சுதந்திரப் போராட்ட காலத்தில், ஏகப்பட்ட வக்கீல்கள்
காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆர்வத்துடன்
இயங்கினார்கள். அவர்களது புத்தி கூர்மை சுதந்திர
இயக்கத்திற்கு பயன்பட்டது. இந்த நாட்டின் விடுதலைக்கு
பயன்பட்டது.
அந்த பழக்கம் சுதந்திரம் பெற்ற பிறகும் தொடர்கிறது.
வக்கீல்கள் அதிகம் பேர் அரசியலில் ஈடுபடுகிறார்கள்.
காரணம் – அவர்களது வளைவு சுளிவான வேலை
நேரங்கள். அவர்களது வேலை நேரத்தையும்,
அவர்களது ஊதியத்தையும் அவர்களே தீர்மானித்துக்
கொள்ளக்கூடிய சுதந்திரம். பெரும்பாலும் வரி இல்லாத
வருமானம் ! (எந்த வக்கீலாவது வாங்கும் fees க்கு
ரசீது கொடுத்து பார்த்திருக்கிறீர்களா ?)
இன்றும் நேர்மையாக செயல்படும் வக்கீல்கள் பலர்
இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள்
வக்கீல் இனத்தில் சிறுபான்மையினரே !
இன்றைய தினத்தில் அதிக பட்ச வக்கீல்கள் காங்கிரஸ்
கட்சியில் தான் இருக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்த
தினத்திலிருந்து இன்று வரை பெரும்பாலான மாநிலங்களிலும்,
மத்தியிலும் -சில வருடங்களைத் தவிர -காங்கிரஸ்
தான் ஆட்சியில் இருந்திருக்கிறது.
விளைவு – அதிகார ஆணவம், மற்றவர்களை
துச்சமாக நினைக்கும் போக்கு, சட்டத்திற்கு தங்கள்
இஷ்டம் போல் வியாக்கியானம் கொடுத்து – சட்ட
விரோதமான செயல்களைச் செய்வது, புத்திசாலித்தனமாக
திருடுவது, பொய் சொல்வது, கட்டப் பஞ்சாயத்து
செய்வது – என்று சகலவிதமான கல்யாண குணங்களும்
நிரம்பியவர்களாக இருக்கிறார்கள் காங்கிரஸ் வக்கீல்கள்.
அதில் பல அமைச்சர்களும் அடக்கம்.
(காணாமல் போன)அபிஷேக் சிங்வி, மணீஷ் திவாரி,
கபில் சிபல் -என்று பலரைச் சொல்லலாம். அதில்
லேடஸ்டாக சேர்பவர் சல்மான் குர்ஷித்.
இந்த நாட்டின் சட்ட அமைச்சர் ஒரு தெருப்பொறுக்கியைப்
போலவும், பேட்டை ரவுடி போலவும் ஞாயிறு அன்று
லைவ் தொலக்காட்சி பேட்டியில் இந்தியா டுடே நிருபர்களிடம்
நடந்து கொண்டது அவர்களது ARROGANCE-ன் உச்சகட்டம்.
தான் எந்த ஊழலும் செய்யவில்லை என்று நிரூபிப்பதற்காக
மீடியாவைக் கூப்பிட்ட மந்திரி இறுதியில் இன்று
முழுவதுமாக துகில் உரிக்கப்பட்டு மக்கள் முன் நிர்வாணமாக
நிற்கிறார் –அவரே வரவழைத்துக் கொண்ட வினை அது.
தானும், தன் மனைவியும் சேர்ந்து செய்த, செய்யும்
ஊழல்களை மறைப்பதற்காக –
இந்த ஊழல் புகார்கள் அனைத்தும் india today
நிறுவனங்களின் அதிபர் அருண் பூரியால் தன் பெயரைக்
கெடுப்பதற்காக வேண்டுமென்றே இட்டு கட்டி விதைக்கப்பட
கதை என்று கூறினார். அது தவறு என்று கூறவும்,
மேற்கொண்டு ஆதாரங்களைக் காட்டவும் முற்பட்ட அதன்
நிருபர்களை அனைவரின் முன்னரும் மிரட்டினார்.
