திருட்டுப் பயல்கள் …..

திருட்டுப் பயல்கள் …..

சுமார் 14 லட்சம் ஊழியர்கள் இந்திய ரெயில்வே துறையில்
நேரடி ஊழியர்களாகப் பணி புரிகிறார்கள்.
மறைமுக ஊழியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இதே அளவிற்கு வரும் !

கடந்த வருட மொத்த  வருமானம் – சுமார்  Rs.1,06,000 கோடிகள்.
(ஒரு லட்சத்து ஆறு கோடிகள் !!!)
தினமும் இதைப் பயன்படுத்துவோரின்  எண்ணிக்கை – 2.3 கோடி பேர்.
தினமும் இதில் எடுத்துச்செல்லப்படும்  பொருட்களின் எடை 26 கோடி டன்கள்.
இந்தியா முழுவதுமாக 64,000 கிலோமீட்டருக்கு இதன் தண்டவாளங்கள்
பதிக்கப்பட்டிருக்கின்றன.
மொத்தம் 7,083 ரயில் நிலையங்கள் (railway stations).
தினமும் சுமார் 12,000 பயணிகள் ரயில்களும்,
7000 சரக்கு ரயில்களும் ஓடுகின்றன.

இவ்வளவு பெரிய ஒரு நிறுவனத்தைக் கட்டி ஆள்வது –
மத்திய அரசின் ரெயில்வே  அமைச்சரும் –
7 உறுப்பினர்களைக் கொண்ட ரெயில்வே போர்டும்.
(அந்த ஏழில் மூத்தவர் போர்டு சேர்மன் என்றும் மற்றவர்கள்
மெம்பர்ஸ்  என்றும் அழைக்கப்படுகிறார்கள்.)

traffic,  mechanical, , electrical,  engineering,   staff,  finance என்பது போல்
பல பிரிவுகள்/துறைகள்.  ஒவ்வொரு மெம்பரும் ஒவ்வொரு பிரிவை
கவனித்துக் கொள்கிறார்கள்.

ரெயில்வேக்கான  மொத்த செலவுகளும்  இவர்கள் மூலமாகவே
நடைபெறுகின்றன. ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் கோடி  பணத்தை
இந்த 7  பேரும் சேர்ந்து செலவழிக்கிறார்கள் !!

பல லட்சம் கோடி பெறுமானமுள்ள  காண்ட்ராக்ட்கள்…
புதிய ரயில் நிலையங்கள் கட்டுவது ,
பழைய நிலையங்களை  உருமாற்றுவது,
ரயில் பெட்டிகள்- என்ஜின்களை உற்பத்தி செய்வது,
வெளிநாட்டு ஏற்றுமதி,  உதிரிகள் இறக்குமதி,
பணியாளர் நியமனம்,
இரும்பு கொள்முதல்,  உணவு காண்ட்ராக்ட்கள்,
தண்டவாளம் உற்பத்தி, தண்டவாளம் அமைப்பது,
சிக்னல்களுக்கு மின் சாதனங்கள் வாங்குவது,

ரயில்வே பாதுகாப்புப் படைக்கு ஆட்களை சேர்ப்பது,
கம்ப்யூட்டர்கள் வாங்குவது, மின்னணு சாதனங்கள் வாங்குவது,
தனியாருக்கு ரிசர்வேசன் உரிமங்கள் வழங்குவது என்று
எதைச் சொல்ல – எதை விட …. ?

காண்ட்ராக்ட்களை இறுதி செய்யும் உச்சபட்ச அதிகாரம்
கொண்டவர்கள் என்பதாலும் ரயில்வேயின் அனைத்து
முக்கிய பதவிகளுக்கும் ஆட்களை தேர்வு செய்யவும்,
பதவி உயர்வு வழங்கவும்,
இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்டவர்கள் என்பதால்
ரெயில்வே  சாமராஜ்ஜியத்தில் இவர்கள் தான் மன்னர்கள்.
ரெயில்வே  அமைச்சர் இவர்களது சக்கரவர்த்தி –
அதாவது  மன்னாதி மன்னன் !!!!

அளவில்லா அதிகாரங்களும்,  சகல வசதிகளும் இவர்களுக்கு
அளிக்கப்பட்டிருக்கின்றன.  டெல்லியில் அரண்மனை போன்ற பங்களாக்கள்,
சமையற்காரர்கள், பணியாளர்கள், டிரைவர்கள், காவல் செக்யூரிட்டி
இத்தியாதி இத்தியாதி ……
இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் -குடும்பத்துடன்   இலவசமாகப் பயணம் செய்யும் வசதி …..
நெருங்கிப்பார்த்தால் நமக்கு மயக்கம் வரும்  !!

