுவது,
எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்துகளை உருவாக்கும்.

மாற்று உறுப்புகளுக்காகவே விபத்துகள் ஏற்படுத்தப்படும்
நிலை இங்கு உருவாகும்.

————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இந்த குடிசைவாசி ஹெலிகாப்டரிலா…? இது கிரிமினல்களின் சதி… இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் …

  1. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    // பின்னணியில் பேரம் : சசிகலா கணவர் நடராஜன் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் புதிய சர்ச்சை! //
    http://www.dinakaran.com/News_detail.asp?Nid=340704 …. தினகரன் பாேன்ற பத்திரிக்கைகளிலும் Oct 5 ம்தேதி வெளிவந்த செய்தி பற்றி யாருமே வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை ….!!!

  2. செல்லமுத்து பெ's avatar செல்லமுத்து பெ சொல்கிறார்:

    இது முதல்வருக்குத்தெரிந்துதான் நடந்ததா? தெரியாமல் நடந்ததா?

  3. Ramanathan's avatar Ramanathan சொல்கிறார்:

    what is happening is atrocious..

    but one thing does not add up. how a person living in house which uses saree as a door can afford bike. Nakeeran is just sensationalising it further to add fuel to fire

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    முதலில் நடராஜன் கவலைக்கிடம் என்ற செய்திகளைப் படித்ததுமே சந்தேகப்பட்டேன் (அதிலும் அவர் சிரித்துப்பேசிக்கொண்டிருந்ததாகவும் படித்தேன்). ஒருவேளை சசிகலா பரோலில் வருவதற்காக நடத்தும் நாடகம் என்று. அதற்காகத்தான் அந்த ஆஸ்பத்திரி ‘கவலைக்கிடம்’ என்ற மாதிரியான அறிக்கை வெளியிட்டது. அப்புறம் ஒரே நாளில் சிகிச்சை முடிந்தது, உறுப்புகள் மாற்றம் நிகழ்த்தப்பட்டது என்று சொல்லி அவர் நலமாகிறார் (சசிகலா வெளியில் வரும் நேரம் பார்த்து). உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன், ஜெ. அவர்கள் மறைவதற்கு முன்னாலோ அல்லது மறைந்த பிறகோ, நடராஜன் அவர்கள் நெஞ்சுவலி போன்ற சாக்கு வைத்து அட்மிட் ஆனார்.

    எளியவர்களை ஏய்த்துவிடலாம். இறைவனை/இயற்கையை ஏய்க்க இயலுமா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.