…………………………………

…………………………………..
ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே
வாழ்வதில் தவறில்லை…
ஆனால், அந்த வட்டம்தான் வாழ்க்கை என்று நாம் நினைத்துக் கொள்வதும் தவறு…
அதற்குள்ளேயே வாழ்ந்து முடிப்பதும் தவறு…
இந்த உலகம் மிகப்பரந்து விரிந்தது…
நம்மை ஏன் நாம் சுருக்கிக் கொள்ள வேண்டும்?
எல்லையில்லாதவனை உணரும் வரைதான் எல்லைக்குள் நாம் வாழும் வாழ்வென்பது….
அதுவரை சுவற்றில் எறியப்பட்ட பந்தாக, வினைகள், எதிர்வினைகளாக திரும்பி வந்து கொண்டே இருக்கும்….
நிம்மதி எப்போதும் நம் உள்ளங்கைக் கனியாகவே இருக்கிறது…
தேவையற்ற விஷயங்களுக்கு
முக்கியத்துவம் கொடுத்து
நாம் தான் அதை எட்டாக்கனி ஆக்கி கொண்டு ஏங்கி துன்பப்படுகின்றோம்….
நம் குழப்பத்திற்கு காரணமே –
நம் மனதின் எல்லை குறுகியதாக இருப்பதுதான்…
நம் மனதை விசாலமாக்குவோம்…
நிம்மதி — தியானம்…
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்…
நாம் நிம்மதியாக இருந்தால்
தியானத்தில் இருப்போம்…
நாம் தியானத்தில் இருந்தால்…
நிம்மதியாக இருப்போம்….
ஒரு யுக்தி…
ஒரு ‘சிலை’ போல் இருக்க வேண்டும்…
உடலில் எந்த ஒரு சின்ன அசைவும் இல்லாமல், இயல்பான சுவாசத்துடன்…
ஒரு சிலையைப் போல் இருக்க வேண்டும்…
ஆரம்பத்தில் சிறிதுநேரம் இருப்பது கூட
சிரமமாக இருந்தாலும்,
நாட்கள் செல்ல செல்ல எளிதாகிவிடும்…
அதிக நேரம் இருக்கமுடியும்…
அந்நிலையில் நம் இயல்பான சுவாசம்,
மெதுவாக…மெதுவாக…மெதுவாக……
மிக மெதுவாக…குறைந்து….தானாக…
ஒரு கட்டத்தில் நின்றுவிட்டது போல் தோன்றும்…
………….
நமக்குள் ஏதோ ஒன்று ஏற்பட்டுவிட்டது என்று பயப்பட வேண்டாம்…
தேவையில்லை…
இழுத்துப் பிடிக்கவும் வேண்டாம்…
விட்டுவிடுவோம்….
நிகழட்டும்…..
IT IS NOT A HEART–ATTACK……!!!
IT IS A GOD–ATTACK……!!!
ஓஷோ…
……………………………………………………………………………………………………………………………………………



கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…