இங்கு உள்ள திருட்டுப்பயல்களில் ஓரிருவர்  தான் இப்போது
மாட்டி இருக்கிறார்கள்.

ரெயில்வே அமைச்சரின் புரோக்கர்கள் அவரது நெருங்கிய உறவினர்களான
இரண்டு அண்ணன் தம்பிகள்.
(சகோதரியின் மகன் கள் –  இவர் அவர்களுக்கு தாய் மாமன் முறை )
சண்டிகரில்  பெயருக்கு  கம்பெனி  நடத்துவதாக பாவ்லா பண்ணிக்கொண்டு,
மாமன்  அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தெந்த விதத்தில் எல்லாம்
பணம் பண்ண முடியுமோ பண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்.

மேற்கு ரயில்வேயில் ஜெனரல் மேனேஜராகப் பணிபுரியும் ஒரு
ஜெகதலப் பிரதாபன், ரிடையராக இன்னும் 2 வருடங்களே இருப்பதால் –
அதற்குள் முடிந்த வரை சேர்த்துக் கொள்ள விரும்பி, இந்த மருமகன் களை  அணுகி இருக்கிறார். அவருக்கு போர்டு மெம்பராக பதவி உயர்வு கொடுக்க
10 கோடி ரூபாய் பேரம் பேசி முடிவு பண்ணி 90 லட்ச ரூபாய் அட்வான்ஸ் (!)கொடுப்பதாக ஏற்பாடு.
இதில் மந்திரிக்கு எவ்வளவு – மருமகன் களுக்கு எவ்வளவு என்பது
அவர்களுக்கே வெளிச்சம்.
(பத்து கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து ஒரு பதவிக்குப் போனால் –
அந்தப் பதவியில் எத்தனை கோடி சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும் .. ? )

பதவி உயர்வோடு சேர்த்து –  (அதிகம் சம்பாதிக்க வாய்ப்பும் வசதியும் உள்ள)
ஒரு குறிப்பிட்ட இலாகாவும் (எலெக்ட் ரிகல் மற்றும் சிக்னல்கள் பிரிவு )
கிடைக்க ஒப்பந்தம்.
ஆனால் குறிப்பிட்ட இலாகாவை கவனித்து வரும் மெம்பர் ஜூன் மாதம் தான்
அதைக் காலி செய்வார்.  எனவே அதுவரை மெம்பர் பதவியுடன் தற்போது
வகித்து வரும் மேற்கு ரயில்வே ஜெனரல் மேனேஜர் பதவியையும்
(additional responsibilities) சேர்த்து வகிக்க தற்காலிக ஏற்பாடு.

இந்த 90 லட்சம் ரூபாயையும் இந்த திருட்டு ஜெனரல் மேனேஜர்  
எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார் என்று பார்த்தால் அவரது  சாமர்த்தியத்தைக் கண்டு பிரமிப்பு ஏற்படுகிறது.
அவர் மெம்பராக பதவி ஏற்ற  பிறகு
சிக்னல்ஸ் பிரிவு ஜூன் மாதம் அவர் கைக்கு வந்த பிறகு –
ஆர்டர்கள் கொடுப்பதாகச் சொல்லி
ஒரு சிக்னல் தயாரிக்கும் கம்பெனி முதலாளியை இந்த 90 லட்ச ரூபாயை  கொடுக்க ஏற்பாடு பண்ணி இருக்கிறார் !  முதலில் கையும் களவுமாக மாட்டியது அந்த ஆள் தான்.

இவரை விட, பதவியில் மூத்தவரான, 
நியாயமாக வரிசையில் வந்தால்,
அடுத்து மெம்பராக பதவி உயர்வு பெற வேண்டியவர்
வயிறு எரிந்தததன் விளைவு, \
விஷயம் சிபிஐ க்கு போய், 
அதிசயமாக அவர்களும்  செயல்பட்டு –

விளைவு – விஷயம் இப்போது சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.
வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே இல்லாத அமைச்சர் –
எனக்கு என் மருமகன் களுடன் எந்தவித பிசினஸ்  உறவும் கிடையாது.
அவர்களின் எந்த செயல்களுக்கும் நான் எந்தவிதத்திலும் பொறுப்பில்லை.
சிபிஐ இந்த விஷயத்தில் தாராளமாக விசாரணையை துரிதப்படுத்தலாம்
என்று கூறி விட்டார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி  செய்தித் தொடர்பாளரோ –
அதான் அமைச்சரே  சிபிஐ  விசாரணை  கேட்டு விட்டாரே –
இதைவிட வேறு என்ன வேண்டும் என்று மீடியாவையே
எதிர் கேள்வி  கேட்கிறார் !

