ஜீவநதியை கொல்லும் பாவிகள் ….எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி …???

……………………………………….

……………………………………….

……………………………………..

டெல்லியில் இன்றைய யமுனை நதியின் நிலையை உணர – கீழே உள்ள காணொளியை அவசியம் காண வேண்டும்…

…………………………………………………….

…………………

மேலே உள்ளது டெல்லியின் குடிநீர், நதி பிரச்சினைகளை விளக்குகிறது…. …

…………………………………

கீழே டெல்லியில் – காற்று, சுவாசம் பற்றி கொஞ்சம் ….

………………………………..

சராசரியான டெல்லிவாசி ஒருவர் தன் வாழ்நாளில் 8 முதல் 12 ஆண்டுகளை காற்று மாசு காரணமாக இழக்கிறார் என்கிறது ஒரு சுற்றுச்சூழல் கணக்கு.

அந்தக் கணக்கீட்டின் அடிப்படை அளவான 7-8 ஆண்டுகள் என்பதையே எடுத்துக்கொண்டாலும், ஒரு மாநகரத்தில் பல நூறு பேர் தங்களின் மதிப்புக்குரிய உயிரை இத்தனை ஆண்டுகள் முன்கூட்டியே இழக்கிறார்கள்.

‘பாதுகாப்பானது’ என்று உலக சுகாதார நிறுவனம் சொல்வதைவிட 25 மடங்கு மோசமான மாசு கொண்டது டெல்லியின் காற்று. இந்தியாவில் நாம் நிர்ணயித்திருக்கும் தர அளவீடுகளைவிடவும் 10 மடங்கு மோசமானது. உலகில் மிக மோசமான காற்று மண்டலத்தைக் கொண்ட மாநகரங்களில் டெல்லிக்கு முக்கியமான இடம் உண்டு….

இவ்வளவு மோசமான காற்றை சுவாசிப்பதால் தங்களுக்கு நெருக்கமான உறவுகளைப் பறிகொடுக்கும் மக்கள், தங்கள் ஆட்சியாளர்களை இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு கோர வேண்டும் அல்லவா?

தேர்தலை இதற்கான வாய்ப்பாக அவர்கள் பயன்படுத்திக் கொள்வதுதானே சரியாக இருக்கும். அதிகார நாற்காலியைக் கைப்பற்ற நினைப்பவர்கள், இந்தப் பிரச்னைக்குக் கவர்ச்சிகரமான தீர்வுகளைச் சொல்லியிருக்க வேண்டும். யார் சொல்லும் தீர்ப்பு சிறப்பாக இருக்கிறதோ, அவர்களுக்கு தானே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்க வேண்டும்….???

கடந்த 2020 தேர்தல் அறிக்கையிலாவது ஆம் ஆத்மி கட்சி, ‘டெல்லியின் காற்று மாசு அளவை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்போம்’ என்று பொத்தாம் பொதுவாக ஒரு வாக்குறுதி தந்திருந்தது.

இம்முறை அப்படிக்கூட எதையும் அவர்கள் சொல்லவில்லை. இத்தனை காலம் தங்களுக்கு இருந்த செல்வாக்கு மங்கியிருப்பதை அந்தக் கட்சி உணர்ந்தாலும், ‘சுத்தமான காற்றை சுவாசிக்கத் தருகிறோம்’ என்று வாக்குறுதி தந்தால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என்று நினைக்கவில்லை.

இன்னொரு பக்கம் பா.ஜ.க., காற்று மாசைப் பாதியாகக் குறைப்போம் என்று தெளிவில்லாத வாக்குறுதி ஒன்றைக் கொடுத்திருக்கிறது. ஏர் ஃபில்டர்கள் அமைப்பது, நீர்த் தெளிப்பான்களை நிறுவுவது என்று நடைமுறைக்கு சாத்தியமில்லாத தீர்வுகளைச் சொல்லியிருக்கிறது.

இந்தத் தேர்தலில் – சம்பந்தப்பட்ட கட்சிகளின் – இலவச – அறிக்கைகளைத் தாண்டி மிக முக்கியமான குடிநீர், காற்று மாசு – விஷயம் குறித்து வேறு எங்கும் பேசப்படவே இல்லை. யமுனை நதி மாசுபட்டிருப்பது பற்றிக்கூட மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டார்கள்.

