……………………….

……………………………
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட,
DMK files – என்கிற – திமுக முன்னணித் தலைவர்களின்
சொத்து மதிப்பு விவரங்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டதற்காக
அண்ணாமலை மீது வழக்கு போடுவோம்… அண்ணாமலை ஊர் ஊராக,
கோர்ட் கோர்ட்டாக அலைய வேண்டியிருக்குமென்று
திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மிரட்டி இருக்கிறார்.
இது எந்த அளவுக்கு செல்லுபடியாகும்….?
5 பைசாவுக்கு கூட செல்லுபடியாகாது….
ஏனென்றால், வழக்கு போடுவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட
ஒவ்வொருவரும் தனித்தனியாக (சிவில் அல்லது
கிரிமினல் பிரிவுகளில் …) சொந்த செலவில், மானநஷ்ட வழக்கு தான் போட வேண்டியிருக்கும்….
வீடியோ மிக புத்திசாலித்தனமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.
வீடியோவில் யார் மீதும், எந்தவித குற்றச்சாட்டும் கூறப்படவில்லை.
சும்மா பெயரையும், சொத்து/நிறுவனங்களின் பெயரையும்,
அவற்றின் சொத்து மதிப்பையும் மட்டுமே காட்டுகிறது…..
அந்த சொத்துகள், பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் நபருக்கு
முழுமையாக சொந்தமானவை என்றோ, அவை சட்டத்திற்கு
புறம்பான முறையில் வாங்கப்பட்ட/சேர்க்கப்பட்ட சொத்துகள்
என்றோ, எங்குமே குறிப்பிடப்படவில்லை.
எனவே, இது சட்டப்பரிசீலனையின் முன் நிற்காது.
மேலும் யாராவது தன்னைத்தான் குறிக்கிறது என்று சொல்லிக்கொண்டு
வழக்கு தொடர்ந்தால், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்று
சொல்வது போல், அவர்களாகவே முன் சென்று, நிற்க வேண்டும்.
அவர்களை குறுக்கு விசாரணம் செய்தால், மேலும் பல விவரங்கள்
அம்பலத்துக்கு வரும்…. வேண்டாத வம்பை யாராவது விலை கொடுத்து
வாங்குவார்களா….?
எனவே, அதிக பட்சம், சும்மா –
உங்கள் மீது, மானநஷ்ட வழக்கு ஏன் தொடரக்கூடாது …???
என்று கேட்டு ஒரு வக்கீல் நோட்டீஸ் மட்டும் கொடுத்து விட்டு,
கம்முன்னு கிடக்க வேண்டியது தான்….
( இவ்வளவு விளம்பரம் செய்து வீடியோ வெளியிடும்போது,
அண்ணாமலை தகுந்த சட்ட ஆலோசனை பெறாமலா
செயல்படுவார்.. ??? ஆர்.எஸ்.பாரதியின் உருட்டல் மிரட்டல்கள்
5 பைசாவிற்கு கூட பயன்படாது….!!! )
ஆனால், ஒரு விஷயத்தில், அண்ணாமலைக்கு சங்கடம் வரலாம்.
திரு.ஸ்டாலின் மீது 200 கோடி ரூபாய் சம்பந்தமாக சொன்ன
விஷயம் குறித்து, அவர் விரும்பினால் நிச்சயம் வழக்கு தொடர முடியும்.
அண்ணாமலை பேசிய வீடியோ, அந்த வழக்கிற்கான அடிப்படையாக
அமையலாம்.
ஆனால், இதிலும் ஒரு “விவகாரம்” இருப்பதாகவே தோன்றுகிறது.
இந்த விஷயத்தை அண்ணாமலையும் பேசுவதற்கு முன்பாகவே
யோசித்திருப்பார்… அண்ணாமலையிடம், இதற்கான ஆதாரம்
நிச்சயமாக கிடைத்திருக்கும். ஆதாரமின்றி அண்ணாமலை இதை
கூற வாய்ப்பே இல்லை. ( அந்த ஆதாரம் கூட, எதாவது மத்திய
புலனாய்வு நிறுவனங்களின் உதவியுடன் கிடைத்திருக்கக்கூடும்….)
எனவே, இந்த 200 கோடி ரூபாய் விஷயம் உண்மையென்றால்,
திரு.ஸ்டாலின் இது குறித்து எந்தவித ரீ-ஆக்ஷனையும் காட்ட
வாய்ப்பில்லை…. சும்மா, சடங்குக்காக ஒரு எதிர்ப்பை திமுக
கட்சியின் மூலம் வெளியிட்டு விட்டு, விஷயத்தை மூடி விடத்தான்
முயலும் ….!!!
இந்த ரவுண்டில், அண்ணாமலை ஜெயிக்கிறார் என்றே
நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம்.
