மறுபிறப்பு – நிஜம் தானா ? – திகைக்க வைக்கும்
சில தகவல்களோடு ஒரு அலசல் …..(பகுதி-1)
சிறு வயதிலிருந்தே இந்தப் பிரச்சினையின் தாக்கம் அநேகமாக
அனைவரிடத்தும் உண்டு.
இளைஞனாக இருந்தபோது – நான் அவ்வப்போது இது குறித்த தகவல்களைத்
தேடிப்படிப்பதுண்டு. ஆன்மிகப் பெரியவர்களின் உரையைக் கேட்டும்,
படித்தும் கிட்டத்தட்ட மனதில் ஒரு தீர்மானம் ஏற்பட்டு விட்டது.
சில விஷயங்களில் விளக்கங்கள் பெற அலைந்து திரிந்து,
ஆன்மிகப் பெரியவர்கள் சிலரிடம் இது குறித்து ஓரளவு விவரமாகவும்
கேட்டறிந்தேன்.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இது குறித்து நிறைய தகவல்களைத்
திரட்ட ஆரம்பித்தேன். இதே போல், இந்த தலைப்பு குறித்து அக்கரை
உள்ளவர்களுடன் ஒரு ஆழ்ந்த விவாதம், அலசல் நிகழ்த்த வேண்டும்
என்று நீண்ட நாட்களாகவே நினைத்திருந்தேன்.
என் கருத்தை மற்றவர்கள் மீது திணிப்பது என் நோக்கமல்ல.
இந்த வலைத்தளம். எனக்குத் தோன்றுவதை மட்டும்
எழுதிவிட்டுப் போக அல்ல
எனக்குத் தெரிந்ததை, நான் யோசிக்கும் கோணங்களில்
எழுதுவதோடு, அந்தந்த தலைப்புகளில் மற்றவர்களின் கருத்துக்களையும்,
தெரிந்து கொள்ள வேண்டும், ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றத்திற்கு
வழி வகுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
எனக்குத் தெரியாத பல தகவல்களை நான் இந்த வலைத்தளத்தின்
பின்னூட்டங்க்களின் மூலம் பெற்றிருக்கிறேன்.
எனவே, மறுபிறப்பு பற்றி –
எனக்குத் தெரிந்ததை,
நான் அறிந்தவற்றை,
நான் உணர்வதை எழுதுவதோடு,
இந்த வலைத்தளத்தில் என்னோடு
தொடர்ந்து பயணம் செய்யும் சக நண்பர்களின் அனுபவங்களையும்,
உணர்வுகளையும், தெரிவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காகவே இந்த தலைப்பில் இங்கு எழுதுகிறேன்.
இது குறித்து, அனேகமாக ஒவ்வொருவருக்கும் உணர்வுபூர்வமான
அனுபவங்களும், புரிதல்களும், செய்திகளும் நிச்சயம் இருக்கும்.
அத்தகைய தலைப்பு இது !
அவர்கள் தங்களது எண்ணங்களையும், அனுபவங்களையும் இங்கே
பின்னூட்டங்களின் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த இடுகையை 3 பகுதிகளாக எழுதுவதாக உத்தேசம்.
மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்டு, உரிய முறையில்
கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள இது உதவியாக இருக்குமென்று
நினைக்கிறேன்.
——————————————-
இந்து மதம், சீக்கியமும் கூட, மறுபிறப்பில் முழு நம்பிக்கை
வைத்திருக்கிறது –
அது ஏற்கெனவே நமக்குத் தெரியும்.
உலகின் மற்ற முக்கியமான மதங்கள் இது குறித்து
என்ன சொல்கின்றன ?
புத்தர் இது குறித்து மிகத்தீர்மானமான கருத்துக்களைச்
சொல்லி இருக்கிறார்.
பெரும்பாலான இந்துக்களால், நாத்திகராகக் கருதப்படும் புத்தர்
மறுபிறவியை நம்பினார் !
மறுபிறவி உண்டு என்பதும் மனிதன் செய்யும்
பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அது அமையும் என்றும் புத்த மதம்
வலியுறுத்திக் கூறுகிறது.