ஏளனம் செய்தார். மோசமான விளைவுகள் நேரும்
ஜாக்கிரதை என்றார். நாடு முழுவது வெட்ட வெளிச்சமாகி
விட்ட ஒரு மிகப்பெரிய ஊழலை – ஏதோ தன் மீதுள்ள
தனிப்பட்ட விரோதம் காரணமாக குறிப்பிட்ட மீடியா
நிறுவனம் கற்பனையாக உண்டு பண்ணிய கதை என்று
உருவகம் புனைய முனைந்தார்.
ஒரு விதத்தில் இதுவும் நல்லதாகி விட்டது. அனைத்து
ஆங்கில செய்தி சானல்களையும் ஆளும் காங்கிரஸ்
பணபலமும் அதிகார பலமும் கொண்டு –
தன் சார்பு நிறுவனங்களாக மாற்றி விட்டபோது –
தன் ஆத்திரத்தினாலும், அறிவுகெட்ட நேரத்தினாலும்
சல்மான் குர்ஷித் ஒரு மிகப்பெரிய மீடியா நிறுவனத்தை
கேவலப்படுத்தி விட்டார். பல்வேறு மொழிகளில் –
32 வார,மாத இதழ்களையும், 4 ஆங்கில, இந்தி
டிவி சானல்களையும், ஒரு செய்தித்தாளையும்,
7 ரேடியோ நிறுவனங்களையும் கொண்ட ஒரு மிகப்பெரிய
ஸ்தாபனம் இனி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கிளர்ந்து
எழும் – இது ஒரு நல்ல விளைவு.
ஒரு மோசமான பேட்டியின் மூலமாக –
தங்கள் தரப்பில் மறைந்திருந்த
பல பலவீனங்களை குர்ஷித்தும் அவரது மனைவியுமாக
சேர்ந்து வெளிப்படுத்தி விட்டார்கள்.
அவற்றில் வெளிப்படையாகத் தெரியும் சில –
1) உத்திரப் பிரதேச அரசு அதிகாரி chief development
officer J.B.Singh செப்டம்பர் 2009ல் நடந்ததாக
கூறப்பட்ட நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாகக்
கூறப்படுவது தவறு என்றும், அதைஒட்டிய செக்லிஸ்டில்
காணப்படுவது தன் கையெழுத்து இல்லை என்றும் முன்பாக
ஆஜ்தக் டிவி நிகழ்ச்சியில் கூறி இருந்தார். இந்த பேட்டியின்
போது ஜெ.பி.சிங் தங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு
அத்தாட்சி என்று கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்கள்.
அடுத்த இரண்டு மணி நேரங்களுக்குள்ளாக இது பொய்யான
தகவல் என்பதை அர்விந்த் கெஜ்ரிவால் ஆதாரத்துடன்
நிரூபித்து விட்டார்.
2) போலி அப்பிடவிட்டை கொடுத்தது பற்றி கேள்வி
எழுந்தபோது, தான் அதைப் பார்க்கவே இல்லை என்றும்
லக்னோவிலிருந்து யாரோ வாங்கி, நேரடியாக
அரசுக்கு அனுப்பி விட்டார்கள் என்றும் அது உண்மையா
போலியா என்று தனக்குத் தெரியாது என்றும் சாதித்தார்.
தன் கணக்கு விவரங்களுடன், ஒரு ஆவணமாக
சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அப்பிடவிட் போலியாக இருந்தால்
அதற்கு அவர் அல்லாமல் வேறு யார் பொறுப்பாக முடியும் ?
