இரண்டு நாட்கள் முன்பு தான் தொலைக்காட்சி பேட்டியில்
வீராவேசமாகச் சொன்னார் சல்மான் குர்ஷித் –
(“soniyaji ke liye hum jaan bi denge”)
“சோனியா காந்திக்காக எங்கள் உயிரையும்
கொடுப்போம் .”
அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது அப்போது
பல பேருக்குத் தெரியாது. “அவர்”இல்லையென்றால்
“இவர்கள்” யாருமே இல்லாமல் போய் விடுவார்களே !
எப்படித்தான் திருடுவது என்பதற்கும் ஒரு விவஸ்தையே
இல்லாமல் போய் விட்டது.
கண் பார்வை இல்லாதவர்கள், காது கேளாதோர்,
வாய் பேசாதோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு
தொண்டு செய்வதாக கூறிக்கொண்டு ஒரு தொண்டு
நிறுவனத்தை நடத்திக் கொண்டு வருகிறார் சல்மான்
குர்ஷித்தின் மனைவி.
“டாக்டர் ஜாகிர் ஹுசேன் மெமோரியல் ட்ரஸ்ட்” என்கிற
அந்த நிறுவனத்தின் விலாசமே, சட்ட அமைச்சரான
சல்மான் குர்ஷித்தின் டில்லியில் உள்ள அரசு இல்லம் தான்.
உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஜார்கண்ட், மற்றும் சில
மாநிலங்களில் (தமிழ்நாடு கூட இருக்கிறது) மாற்றுத்
திறனாளிகளுக்கான உதவி முகாம்கள் நடத்தப்பட்டு,
மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பல
உபகரணங்களையும் அளிப்பதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சரின் கைங்கரியத்தால், மத்திய அரசின் பல்வேறு
அமைச்சகங்களிலிருந்தும், இந்த நிறுவனத்திற்கு
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும்(கடந்த 10 ஆண்டுகளாக)
லட்சக்கணக்கில் நிதி உதவி(grant) அளிக்கப்பட்டு
வந்திருக்கிறது.
கடந்த ஆண்டில் இதில் சில தில்லுமுல்லுகள் நடந்ததாகக்
கேள்விப்பட்டு, ஆஜ்தக் என்கிற ஒரு இந்தி சானல் விசேஷ
அக்கரை எடுத்துக்கொண்டு சில விவகாரங்களை
வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
உத்திரப் பிரதேசத்தில் 17 இடங்களில் உதவி முகாம்கள்
நடத்தப்பட்டதாகக் கூறி சுமார் 80 லட்சம் ரூபாய் அளவிற்கு
மோசடி நடந்திருப்பதாக முதல் கட்டத்தில்
தெரிய வருகிறதாம். 10 வருடங்களுக்கான விவரங்களையும
தோண்டினால் – எத்தனை கோடி வருமோ ?
– உதவி முகாம்கள் நடத்தியதாக அரசுக்கு அளித்திருக்கும்
ரிப்போர்ட்டில் கூறப்பட்டிருக்கும் பல தகவல்கள்
பொய்யானவையாம்.
அந்தப் பட்டியலில் இருக்கும் பல பெயர்கள் கற்பனையானவை.
சில பெயர்கள், அந்தந்த ஊர் வாக்காளர் பட்டியலில்
இருந்து குத்து மதிப்பாக எடுத்து போடப்பட்டவை.
அவர்கள் மாற்றுத் திறனாளிகளே இல்லையாம் !
பல ஊர்களில் – ரிப்போர்ட்டில் கொடுத்துள்ளபடி
முகாம்களே நடக்கவில்லை.
நிஜமாகவே நடந்த வெகு சில முகாம்களில்,
ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளபடி உபகரணங்கள்
தரப்படவில்லை.
இவற்றில் கையெழுத்துப் போட்டிருக்கும் மாநில அரசு
அதிகாரிகளின் கையெழுத்துக்கள் போர்ஜரி செய்யப்பட்டவை.
அதில் உள்ள மாநிலஅரசு முத்திரைகளும் போலியானவை.
இப்படி பல மோசடி வேலைகள் !