கிறிஸ்தவ மதம் மறுபிறப்பு என்று குறிப்பாகச் சொல்லா விட்டாலும்,
புண்ணியம் செய்பவன் மோட்சம் பெறுவான் என்றும்
பாவம் செய்பவன் நரகம் செல்வான் என்றும் உறுதிபடச் சொல்கிறது.
இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் – எனக்கு அதிகம் தெரியாது
என்றாலும், நான் புரிந்து கொண்ட வரையில் இஸ்லாம் மறுபிறவியில்
நம்பிக்கை கொண்டிருக்கிறது.
நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கேற்றபடி
அடுத்த பிறவி அமையும் என்று அதுவும் சொல்கிறது என்றே நம்புகிறேன்.
இந்து புராணங்கள் அனைத்திலும், மறுபிறவியைப் பற்றிய
பல கதைகள் வருகின்றன. ராமாயணத்தில் –
சீதை, ராவணன், கும்பகர்ணன், விபீடணன் உட்பட பல பாத்திரங்களைப்
பற்றிய முன்பிறவிக் கதைகள் வருகின்றன.
மஹாபாரதத்தில் பீஷ்மர் -அம்பை- சிகண்டி கதைகள் .
மறுபிறப்பைப் பின்பற்றியவை..
வடமொழிக் காவியங்களைத் தவிர, தமிழில் கூட –
சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
மறுபிறப்பைப் பற்றி நம்பிக்கையுடன் கூறுகின்றன.
மணிமேகலை, உதயகுமாரன் ஆகிய பாத்திரங்களின் முற்பிறப்பை
பற்றிய முழு விவரங்களும் மணிமேகலையில் கொடுக்கப்படுகின்றன.
கிட்டத்தட்ட 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே
இளங்கோ அடிகள் விதியிலும், மறுபிறப்பிலும் நம்பிக்கை வைத்து,
“ஊழ்வினை உருத்து வந்து உருட்டும்” என்கிறார்.
அதற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த திருவள்ளுவரோ –
சர்வசகஜமாக ” உறங்குவது போலும் சாக்காடு –
உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்று மறுபிறவியைப் பற்றி
சொல்லிச் செல்கிறார்.
மறுபிறவியை நம்புவதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன.
இந்து மத தத்துவங்களின்படி – மனித உடல் வேறு.
உடலில் இயங்கும் ஆன்மா வேறு.
உடல் தான் இறக்கிறது – உடல் தான் அழிகிறது.
ஆன்மா அழிவதில்லை. மனிதன் இறந்தவுடன் உடலிலிருந்து
வெளியேறும் ஆன்மா –
அதன் விதிப்பயன்களை அனுபவிக்க மீண்டும் இன்னொரு
உடலில் குடி கொள்கிறது.
உடல் தற்காலிகமானது – அழியக்கூடியது.
ஆன்மா நிரந்தரமானது. அழிவில்லாதது.
செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப
மீண்டும் மீண்டும் உருவெடுக்கக்கூடியது.
சிவபுராணப் பாடல் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் –
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
ஒரு விஷயத்தை இல்லை என்று சொல்வது மிகவும் சுலபம்.
இல்லை என்று சொல்பவர்களுக்கு -எதையும் நிரூபிக்க வேண்டிய
பொறுப்பு இல்லை.
ஆனால் இருக்கிறது என்று சொல்வதற்கு நிரூபணம் தேவைப்படுகிறது.
அதுவும் இந்தக் காலத்தில் எதற்கும் விஞ்ஞானபூர்வமான
நிரூபணம் தேவைப்படுகிறது.
மறுபிறவி உண்டு என்பதை நிரூபிக்க முடியுமா ?
