……………………………..

…………………………….
திரு. சிவதாஸ் மீனா குறித்த சர்ச்சைகள் –
……………….
இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரியான திரு. சிவதாஸ் மீனா அவர்கள், தமிழக அரசின் பல்வேறு முக்கியத் துறைகளிலும், உச்சகட்ட பதவியான தலைமைச் செயலாளர் பொறுப்பிலும் பணியாற்றியவர். 1989-ஆம் ஆண்டு பேட்ச் (Batch) ஐஏஎஸ் அதிகாரியான இவர், தனது நீண்ட கால அரசுப் பணியில் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.
எனினும், அவரது சமீபத்திய பணி மாற்றங்களும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) தலைவர் பதவியும் பெரும் சர்ச்சைகளைச் சந்தித்துள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திரு. சிவதாஸ் மீனா அவர்கள், சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering) மற்றும் சர்வதேச மேம்பாட்டுப் படிப்பில் (International Development) முதுகலைப் பட்டம் பெற்றவர். 1989-இல் தமிழகப் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கினார். காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியராகத் தொடங்கி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் எனப் பல்வேறு களப்பணிகளை ஆற்றினார்.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலராகப் பணியாற்றிய காலத்தில் பல நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தார். ஜூன் 2023-இல், தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலாளராக (Chief Secretary) நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக இப்பொறுப்பில் நீடித்தார்.
ஆகஸ்ட் 2024-இல், அவர் அக்டோபர் மாதம் ஓய்வு பெற இருந்த சூழலில், ஸ்டாலின் அரசால், தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) தலைவராக நியமிக்கப்பட்டார்.
5 வருடத்துக்கான பணி நியமனம் இது….
………………………………
இந்த நியமனம் முதலே பல்வேறு சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கின.
பாஷ்யம் குழுமத் தொடர்பு: சிவதாஸ் மீனா அவர்கள் –
சென்னை ரியல் எஸ்டேட் துறையில் முக்கியப் புள்ளியாக விளங்கும் ‘பாஷ்யம்’ (Bashyam) குழுமத்திற்கு மிகவும் சாதகமாகச் செயல்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
FSI விதிமீறல் புகார்கள்:
நவம்பர் 2024-இல் சென்னை நகருக்கான FSI (Floor Space Index – மாடி விஸ்தீரண விகிதம்) அதிகரிக்கப்பட்டதில் பாஷ்யம் குழுமத்திற்கு நூற்றுக்கணக்கான கோடிகள் லாபம் தரும் வகையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்டது…..
இந்த FSI அதிகரிப்பு RERA-வின் முறையான ஒப்புதல்கள் இன்றிச் செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
அனுமதியற்ற விற்பனை:
RERA அமைப்பானது விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களைத் தண்டிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளது.
ஆனால், அதன் தலைவராக இருந்த சிவதாஸ் மீனா,
பாஷ்யம் குழுமம் உரிய RERA ஒப்புதல்கள் இன்றிச் சொத்துக்களை விற்பனை செய்ததற்கு அனுமதி அளித்ததாகப் பொதுவெளியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், மீனாவின் இந்த செயல்கள் அனைத்துக்கும் பின்னணியில் முந்தைய திமுக அரசு இருந்தது என்பதும் ஒரு முக்கிய காரணம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பாஷ்யம் நிறுவனத்திற்கு அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட கொடுக்கப்பட்ட அனுமதி தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
தொடர்ச்சியாக எழுந்த ஊழல் புகார்கள், புதிய ஆட்சியில், லஞ்சம் பெற இயலாத இறுக்கமான சூழல் மற்றும் –
இந்த முறைகேடுகள் காரணமாக அரசு தரப்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், தான் ராஜினாமா செய்யும்படி (தவெக அரசால்) அழுத்தம் கொடுக்கப்பட்டதால் (எழுத்து பூர்வமாக அரசு எதுவும் அவருக்கு கடிதம் கொடுக்கவில்லை … ) ராஜினாமா செய்வதாக மீனா செய்தியாளர்களிடையே புகார் சொன்னார்….
