மும்பையில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்
பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார் – அதில்
முக்கியமான இரண்டு விஷயங்கள் கூறுகிறார் –
1) “அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ப்ரசாந்த் பூஷன்
ஆகியோர் குற்றம் சாட்டி இருப்பது “இரண்டு தனிப்பட்ட
நபர்கள் அல்லது நிறுவனங்கள்” தொடர்பானது. அவர்கள்
தனிப்பட்ட நபர்கள்/நிறுவனங்கள் என்கிற காரணத்தால்
-அவர்கள் மீது மற்றவர்கள் கூறும் ஊழல் பற்றி
அரசாங்கம் கேள்வி கேட்க முடியாது.( அதாவது
தனிப்பட்டவர்கள் விஷயத்தில் அரசாங்கம் தலையிட
முடியாது !)
2) மேலும் சம்பந்தப்பட்ட நபர் (வாத்ரா
பெயரைக் குறிப்பிடவில்லை) இது குறித்த “அனைத்து
பரிமாற்றங்களையும்” தனது வருமான வரி (ரிடர்ன்)
அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.”
ராபர்ட் வாத்ரா என்கிற தனிப்பட்ட மனிதர் மீது –
இந்த நாட்டின் நிதியமைச்சர் ஏன் இவ்வளவு அக்கரை
காட்டுகிறார் ? ராஜாவிற்கு மிஞ்சிய ராஜவிசுவாசம் ?
இதில் சில கேள்விகள் எழுகின்றன –
வாத்ரா ஒரு தனிப்பட்ட நபர் என்று நிதியமைச்சர் கூறும்
வாதத்தின் அடிப்படையிலேயே வைத்துப் பார்த்தால்,
ஒரு தனிப்பட்ட நபரின் சார்பாக இந்த நாட்டின் நிதியமைச்சர்
பேசுவதன் அவசியம் என்ன ? இது எந்த விதத்தில் சரி ?
அனைவரது வருமான வரி அறிக்கைகளும் நேரடியாக
வருமான வரித்துறை அலுவலகத்திற்குத் தான் போகின்றன.
தனிப்பட்ட முறையில் கேட்டுப் பெற்று பார்த்தால் ஒழிய,
இந்த நாட்டின் நிதியமைச்சராக இருந்தாலும் கூட –
யாருடைய வருமான வரி ரிடர்னையும் அவர்
பார்க்க வாய்ப்பில்லை.
அப்படியானால் தான் பார்க்காத ஒரு ரிடர்னில் என்ன
விவரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது நிதியமைச்சருக்கு
எப்படித் தெரியும் ?
ஒரு வேளை கேட்டு, பெற்று, பார்த்திருந்தால் –
தனிப்பட்ட ஒரு நபரைப் பற்றி அமைச்சருக்கு அத்தனை
அக்கரை ஏன் ?
“எல்லாம் சரியாக இருக்கிறது” என்று இவர் சர்டிபிகேட்
வழங்குவது, அவர் மேற்பார்வையில் இயங்கும் வருமான
வரித்துறையினர் இந்த விஷயத்தை எதிர்காலத்தில்
எந்த கோணத்தில் கையாள வேண்டும் என்று கோடு
போட்டுக் காட்டவா ?
எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் –
எவ்வளவு ஜாக்கிரதையாகப் பேசினாலும் –
பாதிக்கப்படுவது பெரிய இடத்து மருமகன்
என்னும்போது – பதட்டம் வந்து,
தவறு செய்ய நேருகிறது !
மக்களை மடையர்கள் என்றே நினைத்துக்கொண்டே
இவர்கள் எப்போதும் பேசுகிறார்கள். ஆனால் –
இப்போதெல்லாம் மக்கள் இவர்களை சட்டென்று
புரிந்து கொள்கிறார்கள் !




சிதம்பரம் தேர்தலில் வெற்றிபெற்றதே கேள்வி குறியாக உள்ளது. சோனியாகாந்தியின் வீட்டில் வேலை செய்வதால்
அல்லது வேலை செய்ததால் சமையல்காரர். ஸ்வீப்பர், கக்கூஸ் கழுவுபவர் ,ஆகியோருக்கு எந்தவித நிபந்தனையுமின்றி சப்போர்ட் பண்ணுவார். அப்படியிருக்கும்போது மாப்பிள்ளைக்கு ஆதரவு கொடுக்க மாட்டாரா?