3) மார்ச் மாத இறுதி நெருங்கி விட்டதால், நிதி ஆண்டு
முடிவடைவதற்குள் மத்திய அரசிடம் இருந்து நிதியை
பெற்று விட வேண்டும் என்பதற்காக, முந்திய நிதி
அனைத்தும் முறைப்படி செலவழிக்கப்பட்டிருப்பதாக
ராம்ராஜ் சிங் யாதவ் என்கிற உ.பி. அரசு அதிகாரி
கொடுத்த மார்ச் 24, 2011 தேதியிட்ட ஒரு சர்டிபிகேட்டை
சல்மான் குர்ஷித் தின் மனைவி தானே நேரில் மத்திய
அரசில் சம்பந்தப்பட்ட இலாகாவிடம் சமர்ப்பித்திருக்கிறார்.
இந்த ராம்ராஜ் சிங் யாதவ் என்கிற அதிகாரி, தான்
ஜனவரி 2011லேயே ரிடையராகி விட்டதாகவும், எனவே
இந்த சர்டிபிகேட்டை தான் கொடுக்கவில்லை என்றும்
வெளிப்படையாக பேட்டியில் கூறி விட்டார்.
இது போல் இன்னும் பல பிராடுகள் –
செத்துப் போனவர் பெயர் – பயன் பெற்றவர் பட்டியலில் !
ஊனமுற்றவருக்கு காது கேட்கும் மெஷின் கொடுத்ததாக
பட்டியல்,.
எந்த குறையும் இல்லாதவர் பெயரை (வாக்காளர் பட்டியலில்
இருந்து எடுத்திருக்கிறார்கள்) பயனாளியாக சேர்த்திருப்பது –
அவர்கள் நடத்தியதாகக் கூறும் 17 முகாம்களில் –
10 முகாம்கள் நடக்கவே இல்லை என்பது –
சல்மான் குர்ஷித் தானாக ராஜினாமா செய்யவில்லை
என்றால் – எதிர்காலத்தில் அவர் செல்லும் இடங்களில்
எல்லாம், கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் –
அசிங்கங்களை, அவமானங்களை –
சந்திக்க நேரிடும்.



தொடக்கம் முதல் நீங்கள் ஒன்றை கவனித்துப் பார்த்தால் புரியும். காங்கிரஸ் யாரையும் காப்பாற்ற முன்வராது. முடிந்தால் காலை வாரும். கலைஞர் வரைக்கும்.
கொஞ்சம் உருப்படியாக இருக்க வேண்டும் என்று நினைத்த மணி சங்கர் ஐயர் கூட எப்போது எங்கே இருக்கிறாரோ? ஒரு வேளை அமைதியாக வாழக்கூடும். சரத்பவார் முதல் இன்றைய ஊழல் பெருச்சாளிகள் வரைக்கும் அத்தனை பேரையும் கேள்வியும் கேட்பதில்லை. காட்டியும் கொடுப்பதில்லை. காக்கவும் செய்வதில்லை. முடிந்தால் உன்னை காப்பாற்றிக் கொள் என்பதாகத்தான் காங்கிரஸ் ன் கொள்கை இருக்கிறது.
ப. சிதம்பரம் குறித்து இது வரையிலும் சோனியா வாயே திறக்கவில்லை. காரணம் நாமே ஒழுங்காக இல்லாத போது எவருக்கு அறிவுரை சொல்ல முடியும். ஒரு வேளை இது போன்ற தகுதிகள் படைத்தவர்கள் தனக்கு சரியான நபர்களாக இருப்பார்கள் என்று மனதிற்குள் சோனியா நினைக்கின்றார் போலும்.
உண்மை ஜோதிஜி.
“குறிப்பிட்ட” “தகுதிகள்” இருப்பவர்கள் தான்
தலைமையின் உள்வட்டத்திற்குள்ளேயே வர முடிகிறது.
முடிந்த விதங்களில் எல்லாம் சம்பாதித்துக் கொள்ளவது
அவரவர் சாமர்த்தியம். அவ்வப்போது தலைமைக்கு
காணிக்கை வந்து கொண்டே இருக்க வேண்டும்.