ஆனால், அரசியல் விவாதங்கள் எதிலும் காற்று மாசு குறித்துப் பேசவே இல்லை.

டெல்லியின் இன்றைய அதி முக்கிய பிரச்சினை – யமுனையின் அசுத்தமும், குடிநீரும், காற்று மாசும் தான்….

மாசுபட்ட மற்ற நகரங்களைப் போல இல்லாமல், டெல்லிதான் இந்தியாவின் அதிகார மையமாக இருக்கிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்று தேசத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் இங்குதான் வாழ்கிறார்கள். தங்கள் குடும்பங்களைக் காற்று மாசு எப்படி பாதிக்கிறது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

இருந்தும் ….???

தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் மாசு, வாகனங்கள் வெளியிடும் மாசு ஆகியவற்றை ஆபத்தான பிரச்னைகளாகக் கருதவோ, அவை பற்றி விவாதம் செய்யவோ கட்சிகள் இங்கு தயாராக இல்லை. தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இதனால் பாதிப்பு வந்துவிடும் என்று அவர்கள் மௌனம் காக்கிறார்கள்.

தேர்தல் பிரசாரத்தில் இவற்றைப்பற்றி அதிகம் பேசாமல் தவிர்ப்பது எல்லோருக்குமே வசதியாக இருக்கிறது.

எந்தப் பிரச்னையை முன்வைத்து தேர்தலை சந்திப்பது என்பதை அரசியல் தலைவர்களே முடிவு செய்கிறார்கள். அந்தப் பிரச்னைகளை மட்டுமே அவர்கள் திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள். அவற்றை வைத்தே தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்று மக்களும் தீர்மானிக்கிறார்கள்

” எரிகிற கொள்ளிகளில் – எந்த கொள்ளி – பெட்டர் கொள்ளி …”
என்பதை தீர்மானிப்பது மட்டுமே அவர்கள் முன்னிருக்கும்
ஒரே சாய்ஸ் ….!!!

வாழ்க ஜனநாயகம் …!!!

…………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஜீவநதியை கொல்லும் பாவிகள் ….எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி …???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    யமுனை நதியை கோகுலத்தில் பல முறை கண்டிருக்கிறேன். ஆட்சியாளர்கள் வெட்கம் கெட்டவர்கள், மக்களுக்கும் எதிலும் அக்கறை இல்லை என்பதை நான் உணர்ந்துகொண்டேன். அந்தப் படங்கள் வேண்டுமானால் உங்களுக்கு அனுப்புகிறேன். நுரை நுரையாக ஆறு முழுவதும்….. யார் கெமிக்கலை ஆற்றில் கலக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கக்கூட அரசுக்குத் தெரியாதா?

    இங்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தொழிலதிபர்களுக்கு கூடுதல் பணம் செலவழித்து தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவுகளைச் சரி செய்து பிறகு வெளியே அனுப்புவது வேப்பங்காயாகக் கசக்கும். இதற்கு சுருக்கமான வழி, இன்ஸ்பெக்டர்களுக்கு பணம் கொடுத்து இரவு கழிவுநீரை வெளியேற்றிவிடுவது. மிகப் பெரிய பிரச்சனை ஆனால்தான் பலரும் மாட்டும் வாய்ப்பு. இல்லையென்றால் தப்பித்துவிடுவார்கள். அனுபவத்தில் எனக்கு இந்த தில்லாலங்கடி வேலை தெரியும். இந்த அயோக்கியத்தனம் செய்யும் இன்ஸ்பெக்டர்களை வேலையிலிருந்து தூக்கினால் போதும்.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    காணொளி கண்டேன். வாரணாசியில் இருக்கும் அசி நதியில் கண்ணுக்கு முன்னால் கழிவு நீரை விடுகிறார்கள் (மாநகராட்சி). கங்கையையும் மாசுபடுத்துகிறார்கள். (அசி நதி கங்கையில் கலக்குது). கங்கையில் வெள்ளம் வந்தால் திருட்டுத்தனம் மறைந்துவிடும் என்று கருதுவதே காரணம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.