காயத்ரி ரகுராம் மாறி விட்டார் …!!!

……………………………………….

……………………………………….

இவ்வளவு நாட்களாக, அசட்டுத்தனமாக – தமிழக பாஜக தலைவர்
அண்ணாமலையை கேவலப்படுத்தி, ஏளனமாக எழுதுவதை மட்டுமே
தொழிலாகக் கொண்டிருந்த திருமதி காயத்ரி ரகுராம் –
முதல் தடவையாக, தர்க்கபூர்வமாக ஒரு வாதத்தை
முன்வைத்திருக்கிறார்.

எந்த கட்சியை ஆதரிக்கிறார் – எந்த கட்சியை எதிர்க்கிறார்
என்பது வேறு விஷயம்….. பேசுவது பொருள் உள்ளதாக,
அர்த்தமுள்ள விவாதமாக இருக்க வேண்டும்.

இந்த கோணத்தில், அவரது மாற்றம் வரவேற்கத்தக்கதே.

………………

நான்கு மாநில தேர்தல் முடிவுகள் குறித்த தனது கருத்துக்களை
எக்ஸ் தளத்தில் காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார். அதில் –
வாக்கு சதவீதம் குறித்து புள்ளிவிவரம் பதிவிட்டு பாஜகவை
கடுமையாக சாடியுள்ளார்.

…………
மாநில தேர்தல்கள் மொத்த வாக்குகள்:

மத்திய பிரதேசம்:

காங்கிரஸ் – 1,75,64,353

பாஜக – 2,11,13,278
………………………

ராஜஸ்தான்:

காங்கிரஸ் – 1,56,66,731

பாஜக – 1,65,23,568
………………………

தெலங்கானா:

காங்கிரஸ் – 92,35,792

பாஜக – 32,57,511
………………………

சத்தீஸ்கர்:

காங்கிரஸ் – 66,02,586

பாஜக – 72,34,968

………………………

வாக்கு சதவீதம்:

சத்தீஸ்கர்:

காங்கிரஸ் 42.23%

பாஜக 46.27%

………………………

மத்திய பிரதேசம்:

காங்கிரஸ் 40.40%

பாஜக 48.55%
………………………

ராஜஸ்தான்:

காங்கிரஸ் 39.53%

பாஜக 41.69%

………………………

தெலங்கானா:

காங்கிரஸ் 39.40%

பாஜக 13.90%.

………………………

(மொத்தமாக -)

காங்கிரஸ் – 4.91 கோடி வாக்குகள்.

பாஜக – 4.80 கோடி வாக்குகள்.

………….

நாடு காங்கிரஸை விரும்புகிறது.
கூட்டணி ஒற்றுமை பாஜகவை முடிவுக்கு கொண்டு வரும்.

அரசியல்வாதிகள், வணிகர்கள், சாமானியர்களுக்கு –
பாஐகவின் ஈடி மிரட்டல்கள், பாஜகவின் இந்துத்துவ என்ற பெயரில்
ஊழல், கலவரங்கள், பெண்கள் துன்புறுத்தல், போதைப்பொருள்,
மோசடிகள், பொய்கள், முழுமையற்ற வாக்குறுதிகள் அனைத்தும்
முடிவுக்கு வரும்.

2024-ல் ராகுல் காந்தி வெற்றி பெற்றால் அது ராகுல் காலம்,
2024-ல் மோடி வென்றால் அது ராகு காலம்.

காங்கிரஸ் – 4.91 கோடி
பாஜக – 4.80 கோடி

  • இவ்வளவு பேர் காங்கிரஸுக்கு வாக்களித்திருந்தால்,
    சனாதன தர்மத்தால் எப்படி தோற்றார்கள்?
    கூட்டணி தொகுதி பங்கீடு காரணமாக அவர்கள் தோற்றனர்.
    அது மிகவும் தெளிவாக உள்ளது. காங்கிரஸ் ஒருபோதும் இந்துக்களுக்கு எதிராகவோ, சனாதன தர்மத்தைப் பற்றியோ வெறுப்பை பரப்புவதில்லை.

சமத்துவமின்மை மற்றும் சமூக நீதி அல்லாத குழுக்களை ஒழிக்க
சில பழைய சித்தாந்தம் சக்திகள் பற்றி திமுக பேசியது. அவ்வளவுதான்’
என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லிங்க் – https://kamadenu.hindutamil.in/politics/if-modi-wins-in-2024-it-will-be-rahu-period-according-to-gayathri-raghuram

.
……………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to காயத்ரி ரகுராம் மாறி விட்டார் …!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    காயத்ரி ரகுராம் மாறிவிட்டார் என்பது உண்மைதான். அண்ணாமலையைச் சாடி, அதே சமயம் பாஜக தலைமை பற்றி ஒரு குறையும் சொல்லாமல், அண்ணாமலைமேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தார் (எஸ்.வி.சேகர் மாதிரி). காயத்ரி, எஸ்.வி.சேகருக்கெல்லாம் மரியாதை இல்லை என்பதைப் புரிந்துகொண்டு உடனே விசிக, திமுகவுடன் தொடர்புகொண்டார். இப்போது இனி தனக்கு காங்கிரஸ்/திமுக மாத்திரமே கதி என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி லாவணி பாடுகிறார்.

    இவர்களெல்லாரும், திமுகவின் வாக்குகள், அதிமுகவின் வாக்குகள் போன்றவற்றை ஒப்பிட்டு, திமுக பெற்றது வெற்றியல்ல, அதிமுகவிற்கு மக்களின் ஆதரவு குறையவில்லை என்று ஒருக்காலும் பேசமாட்டார்கள். ஏன், கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது இவர்கள் என்ன பேசினார்கள் என்பதைப் பார்த்தால் இவர்களின் வேடம் புலப்படும். கர்நாடகாவில் பாஜக, முந்தைய தேர்தலைவிட வாக்கு சதவிகிதம் அதிகம், ஆனால் சீட்டுகள் குறைவு. இந்தத் தளத்திலும் நீங்கள் பாஜக தோல்வியடைந்தது என்றுதான் எழுதினீர்களே தவிர, கர்நாடகா பாஜகவை விரும்புகிறது, தேவேகௌடா கட்சியுடன் பாஜக கூட்டுச் சேர்ந்திருந்தால் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று எழுதவில்லை.

    அரசியலில் எந்த ஒரு கட்சியையும் முற்றாக மக்கள் புறக்கணிக்க வாய்ப்பே கிடையாது. ஆனால் வெற்றி தோல்வி என்பதை நாம் சீட்டுகளின் எண்ணிக்கையைக் கொண்டு மாத்திரமே நிர்ணயிக்க வேண்டும்.

    புள்ளிவிவரப் புலிகள், தெலுங்கானாவைச் சேர்த்துக்கொள்வதில்தான் அவர்களது வித்தை வெளிப்படும். தெலுங்கானாவில், முக்கியக் கட்சியே ராவ். அதற்கு அடுத்தது காங்கிரஸ். அங்கு பாஜக என்பது வளர்ச்சியின் ஆரம்பத்தில்தான் இருக்கிறது. அதாவது 2018ல், காங்கிரஸ் 29 சத வாக்கு (59 லட்சம் வாக்குகள்), பாஜக 7 சத வாக்குகள் (14 லட்சம்). 2023ல், காங்கிரஸ் 92 லட்சம் வாக்குகள், பாஜக 33 லட்சம் வாக்குகள். ஆளும் கட்சியைத் தோற்கடிக்கவேண்டும் என்று எண்ணிய மக்கள், ஆட்சிக்கு வரக்கூடிய காங்கிரஸுக்கு வாக்களித்திருக்கின்றனர். அதாவது காங்கிரஸ் 1.6 மடங்கு வாக்குகள் வாங்கியிருக்கிறது, பாஜக 2.3 மடங்கு வாக்குகள் வாங்கியிருக்கிறது. காங்கிரஸ் சீட் எண்ணிக்கையில் 19 சீட்டிலிருந்து 64க்கு (3.3 மடங்கு) தாவியிருக்கிறது, பாஜக 1லிருந்து 8க்கு (8 மடங்கு) அதிகமாகியிருக்கிறது.

    இத்தகைய analysis நம் ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள மாத்திரம்தான் உபயோகப்படும். இதைப்போல் இன்னும் சிலர், வாக்கு சதவிகிதத்தை வைத்து, இத்தனை எம்.பி சீட்டுகள் என்று பிரிக்கின்றனர், ஆனால் எம்பி தொகுதி வாரியாக வாக்குகளைச் சேர்த்தால் பாஜக எங்கேயோ இருக்கிறது, காங்கிரஸ் மிகக் குறைந்த அளவு சீட்டுகளைப் பெற்றுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை, வாக்கு சதவிகித வளர்ச்சி/குறைவு, மொத்த வாக்கு எண்ணிக்கை என்று புள்ளிவிவரங்களை வைத்து எப்படி வேண்டுமானாலும் நாம் பேசிக்கொள்ளலாம். அது நமது விருப்பத்தைச் சொல்லுவதாக மாத்திரமே அமையும். 2023 ODI Cup வெற்றியை, இந்தியாதான் சிறந்த அணி, மொத்த ரன், மொத்த விக்கெட், அதிக செஞ்சுரி என்று எல்லாவிதத்திலும் இந்தியாதான் டாப், ஆஸ்திரேலியா வேஸ்ட் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. பல்லிளித்தது இந்திய அணி.