தலைமைக்கு எந்த விதத்திலும் பிரச்சினை ஏற்படாமல்
செயல்பட வேண்டும்.
யாரையும் காப்பாற்ற முன்வரவில்லை என்பதில் எனக்குத்
தெரிந்து ஒரு “விதிவிலக்கு” (exemption)
“தயாநிதி மாறன்”. வெளிப்படையாக எதுவும் தெரியா
விட்டாலும் “ஆண்ட்டி” அவரை மட்டும் காப்பாற்றி
விட்டார் என்பது உண்மை தான்.
பார்ப்போம் – “தன்னையே” காப்பாற்றிக் கொள்ள முடியாத
ஒரு நாளும் அந்த “தலைமைக்கு” வரக்கூடும்.
அந்த நாளில் – சொல்லாமல் கொள்ளாமல்
பறப்பது எப்படி என்பதற்கு தான் அவ்வப்போது
ஒத்திகை நடக்கிறது போலும் !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
தான் யாருக்காக ஆஜராகிறோமோ “அவரது” செயல்களை அதன்
விளைவுகளை தன் வாதத்தின் வாயிலாக நியாயப்படுத்தி, பிரதிவாதத்தை
உடைத்தெறிந்து, சட்டத்தின் முன் “அவர்” தவறேதும் செய்யாதவர் என
நிரூபிப்பதே வ்க்கீல்களின் professional ethic.
எனவே, குற்றச்சாட்டுக்கு ஆளானவர் உண்மையிலேயே குற்றவாளியே
ஆனாலும் வக்கில்களின் தொழிலில் நியாய தர்மத்திற்கெல்லாம்
கிஞ்சித்தும் இடமில்லை.
இன்னாளில் எந்த extend-க்கும் போய், தேவையோ இல்லையோ வாய்தா
“போடுவதில்” ஆரம்பித்து எதிராளியின் வக்கீலையே “வாங்குவது” வரை
போய், இறுதியாய நீதிமன்றத்திலே தீர்ப்பினை “பெறுவது”வரை
வக்கீல்களின் நடவடிக்கைகள் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த
உண்மை.
ஒரு படத்திலே வக்கீல் கவுண்டமணி. வடிவேலுவின் முதலிரவை
நடத்துவதில் தலையிட்டு “வழக்காக்கி” ஆஜராவாரே அம்மாதிரி கூட எங்கோ
ஒரு நீதிமன்றத்திலே ஒரு வக்கீல் “நடந்திருக்க கூடும்”
முன்பெல்லாம் வாய்ப்பில்லாத வக்கீல்கள் அன்றன்று வரும் SITA
வழக்குகளில் ஐம்பது ரூபாய்க்கு ஆஜராகி, குற்றத்தில் ஈடுபட்டதாக
முன்னிறுத்தப்பட்ட பெண்களை விடுவிப்பர். பின்னர், காவல் அதிகாரிகளை
கைக்குள் கொண்டும், நெடுஞ்சாலை டீக்கடைக்காரர்களின் (விபத்து குறித்த
தகவல்களுக்காக) துணைக் கொண்டும் இன்சூரன்ஸ் கம்பெனிகளை
சுரண்டுவதை தொழிலாக்கினர். விளைவாக சின்ன சின்ன நகரங்களில்
கூட, பல கோடிஸ்வர வக்கீல்கள் இருக்கிறார்கள்.
இவர்களின் அதீதமான claimகளின் காரணமாகவே vehicle insurance policy
அடிப்படையையே இன்சூரன்ஸ் கம்பெனிகள் 10-15 ஆண்டுகளுக்கு
முன்னர் மாற்றியமைத்தனர். இம்மாதிர்யான familiarity காரணமாகவும்
இன்ன பிற காரணங்களினாலும் அரசியல் தொடர்புகள் ஏற்பட்ட பின்,
ஊழலே தொழிலான அரசியல்வாதிகளோடு “வலம்” வருவதையே
தொழிலாக்கிக் கொண்டுவிட்டனர்.
