வித்தியாசமான கண்டுபிடிப்புகள்-
மிகவும் மலிவான
நடமாடும் மாவு அரைக்கும் இயந்திரம்
முதலமைச்சர் நரேந்திர மோடியைப் பற்றி
நமக்கு பல்வேறுவிதமான கருத்துக்கள்
இருக்கலாம். ஆனால் –
குஜராத் மாநிலம் பலவேறு துறைகளிலும்
பிரமிக்கத்தக்க வகையில் வளர்ந்து வருவது
என்னவோ உண்மை தான்.
எளிய,சிறிய வகையிலான கண்டுபிடிப்புகளுக்கு
குஜராத் அரசு ஊக்கமும், முக்கியத்துவமும்
கொடுத்து வளர்த்து வருகிறது.
நம் அன்றாட வாழ்வில் சம்பந்தமுள்ள ஒரு
புதிய கண்டுபிடிப்பைப் பாருங்கள் –
ஸ்கூட்டரினால் இயங்கக்கூடிய ஒரு நடமாடும்
மாவு இயந்திரம் –
படத்தைப் பார்த்தாலே இயங்கும் விதம்
தெரிந்து விடும் !
சிறிய மாவு அரைக்கும் இயந்திரம் ஸ்கூட்டரின்
பின்சக்கரத்துடன் இணைக்கப்பட்டு இயங்குகிறது.
பெட்ரோலில் இயங்குகிறது.
மின்சார இணைப்பு வேண்டாம்.
எப்போது வேண்டுமானாலும்,
எங்கு வேண்டுமானாலும்
எடுத்துச் செல்லலாம்.
வீடு வீடாக, தெருத்தெருவாக,
கிராமம் கிராமமாக எடுத்துச் செல்லலாம்.
கண்ணெதிரே தானியம் அரைக்கப்படுவதால்
சுத்தமாகவும், கலப்படம் இன்றியும் இருக்கும்.
ஸ்கூட்டருடன் சேர்த்து,சாதாரண மாவு அரைக்கும்
இயந்திரத்தின் விலையில் மூன்றில் ஒரு பங்கு
கூட இல்லை.
இட வாடகை இல்லாமல் இயங்கலாம்.
எளிதில் முதல் போட்டு செய்யக்கூடிய
சுயவேலை வாய்ப்புள்ள ஒரு
அற்புதமான கண்டுபிடிப்பு !
– நாளை இன்னுமொரு புதிய கண்டுபிடிப்பு
பற்றிய விவரங்கள் !




I mentioned a couple years back the fear of delimitation will result in less number of representatives for southern states…