அந்த கும்பலுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால் சிதம்பரம் சிவகங்கைக்கு போக வேண்டியதுதான்.
சரியான கேள்வி காவிரிமைந்தன்.
இதே கேள்வியைத்தான் இன்று மாலை நடந்த
ப்ரஸ் மீட்டில் அர்விந்த் கெஜ்ரிவாலும்
கேட்டிருக்கிறார் !
தனிப்பட்ட ஒருவரின் வருமான வரி ரிடர்னை
பரிசீலிக்க நிதி அமைச்சருக்கு எந்த சட்டம்
அதிகாரம் கொடுக்கிறது என்று !
அவசரத்தில் உளறிக் கொட்டுவதில் புத்திசாலிகளுக்கும்
விதிவிலக்கு இல்லை தானே ?
வருக நண்பர்களே,
இந்திய நாட்டுக்கும், இந்திய அரசியல் சட்டத்திற்கும்
உண்மையாக ஊழியம் புரிவேன் என்று சத்தியம் செய்து
பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட மந்திரிகள் – இன்று
இத்தாலிய தலைமைக்கும், அதன் உறவுகளுக்கும்
உண்மையாக ஊழியம் புரிவேன் என்று சொல்லாமல்
சொல்லி பணியாற்றுகிறார்கள்.
இவர்களிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் ?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
சுப்ரமணியசாமி இவரை மட்டும் சரியான விதத்தில் சிக்க வைத்து கம்பி எண்ண வைத்தால் உண்மையிலேயே அவர் தான் உலக மகா கில்லாடி. நிறைய எழுதத் தோன்றுகின்றது. ஆனால் வாய்ப்புகளை கம்மி. தப்பித்துக் கொண்டே வந்து விட்டார். மேலேறி விடுவாரோ ?
கிரிமினல் – லாயர் !
சூப்பர் மூளை !
எனவே கம்பி எண்ணும் சூழ்நிலை எல்லாம்
வராதபடி பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் !
ஆனால் வாரிசு இருக்கிறாரே – அவர் மூலம்
எதாவது வில்லங்கம் விளையக்கூடும்
என்று தோன்றுகிறது. குறைந்த பட்சம் –
அதிகாரம் பறிபோகும் அளவிற்காவது !
ஜோதிஜி – நீங்கள் ஒரு நல்ல மனிதர்.
சாமி (!) நல்லவர்களின் எண்ணங்கள்
கைகூட நிச்சயம் உதவக்கூடும் !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அரசியல்வாதிகள் சமய (சமயமல்ல) சந்தர்ப்பந்தத்திற்கு தக்கவாறு
பேசுவார்கள். அதனால் தான் அவர்கள் அரசியலில் நீடிக்க முடிகிறது.
தனிப்பட்ட நபர்கள் மீதான இவரது பாசம் புதிதல்ல.
முன்பு இவர் (உள்துறைக்கு முன்னதாக) நிதியமைச்சராக இருந்தாரே,
அப்போது, தனது நண்பர் கந்தசாமி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்
தொகுதி இடை தேர்தலில் போட்டியிட்ட போது, இரண்டு நாட்கள்
தொகுதி முழுக்க சூறாவளி (உண்மையிலேயே சூறாவளி தான்) சுற்று
பயணம் செய்து வாக்கு சேகரித்தார்.
இடைத்தேர்தலுக்கே நண்பருக்காக வேலை செய்தவர், “வேலை”
கொடுத்தவருக்கு விசுவாசமாக இருக்கமாட்டாரா என்ன? முன்தினம்
சல்மான் குர்ஷித், “எங்களுக்கு சோனியாதான் எல்லாம். அவருக்காக
(கட்சிக்காக அல்ல) எதையும் செய்வோம்” என்று மொழிந்ததையும்
கவனித்தில் கொள்ளவும்.
தலைமைக்கு விசுவாசம் என்பது கழக(ங்களின்) தோழர்களிடம்
காங்கிரஸார் கற்று கொண்ட பாடமோ?
