நிஜ நிலவரம் இப்போது தான் தெரிகிறதா…? முன்பு சொன்னவர்கள் எல்லாம் மடையர்களா…?


பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கிறது என்கிற
உண்மை இப்போது தான் இவர்களுக்கு தெரிகிறதா…?
“யார் ஆலோசனையும் தேவையில்லை” என்கிற கண்களை
மறைத்துக் கொண்டிருந்த அகந்தையும், ஆணவமும்
இப்போதாவது நீங்குமா…? அல்லது தேர்தலுக்காக மீண்டும்
நாடகமா…?






Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to நிஜ நிலவரம் இப்போது தான் தெரிகிறதா…? முன்பு சொன்னவர்கள் எல்லாம் மடையர்களா…?

  1. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    Shahjahan R
    5 hrs · New Delhi ·
    அள்ளி்த் தெளித்த அவசர கோலமாக வந்த ஜிஎஸ்டி குழப்படிகள் தீராததால் நேற்று புதிய அறிவிப்புகள். பொருளாதாரம் பெரும் குழப்பத்தில் இருக்கிறது என்பது நிதி அமைச்சருக்கும் பிரதமருக்கும் இப்போதுதான் புரிந்திருக்கிறது போலும்.
    பிரதமரின் வழக்கமான அலப்பறைகள் ஒருபக்கம் இருக்கட்டும். மாநிலங்களின் உரிமைகளைப் பறித்த ஜிஎஸ்டி என்ற அரக்கன் இனி நிரந்தரம் என்ற நிலையில், நேற்றைய அறிவிப்புகள், சலுகைகள் முக்கியமானவை.
    வரிக்குறைப்புக்கு உள்ளான பொருட்கள், சேவைகள் உன்னிப்பாகக் கவனித்தால், குஜராத் தேர்தலை மையமாகக் கொண்டவை என்பது புரியும்.
    அடுத்தடுத்த மாநிலத் தேர்தல் வரும்போதும் இதே போல சலுகைகள் வருமோ!? அல்லது தேர்தலுக்குத் தேர்தல் கூடுமோ?! – முகநூலில் ஷாஜஹான்.

    மண்டையில் ஒன்றும் ஏறாது…இன்னும் சில பக்தகோடிகள் கூஜா தூக்கி கொண்டிருக்கிறார்கள்.

    • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

      …….. குடுமி சும்மா ஆடுமா ?
      கடந்த ஒரு மாதத்தில் 3வது தடவையாக இன்று
      பிரதமர் குஜராட் சென்றிருக்கிறார். 🙂 🙂

  2. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    // ஜி.எஸ்.டி வரி மாற்றத்தால் சீக்கிரமே வந்துவிட்டது தீபாவளி… சொல்வது பிரதமர் மோடி! //
    Read more at: https://tamil.oneindia.com/news/india/diwali-has-came-early-because-gst-says-pm-modi-gujarat-297864.html — ஆமாம் … நாளைக்கே தீபாவளி … ?

  3. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    எங்கே அந்த சொம்பு தூக்கிகளெல்லாம். எங்கே…..எங்கே…..!

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    பொறுத்திருப்போம். ஜி.எஸ்.டி போன்றவை நல்லனதான். அதில் குற்றம் கண்டுபிடிப்பதில் அர்த்தமே இல்லை. எத்தனையோ நாடுகளில் VAT Implementation என்று எளிதான VAT implementationக்கே எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று தெரிகிறது. ஜி.எஸ்.டியின் அருமை மெதுவாகத்தான் தெரியும். இது பல்முனை வரியை மட்டுமல்ல, வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களையும் கட்டுப்படுத்தக்கூடியது. ஆரம்பக் குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும், ஆனால் காலப்போக்கில் இது அரசாங்கத்துக்கு வரியை அதிகப்படுத்தும். மற்றபடி, பொருளாதாரம் தெரியால காகிதப் புலிகள், அரக்கன் என்றெல்லாம் மோடியை அவரது திட்டங்களைக் குறை சொல்வதை இப்போதுதானா பார்க்கிறோம்?

    அரசாங்கம், தனக்கு அபரிமிதமாகக் கிடைக்கும் வரியைவைத்து மக்களுக்கு எந்த விதமாக நன்மை செய்யப்போகிறது என்பதைப் பார்க்கவேண்டும். இல்லாவிடில், எல்லோரும் செலுத்தும் வரிகள் எங்கோ போய்விடக்கூடிய நிலைமைதான் உருவாகும். நான் செலுத்தும் வரி, எனக்கு ரோடாகவும், மற்ற பல திட்டங்களாகவும் என்னை வந்துசேர்கிறது என்ற நம்பிக்கையை உருவாக்குவதுதான் மிக முக்கியம். பார்ப்போம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.