(அடுத்த பகுதியில் தொடரலாமே ….. )



தற்செயலாக கண்ணில் பட்ட இந்த புத்தகத்தை புரட்டி பார்த்தபொழுது அது என்னையே புரட்டி போட்டுவிட்டது. முடிந்தவர்கள் தவறாது வாசியுங்கள். விஞ்ஞானத்தில் மூளையை பற்றி எவ்வளவு கண்டு பிடித்திருக்கிரார்களோ அவ்வளவையும் தெரிந்த ஒரு highly trained neurosurgeon இன் மரண விளிம்பு அனுபவங்கள் அருமையாக விஞ்ஞான விளக்கங்களுடனும் அவர் அனுபவித்த மேல்லோக அனுபவத்தையும் தன் வாழ்க்கையையும் மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார் இந்த புத்தகத்தில். தவற விடாதீர்கள்! (சில நேரங்களில் ஏன் இந்த புத்தகம் என் கண்ணில் படவேண்டும் என்று எண்ணியதுண்டு. எத்தனையோ லட்சக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருக்கோம் பொழுது. எல்லாவற்றிற்கும் ஏதோ காரணம் இருக்கிறது. வாசித்தால் சொல்லுங்கள் உங்கள் எண்ணங்களை)
roof of Heaven: A Neurosurgeon’s Journey Into the Afterlife
Book
A SCIENTIST’S CASE FOR THE AFTERLIFE Thousands of people have had near-death experiences, but scientists have argued that they are impossible. Dr. Eben Alexander was one of those scientists. A highly trained neurosurgeon, Alexander knew that NDEs feel real, but are simply fantasies produced by brains under extreme stress. Then, Dr. Alexander’s own brain was attacked by a rare illness. The part of the brain that controls thought and emotion-and in essence makes us human-shut down completely. For seven days he lay in a coma. Then, as his doctors considered stopping treatment, Alexander’s eyes popped open. He had come back. Alexander’s recovery is a medical miracle. But the real miracle of his story lies elsewhere. While his body lay in coma, Alexander journeyed beyond this world and encountered an angelic being who guided him into the deepest realms of super-physical existence. There he met, and spoke with, the Divine source of the universe itself. Alexander’s story is not a fantasy. Before he underwent his journey, he could not reconcile his knowledge of neuroscience with any belief in heaven, God, or the soul. Today Alexander is a doctor who believes that true health can be achieved only when we realize that God and the soul are real and that death is not the end of personal existence but only a transition. This story would be remarkable no matter who it happened to. That it happened to Dr. Alexander makes it revolutionary. No scientist or person of faith will be able to ignore it. Reading it will change your life
அருமையான உங்கள் ஆக்கத்தை தொடருங்கள்,
நன்றி,
சுதாகரன்
தெரிந்து என்ன செய்யப் போகிறோம்? மறுபிறவியில் நம்பிக்கை வைத்த இந்து அரசியல்வாதிகள் கொள்கைளை மாற்றிக் கொண்டார்களா? மன ஆறுதலுக்காக வேண்டுமானால் இதெல்லாம் உதவும்.
நம்பிக்கை வைப்பது ஒரு ரகம், அதை வைத்திருப்பது போல் நடிப்பது இன்னொரு ரகம். உண்மை நம்பிக்கை உடையவர்கள் அரசியல் வாதிகலாவது மிக குறைவு. தெரிந்து கொண்டால் அறிந்து செய்யும் பாவங்களை குறைக்கலாம் தானே.
Logically this concept cannot be defended. Population has exploded since the beginning of time.
Are new souls coming to earth? Some would say that lower forms of life are promoted to human form. Unlike humans, lower forms of life are programmed to behave by nature. They cannot be rewarded a human life on merit basis.
We live in a world still dominated by religious dogma and thinking. Unfortunately our thinking process is clouded and exploited by powers that be. Reform minded individuals should shun, and question these attitudes in society.
From a philosophical standpoint, what we see is not real. How can we say that this conversation is not happening in a dream? We all know that dream is not real. When we die, we will know the Truth. Until then this is all speculation.
Religion treats individuals, at best as naive children or at worst idiots.
I am not saying that religion has no place in society. It brings a lot of comfort to lot of people who cannot escape their surroundings. Here the escape doesn’t have to be physical. We can free our mind to live a peaceful life.
லாஜிக்கல் என்கிற பெயரில் இல்லாஜிக்கல் கேள்விகளைக்
கேட்டு வைப்பது மிக சுலபம்.
யானை முதல் எறும்பு ஈறாக என்கிற உயிர்களின்
வரிசை சொல்லப்பட்டிருக்கிறது. தசாவதார வரிசை
(கமலஹாசனின் பப்படம் இல்லை) நீருபணம்
செய்யப்பட்டுள்ளது. இலட்சங்களில் “யோனி” வரிசை
சொல்லப்பட்டிருக்கிறது.
கொஞ்சம் மெனக்கெட்டுப் படிக்க வேண்டும். பணமும்
விழையும் வசதிகளும் கைவரப் பெற்ற பின்னும்
மனம் நிறைவடையாது, ஒரு சூன்யம் தொடர்வது
எங்ஙனம்?