அன்பின் காவிரிமைந்தன்,
சுதந்திர இந்தியாவின் 2012 அக்டோபர் முதல் வாரத்திற்கான ஊழலை
விவாதத்திற்கு எடுத்துகொண்டதிற்கு நன்றி.இது இம்மாதம் 15 ஆம் தேதி வரை பரிசீலிக்கப்படும் என நினைக்கிறேன்.அடுத்த நாள் புது ஊழல வந்து இதைப்பின்னால் தள்ளி விடும்.
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை..
நம் நாட்டில் ….
பத்து ஆண்டுகளில் ஒரு அரசியல்வாதி ரூ.பத்தாயிரம் கோடி சேர்ப்பது குற்றமாகாது என்றால்,
ஒரு அரசியல்வாதியின் உறவினர் ரூ.ஆயிரம் கோடி சேர்ப்பது குற்றமாகாது என்றால்,
ஒரு அரசியல்வாதியின் பேரன் பல கோடி செலவில் சினிமாப்படம் எடுப்பது குற்றமாகாது என்றால்,
ஒரு அரசியல்வாதி வீட்டில் பிச்சை எடுப்பவன் பல மாளிகைகளுக்கு அதிபதி ஆவது குற்றமாகாது என்றால்,
எ து தா ன் கு ற் ற மா கு ம் ?
என்ன நடக்கிறது இங்கே??
இதற்கும் மக்கள் கொதித்தெழவில்லை எனில்..
எதற்கு, எப்பொழுது, எழுவார்கள???
மக்கள் கண்கள் மூடியுள்ளது தெரிகிறது.
அது
பிரார்த்தனையின் அடையாளமா?
சிந்தனையின் அடையாளமா?
சுயநலத்தின் அடையாளமா ?
உறக்கத்தின் அடையாளமா?
கோமாவின் அடையாளமா?
அல்லது
மீளா உறக்கத்தின் அடையாளமா?
COME ON,OPEN YOUR BLOODY EYES AND DO SOMETHING,YOU STUPID INDIAN!!
The MAXIMUM you can do is to come to street and agitate,which I never expect you would do..
Atleast do the MINIMUM expected and which your PRECIOUS DUTY too!
COME TO THE VOTING BOOTH WITHOUT FAIL AND CAST YOUR VOTE..
அந்த ஓட்டை..
கழுதைக்கு போட்டாலும்,காங்கிரசிற்கு போடாதீர்!
சரி இனி காங்கிரசை விட மனதை கலக்கும் பிரச்சினைக்கு வருவோம்.
அதுவே பிரதான எதிர்கட்சியான பா.ஜ. கட்சி காட்டிவரும் மெத்தனம்.
2G மற்றும் நிலக்கரி ஊழலில் மிகுந்த அக்கறை காட்டிய பா.ஜ. க. ,
ஏனோ வாத்ரா விஷயத்தில் அக்கறை காட்டவில்லை.அதுவும் எதிர்கட்சிக்கு இது ஒரு லட்டு போன்ற பிரச்சினை.ஒருவேளை கெஜ்ரிவால் கொண்டுவந்த ஒன்று இதில் நாம் ஏன் தலையிட வேண்டும் அப்படி தலையிட்டு அதனால் ஏற்படும் புகழ அவருக்கல்லவா போய் சேரும் என்ற குறுகிய மனப்பான்மையா?
அல்லது
ஹிந்து நாளிதழ் தன் தலையங்கத்தில் சொல்லியுள்ளதைப்போல,
“சென்ற பா..ஜ.க. ஆட்சியின் போது வாஜ்பாயியின் நெருங்கிய உறவினர் இதையொத்த ஒரு ஊழலை செய்த போது, அப்போதைய பிரதான எதிர்கட்சியான காங்.அதை அதிகம் “கண்டு கொள்ளாமல் ” அடக்கி வாசித்ததை நினைவில் கொண்டு, அவர்களுக்கு காட்டும் நன்றிக்கடனா?” என்றும் தெரியவில்லை.