திரு.சிவதாஸ் மீனா அவர்களிடம் ஒரு கேள்வி – அவர் உத்தமராக இருந்தால்,
தவறு ஏதும் செய்யவில்லை என்றால் –
அரசு ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தினால், சட்டப்படி, தனது பதவி நியமனம் 5 வருடங்களுக்கானது – எனவே நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று மறுப்பு சொல்லி இருக்கலாமே … மீறினால், நீதிமன்றத்திற்கும் செல்லலாமே…??
சேகர் பாபுவுடன் கூட்டு சேர்ந்து அவர் செய்த தவறான செயல்கள், ஊழல்கள் காரணமாக, தன் மீது ஊழல் வழக்குகள் தொடரப்படக்கூடும் என்ற அச்சம் தானே நிஜமான காரணம்….???
நீண்ட காலம் திறமையான அதிகாரியாக அறியப்பட்ட ஒரு உயர் அதிகாரி, தனது பணிக்காலத்தின் இறுதியிலும் அதற்குப் பின்பும் ரியல் எஸ்டேட் முறைகேடு புகார்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கி, பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலை ஏன் உருவானது … ???
சகவாச தோஷம் …. கூடா நட்பு கேடாக முடியும்…. பன்றியுடன் சேர்ந்த பசுவின் போக்கு எப்படி இருக்கும் … ??? சேகர்பாபுவுடன் சேர்ந்த சிவதாஸ் மீனா ஒரு எடுத்துக்காட்டோ … ???
………………………………………………………………………………………………………………………………………..



காவிரி மைந்தன் சார்…
நீங்க அரசியன் பதிவுகள் எழுதுவதைக் குறைத்துக்கொண்டீர்கள் என்று ஒரு பதிவில் சொல்லியிருந்தீங்க. அதைப் புரிந்துகொள்ள முடிகிறது.. ஆனாலும் டிட்.பிட்ஸாக அரசியல் செய்திகளில் முக்கியமானதை நீங்க பகிர்ந்துகொள்ளணும்.
உதாரணமா, லஞ்சம் கேட்டால் உடனே இந்த நம்பருக்கு புகார், ஈமெயில் என்று தற்போதைய அரசு சொல்கிறது. இதுபோல பல அடிப்படை மாற்றங்களைச் செய்யத் துணிகிறது. இதனைப் பாராட்டணும்.
சில நேரங்களில், ஸ்டாலினோ அல்லது பத்திரிகைகளோ, ஏதோ தமிழக மக்களின் மீது ரொம்ப அன்பு கொண்டவங்க மாதிரி, 40 நாளில் நாலு காவலில் மரணம் என்று சொல்றாங்க. ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது காவலில் மரணம், போதைப் பொருள் ஏஜெண்டுகள் திமுக தலைவருடன் இருந்தது, பேச்சுரிமை முழுமையாகப் பறிக்கப்பட்டது, முதல்வரின் கீழ் இருந்த காவல்துறை செய்த அராஜகங்கள் (சவுக்கு சங்கர் வீட்டில் கழிவைக் கொட்டியது, அவரை தினம் தினம் ஒரு குற்றச்சாட்டினைச் சுமத்தி குண்டாஸ் போட்டது, உண்மையைப் பேசினால் சிறை….. இந்த எதனையும் ஸ்டாலின் கண்டுகொள்ளவே இல்லை. பத்திரிகைகள் ஊடகங்கள் ஜால்ரா அடித்து பணம் அடிப்பதிலேயே குறியாக இருந்தன.
விஜய் அரசு நல்லதை நோக்கி ஒரு ஸ்டெப் வைப்பதையும் நாம் குறிப்பிட்டுப் பாராட்டணும். எனக்கென்னவோ ஆக்கபூர்வமான அரசு தமிழகத்துக்கு அமைந்துள்ளது, ஆரம்பத்தில் நிச்சயம் தவறுகள் இருக்கும், இருந்தாலும் நல்லதை நோக்கிப் பயணிப்பதை நாம் ஆதரிக்கணும் என்று தோன்றுகிறது.
சபரீசன் சம்பதப்பட்ட ரியல் எஸ்டேட்டுக்காக அரசு உழைத்தது. உதயநிதி சம்பந்தப்பட்ட நடிகைகளுக்காக அரசு உழைத்து போட்டிகள் நடத்தியது. அரசை எதிர்த்துப் பேசினால் குண்டாஸ் போட காவல்துறை உழைத்தது. உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தானே ஆகணும்?