எல்லாவற்றிலும் கை வைத்துவிட்டு, “தெய்வம்
என்பதோர் சித்தம் உண்டாகி”றதே (மாணிக்கவாசகர்)
அது எவ்விதம்?
இதில் அரசியலும் வாதிகளும் எங்கு வந்தார்கள்?
வலுக்கட்டாயமாக பகுத்தறிவு பாடம் பயின்ற அல்லது
பயிற்றுவிக்கப்பட்டவர்களின் தனிமனித ஒழுக்கம்
உயர்ந்திருக்கிறதா? தரங்கெட்டிருக்கிறதா?
//..Are new souls coming to earth? Some would say that lower forms of life are promoted to human form. Unlike humans, lower forms of life are programmed to behave by nature.They cannot be rewarded a human life on merit basis.//
இதை முழுமையாக ஓஷொ கீதை ஒரு தரிசனம் புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்.. அதில் நான் புரிந்துகொண்டது..
மனித வாழ்க்கை ஆரம்பிக்கும்போது .. இனம் மதம் மொழி எதுவும் இல்லாத குழந்தையாக தான் ஆரம்பிக்கின்றது.
வளரும் சூழலுக்கு தகுந்தபடி மற்றவை அமைகின்றன. தனிமனிதரின் குண இயல்புகள் தனிப்பட்டவை.
மனம் என்பதெ குழந்தகளுக்கு இல்லை. மனம் வளர்வதற்கான சாத்திய கூறு மட்டுமே உண்டு, ஆனால் மிருகங்களும் அதே மனம் அற்ற நிலையில் தான் இருக்கின்றன இங்கே மனத்தின் சாத்தியகூறும் கிடையாது.. மனம் என்பது வளர்ச்சியினால் வருவது.
டார்ஜான் படங்களில் வருவது போல் குழந்தை பிறந்தவுடன் மனித சமூகத்தில் இருந்து பிரிந்து இருந்தால் , மனம் பண்பாடு மொழி, இதில் ஏதாவது அந்த குழந்தைக்கு கிடைக்குமா ?
பல அடுக்களில் உடல் கட்டமைக்கப்படு உள்ளது. உடல் , இந்திரியம், மனம், புக்தி, ஆத்மா என ..
இதில் புத்தி மனம், புத்தி எல்லாம் பழக்கத்தினால் வருவது. சமூகம் தருவது. அனைத்து உயிர்களும்கும் ஆன்மா ஒன்றுதான்.
அனைத்து கருவிகளுக்கும் மின்சாரம் ஒன்று தான். ஏசி யில் குளுமையாக வெளிப்படும் மின்சாரம், அவன் / அடுப்பில் சூடாக வெளிப்படுகின்றது.
அடுப்பை மட்டும் பார்ப்பவர், இதில் வேலை செய்யும் மின்சாரம் தான் கணியை , ஏசியை இயக்குகிறாது என்பதை எப்படி நம்புவர் ?
அதெபோல் தான் இதுவும். ஒரே ஆன்மாதான் எல்லா உயிரிலும் உள்ளது.
நீஙகள் சொன்னத்போல் நான் இறந்தால் தான் இதை அனுபவிக்க முடியும்.
இத்ற்கு நானும் முயற்ச்சிக்கிறென்
Peace, your comments are excellent.
இறப்பும் பிறப்பும் ஒரு தொடர் சங்கிலி என்று தான்
இந்து தர்மம் (மதமா?) சொல்கிறது.
“புனரபி ஜனனம்
புனரபி மரணம்”
மீண்டும் (மீண்டும்) பிறப்பு
மீண்டும் (மீண்டும்) இறப்பு. என்கிறார் ஆதிசங்கரர்.
(பஜ கோவிந்தம்)
சாகத்தான் போகிறாய். மீண்டும் பிறக்கத்தான்
போகிறாய் என்பதே வேதாந்தாதிகளின் கோட்பாடு.
நசிகேத சம்வாதம் மிக பிரபலமான ஒரு வேதாந்த
பாடம்..
இதை அறியவும் புரியவும் “நமக்கும் மரணம்
உண்டு” என்பதை உணர வேண்டும். கொஞ்சம்
கஷடமான பால பாடம்.
