இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ?
நினைத்தால் மாற்ற முடியாதா !

ஆனந்த விகடன் வார இதழ் –
சமுதாயத்தில் அக்கரையுள்ள, வித்தியாசமான
சில முக்கிய மனிதர்களைச் சந்தித்து தமிழக
தேர்தலைப் பற்றியும், பிரதான முதலமைச்சர் வேட்பாளர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைப்பற்றியும், அவர்களின் கருத்துக்களைக்
கேட்டுள்ளது.
அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட
கருத்துக்களின் சாரம் –
மனித உரிமகள் மீறல் குறித்து எவிடென்ஸ் கதிர் –
கருணாநிதி ஆட்சியில் நடந்த என்கவுண்டர்களும்,
உத்தப்புரம் பிரச்சினகளும் சரி,
ஜெயலலிதாவின் ஆட்சியில் நிகழ்ந்த வாச்சாத்தி கொடுமைகள், சிதம்பரம் பத்மினி பாலியல்
பலாத்காரம் போன்ற நிகழ்ச்சிகளும் சரி –ஒன்றுக்கு
ஒன்று சளைத்தவை அல்ல.
பெண்ணியவாதி ஓவியா –
மதிப்பெண் போடும் அளவுக்கு உங்கள் பட்டியலில்
உள்ள எந்த தலைவரும் நேர்மையானவர் இல்லை.
தமிழ்த் தேசீயவிடுதலை இயக்கம் தியாகு –
கருணாநிதி, ஜெயலலிதா இவர்களுக்கு மாற்றாக
ஓர் அரசியல் தலைமை உருவாக வேண்டும்.
தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் –
அருந்ததியர்க்கு இட ஒதுக்கீடு, திருநங்கைகளுக்கு
நல வாரியம் போன்றவை கருணாநிதி ஆட்சியில்
முக்கியமானவை. ஆனால் உத்தப்புரம் போன்ற
பிரச்னைகளில் தலித் மக்களுக்கு உரிய தீர்வுகள்
கிடைக்கவில்லை.
இவர்களைத்தவிர, வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார்,
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,
சமூக செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ்,எழுத்தாளர்
நாஞ்சில் நாடன், பியுசிஎல் சுரேஷ், எழுத்தாளர்
மனுஷ்யபுத்திரன் ஆகியோரிடமும் கருத்து
கேட்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இருவரிடமும்
வெளிப்படையாகத் தெரியும் பலவீனங்கள் –
கருணாநிதி –
எந்த ஒரு பிரச்னையையும் ஆறப்போட்டு,
ஊறப்போடுவது –
குடும்ப அரசியல் ஆதிக்கம்,
அதிகார துஷ்பிரயோகம்,
லஞ்ச ஊழல்கள்,
ஸ்பெக்ட்ரம் விவகாரம்,
தொடரும் நதிநீர்ப் பிரச்சினைகள்,
இலங்கைப் பிரச்சினையில் தவறான
அணுகுமுறையால் தமிழ் மக்களின் வேதனைக்கு
காரணமானது
ஜெயலலிதா –
தொண்டர்களிடம் இருந்து அதிகமான
இடைவெளி,
அசட்டுத்துணிச்சலுடன் கூடிய அவசர
நடவடிக்கைகள் –
கடந்தகால ஆட்சிகளும், அரசியல் செயல்பாடுகளும்,
சிறுபான்மையினர் மனதில் அச்சமும்,
அவநம்பிக்கையும் –
வைகோ, தா. பாண்டியன் போன்ற
ஈழ ஆதரவாளர்கள் அணியில் இருந்தாலும்
பொது மக்களுக்கும், தமிழ் இன உணர்வாளர்களுக்கும்
இவர் மீது நம்பிகையின்மை –
மொத்தத்தில் -கரை படியாத கரங்களுக்கு
இரண்டு வேட்பாளர்களுமே 100 க்கு 10 மார்க்
கூட வாங்க மாட்டார்கள்.
——————–
என்னக் கேட்டால் –
இவை மேலே கூறியுள்ள சமூக உணர்வாளர்களின்
கருத்து மட்டுமல்ல –
கட்சி சார்பற்ற எந்த தமிழரின் கருத்தும்
இதுவாகவே இருக்கும்
எனவே என் கேள்வி இது தான் –
இந்த இரண்டு பேரில் ஒருவரைத்தான் நாம்
தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது என்ன விதி ?
இவர்கள் தம்மை நம் மீது திணிப்பதை
நாம் ஏன் அனுமதிக்க வேண்டும் ?
வேறு யாரையாவது மாறுதலாகக்
கொண்டு வர முயற்சித்தால் தான் என்ன ?
முதல் படியாக –
யாருக்கும் – எந்த ஒரு கட்சிக்கும் –
தனிப்பட்ட பெரும்பான்மை கிடைக்காமல்
செய்து விட்டால் கூட தன்னாலே ஒரு
மாறுதல் வருமென்றே தோன்றுகிறது.
என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே ?
செய்யலாமா ?
(இவர்களால் நாம் பெற்ற அனுபவம் போதும் –
இதற்கு மேலும் இழக்கப்போவது ஏதுமில்லை –
மாறுதலுக்கு ஒரு முயற்சி செய்தால் என்ன
புதிதாக என்ன கஷ்டம் வந்து விடப்போகிறது ?)



கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் – 10 விநாடிக்கு ரூ.9700/-
சன் டிவி க்கு – ரூ.23,474-
தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம். சில விளம்பரங்கள்
3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர்.
அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள்
சூட்டப்படுகின்றன.
அரசு செலவில் இப்படி முதல்வரும், துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை.
அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில், இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால் காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
இது குறித்து செய்தி ஒன்று –
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.
கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான்.
ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!
சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் – முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.
கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் – முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர்.
அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?
சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி –
கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ?
இதில் விநோதம் என்னவென்றால் – அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?)
அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?
எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா?
மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை.
very good man …..
keep your post…..
நன்றி. நல்ல ஒரு சேவையைச் செய்திருக்கிறார், திரு.வி.சந்தானம் அவர்கள். இத்தகைய ஒரு அரிய தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு என்னைப் போன்ற கட்சி சாராத தமிழ் உணர்வாளர்களின் பாராட்டுதல்கள் உரித்தாகட்டும். உங்களின் இந்த வலைத் தளத்தினூடாகவும் நிறைய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்காகவும் நன்றி. அன்புடன், இனியவன்
சமூக நலன் கருதி வெளியிடப்படும் நிறைய தகவல்க்கு என்னைப் போன்ற கட்சி சாராத தமிழ் உணர்வாளர்களின் பாராட்டுதல்கள். நன்றி, நன்றி……………………..