அதேபோல இன்னொரு சந்தேகம்.இப்பொழுது காங் ஆட்சி. எனவே விசாரணை தடை படுகிறது .CBI தன் கடமையை சரிவர செய்ய முடிவதில்லை எனும் கருத்தில் நியாயம் உள்ளது.2016 தேர்தலில் பா..ஜ.க.ஆட்சியை கைப்பற்றுகிறது என வைத்துக்கொள்வோம்.அப்பொழுது அவர்கள் ஒரே வருடத்தில் விசாரணையை முடித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனைப்பெற்று தருவார்களா என்றால், அதுவும் நிச்சயமாக இல்லை.விசாரணை 2018 வாக்கில் துவங்கி மந்த கதியில் நடை பெறும்.அதற்குள் 2021 தேர்தல் வந்து, காங்.மீண்டும் அரசு அமைக்கும்.(அதுதானே நம் எழுதப்படாத விதி) விசாரணை நிறுத்தப்படும்.
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.2011 தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் முன்பிருநதே ஜெயா ,கருணா குடும்பத்தின் மீது அடுக்கடுக்காக ஊழல புகார்களை செய்த வண்ணம் இருந்தார்.மக்களும் அதை ஏற்று ஜெயாவை ஆட்சியில் அமர்த்தினர்.ஆயிற்று, 18 மாதங்கள்.இன்னும் கருணா மீதோ அல்லது அவர் குடும்பத்தினர் மீதோ ஒரு ” no parking offense” வழக்கு கூட போடப்படவில்லை.காரணம் யாருக்கும் தெரியாது.
விடிவெள்ளி விஜயகாந்த்….இவரை நம்பி மக்கள் முப்பது எம்.எல்.ஏ க்களை அளித்துள்ளனர்.ஆனால் இந்த முப்பது பேரும்,இதுவரை ஒரு துரும்பை தூக்கி போடவில்லை.எங்கள் எம்.எல்.ஏ பண்ருட்டி ராமச்சந்திரனை நான் தேர்தலுக்கு முன் ஒரு முறை தொகுதியில் பார்த்தது தான் ..பிறகு தலைகாட்டவில்லை.
இப்பொழுது திடீர் ஞானம் பெற்றவர் போல விஜயகாந்த் ,
தி.மு.க..அ.தி.மு.க இரு கட்சிகளும் ஃபிராட் என்கிறார்.
அப்படியானால் ஏன் ஒரு ஃபிராடுடன் அவர் தேர்தல் கூட்டு வைத்தாராம்?
இதையெல்லாம் நான் சொல்லக்காரணம்..நான் நம் ஜனநாயக அமைப்பிலேயே நம்பிக்கை இழந்து வருகிறேன்.அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டு சேர்த்துக்கொண்டு நம்மை கொள்ளை அடிக்கிறார்கள் எனும் என் ஐயம் உறுதியாகி வருகிறது.கோடிக்கு எவ்வளவு பூஜ்யம் என்று கூடத்தெரியாத ஒரு 40 கோடி பேர் தராதரம் பாராமல், ஜாதி,வாங்கிய பணம் அடிப்படையில் சகட்டு மேனிக்கு ஓட்டளிக்கும் வரை நம் கதி அதோ கதிதான்.
மன்னிக்கவும்;உண்மை கசக்கத்தான் செய்யும்.
கொட்டுங்கள். மனதில் இருப்பதை எல்லாம்,
சிந்தனையில் உதிப்பதை எல்லாம் – கொட்டுங்கள் !
இந்த வலைத்தளத்தின் முக்கிய குறிக்கோளே –
நம் உள் மனதின் எரிச்சலுக்கும், உணர்ச்சிக்
கொந்தளிப்புகளுக்கும் ஒரு வடிகால் தேடுவது தானே ?
பலன் ஏதும் விளைகிறதோ இல்லையோ –
குறைந்த பட்சம் – கொஞ்சம் எரிச்சலாவது குறையும் !
பகிர்ந்து கொண்ட திருப்தியாவது இருக்கும் !
பாஜக வின் நடவடிக்கைகளும் நிச்சயம்
திருப்தியளிப்பதாக இல்லை. தாங்கள் ஒரு உருப்படியான
மாற்று சக்தியாக உருவாக வேண்டும் என்பதில்
அவர்களுக்கே ஆரவம் இல்லை. காங்கிரசின் மீது
ஏற்படும் அதிருப்தியால், மக்கள் ஆட்டோமாடிக் ஆக
தங்களைத் தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்று
நம்புகிறார்கள்.
இது – மக்களுக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லாத
சூழ்நிலையைத் தான் உருவாக்கும் – குழப்பம் தான் !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
நண்பர் கண்பத்,
விஜயகாந்த் ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை.
