மொரிஷியஸ் – உலகிலேயே மிகப்பெரிய, துர்க்கை அம்மனின் சிலை வடிவம் ….!!!


அற்புதமான இயற்கைச் சூழலில், மொரிஷியஸில்
கடந்த சில வருடங்களாக உருவாக்கப்பட்டு
வந்த துர்கா தேவியின் சிலை முழு வடிவம் பெற்று, கடந்த
வாரம், விஜயதசமியன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா மற்றும் மொரிஷியஸைச் சேர்ந்த கட்டிடக்கலை,
மற்றும் சிற்ப நிபுணர்களின் 6 வருட கடும் உழைப்பில்
உருவாகி இருக்கிறது இந்த சிலை.

108 அடி உயரத்துடன், உலகிலேயே பெரிய துர்கா தேவியின்
சிலை என்கிற பெருமையை இது பெறுகிறது.

மொரிஷியஸில் கடந்த 2015-ல் அமைக்கப்பட்ட 108 அடி உயர
சிவன் ( மங்கள் மஹாதேவ் ) சிலையின் அருகில், சில
அடி தூரத்திலேயே, இந்த துர்கா தேவியின் சிலையும்
நிறுவப்பட்டிருக்கிறது….

இந்த இரண்டு சிலை வடிவங்களிலும் காணப்படும்
ஒரு சிறப்பு – அவற்றின் முகத்தில் காணப்படும் அற்புதமான ஒரு புன்னகை….!!! இவ்வளவு பெரிய வடிவத்தில், அந்த புன்னகையை அவ்வளவு அழகாக எப்படித்தான் கொண்டு வந்தார்களோ தெரியவில்லை…அந்த கலைஞர்கள்
பாராட்டுதலுக்குரியவர்கள்…

இந்த இரண்டு அற்புதமான படைப்புகள் குறித்த
காணொளிகள் கீழே –

துர்கா தேவி –

இதனை உருவாக்கும்போது எடுக்கப்பட்ட காணொளி –

அருகில் இருக்கும் சிவன் ( மங்கள் மஹாதேவ் )
சிலை வடிவம் –

——————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மொரிஷியஸ் – உலகிலேயே மிகப்பெரிய, துர்க்கை அம்மனின் சிலை வடிவம் ….!!!

  1. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    அழகு. அவ்வளவு அழகு.
    உள்ளத்தை அள்ளுகிறது.
    A BIG salute to Mauritius Indians.

  2. sivakumar's avatar sivakumar சொல்கிறார்:

    பார்க்க பல கோடி கண்கள் வேண்டும். நன்றி நண்பரே

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.