எங்கள் ஊர் சுடுகாட்டில் “இன்று இவர் நாளை நீ”
என்று பல காலத்திற்கு முன்னதாக எழுதிய தகர
போர்டு இன்னமும் தொங்குகிறது.
கண்ணதாசன் கூட பல நேரங்களில் ஆன்ம தத்துவம்
குறித்து பாடியிருப்பதாகவே கருதுகிறேன்.
அவரே கூட ஒரு அவதாரம் என்கிற அபிப்ராயமும்
என்னிடம் உண்டு.
“தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவ்ரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்-நான்
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்….”
என்கிற பாடல் வரிகள் காதலைத் தாண்டிய ஒரு
அனுபவத்தை பகிர்வதாக கருதுகிறேன்.
பிரபல எழுத்தாளர், லா சா ரா கூட (அவரது மரணத்துக்கு
முன்) த்ன்னுடல் கிடப்பதைக் கண்ட (மிகப் பெரிய) ஓர்
அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
உங்கள் நோக்கையும், அனுபவத்தையும் அறிய
ஆவலோடு இருக்கிறேன்.
வணக்கம்
என்னுடைய தளத்தில் இதுபற்றி மிக விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறேன். பல சம்பவங்களையும் குறிப்பிட்டிருக்கிறேன்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் இயான் ஸ்டீவன்சன் தலைமையில் ஒரு மிகப் பெரிய குழுவினரே இதுபற்றி ஆராய்ந்து பல கட்டுரைகளை, புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
அதுபோல பெங்களூருவில் உள்ள NIMHANS நிறுவனம் சார்பாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல நிரூபிக்கப்பட்டும் உள்ளன.
ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் அதிகம் இல்லை.
பின்னர் தொடர்கிறேன்
உங்களுக்கு பணம் மற்றும் நேர வசதி இருக்குமானால் Many Masters Many Lives என்ற புத்தகத்தை படிக்க வேண்டுகிறேன்.
விவரமாக, விளக்கமாக, நிறைய தகவல்களுடன்
பின்னூட்டம் இடும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.
எனக்கும் இந்த பின்னூட்டங்களிலிருந்து நிறைய
புதிய தகவல்கள் கிடைக்கின்றன.
நண்பர்கள் சுதா, வினோத் ஆகியோர் குறிப்பிட்டிருக்கும்
நூல்களை நான் படித்ததில்லை. நிச்சயம் முயற்சிப்பேன்.
அவர்கள் தகவல்களுக்காக நன்றி.
நண்பர் ரமணன் – இந்த தலைப்பில் நீங்கள் எழுதியவற்றை
இப்போது தான் படித்தேன். நன்றி. உங்களிடமிருந்து
மீண்டும் இன்னும் input கிடைக்குமென்று நம்புகிறேன்.
நண்பர் வெங்கட் ரமணி –
உங்கள் விளக்கம் அருமை.
நீங்கள் நினைவுறுத்தும் –
“தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்-நான்
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்….”
என்கிற கண்ணதாசனின் வரிகளைக் கேட்டு, பல முறை
நானும் வியந்திருக்கிறேன்.
நண்பர் peace அவர்களுக்கு – உங்கள் வாதத்திற்கான
விளக்கங்கள் –
பின்னூட்டங்களிலேயே கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
இல்லையென்றால் தான் என்ன – இடுகையின் இறுதியில்
இது பற்றி விவரமாகப் பேசுவோமே !
இன்னும் கொஞ்சம் விவாதத்தை தொடர்வோம்.
இந்த இடுகையின் அடுத்த பகுதியை திங்கட்கிழமை எழுதுகிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
ஒஷொவின் பகவ்த் கீதை ஒரு தரிசனம் .. 18 புத்தகங்கள் அடங்கியது ஓவ்வொன்றும் 300 பக்கங்களுக்கு மேல் இருக்கும். மனதின் பல ரகசியங்களை விவரிக்குன் நூல்.. படித்தல் உங்களின் கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த தலைப்பில் விவாதிக்க ஆசை ஆனால் நேரம் தான் இல்லை. முடிந்தால் Brian L Weiss என்று google பண்ணி பாருங்கள்.
நன்றி எழில்.