வாஸ்தவம் தான். ஏன்? அவருக்குள்ள அல்லது அவர் சந்தித்து
வர்ம் பிரச்சனைகள் குறித்து தமிழகத்திலே யாரும் பெரிதாக
கண்டு கொள்ளவில்லை.
அரசியல் தலைவர்களை விடுங்கள். மீடியாக்கள் எல்லாம் அவரை
கண்டு கொள்வதே இல்லை. கலைஞர் விட்டால் ஜெயலலிதா;
ஜெயலலிதாவை விட்டால் கலைஞர் என்கிறதான ஒரு மாய
தோற்றத்தை தொடர்ந்து மக்களிடையே முயன்று ஏற்படுத்தி
வருகிறார்கள்.
உண்மையில் அவர் சரியான மாற்று தான். திமுக மற்றும் அ திமுக
இரு கட்சிகளுமே பல தொகுதிகளிலும் தங்களுக்கென “நிலையான்”
வாக்கு வங்கியை வைத்திருந்தாலும் கூட, அவர்களின் வாக்கு சதவீதம்
பல காரணங்களினால் “மாறுதலுக்குள்ளாகி” வருக்கிறது. மாறாக
தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளிலும் நிலையாக ஏற்க்குறைய
11 சதவீத வாக்குகளை வைத்திருந்தும், விஜயகாந்த் குறித்து பலரும்
“முயன்று” தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில்
தினமலர் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.
கையில் குறிப்பில்லாவிட்டால் இவர்களது பேச்சும் கூட தொடர்பற்று
தான் வரும். ஆனால், விஜயகாந்தை மட்டும் உளறுவாயன் என சித்தரித்து வருகிறார்கள். விஜயகாந்த் அரசியல் சூத்திரமறிந்த பண்டிட்டுகளுக்காக் பேசவில்லை. அவரது பேச்சு targetted மக்களை சென்றடைகிறது என்பதை மறுக்க இயலாது.
கடந்த சட்டசபை தேர்தலில் இவரது கூட்டணி இல்லாது போயிருந்தால்
ஜெயலலிதா ஆட்சியை பிடித்திருப்பாரா? இவரது பலம் குறித்தும்
இவருடனான கூட்டணியின் அவசியம் குறித்தும் கூட்டணியை முன்னின்று உறுதி செய்த political borkersதான் பதில் சொல்ல வேண்டும்.
யாரும் எதிர்பாராமல் வென்று ஆட்சியைப் பிடித்ததும், ஆட்சி அதிகாரம்
கைக்கு வர துணை நின்றவரை தூக்கி எறிந்ததையும். சட்டமன்றத்திலே
அவரை பலமாக விமர்சித்து, எதிர்க்கட்சித் தலைவராக கூட அவர்
செயல்படுவதை “தடை” செய்ததையும் எல்லோரும் அறிவார்கள்.
ஆளும் கட்சியினுடன் நட்பு இல்லாத எதிர்கட்சித் தலைவரின் அவரது
கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளை, சிபாரிசுகளை தமிழகத்து அரசு
அதிகாரிகள் மதித்து செய்வார்கள் என்று நீங்கள் நினைத்தால்….. அது
உங்கள் தவறு.
கடந்த ஆண்டு (தமிழ்) நாடறிந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவரின்
ஆசிரியர் மகள் மாறுதல் வேண்டி ரிப்பன் பில்டிங்கில், ஊழியர்களின்
எளனத்திற்கிடையே, நடையாய் நடந்தார். கண்டு கொள்வார் யாரும்
இல்லை.
அரசு அலுவலங்களிலே அதிகாரத்திலே உள்ளவர்களுக்கு தான், அல்லது
அவர்களின் “ஆதரவு” பெற்ற ஏஜண்டுகளுக்கு மட்டுமே மரியாதை.
நண்பர் வெங்கடரமணி அவர்களே,
உங்கள் அருமையான விளக்கத்திற்கு என் முதற்கண்’ நன்றி.
என்னுடைய பின்னூட்டத்தின் மூலம் நான் எதை விளக்க நினைத்தேனோ அதேதான் நீங்களும் இன்னொரு வழியில் சொல்லி இருக்கிறீர்கள்.