.
………………………………………………………………………………………………………………….
இந்த விஷயத்தை மேலும் பரபரப்பாகுவது நிச்சயம் மீடியாக்களின் கையில் தான் உள்ளது.ஆனாலும் ஒட்டுமொத்த தமிழக மீடியாவோ , திமுகவின் கையில் உள்ளது.
அவர்கள் NEET ,STERLITE ,ரம்மி தடை சட்டம், ஆளுநர் விவகாரம் என புது பிரச்சினைகளை கிளப்பி , மக்களை திசை திருப்ப அவர்களுக்கு தெரியாதா என்ன…
பாப்போம், தமிழக மக்களின் தலையெழுத்தை ….
ஆருத்திரா பிரச்னையை ஊதி பெருக்குவார்கள். எல்லாமே ஓரளவுக்குத்தான். ரொம்ப மறைக்க முடியவில்லை என்றால் நியாயவாதி வேஷம் போட ஊடகங்கள் தயங்காது!
முதல் ஒன்பதரை நிமிடங்கள் பார்த்தால் போதும்…
மற்றவை செய்தியோடு தொடர்பு உடையவை அல்ல –
……………………
…………………
இவருக்கு ஏன் எரிகிறது ….???
………………………………………..
……………………………………………
எல்லாம் பயம்தான். அடுத்த கணை இவங்க மீதுதானே. அல்லது ஒருவேளை கேபி முனுசாமி திமுகவுல இடம் போட்டு வைக்கிறாரா என்னவோ.
அதிமுகவின் கடுப்பு என்னன்னா…அவங்களுக்கு தேசிய கட்சியான பாஜகவின் ஆதரவு வேணும், அவங்களோடதான் எம்பி எலெக்ஷனுக்கு கூட்டணி வச்சுக்கணும், 5-6 சீட் கொடுத்து. ஆனால் அண்ணாமலை வெளிச்சத்துக்கு வருவதும், மக்களை அவர் மீது திரும்பிப் பார்க்கவைப்பதும் எடப்பாடி டீமுக்கு எரிச்சலா இருக்கு. பேசாம கே எஸ் அழகிரி போல போட்ட பிச்சையை வாங்கிட்டு நடிச்சுட்டுப் போவாரா ‘தலைவன்’ என்ற போஸ் கொடுக்கிறாரேன்னு எரிச்சல். அண்ணாமலைக்கோ இது ஒரு தேர்வு மாதிரி நினைத்துக்கொண்டு பாஜகவை வளர்க்கப் பார்ப்போம் என்று முட்டி மோதுகிறார், தன் உழைப்பால். பாஜக தலைமையோ, அண்ணாமலையை ஆதரிப்பது இவங்களுக்கு இன்னும் எரிச்சலா இருக்கு (திமுக, தமிழக காங்கிரஸின் தலைவராக இன்னார்தான் வரணும் என்று சொல்லி அவங்களையே போடவைக்கும், கவர்னரையும் அப்படித்தான், மத்த விசிக, கம்யூனிஸ்ட் போன்ற குட்டிக் கட்சிகள் காசு வாங்கிக்கிட்டு திமுக சின்னத்துலயே நிற்க ரெடியாயிடுவாங்க. அதிமுகவினால் இதனை பாஜகவிடம் சாதிக்க முடியாது போலிருக்கு). இந்த எரிச்சல் காரணமாக, போகிற வருகிறவர்கள் எல்லாம் அண்ணாமலையைத் தாக்குவாங்க, இலவச விளம்பரம் அண்ணாமலைக்கு.
புதிய தலைமுறை போன்ற விலைபோன முன்றாம் தர ஊடகங்கள், அண்ணாமலை வாட்ச் சீரியல் நம்பரை ஆராயறானே தவிர, திமுக மீதான குற்றச்சாட்டைப் பற்றி பேசுவதே கிடையாது. அதான் காசு வாங்கியாகிவிட்டதே.
அடுத்து யாராவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஊடகத்துக்கும் அரசு எவ்வளவு பணம் கொடுக்குதுன்னு கண்டுபிடிச்சு பொதுவெளிக்குக் கொண்டுவந்தால் இவங்க பவிசு வெட்டவெளிச்சமாகிவிடும்.
அண்ணாமலை ஸ்டாலின் தவிர்த்து யார் மீதும் ஊழல் குற்றம் சொல்லவில்லை. சொத்து மதிப்பு இவ்வளவு என்று தெரிந்தால் அரசியல்வாதிகள் எப்படி இவ்வளவு சொத்து சம்பாதித்தார்கள் என்று மக்களே infer செய்துகொள்வார்கள்! இதுதான் அவருக்கு வேண்டியது!