இதைப்பற்றி உத்திரப் பிரதேச அரசுக்கு சில புகார்கள்
வந்து, உ.பி.அரசு அதன் மேல் விசாரணைக்கு
உத்திரவிட்டிருக்கிறது.
இந்த விவரங்கள் வெளியே வந்ததும்,
திருமதி சல்மான் குர்ஷித் – பொய்யான புகார்கள்
கிளப்பப்பட்டதால் – நான் தான் உத்திரப் பிரதேச
அரசை விசாரணைக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்
கொண்டேன் என்று ndtv தொலைக்காட்சி மூலமாக
அறிக்கை விடுகிறார்.
ஆஜ்தக் தொலைக்காட்சி வெளியிட்ட மோசடி சம்பந்தப்பட்ட
செய்திகளை வெளியிடாத ndtv மறுப்பு அறிக்கையை
மட்டும் வெளியிடுகிறது.”அன்னை”யின் மீது அவர்களுக்கு
அவ்வளவு “பாசம்”.
விவரங்கள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக
வெளிவந்து கொண்டிருக்கின்றன. 2 நாட்களில் முழு
விவரமும் வெளிவரக்கூடும்.
நியாயமாக –
தார்மீகப் பொறுப்பு ஏற்று உடனடியாக
சட்ட அமைச்சர் பதவியை –
சல்மான் குர்ஷித் ராஜினாமா செய்ய வேண்டும்.
அவர் மனைவி மீது IPC-420 பிரிவின் கீழ் மோசடி
வழக்கு பதிவு செய்யப்பட்டு முழு அளவில் விசாரணை
நடத்தப்பட வேண்டும்.
எல்லாம் “டும் -டும்” தான் !
“அன்னை”க்காக சல்மான் குர்ஷித் உயிரையே கொடுக்கத்
தயாராக இருக்கும்போது, அன்னை சல்மானை கை விட்டு
விடுவாரா ?
அவர் மனைவியின் பேரில் வழக்குப் பதிவு செய்யவோ
கைது செய்யவோ –
இந்த “பனானா ரிபப்ளிக்கின்”
“மேங்கோ பீப்பிள்”
யாருக்காவது “தில்” இருக்குமா ?




நெஞ்சு பொறுக்குதில்லையே !! நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே !!!!! பாரதியின் கோபம் வெறுப்பு ஆவேசம் என்னால் உணரமுடிகிறது. ச்சி… ச்சீ… நாயும் பிழைக்குமோ இப்பிழைப்பு?
அதிகாரம் நிறைந்த அரசு அதிகாரிகளின் மனைவியோ
மக்களோ மந்திரிமார்களின் குடும்ப உறுப்பினர்களோ தொண்டு
நிறுவனம் மற்றும் ட்ரஸ்ட் ஏதும் தொடங்கினால், அது
தொண்டு செய்ய அல்ல; அதிகாரத்தில் உள்ளவர்களின்
ஆதரவோடு சுரண்ட.
குர்ஷித்தின் மனைவியினுடையது மட்டுமல்ல; இன்ன பிற
தொண்டு நிறுவனகங்களும், ட்ரஸ்ட்டுகளும் “உள் விவகாரங்கள்”
அறிந்த, தன்னலம் நிறைந்த பெரிய மனிதர்களால் தான்
நடத்தப்படுகின்றன.
இன்றைய தொண்டு நிறுவனங்கள், ட்ரஸ்டுகள் NGOக்கள் பலவும்
” உனக்கு நான்; எனக்கு நீ” என்கிற லாஜிக்கை மட்டுமே
அடிப்படை கோட்பாடாக கொண்டவை.
முன்பெல்லாம் அதிகாரத்திலிருந்த பெரிய மனிதர்களின்
மனைவிமார்கள் ஆல் இந்தியா ரேடியோவில் பாடவும், பேசவும்
தூர்தர்ஷனில் ஆடவும் உரை ஆற்றவும் மட்டுமே “ஆவல்” மிக
கொண்டிருந்தனர். ஆனால், இன்றைய மந்திரிகளின்
அதிகாரிகளின் பெரிய மனிதர்களின் இல்லத்தரசிகள் தங்கள்
கணவர்களை விட :”விவரமறிந்தவர்களாக” அபிலாஷைகள்
“நிறைந்தவர்களாக” இருக்கிறார்கள். விளைவாக “தொண்டு”
செய்ய புறப்பட்டு விடுகிறார்கள்.