நீங்களும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்
என்பது என் விருப்பம். முயற்சி செய்து நேரம் ஒதுக்குங்களேன் !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
மிகவும் சிந்திக்க வைக்கும் பதிவு..அதை விட அருமையான பின்னூட்டங்கள்.அனைவர்க்கும் நன்றி.
என் கருத்து:.மறுபிறப்பு கண்டிப்பாக உள்ளது.
மனிதன் எவ்வளவு முயன்றாலும் விடை காண முடியாத ரகசியங்களில் ஒன்றுதான் “மரணத்திற்குப்பிறகு என்ன ஆகிறது?” எனும் கேள்வி.
நம் அறிவை வைத்து இதனை விளக்க முடியாது.ஏனெனில் பல கோடி வருடங்கள் வயதான இந்த பிரபஞ்சத்தில் நம்முடைய அறிவு என்பது ஒரு ஆறாயிரம் ஆண்டுகளில் நம் மனித இனத்தின் அனுபவத்தின் மூலம் பெற்றது தான்.
ஒரு உதாரணம் சொல்கிறேன்.ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் யாரேனும் நம்மிடம் ஒரு 1″x 1/2″ அளவுள்ள ஒரு தகிடை காண்பித்து இதில் நூறு பாடல்கள் உள்ளன. என சொல்லியிருந்தால் நாம் அவரை கேலி செய்திருப்போம்.இன்றோ அதையே “எனக்கு கொடுங்கள்.நான் copy செய்து கொண்டு கொடுக்கிறேன்!” என்கிறோம்.அதற்குப்பெயர் Pen Drive என்றும் வைத்துள்ளோம்..
நூறு ஆண்டுகளுக்கு முன் ராமாயணத்தில் புஷ்பக விமானத்தை பெளராணிகர் விளக்கும்போது பலர் கேலி செய்திருக்கலாம்.ஆனால் இன்று அவர்களின் கொள்ளுப்பேரன்கள் அதில் பயணம் செய்கிறார்கள்.
The non existence of proof for something does not prove its non existence என்பது இப்பொழுது விஞ்ஞானிகளே ஏற்றுகொண்ட ஒரு விதி.
ஒரு ஜென் குரு தூக்கத்திலிருந்து விழித்து, மிகுந்த சிந்தனையுடன் காணப்பட்டாராம்.காரணம் கேட்ட சீடர்களிடம் அவர் ” என்னை ஒரு நாய் துரத்துவதுபோல கனவு கண்டு திடுக்கிட்டு விழித்துகொண்டேன்.அதிலிருந்து ஒரே குழப்பம்.!” என சொன்னாராம்.”அதுதான் கனவாயிற்றே என்ன பிரச்சினை?” என்று அவர்கள் வினவ,அதற்கு அவர் “என் கனவில் நாய் வந்ததா அல்லது நாய் கனவில் நான் இருக்கிறேனா என்று தெரியவில்லை?” என சொன்னாராம்.
அரசியல் வாதிகள் அடுத்த பிறவியை நம்புவதில்லை என ஒருவர் சொல்லியுள்ளார்.இந்திய அரசியல்வாதிகள் இந்த பிறவியையே நம்பாதவர்கள்.அதே சமயம் நம்மை போன பிறவியை நம்பசெய்கிறவர்கள்.
நல்லவைகளை நிரூபிப்பதில் நேரத்தைக்கடத்தாது,நம் முன்னோர்களை நம்பி இந்த பிறவியை பயனுற அமைத்துக்கொள்வோம்.
ஒரு குழந்தை, எறும்பு ஒன்றை நசுக்கி துன்பப்படுத்திய போது அதன் தாயார் “அப்படி செய்யாதே கண்ணே! அடுத்த பிறவியில் நீ எரும்பாகவும்,அது நீயாகவும் பிறந்து அது உன்னை துன்புறுத்தும்.!” என சொல்ல,கருவிலே திருவுடைய அந்த குழந்தை சொன்னதாம்..”ஏனம்மா இப்படி இருக்க கூடாது? போன ஜன்மத்தில் நான் எறும்பாக இருந்து அது நானாக இருந்து என்னை துன்புறுத்தியதின் பலனாகவும் இது இருக்கலாம் அல்லவா?”
நன்றி கண்பத்,
தொடர்ந்து கலக்குங்கள் !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்