சில ஜோக்குகள் கேட்பதில் சுகம்… சில படிப்பதில் …கீழே க்ரேசி மோகன் ஜோக்ஸ் – படித்து, சிரித்து, ரசிக்க …!!!!

………………………………………………

……………………………………………..

இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க…?
மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?

இப்ப மருந்து கொட்டிடுச்சி.

…………………….

என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை
அவ பார்த்திட்டா…!!

அய்யோ…!! அப்பறம்?

“சாத்திட்டா”

…………………….

கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக்
காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா?

முழுகாம இருக்கா..!!! …. ???

……………………

DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி
இருக்கு?

பேஷண்ட்- போயும் போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு
தோணுது டாக்டர்…!!!!

…………………….

“எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு,
உன்னோட அப்பா,
தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே…. ! ….. ஏன்?”

“அப்பாவுக்கு இண்டர்வியூவே எதுவும் வரலை ; …. புதுப்பிக்கணும்…
எங்க தாத்தாவுக்கு இப்ப தான் முதல் இண்டர்வியூ வந்திருக்கு ……!”

………………….

வரதட்சணையை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை
உறுத்திக்கிட்டே இருக்குது….!

அதனால…?

வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு
பிராயச்சித்தம் செய்யப் போறேன்…….!

……………………….

“தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு
கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி……?”

“நான் காதலிச்ச வரைக்கும் –
அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்…..” !!!!

……………………….

ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும் என்ன வித்தியாசம் …………?

ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில்
கோடீஸ்வரனாகி விடுவான்;

கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸுல
ஏழையாயிடுவாரு…!

……………………………

“தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேஷன்ல கையெழுத்து
போட்டுட்டு போகணும் தெரியுதா……?”

“சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத்
திருடப் போகலாமில்லே ஐயா……. ?”

…………………………..

உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக்
கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..?
அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

அட நீங்க ஒண்ணு .. ..
ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல ………!!!

.
……………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக