மோடிஜி – BBC-க்கு அளித்த ஒரு வித்தியாசமான, பேட்டி…..!!!

………………………………………………

………………………………………………..

மோடிஜிக்கும், பிபிசி-க்குமான இந்த உரசல்
இப்போது, புதிதாக உருவானதல்ல….

இந்த பழைய பிபிசி பேட்டியைப் பாருங்கள்….

படு சூடான, படு சுவாரஸ்யமான பதில்கள் …..

  • Don’t try to preach us
    the Human Rights….
  • You Britishers should not –
    Preach us about Human Rights

……………………………

.
……………………………………………………………………………………………………………….…………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to மோடிஜி – BBC-க்கு அளித்த ஒரு வித்தியாசமான, பேட்டி…..!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    பிபிசி, Human Rights, PETA போன்ற பல ஏஜென்சிகள், மற்ற அரசுகளை மிரட்ட, மேற்கத்தைய நாடுகளால் உருவாக்கப்பட்டவை. I haven’t seen a waste organization like PETA. மனித உரிமையைப் பற்றிப் பேசுபவர்கள் பிரிட்டிஷ் அரசு, அமெரிக்க அரசு ஈராக் ஈரான் மீதான நடவடிக்கை என எதைப்பற்றியும் பேசமாட்டார்கள். அதற்குக் காரணம் அவர்கள் அந்த அரசாங்கத்தின் ஏஜெண்டுகள். ஐநாவும் அப்படியே. இவர்களைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது.

    காஷ்மீர் மனித உரிமை என்று பேசுபவர்கள், ஏன் ஈராக் மீது போர் தொடுத்து அப்பாவிகளைக் கொல்லவேண்டும்? ஏன் ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடுக்கவேண்டும், கொத்துக்குண்டுகளைப் போடவேண்டும்?

    அதனால் மற்றவர்கள் மீது அனுதாபம் இருப்பதுபோல் வரும் இத்தகைய ஆர்கனைசேஷன்களை நாம் நாட்டுக்குள்ளேயே அனுமதிக்கக்கூடாது. இவர்கள் உலக நாடுகளுக்கே வேஸ்ட். இவர்கள் அனைவரும் அடுத்த நாட்டைச் சிதைப்பதற்காக அனுப்பப்பட்டவர்கள். PETA மனிதர்கள் மாமிச உணவு உண்பதையோ, இல்லை பால்வளம் மிக்க நாடுகள் கன்றுகளைக் கொல்வதையோ எதிர்க்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் வெள்ளையர்கள். ஆனால் நாம் கோவிலில் யானைகளை வைத்துக்கொண்டாலோ இல்லை பாரம்பர்யமாக உள்ள ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார நிகழ்வுகளையோ தடுத்துநிறுத்தப் பார்ப்பார்கள், காரணம் அவர்களின் மதவெறி. குத்துச்சண்டையை ஆதரிக்கும் PETA உலகத்திலிருந்து அழிவதுதான் எல்லோருக்கும் நல்லது. அடுத்த நாட்டைத் துண்டாட வரும் பிபிசி போன்ற தொலைக்காட்சிகளை முற்றிலும் தடைசெய்யவேண்டும்.

    அமெரிக்கா, கதாரிலிருந்து இயங்கும் தொலைக்காட்சியை அவர்கள் நாட்டில் அனுமதிக்கவில்லை. அதைப்போன்றே நாமும் பிபிசி சிஎன் என் போன்றவை நம் நாட்டிற்கு எதிராகச் செயல்படும்போது அவைகளைத் தடை செய்யவேண்டும். நம் ரிபப்ளிக் தொலைக்காட்சியை பிரிட்டிஷ் அரசு தடை செய்தபோது ராகுல் எந்த உலகத்தில் இருந்தார்? இல்லை அவரது காங்கிரஸ் கட்சியே ஒரு முறை பிபிசி ஐத் தடை செய்ததே …அதுபற்றி அவருக்குத் தெரியுமா?

    • காவிரி சொல்கிறார்:

      புதியவன், தங்களது கருத்துக்களுடன் நான் பெரும்பாலும் உடன்படுகிறேன். PETA வின் செயல்முறை, அணுகுமுறை வேண்டுமானால் நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். சொல்லும் செய்தியை நாம் கவனிக்க வேண்டும், சொல்பவர் (messenger) முக்கியமல்ல. கோவில்களில் யானை வைத்திருப்பதோ, அல்லது காளைகளை ஜல்லிக்கட்டில் ஏறு தழுவுவதோ, அவர்களின் இயல்புக்கு மாறான / ஒவ்வாத ஒன்று.

      இயற்கை, யானைகளை வேறு நோக்கத்திற்காக படைத்திருக்கிறதே ஒழிய, நமது விருப்பத்துக்காக அல்ல.

      நன்றி

      • புதியவன் சொல்கிறார்:

        நன்றி காவேரி. நில நேரங்களில் நம் கருத்து ரொம்பவே அர்த்தமில்லாமலோ இல்லை ஒருதலைப் பட்சமாகவோ அமைந்துவிடுகிறதோ என்ற எண்ணம் வரும்.

        ஒட்டக ரேஸ்-மத்திய கிழக்கு நாடுகள் (அதிலும் பங்களாதேஷி சிறுவர்களை அதன் காலில் கட்டுவது), குதிரை ரேஸ் (இதனை கண்டுபிடித்து உபயோகித்தது பிரிட்டன்), குதிரை/யானை மேல் அமர்ந்து போலோ விளையாட்டு, ஸ்பெயினின் காளையோடான போட்டி, மனிதனுடன் மனிதன் குத்துச்சண்டை, காட்டு விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும்படியான கொத்துக்குண்டுகளை, ஆபத்தான குண்டுகளை போரில் உபயோகிப்பது, நாய்களை குண்டுகள்/போதை மருந்துகளைக் கண்டுபிடிக்க உபயோகிப்பது, Zooவில் விலங்குகளை அடைத்து வைப்பது…. என்று மிகப் பெரிய லிஸ்டை எழுதலாம். ஏன், தங்கள் தேசத்தின் வெளிச்சத்துக்காக, திமிங்கிலங்களைக் கொன்று அவற்றின் ஆயிலை பேரல் பேரலாக வியாபாரம் செய்துவந்த பிரிட்டன், கடல் வாழ் உயிரினங்களை உணவுக்காகக் கொல்வது, திமிங்கிலத்தின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் வண்ணம் மிக சப்தம் மற்றும் அலைவரிசைகளை ஏற்படுத்தும் கப்பல்கள் விடுவது…. இவையெல்லாம் இயற்கையோடு விளையாடுவது கிடையாதா?

        ஒருவேளை குதிரை, யானைகளை போலோ விளையாட்டிற்காக இயற்கை படைத்திருக்கிறதா? ஸ்பெயின் காளைகளை போட்டிக்காகப் படைத்திருக்கிறதா? ஏன்… வித வித நாய்களை, வளர்ப்புப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பதற்காகப் படைத்திருக்கிறதா (அவைகளை குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் இயற்கைக்கு மாறாக வளர்க்க)

        PETA செய்வது, ஒவ்வொரு நாட்டின் , அதிலும் மேற்கத்தைய நாடுகளின் ஊதுகுழகாக, கலாச்சாரத்தை அழிப்பதற்கான முயற்சியே தவிர அவர்களுக்கும் விலங்குகளின் மீதான அன்புக்கும் சம்பந்தமே கிடையாது. அவர்கள் மேற்கத்தைய நாடுகள் செய்வதை எதையாவது எதிர்த்தோ, குரல் எழுப்பியோ நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

  2. bandhu சொல்கிறார்:

    இவர்கள் சாயம் பலமுறை வெளுத்துவிட்டது. அஜர்பைஜான் ப்ரெசிடெண்ட் பிபிசி நிருபரை வெளுத்து வாங்கிய இன்டெர்வியூவில் ஒரு சிறிய பகுதி – அசாஞ்சே குறித்த மேற்கு நாடுகளின் இரட்டை வேஷம் குறித்து.

    பிபிசி வெளியிடாமல் மறைத்த முழு இன்டெர்வியூ

    மிக சமீபத்தில், கொலம்பியா professor ஜெப்ரி சாக்ஸ் சொன்னது

    பாகிஸ்தான் குறித்த உண்மை பேசியவுடன் லைவ் டிவியில் பேச்சை நிறுத்த கெஸ்ட்டை பாதியில் துண்டித்தது..

    இவர்கள்தான் நமக்கு பாடம் எடுக்கிறார்கள்!

    இவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.