காங்கிரஸ்  தலைவியோ – எதற்கெடுத்தாலும்  ராஜினாமா
கேட்பதைத் தவிர எதிர்க்கட்சிகளுக்கு
வேறு எந்த வேலையும் இல்லை என்று கூறி விட்டு போய்க்கொண்டே
இருக்கிறார்.

சிங்க் …?  – வழக்கமாகவே வாயைத்திறக்க மாட்டார்.
இப்போது .. ?  உதடுகளை  fevicol போட்டு ஒட்டிக் கொண்டு விட்டார்.

இப்போது சண்டிகரிலிருந்து (இந்த மந்திரி அங்கிருந்து தான் வந்தார் !)
சில விசேஷ பதிப்புகள் வந்திருக்கின்றன –

மருமகன் கள் மட்டுமல்ல.  மந்திரி மகன் களும்  இதே ரகம் தான்.
ஆறு வருடம் முன்னர் – சும்மா சுற்றிக் கொண்டிருந்த மகன் கள் –
பெரிய மருந்துக் கம்பெனி ஆரம்பித்து – bogus  மருந்துகளை supply பண்ணி
இன்று 150 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள் என்று.

ரயிலில் பயணம் செய்யும் – உங்களைப் போன்ற, என்னைப்போன்ற –
சாதாரண  மக்கள் கொடுக்கும் டிக்கெட் பணம் இறுதியில் எப்பேற்பட்ட
இடங்களைப் போய்ச் சேருகிறது பாருங்கள்…. !

ஒருவர் இருவர்  திருடர்கள் என்றால் பரவாயில்லை.
ஆனால் – வரிசையாக பத்து நாளைக்கு ஒரு திருட்டு மந்திரி
வெளிப்பட்டால் … ?
அத்தனை பேரும் திருடர்கள் என்றால் என்ன செய்வது ?

கட்சியின் பெயரை மாற்றி விடலாம் – திருட்டுப் பயல்கள் கட்சி என்று !!
கிராமத்தார்களுக்கு   சுலபமாகப் புரியும் !!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to திருட்டுப் பயல்கள் …..

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இப்பொழுது கிடைத்த செய்தியின் படி,இந்த “திருட்டுப் பயல்கள் கட்சி”க்குதான் கர்நாடக மக்கள் அமோக ஆதரவு கொடுத்து மீண்டும் ஆட்சிபொறுப்பை கொடுத்துள்ளார்கள்..
    நண்பரே! நீங்கள் உங்கள் பேத்திக்கு உலக விஷயங்களை போதிப்பது..அதிக பயன் தருவது மற்றும் சால சிறந்தது என நான் கருதுகிறேன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி கண்பத்.

      ஆனால் என் கருத்து —

      கர்னாடகாவில் பிஜேபி கட்சிக்கு தண்டனை தேவையாக இருந்தது –
      எடியூரப்பாவின் கூத்துக்களை எல்லாம் கண்டிக்காமல்
      அவர் தவடையை பிடித்து கெஞ்சியதற்காக, கொஞ்சியதற்காக.

      அங்கு பிஜேபி யை கண்டிப்பதற்காக நினைத்து காங்கிரசுக்கு வாழ்வு
      கொடுத்து விட்டார்கள்.

      ஆனால் இதே கர்னாடகாவில் நாளைக்கே பார்லிமெண்ட்டுக்கு
      தேர்தல் நடந்தால் கூட – அவர்கள் ஓட்டுப்போடுவது
      வேறு விதமாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. ஜோதிஜி's avatar ஜோதிஜி சொல்கிறார்:

    கடைசி வரியாக படித்தது இப்போது இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

    என்ன செய்வது? நமது அமைச்சர்கள் 50 வயதைத் தாண்டியவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலோருக்கு ரத்த அழுத்தம் இருந்து தொலைக்கிறது; அதனால் உப்புச் சேர்த்து சாப்பிடுவதில்லை!

  3. வினோத்'s avatar வினோத் சொல்கிறார்:

    /// ரத்த அழுத்தம் இருந்து தொலைக்கிறது ;உப்புச் சேர்த்து சாப்பிடுவதில்லை….///

    ரத்த அழுத்தம் மாதிரி .. சொத்து அழுத்தம் எதாவது இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் , குறிப்பிட அளவுக்கு மேல் சொத்து சேர்த்தா செத்துடுவன்னு டாக்டர் சொன்னா எப்படி இருக்கும் ?

    • சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

      //அளவுக்கு மேல் சொத்து சேர்த்தா செத்துடுவன்னு டாக்டர் சொன்னா எப்படி இருக்கும் ?//
      ஹஹ்ஹாஹா…
      நல்ல கற்பனை வினோத்!
      உலகின் மிகவும் பெரிய ஜனநாயக நாட்டின் நிலை இதுதான்!
      65-68 சதவிகித மக்களால் எதிர்க்கப்படும் ஒரு கட்சிதான் நம் எல்லோரையும் ஆண்டுக்கொண்டிருக்கிறது.
      வாழ்க (மிகப்பெரிய) ஜனநாயகம்!!!

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        இதற்கெல்லாம் ஒரு முடிவு வந்தே தீரும்.

        ஆனால் …….

        நினைப்பதை எல்லாம் எழுதும் அளவிற்கு சுதந்திரம் – இப்போது இல்லை.
        கொஞ்சம் அதிகம் எழுதினால் கூட – blog – முடக்கப்பட்டு விடும்.
        எனவே தான் அநேக சமயங்களில் அடக்கியே வாசிக்க வேண்டி இருக்கிறது.

        இந்த பாரதத் திருநாட்டில் மீண்டும் ஒரு வாஞ்சிநாதன், ஒரு பகத்சிங் தோன்றாமலா
        போய் விடுவான் .. ?

        – வாழ்த்துக்களுடன்,
        காவிரிமைந்தன்

  4. srini's avatar srini சொல்கிறார்:

    thirutu payalgal katchi karanatakavil amoga vetri….. vazhutuhkal. idhu thaan india..

  5. AAR's avatar AAR சொல்கிறார்:

    If this is a fiction, then the best option is to destroy the Country and Constitution. Split the Country into 8 or 10 manageable parts. Create a new Constitution and bring in new Govt Administrative structure with new people. Some of these parts could be given to well managed countries like Singapore or Scandinavia for Governance control.

    • வினோத்'s avatar வினோத் சொல்கிறார்:

      ஆர்… வியாபரத்தின் அடிப்படை விதி..கொடுக்கும் விலைக்கு தகுந்த பொருள் தான் கிடைக்கும்..

      அரசியலின் அடிப்படை விதி… மக்களுக்கு தகுந்த அரசு தான் கிடைக்கும்.

      அரசன் ஆண்டபோது அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி.. இப்போது மக்கள் எவ்வழி அரசு அவ்வழி.

      இதை அரசியல் மட்டுமல்ல .. எல்லாத்துறையிலும் பார்க்கலம்.
      தவறு நம் பக்கம் தான். இதில் 1% கூட சந்தேகம் வேண்டாம் உங்களுக்கு..

  6. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    அரசியல் என்பது “பிழைப்பு” என்பதாக மாறி பல காலமாகி விட்டது.
    கூட்ட்ணி ஆட்சியில் கட்சிகள், “பசையுள்ள” இலாகாவை கேட்டு
    பெற்று தங்கள் மாநிலங்களிலே போஸ்டர் “ஓட்டி”க் கொள்வதென்பது
    ORDER OF THE DAYவாகி விட்டது.

    என்ன செய்ய?

    தமிழகத்திலே கூட பல மந்திரிகள் பத்துத் தலைமுறையைத் தாண்டும்
    வண்ணம் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். அதே சமயம் கை
    செலவிற்கு காசு இல்லாமல் உயிர் நீத்தவர்களும் உண்டு. பதவியை
    தன் சொந்த “பவுசு”க்காக பயன்படுத்தக் கூடாதென்கிற நியாயம் கற்றவர்கள்
    இப்போது எந்த கட்சியிலும் இல்லை.

    சமீபத்தில் பார்த்த ஒரு படத்தில் இந்த வசனம் வருகிறது: “….. மந்திரின்னா
    மாவாட்டிக்கிட்டு இருக்கணும்னு நெனக்கிறியா? மாசத்துக்கு அஞ்சு
    கலயாணம், பத்து பத்திரிக்கை, காதுகுத்து. கவருக்கு இரண்டாயிரம்னாலும்
    மாசத்துக்கு ஒரு லட்சம். பணம் கொடுத்தா சீட். இல்லே ஆள விடு. இரண்டு
    நாள்ல சொல்லு………”

    இப்படியான (அரசியல்) சூழ்நிலையிலே பணமில்லாமல் பஜனைக்குக் கூட
    ஏற்பாடு செய்ய முடியாது.

    IN DEMOCRACY, PEOPLE GETS WHAT THEY DESERVED என்பதாக ஒரு
    மஹா வாக்கியமுண்டு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.