கனத்த அரசியல் தொடர்புகள் வந்துவிட்ட பின் வருவாய்க்கு என்ன பஞ்சம்?
பலவிதங்களில், தலைநகர் தொடங்கி மாவட்டம் தோறும் “பல வண்ண
பதவிகள்” இவர்களுக்காகவே காத்துக்கிடக்கின்றன.
இம்மாதிரியான் வக்கீல்கள் எல்லா கட்கிகளிலும், எல்லா மாநிலங்களிலும்
எல்லா மாவட்டத்திலும், எல்லா ஊர்களிலும், எல்லா தெருக்களிலும்
இருக்கிறார்கள்.
நண்பர் வெங்கட்ரமணி,
நீங்கள் சொல்வது சரி தான்.
கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையும்,
கற்பழிப்பாளர்களையும்,
வெளியில் கொண்டு வந்து விட்டு –
இது தங்கள் “தொழில் தர்மம்” என்று வேறு
கூறிக்கொள்கிறார்கள்.
மனசாட்சி உள்ளவர்கள் செய்ய முடியாத ஒரு தொழில்
வக்கீல் தொழில் என்றாகி விட்டது.
(இதில் நிச்சயமாக விதிவிலக்குகள் உண்டு.
நீதிக்கும், நேர்மைக்கும் போராடும் வக்கீல்களும்
உண்டு. எனக்குப் பழக்கமானவர்களே சிலர் உண்டு.
ஆனால் அவர்கள் கடைசி வரையில்
ஆண்டியாகவே இருப்பார்கள். எனவே அவர்கள்
வழியில் பின்செல்ல யாரும் முன்வருவதில்லை!)
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
வக்கீல்களும் சரி டாக்டர்களும் சரி தங்களுக்கான பீசுக்கு ரசீது கொடுப்பதில்லை காரணம் இவர்களுக்கு முறையான தொகை நிர்ணயம் செய்யப்படவில்லை. தனியார் பள்ளிகளுக்கும் மற்றும் தனியார் மருத்துவ
மனைகளில் வேலை செய்பவர்ககுக்கும் குறைந்தபட்ச கூலிச்சட்டம் உள்ளதைப்போல் வக்கீல்களுக்கும்
சம்பளம் நிர்ணயம் செய்யப்படவேண்டும் அமைச்சரும் வக்கீலுமான சல்மான் குர்ஷித் ஊழல் வெளியில் வந்துள்ளதால் இந்த சந்தர்ப்பத்தில் பொதுநலன் கருதி தொடர்பு இல்லாமல் இருப்பினும் மேற்கண்ட விஷயத்தை
கூறியுள்ளேன். குர்ஷீத் தனது ஊழல் தொடர்பாக சோனியாவுக்கும் பங்கு கொடுத்திருந்தால் பயப்படமாட்டார்.
ஏற்கனேவே சோனியாவிடம் சரணாகதியடைந்துவிட்டார். இதுபோன்ற ஜென்மங்களுக்கு சூடு சொரணை கிடையாது.
மேலும் யாருக்கும் தெரியாமல் இந்தியா டுடேவிடம் மன்னிப்பு கேட்டு காலில் விழுந்துவிடுவார்.
Politics is the last resort of a scoundral-Johson,applicable at all times
But In India ,it is the first resort..you can not find such worst scoundrals in any other field other than politics! :((
அருமை.
நன்றி.
ரமணா படத்தில் வருவது போல் இந்த மாதிரி ஊழல் பெருச்சாளிகளை ஊருக்கு மத்தியில் திறந்த வெளி ஜெயில் வைத்து .யார் யார் வேண்டும் என்றாலும் போய் நாலு அரை விடலாம்னு ஒரு சட்டம் இருந்தா எவ்வளவு நல்ல இருக்கும்.