நம்புங்கள் இன்றைய சன் செய்திகளை –
இன்றைய சன் செய்திகள் சொல்லுகிறது.
இன்று (01/01/2011) மாலை மத்திய உள்துறை
அமைச்சர் ப.சிதம்பரம் தமிழக முதல்வர் கலைஞரை
அவரது இல்லத்தில் புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக
சென்று சந்தித்தார் !
—————————————————————————————————————-
பிரதமர் மன்மோகன் சிங் நாளை மாலை சென்னை
வருகிறார் . இரண்டு நாட்கள் சென்னையில் தங்கினாலும்,
கலைஞரை சந்திப்பதாக நிகழ்ச்சியில் இல்லை !
அடையாறு பூங்காவை திறந்து வைப்பதாகவும்,
அங்கு கலைஞரை சந்திப்பதாகவும் ஏற்கெனவே
அறிவித்திருந்ததும் ரத்து செய்யப்பட்டு விட்டது !
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், பிரதமர் வருவது
தெரிந்தும் பூங்காவிற்கு இன்னும் அனுமதி
கொடுக்கவில்லை. (கொடுத்தால் சந்திக்க நேரிடுமே !)
ஸ்பெக்ற்றம் ராஜாவின் அடுத்த சுற்று சிபியய் விசாரணை
எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம்.
இத்தனை இருந்தும் –
இந்த இரண்டு தலைவர்களும் இவை எதை பற்றியும்
பேசுவதற்காக சந்திக்கவில்லை –
சன் சொல்லுகிறது – நம்புவோமே !!
(“அய்யோ, அய்யோ -வர வர எதையுமே
டெலிபோன்ல பேச முடியல்லையே !
நீரா ராடியா டேப்பை நெனைச்சாலே
கதி கலங்குதே. ஒவ்வொண்ணுக்கும்
நேராப் பாத்து பேச முடியுமா?” என்று யாரோ
வடிவேலு ஸ்டைலில் புலம்புவது போல்
உங்களுக்கு கேட்கிறதா ? சே சே – அதெல்லாம்
வெறும் பிரமை ! கடைசியாக டிவி யில் எதாவது
நகைச்சுவை காட்சி பார்த்திருப்பீர்கள் ! )



நம்புவோமே