நேற்று இன்று நாளையில் ஒரு பாட்டு உண்டு. அதில்,
“தெருத்தெருவாய் கூட்டுவதில் பொது நலமுண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலமுண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தன் மக்கள் நலமொன்றே தான் மனதில் கொள்ளுவார்’…
என்று வரும்.
அது தான் நிதர்சனமான் உண்மை.
இந்த வெட்கங்கெட்ட நாய்களுக்கு
வியவஸ்தையே இல்லை. இவர்கள் எல்லாம்
மந்திரிகளாக இருந்து கொண்டு இன்னும்
செய்யாத தொழில் “விபச்சாரம்” ஒன்று தான்.
மற்றபடி மந்திரி பதவியை வைத்துக்கொண்டு எத்தனை
விதத்தில் சம்பாதிக்க முடியுமோ அத்தனையும்
சம்பாதிப்பார்கள்.
“சோனியா”ஜி”யின் மருமகன் என்பதற்காக வாத்ரா”ஜி”
யை பட்டினி கிடக்கச் சொல்கிறீர்களா ? அவருக்குத்
தெரிந்த தொழில்களை அவர் செய்வதில் தலையிட
யாருக்கும் உரிமை கிடையாது” என்று டிவி பேட்டியில்
வெட்கமில்லாமல் வக்காலத்து வாங்கினான் இந்த ஆள்.
எதற்காக என்று இப்போது தானே தெரிகிறது.
ஒரு தற்காப்புக்காகத் தானே ?
பெண்கள் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு
இவன் மாதிரி ஆட்களை எல்லாம் தெருவில் ஓடவிட்டு,
சாணியைக் கரைத்து தலையில் கொட்டி
அபிஷேகம் செய்து, துடைப்பத்தால் அடிக்க வேண்டும்.
அதை தொலக்காட்சிகளில், திரும்பத் திரும்ப
காட்ட வேண்டும்.
அப்போது தான் இவன்களுக்கு எல்லாம் கொஞ்சமாவது
பயம் வரும்.
காவிரிமைந்தன் நீங்கள் செய்வது நல்ல பணி.
என்ன செய்தி கிடைத்தாலும் இதேபோல் தொடர்ந்து
எழுதுங்கள். மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.
இளையவன்
“ஜாகிர் உசைன் மெமோரியல் அறக்கட்டளையில் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைவராகவும், அவரது மனைவி திருமதி குர்ஷித் திட்ட இயக்குனராகவும் உள்ளனர். மேலும் அமைச்சர் குர்ஷித் பல்வேறு அமைப்புகளில்
பொறுப்பு வகித்து வருகிறார். சமாஜ் வாதி கட்சியின் பொது காரியதரசி மோகன்சிங் உத்தர பிரதேசத்தில் 17 – மாவட்டங்களில் மூன்று சக்கர வண்டிகள் மற்றும் ஹியரிங் எயிடு கொடுப்பதில் ஊழல் குறித்து விரிவாக
கூறியுள்ளார். இதற்க்கு NDTV -யில் ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளார். அதை படித்தாலே எங்கப்பன்
குதிருக்குள் இல்லை என்பது போல உள்ளது. பொதுமக்கள் எப்போதான் விழித்து கொள்வார்களோ?
Sir, Did you get a chance to read the ebook called “Damaad, Loan and Finance” DLF and Vadra. Its a 53 pages book and veryshocking. I dont know your email id, I can email it if you want.
welcome Mr.Srini.
you may please send the material to my e-mail ID –
kavirimainthan@gmail.com
Thank you for your initiatives.
With all best wishes,
kavirimainthan
இவ்வளவு பெரிய பதிவு இட்டதை விட இந்த “பனானா ரிபப்ளிக்கின்”
“மேங்கோ பீப்பிள்”எனும் நான்கு வார்த்தைகள் அனைத்தையும் விளக்கி விட்டது.