யாருக்கும் அநியாயம் செய்ய வேண்டாம் !

யாருக்கும் அநியாயம் செய்ய வேண்டாம் !

யாருக்கும் அநியாயம் செய்யப்படுவதை நான்
விரும்பவில்லை !

இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படி ?
விவரமாகச் சொன்னால் தானே உங்களுக்கு
தெரியும். இதோ சொல்கிறேன் –

தமிழ் நாட்டின் தற்போதைய அமைச்சர்களில் சிலர்
2006 தேர்தலின் போது கொடுத்த
சொத்து விவரங்களும், தற்போது
2011 தேர்தலின் போது கொடுத்துள்ள
சொத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
(இவை அவர்களே தேர்தல் கமிஷனுக்கு
கொடுத்துள்ள விவரங்கள் )

பெயர்                          2006              2011      (கோடிகளில்)-

மாண்புமிகு திரு. –
மு.கருணாநிதி  –   26.52    –   44.14
வீரபாண்டி ஆறுமுகம்- 1.05    –    4.94
துரை முருகன் –     2.33    –    6.20
பொன்முடி   –      2.50    –    8.22
கே.என்.நேரு –     2.83    –   17.77
எம் ஆர்கே ப.செல்வம் 1.04    –    6.14
சுரேஷ்ராஜன்   –     0.20    –    3.21
பரிதி இளம்வழுதி –   0.62    –    6.49
எ.வ.வேலு    –     –       –   —                    7.95
கேகேஎஸெஸ்ஸார் –  1.08    –    3.95
பெரியகருப்பன்   –    0.80    –    4.21
தங்கம் தென்னரசு –   0.51     –   2.35
உபயதுல்லா –       5.46    –    9.94
வெ.கோ.சாமிநாதன்-  0.86    –    4.85
பூங்கோதை     –     1.35    –   15.43
கீதா ஜீவன்   –      1.35     –    2.82
தமிழரசி   –        0.03     –    0.75
ராமச்சந்திரன் –      3.55     –    6.63

மேற்கண்ட அமைச்சர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு
முன்னர் வைத்திருந்த சொத்து எவ்வளவு –
இப்போது காட்டி இருக்கும் சொத்து எவ்வளவு
என்பதை மேலே விவரமாகக் காணலாம்.
(இவ்வளவு தானா என்று ஏடாகூடமாக கேட்டால் –
என்னிடம் பதில் இல்லை.
அவர்கள் காட்டி இருப்பது இவ்வளவு தான் !)

சொத்து -இரண்டு மடங்கு, மூன்று மடங்கு,
நான்கு மடங்கு அளவிற்கு கூட பெருகி இருப்பதைப்
பார்க்கலாம்.
5 ஆண்டுகளில் எல்லாரும் நன்றாக வளம்
கொழித்து,செழித்து இருப்பதை மேற்படி
விவரங்களில் பார்க்கலாம்.

வரவிருக்கும் தேர்தலில் –திமுக வை  பிடிக்காதவர்கள்
எப்படியும் அந்தக் கட்சியைச் சேர்ந்த யாருக்கும் ஓட்டு
போட மாட்டார்கள்.எனவே இந்த வேண்டுகோள்
அவர்களுக்கு அல்ல.

திமுக அனுதாபிகள், அதிமுக கூட்டணியைப்
பிடிக்காதவர்கள் – ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள்.

நான் சொல்ல வந்தது –

திமுக அனுதாபிகளே !
எதிலும் ஒரு நியாயம் வேண்டும் என்பதை
நீங்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வீர்கள். எனவே
திமுக கூட்டணி ஜெயித்து ஆட்சிக்கு  வர வேண்டும்
என்கிற உங்கள் ஆசை நிறைவேறினால் கூட,

மேற்கண்ட நபர்களும்
தேர்தலில் வெற்றி பெற்றால் – மீண்டும்
அவர்கள் தான் அமைச்சர் ஆவார்கள்.அதைத்
தவிர்க்கவே முடியாது.

கட்சியில் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க –
வேண்டாமா ?எல்லாரும் பிழைக்க வேண்டாமா ?
எனவே திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட
மேற்கண்ட நபர்கள்  ஜெயிக்காமல் பார்த்துக்கொள்ள
வேண்டியது உங்கள் பொறுப்பு.

அப்போது தான் கட்சியில் மற்றவர்களும்
பிழைக்க வாய்ப்பு கிடைக்கும். நான் யாருக்கும்
அநியாயம் செய்யச்சொல்லவில்லை.
எல்லாருக்கும்  வாய்ப்பு கொடுக்கப்பட
வேண்டும் என்று தான் சொல்கிறேன்.

சரி தானே உடன்பிறப்புக்களே ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.