இந்த இடுகை போன வாரமே வெளிவந்திருக்க வேண்டும்.
நடுவில் வாத்ரா, சல்மான் குர்ஷித் ஆகியோர்
போட்டிக்கு வந்து விட்டதில் இந்த பேட்டி ஒரு வார லேட்.
ஆனால் லேட்டாக வந்ததும் நல்லதாகி விட்டது.
வாத்ரா, சல்மான் குர்ஷித் விவகாரங்களுக்குப் பிறகு
இந்த பேட்டி பற்றிய செய்தியைப்
படிக்கும்போது இன்னும் கொஞ்சம் சுவை கூடுகிறது !
நானும் சில நாட்கள் காத்திருந்து பார்த்தேன்.
தமிழ், ஆங்கில பத்திரிகைகள் எதாவது இதை செய்தியாகப்
போடுகின்றதா என்று. ஊஹூம். ஏனோ தெரியவில்லை.
இந்திய பத்திரிகைகள் எதுவும் இதனை கண்டு கொண்டதாகவே
தெரியவில்லை. ரசனை கெட்ட மனிதர்கள் !!
ஆனால் நம் வலைத்தள நண்பர்கள்
இதை ரசிப்பார்கள் என்று தோன்றியதால் அது பற்றிய
ஒரு செய்தித் தொகுப்பு கீழே –
கடந்த 3ந்தேதியன்று (03/10/12) –
BBC தொலைக்காட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் நார்த்
என்பவருக்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
அவர்கள் பேட்டி அளித்திருக்கிறார்.
மிகுந்த உற்சாகத்துடன் பல்வேறு கேள்விகளுக்கு
பொறுமையாகவும், விவரமாகவும் பதில்
அளித்திருக்கிறார். வங்கித்துறை, இன்சூரன்ஸ் துறை
உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேலும் பல சீர்திருத்தங்களை
கொண்டு வரப்போகிறோம். இப்படிப்பட்ட நடவடிக்கைகள்
மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை
மீண்டும் எட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது
என்றெல்லாம் மிகுந்த உற்சாகத்துடன் பேசிக்கொண்டே
போகிறார்.
இடையே எசகுபிசகாக, பிபிசி செய்தியாளர்,
ப.சிதம்பரத்திடம் – இந்தியாவில் பெரும்பாலான
அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதாக மக்களிடையே
கருத்து நிலவி வருகிறதே. நீங்கள் இதைப்பற்றி
என்ன சொல்கிறீர்கள் ? என்று கேட்டிருக்கிறார் !
இத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை.
இதில் உங்கள் அனுபவம் எப்படி –
நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலாவது அப்படி வாங்கியுள்ளீர்களா
அல்லது வாங்கத தூண்டியுள்ளீர்களா என்று வேறு
கேட்டிருக்கிறார்.
ஜெர்க்காகி விட்டார் அமைச்சர்.சட்டென்று சீரியஸாகிப்
போன ப.சி. அவர்கள் –
– “பெரும்பாலான அமைச்சர்கள் லஞ்சம்
வாங்குகிறார்கள் என்ற கருத்தே முட்டாள்தனமானது.
இந்தியாவிலிருந்தோ அல்லது உலகத்தில் வேறு எந்த
மூலையிலிருந்து வேண்டுமானாலும் உள்ள யாராவது
ஒரு ஆளை என் முன் கொண்டு வந்து நிறுத்தி
அவரை, எனக்கு (ப.சி.க்கு)ஒரு ரூபாயாவது லஞ்சம்
கொடுத்தேன் என்று என் முகத்தைப் பார்த்து சொல்லச்
சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றிருக்கிறார் காட்டமாக !
BBC நியூஸ் ரிப்போர்ட்டிலிருந்து இது தொடர்பான
ஒரு பகுதி கீழே –
The finance minister denied
receiving a bribe himself
and said claims that most ministers
took such inducements
were “utter rubbish”.
இரண்டு விஷயங்கள் –
1)BBC ரிப்போர்ட்டர் கேட்டது போல் இந்தியாவில்
யாராவது இப்படி கேள்வி கேட்க முடியுமா ?
2)கேட்டால் ப.சி. அவர்களால் இதே பதிலைச்
சொல்ல முடியுமா ? அதுவும் இன்றைய சூழலில் ?
லேடஸ்டாக சல்மானையும் வாத்ராவையும்
பக்கத்தில் வைத்துக்கொண்டு… ?