    • Vicky's avatar Vicky சொல்கிறார்:

      புள்ளிவிவரப் புலிகள், தெலுங்கானாவைச் சேர்த்துக்கொள்வதில்தான் அவர்களது வித்தை வெளிப்படும். — இதைத்தான் நானும் எழுத நினைத்தேன். தெலுங்கானா வாக்குகளை சேர்த்தது தவறு என்று காவிரிமைந்தன் ஐயா அவரது கருத்தில் குறிப்பிடாதது ஆச்சர்யம். காயத்ரியின் வாதம் பச்சோந்தி தனம், இந்த கட்டுரையை தடவிர்த்திருக்கலாம் என்பது எனது பணிவான கருத்து.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அரசியலில் ஓரளவுதான் நாம் அனலைஸ் பண்ண முடியும். 2016ல் ஜெ. பெற்றது மாபெரும் வெற்றி. ஆனால் புள்ளிவிவரங்கள் அப்படிச் சொல்லாது. (ஜெ. தனியாக நின்றார். திமுக+…. என்று பெரிய அணி, இன்னொரு பலம் வாய்ந்த அணி). மத்திய பிரதேஷ் மாபெரும் வெற்றி. காரணம் 3வது முறையாக வெற்றி பெறுகிறது. தெலுங்கானாவில் சந்திரசேகர் குடும்ப ஆட்சியை மக்கள் வெறுத்தனர். ராஜஸ்தானில் எப்போதும்போல ஆளும் கட்சிக்கு கல்தா கொடுத்துள்ளனர். இப்படித்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

    எந்த ஒரு ஆட்சியுமே, இரண்டாவது முறை தொடர்ந்து வெற்றி பெற்றால், அது மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நமக்குப் பிடிக்குதோ இல்லையோ, கேரளாவில் முதல் முறையாக கம்யூனிஸ்ட் கட்சி அப்படி ஆட்சிக்கு வந்துள்ளது. அதிமுக பல முறை அப்படி வென்றுள்ளது. பாஜக அதே போல பல முறை, பல மாநிலங்களில் அப்படி வென்றுள்ளது.

  3. vgchandrasekaran's avatar vgchandrasekaran சொல்கிறார்:

    காயத்ரி ரகுராம் தனக்கான முக்கியத்துவத்தை தனது தனித்துவமான உழைப்பின் வழியே தான் அடைய வேண்டுமே தவிர தனக்கு பிடிக்காத ஒருவரை தரக் குறைவாக விமர்சிப்பது என்பது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதற்கு சமம். இல்லையா தனது கௌரவம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை காவல்துறையிடம் ஒப்படைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அதைவிடுத்து பொறுப்பற்ற சமூக ஊடகவியலாளர்களுக்கு கண்ணியமிக்க வகையில் பேட்டி அளிப்பது அவர்களின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தி வருமானத்திற்கு வழிவகுக்குமே தவிர ஆகப் போவது ஒன்றுமில்லை. இதைத் தாண்டி ஒவ்வொரு முறையும் தேர்தலில் பாஜக சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றிவாகை சூடும்போதெல்லாம் இது போன்று புதிய புதிய நிபுணர்கள் தோன்றி புதிய புதிய கணக்கீடுகளை கூறுவது ஒன்றும் புதிதல்ல. பாஜக வெற்றி அடையும் பொழுது ஜனநாயகம் இறந்துவிட்டது வாக்குச்சீட்டு அடிப்படையிலான தேர்தல் தான் சிறந்தது நம்பகத்தன்மை உடையது என்றெல்லாம் கூறிவிட்டு அதே தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மூலம் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும் பொழுது எதுவுமே நடக்காதது போல் நடந்து கொள்வதும் இந்த நிபுணர்களுக்கு புதிதல்ல. இதையெல்லாம் தாண்டி நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்த நிபுணர்கள் தென்னிந்தியர்கள் அனைவரும் பகுத்தறிவுடன் சிந்தித்து வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை சரியாக செய்வது போலவும் கோ மூத்திர மாநிலங்களைச் சேர்ந்தோர் அடிமாட்டு மந்தை மனநிலையில் பாஜகவின் பின் செல்வது போலவும் தென்னகத்தைப் பார்த்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கருத்துக்களை உருவாக்கி பரப்பி வருகின்றனர். 2024க்கு வெகு தூரம் இல்லை பார்ப்போம் இந்த நிபுணர்களின் ஆருடம் எந்த அளவுக்கு பலிக்கப் போகின்றது என்று.

  4. ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

    பிஜேபிக்கு வாக்களிப்பவர்கள் அடி முட்டாள்கள் போலவும், தாங்கள் தான் இந்த பிரபஞ்சத்தின் அறிவாளிகள் போலும் என்று கனவிலே மிதந்து கொண்டிருப்பவர்களுக்கு அனுதாபத்தை தவிர வேறு என்ன பரிசளிக்க முடியும். ஓட்டப்பந்தயத்தில் ஒரு மைக்ரோ வினாடி வித்தியாசத்தில் தோற்றாலும் , தோல்வி , தோல்வி தான்.
    அடுத்த ஐந்து வருடங்களுக்கு இதுபோன்ற புள்ளிவிவர புலிகளுக்கு துட்டை கொடுத்து கூவ வைத்து ஆறுதல் தேடிக்கொள்ள வேண்டியதுதான்.ஆனாலும் என்ன செய்வது, பிஜேபிக்கு வாக்களித்த கோமூத்திர அடிமுட்டாள்களுக்கு, இந்த புள்ளிவிவரங்கள் எந்த காலத்தில் புரிந்து, அவர்கள் இவர்களுக்கு ஓட்டை போட்டு…
    கஷ்டம் தான்….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.