சொகுசு கார்… 13 பேர்… 27 வீடியோக்கள்..!!! – அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்…

……………………………….

…………………………………….

ஜூனியர் விகடன் வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் கட்டுரையிலிருந்து –

………………………………

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே, மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஊழியர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி கிளப்புகின்றன!

நம்மிடம் பேசிய முன்னாள் பேராசிரியர் ஒருவர், “பல்கலை மாணவியைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய ஞானசேகரனின் மனைவி, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறார். அதனால், மனைவியின் பெயரைச் சொல்லி பல்கலைக்கழக வளாகத்துக்குள் அடிக்கடி வந்து செல்வார் ஞானசேகரன். அப்போது செக்யூரிட்டிகள், ஊழியர்கள், பேராசிரியர்கள், ஒரு சில மாணவ, மாணவிகளிடமும் ஞானசேகரன் பழகியிருக்கிறார். இதற்கிடையே, பல்கலை வளாகத்தின் இருட்டான பகுதிகளில், சமூக விரோதிகள் சிலர் நுழைந்து மாணவ, மாணவிகளைப் பாலியல்ரீதியாக அடிக்கடி அச்சுறுத்திவந்தனர். அவர்களில் ஞானசேகரனும் ஒருவர். அவர் பலமுறை, பல மாணவிகளிடம் இதுபோல் அத்துமீறலில் ஈடுபட்டுவந்திருக்கிறார். தற்போதைய சம்பவத்தில் மாணவி தைரியமாகப் புகாரளித்ததால், ஞானசேகரனின் சுயரூபம் வெளியில் தெரியவந்திருக்கிறது. ஆனால், அவரால் பாதிக்கப்பட்ட இன்னும் சில மாணவிகள் அச்சத்தால் புகாரளிக்காமல் இருக்கிறார்கள். அவர்களை மிரட்டி புகாரளிக்க விடாமல் தடுக்கும் வேலைகளில் பேராசிரியர்கள் சிலரே ஈடுபட்டுவருகிறார்கள்” என்றார் அதிர்ச்சியாக.

ஞானசேகரனின் பின்னணி குறித்துப் பேசுகிற தனிப்படை போலீஸார், “சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த மாணவன், எங்களிடம் சில தகவல்களைக் கூறியிருந்தார். அவர் அளித்த தகவலின் அடிப்படையிலும் ஞானசேகரனிடம் விசாரித்தோம். அப்போது, ‘எனக்கு யுனிவர்சிட்டியிலும் வெளியிலும் நிறைய செல்வாக்கு இருக்கிறது. ஏற்கெனவே பலமுறை ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு நெருக்கமான அதிகாரப்புள்ளிகளுக்கு போன் செய்வேன். அவர்களிடமிருந்து ஸ்டேஷனுக்கு ஒரு போன் கால் வரும். உடனே, பேருக்கு ஏதாவது ஒரு சின்ன கேஸைப் போட்டுவிட்டு, என்னை விட்டுவிடுவார்கள்’ என்று கூலாகப் பதிலளித்தார் ஞானசேகரன்.

அவரின் செல்போனை ஆய்வுசெய்தபோது, மாணவிகள், வேறு பல பெண்களுடன் அவர் பாலியல்ரீதியாக இருக்கும் 27 வீடியோக்கள் இருந்தன. பல்கலைக்கழக வளாகம் மட்டுமல்லாமல், வெளியிலும் இதே பாணியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்திருக்கிறார். தனிமையில் இருப்பவர்களை மிரட்டிப் பணம் பறித்ததும் தெரியவந்திருக்கிறது. சம்பவத்தின்போது, விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்று பல்கலைக்கழக வாசலருகே நின்றிருந்திருக்கிறது. அந்த கார் குறித்தும் விசாரித்துவருகிறோம்” என்றனர்.

இந்த வழக்கை விசாரித்துவரும் காவல்துறை உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “சம்பவத்தன்று ஞானசேகரன் செல்போனில் பேசியபோது குறிப்பிட்டதாகச் சொல்லப்படும் ‘சார்’ யாரென்று கண்டறிய, அவரின் தொடர்புகளை விசாரித்தோம். அதில் சில பேராசிரியர்கள், ஊழியர்கள், செக்யூரிட்டிகளின் விவரங்கள் கிடைத்திருக்கின்றன. 13 பேர் எங்களின் சந்தேகப் பட்டியலில் இருக்கிறார்கள். சிகிச்சையிலிருக்கும் ஞானசேகரனை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவுசெய்திருக்கிறோம்” என்றனர்.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணைக்காக, ஐமான் ஜமால், சினேகபிரியா, பிருந்தா என மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளைக்கொண்ட சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கும்… விசாரணையும்… குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் நீதியும்… ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்!

……………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சொகுசு கார்… 13 பேர்… 27 வீடியோக்கள்..!!! – அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்…

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அந்த ‘சார்’ யாரோ…. ஆனால் ஞானசேகரனின் தொடர்புகள் என்று சொல்லும் காணொளிகள் எங்கெங்கோ போகின்றன. இந்த மாவுக்கட்டும் புகைப்படத்திற்கானது, FIR தப்பிக்கவைக்கும்படி போடப்பட்டிருக்கிறது என்றெல்லாம் படிக்கிறேன்.

    இந்த ஆட்சியில், திமுக சம்பந்தமானவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று அரசுத்துறைகள் முதற்கொண்டு செயல்படுகின்றன. எல்லாம் காலத்தின் கோலம். காசை விட்டெறிந்தால் பிச்சைக்கார வாக்காளர்கள் பலர் வாக்களித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையை, ஈரோடு கிழக்கு போன்ற பல தொகுதிகள் நிரூபித்திருக்கின்றனவே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.