விஜய் குறித்து – காமெடியான ஒரு நிஜத்தகவல் ….!!! பிரேம்ஜி வீடியோ..

……………………………………….

………………………………………..

வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல்வர் விஜய், நடிகராக இருந்த போது நடித்த படம் “கோட் “….. இதன்பிறகு விஜய் நடிப்பில் எந்த படமும் இன்னமும் வெளியாகவில்லை..

“கோட்” படத்தில் வரும் காட்சி ஒன்றில், டிராபிக் போலீசிடம் – பிரேம்ஜிஅமரன் மாட்டிக்கொள்வார்.

அப்போது டிராபிக் போலீசிடம் பிரேம்ஜி எகிறுவார்.. எங்க மாமா யார் தெரியுமா? அவர் கட்சி என்ன தெரியுமா.. கட்சி பெயரை சொல்லக்கூடாது என்று கூறியிருக்கிறார். அவர் நினைத்தால், நீ பதவியில் இருக்க மாட்டாய்.. இந்தா – என் விஜய் மாமாவிடம் பேசு என்று போன் போட்டுக் கொடுப்பார்..

போனில் விஜய், அந்த டிராபிக் போலீசிடம், அவரது பெயரை கேட்பார். அதற்கு டிராபிக் போலீஸ், அதெல்லாம் எதற்கு சார்.. ராங் ரூட்டில் வந்து ரூல்ஸ் பேசிக்கொண்டு இருக்கிறான் என்று கூறுவார்.

தொடர்ந்து விஜய் பெயரை வலியுறுத்தி கேட்பார். அப்போது அந்த போலீஸ், நான் எஸ்ஐ இளவரசு என்பார்..

தொடர்ந்து பேசும் விஜய், அவன் பண்ண தவறுக்கு என்ன அபராதமோ, ஒரு ரூபாய் கூட குறையில்லாமல் அதை வாங்கிவிடுங்கள்.. அவன் ஏதாவது செய்து எஸ்கேப் ஆனது தெரிந்தால்,

“உங்கள் மீது நான் கேஸ் போடுவேன் “என்று கூறுவார்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பிரேம்ஜி அமரன் “நமது முதலமைச்சர் விஜய் அண்ணா, மிகவும் கண்டிப்பானவர்; எனவே, அனைவரும் நல்லவர்களாக இருங்கள், நல்லதையே செய்யுங்கள் ” என்று கூறியுள்ளார்.

இதில் காமெடியான விஷயம் என்னவென்றால்,

கோட் படத்தில் எஸ்ஐ இளவரசாக நடித்து பிரேம்ஜியை பிடிக்கும் நபர், இப்போது தவெக எம்எல்ஏ ஆகி இருக்கிறார்………. சேலம் எம்எல்ஏ பார்த்திபன் தான் கோட் படத்தில் டிராபிக் எஸ்ஐ ஆக நடித்திருந்தார்

சுவாரஸ்யமான அந்த வீடியோ காட்சி கீழே –

…………………………..

………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to விஜய் குறித்து – காமெடியான ஒரு நிஜத்தகவல் ….!!! பிரேம்ஜி வீடியோ..

  1. Abhi's avatar Abhi சொல்கிறார்:

    why is he looking for tax exemption

பின்னூட்டமொன்றை இடுக