நம் ஜனநாயக அமைப்பில், நம் பிரதிநிதியை நாம் தேர்தல் மூலமாக தேர்வு செய்ய, அவர்கள் ஒன்று கூடி, ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து, அவரை முதல்வரகவோ,பிரதமராகவோ ஆக்குவர்.பின்னவர் அரசு பணிகளை செவ்வனே செய்வர்.இதுதான் நம் அரசியல் சட்டம்.ஆனால், என்று இந்திரா காந்தி நமக்கு பிரதமரானாரோ, என்று கருணா நமக்கு முதல்வரானாரோ,இந்த முறை கேலிக்கூத்து ஆகி விட்டது.அதாவது ஏறக்குறைய 40 ஆண்டுகளாக.
இப்பொழுது உள்ள நிலையில் முதல்வரோ,பிரதமரோ தான் சர்வ வல்லமை படைத்தவர்கள்.மற்ற அமைச்சர்கள், M.L.A, M.P முதலானோர் வெறும் செல்லாக்காசுகள்.இவர்களால் மக்களுக்கு உபத்திரமே தவிர உபயோகம் கிடையாது.(மிக முக்கிய குறிப்பு.நம் நாட்டின் பிரதமர் சோனியா;மன் மோகன் இல்லை)
நீங்களே சொன்னது போல, நம் தொகுதி M.L.A எதிர் கட்சி ஆகிவிட்டால் அவரால் தொகுதிக்கு ஒரு தெரு விளக்கு கூட போட்டு தர முடியாது.எனவே இதை நன்கு அறிந்த நம் மக்கள் முன்ஜாக்கிரதையாக யார் வெற்றி பெற வேண்டுமென விரும்புகிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்காமல், யார் வெற்றி பெறுவார்கள் என நம்புகிறார்களோ அவர்களுக்கே வாக்களிக்கிறார்கள்.எனவே இம்முறையில் ஒரு நல்ல வேட்பாளர் வெற்றி பெறுவது இயலாத காரியம்.நீங்களே பாருங்கள்.ஒரு முப்பது M.L.A க்களை வைத்துக்கொண்டு ஒரு கட்சியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பியது முற்றிலும் வீண்.
இதை மாற்ற, ஒன்று, அந்தந்த தொகுதிகளை தனி மாநிலம் போல பாவித்து தொகுதி M.L.A. க்களை அந்த தொகுதி முதல்வர் போல் செயல்பட சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.அல்லது, இந்த M.P.,M.L.A க்களை முற்றிலும் நீக்கி விட்டு, மக்கள் நேரடியாக முதல்வர்.பிரதமர், மற்றும் ஜனாதிபதி யைத் தேர்ந்தெடுக்கும் முறையை கொணர வேண்டும்.இதற்கு இரண்டடுக்கு தேர்தல் முறையைகூட உபயோகிக்கலாம்.
இதெல்லாம் நடக்காது என சொல்வோர்களுக்காக Albert Einstein அவர்களின் ஒரு கூற்றுடன் இதை நிறைவு செய்கிறேன்:
“The significant problems we face now, can not be solved at the same level of thinking we were at, when we created them.”
இந்த விவாதத்தில் பலர் பங்கேற்றால் நான் மகிழ்வேன்.
நன்றி,
முதல்கட்டமாக இன்னும் சில யோசனைகள் கூட
தோன்றுகின்றன –
-MLA, MP க்களுக்கு அளிக்கப்படும் தொகுதி நிதியை
சற்று உயர்த்துவதுடன், அதை அரசின் அமைப்புகள்
(மாநகராட்சி, மாநில அரசுத் துறைகள் )
எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதற்காக திட்டத்தை-
சாக்குபோக்கு சொல்லாமல் –
தாமதம் செய்யாமல்,
குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றியே ஆக வேண்டும்
என்று விதிகள் கொண்டு வரலாம்.
-தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள் எதுவானாலும்,
(கவுன்சிலர் முதல் ஜனாதிபதி வரை )
ஒருவர் 2 முறைகளுக்கு மேல் வகிக்க முடியாது
என்று விதி கொண்டு வரலாம்.
-தேர்தல் வழக்குகள், முடிவு அறிவிக்கப்பட்ட
தேதியிலிருந்து – 3 மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு
தீர்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று விதி கொண்டு வரலாம்.
-நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் எத்தகைய
தன்மையதாக இருந்தாலும், ஒரு வருடத்திற்குள்
தொடர் விசாரணை துவங்கப்பட்டு – புகார் பதியப்பட்ட
நாளிலிருந்து 2 வருடங்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்பட்டே
ஆக வேண்டும் என்று விதி கொண்டு வரலாம்.
– கல்வித்துறை முழுவதும் அரசு மயமாக்கப்பட
வேண்டும். அத்தனை கல்வி நிறுவனங்களும் –
துவக்கக்ப்பள்ளியிலிருந்து – எஞ்ஜினீரிங் காலேஜ் வரை –
அரசுடைமையாக்கப்பட வேண்டும் – என்று சீர்திருத்தங்கள்
கொண்டு வரலாம்.
– யோசிக்க யோசிக்க நிறைய விஷயங்கள்
தோன்றுகின்றன. ஆனால் –
நாம் சொல்வதைக் கேட்கவே அரசியல் கட்சிகளோ,
அரசாங்கங்களோ தயாராக இல்லை. இந்த லட்சணத்தில்
நிறைவேறுவது எப்படி ?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
ஜனநாயகத்தில்,மக்கள் சுய சிந்தனையுடனும் அறிவுடனும் ஓட்டளித்தாலொழிய
நாடு முன்னேறாது.உதாரணத்திற்கு இப்போ நடக்கும் அ.தி.மு.க. ஆட்சி மக்களுக்கு பிடிக்கவில்லை என வைத்துக்கொண்டால் அவர்கள் அடுத்த தேர்தலில் தி.மு.க.விற்கும் வாக்களிக்கக் கூடாது.(ஏனென்றால் அவர்கள் சரியில்லை என்று ஏற்கனவே தெரிந்தது தான்)..ஆனால் இந்த அறிவு வருவதற்கு ஆண்டுகள் பல ஆகும்.மேலும் வேட்பாளர்களை நன்கு ஆராய்ந்து அவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்க தனி குழுமம ஒன்று தேவை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் எனக்கு கிடைத்துள்ள ஒரே நம்பிக்கை இன்டர்நெட்.
இது சரியான முறையில் வளர்ச்சி பெற்றால் மேலும் பல நல்லவை நடக்கலாம்.
ஆனால் ஊழல ஒழிப்பு என்பது இந்திய சுதந்திர போராட்டம் என்றால்,நாம் இப்பொழுதுதான் “சிப்பாய் கலக” நிலையில் இருக்கிறோம்.
கண்பத்,
நீங்கள் கூறுவது உண்மையே.
ஆனால் இண்டர்நெட் மூலம் கூட,
சுதந்திரமாக கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள
முடிகிறதே தவிர –
பெரியதாக எதையும் சாதிக்க முடியவில்லை
என்பது தான் உண்மை. பரபரப்பான செய்திகளை,
அதிர்ச்சியூட்டும் தலைப்புக்களுடன் வெளியிட்டால் –
அதிக அளவு மக்களை அது சென்றடைகிறது –
அவ்வளவு தான். அதற்கு மேல் – positive-ஆக
ஒன்றும் செய்ய முடிவதில்லை.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அன்பின் கா.மை.,
எண்ணங்கள் பரிமாற்றம் என்பது ஒரு பத்தாண்டுகளுக்கு முன் இருந்ததை விட பல மடங்கு உயர்ந்துள்ளது.இதனால் ஏற்படக்கூடிய பலன்கள் இன்னும் வரப்போகும் காலங்களில் நிச்சயமாகத் தெரியும்.
இதன் பலன் என்ன என்றால் தேர்தலில் பொதுவாக ஒரு முப்பது சதவிகித வாக்காளர்கள் வாக்களிக்க வருவதில்லை.இந்த விழுக்காடு கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.
இப்பொழுது நாம் படும் அத்தனை இன்னல்களுக்கும் காரணம்
1.ஒன்றும் அறியாதவர்கள் ஓட்டளிப்பது
2.எல்லாம் அறிந்தவர்கள் ஓட்டளிக்காமல் இருப்பது.
இதில் இரண்டாம் பிரிவில் ஓட்டளிப்போர் எண்ணிக்கை அதிகமாவது,நல்லதுதானே!
நன்றி,
Election commission should introduce online voting system to increase polling percentage, Here most of second type of voter will participate in election