பாவம் ப சி. பி பி சி நம் ஊர் என் டி டி வி போல என்று நினைத்துவிட்டார் போல. அவர்களுக்கு இவரால் காரியம் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை. அதனால் தான் கேள்விகள் இப்படி விழுகிறது. அமெரிக்க டி வி நிருபர் கேத்தி கொரிக் சாரா பாலினை பேட்டி எடுத்து அவர் ‘விஷயம் தெரியாதவர்’ என்று அம்பலப்படுத்தினார். அதுவும் அப்போது வைஸ் ப்ரெசிடென்ட் ஆக எலெக்ஷனில் நிற்கும்போது! அப்படி நம் அரசியல்வாதிகளும் மாட்டிக்கொண்டு முழிக்கப்போகும் ஒரு நன்னாளை தினமும் எதிர்பார்க்கிறேன்.
சிதம்பரத்தை நான் நேரில் பார்த்தால் கேட்க வேண்டிய கேள்விகள் என்று நூறு இருக்கிறது. ஆனால் மகன் அதற்குப் பிறகு என்ன செய்வார் என்று அணைவரும் அறிந்ததே.
ஜெயந்தி நடராஜன் கூட சிதம்பரத்துக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
இனிய நண்பர்களே, படித்துப் பாருங்கள். நமது செய்தித் தாள்கள் இப்படி செய்திகளைக் கண்டு கொள்ளாது. நன்றி திரு காவிரி மைந்தன்.
காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல் என்று வெளி நாட்டு ஊடகங்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்ததால் தான் இப்படி எடக்கு முடக்காக கேள்வி கேட்கிறார்கள். இதை என் அவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன் கேட்கவில்லை. அப்போதே அமைச்சர்கள் மீது ஊழல் பழிகள் இருந்தனவே.
நாம் நினைப்பது போல் BBC CNN FoxNews போன்றவை எல்லாம் உண்மையில் நடுநிலையானவை அல்ல. அவர்களது நாட்டு அரசின் உளவுத்துறை, வெளியுறவுத்துறை போன்றவைகளின் கணிப்பு மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் செய்தி வெளியிடும் அல்லது செய்தியை உருவாக்கும் பிரச்சார ஊடகங்கள். இவர்கள் ‘arab springs ‘ காலங்களில் இவர்கள் வெளியிட்ட செய்தியையும், உண்மையில் தரையில் நடந்தது என்ன என்பதையும் ஓரளவு களத்தில் நேரில் பார்த்தவன் என்று அடிப்படையில் தான் கூறுகிறேன்.
பார்த்துக்கொண்டே இருங்கள் இதுவரை கொலையாளி என்று ஒதுக்கி வைத்த இவர்களது அரசு (வரப்போவதை மனதில் வைத்து, இருக்கட்டுமே என்று ) மோடிக்கு விசா வழங்க இருப்பதால் அவர் ஆட்சியை தூக்கி தலயில் வைத்து விவரண படம் எடுத்து வெளியிட்டாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை.
மத்திய அமைச்சர் திரு.சிதம்பரத்தின் இந்த பேட்டி குறித்த செய்தி
இந்து நாளிதழில் வந்திருக்கிறது.
இந்தியாவில், திரு. கரன் தப்பார் பல தலைவர்களைத் தனது கேள்விக்
கணைகளால் திக்கு முக்காட வைத்திருக்கிறார். பத்தாண்டுகளுக்கு
முன்னர், திரு.நரேந்திர மோதியும், ஆறேழு ஆண்டுகளுக்கு முன்
செல்வி.ஜெயலலிதாவும் தப்பாரின் கேள்விகளுக்கு பதிலளிக்க
இயலாமல் தவித்திருக்கிறார்கள்.
பேட்டியினுடே ஒரு டம்பளர் தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு.
“தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், உங்களுக்கு பதிலளிக்கிறேன்”
என்று மோதியும்,
நீங்கள் விரும்பும் கேள்விகளை மட்டும் கேட்டு பதில் பெற என்னால்
முடியாது என்று ஜெயலலிதாவிடம் தப்பாரும் சொல்லி இந்த இரு
பேட்டிகளும் abrupt-ஆக முடிந்திருக்கிறது.
அசாங்கே தூதரகத்தில் தான் இருக்கிறார்.அவரை பிடித்து அமெரிகாவிடம் கொடுக்க பிரிட்டன் விரும்பு கிறது அவர் செய்த குற்றம் பிடிட்டிஷ்,அமெரிக்கசதிகளை உங்களைப் போல் அம்பலப் படுத்தியதுதான்.பத்திரிகை சுதந்திரம் என்பதெல்லாம் .அவர்கள் நன்மை பாதிக்காமல் இருக்கும்வரை தான்.”பாதலுக்கு ஒரு நீதி! இந்தப் பாவிக்கு ஒரு நீதியா! என்று கருணானிதி கதறினார்! சர்க்காரியா கமிஷன் முடிந்தது. சிவகங்கை தேர்தல் வழக்கு என்ன ஆச்சு?.ஒருசெங்கல்பிசாசு! இன்னொண்று பிடாரி! இவங்கள்ல எவனும் யோக்கியன் இல்ல!—காஸ்யபன்