EAM ஜெய்சங்கருக்கு – ஒரு ரசிகர் மன்றமே தொடங்கி விடலாம் போலிருக்கிறதே….!!!

………………………………….

………………………………….

திறமை – எங்கு இருந்தாலும் பாராட்டப்பட வேண்டும்….
கொண்டாடப்பட வேண்டும் – என்பது என் கருத்து……..விரைவில் ஜெய்சங்கருக்கு ஒரு ரசிகர் மன்றம் துவங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நாளுக்கு நாள், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்-
ஒவ்வொரு நிகழ்விலும்,
தன் திறமையையும், புத்திகூர்மையையும் நிரூபித்துக்கொண்டே
இருக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர்.

QUICK and SHARP re-actions on every occasion
prove, Really what he is….!!!

யூ-ட்யூபில் – ஷார்ட்ஸ் வர ஆரம்பித்தது முக்கியமான
தருணங்களில் ஒருவரை ப்ரொஜெக்ட் செய்ய மிகவும்
பயன்படுகிறது…. சுவாரஸ்யமான அனுபவங்கள்….!!!

ஆனால், வடிவேலுவின் “மின்னல்” போல் பிடிப்பதற்கு முன்பே மறைந்து விடுகின்றன இந்த ஷார்ட்ஸ்…. அதனால், பலர் இந்த ஷார்ட்ஸ்-களை “மிஸ்” செய்து விடுகின்றனர்.

(எனவே இனி, என் இடுகைகளில், இத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட ஷார்ட்ஸை அதிகம் பயன்படுத்திக்கொள்ளலாமென்று இருக்கிறேன்…!!!)

கீழே – சில தருணங்களில்- திரு.ஜெய்சங்கர்….!!!

………………….

……………………

…………..

…………

…………..

.
…………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to EAM ஜெய்சங்கருக்கு – ஒரு ரசிகர் மன்றமே தொடங்கி விடலாம் போலிருக்கிறதே….!!!

  1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ………………………………..

    மேலேயுள்ள இடுகைக்கு தொடர்பில்லாத, ஆனால்,
    முக்கியமான ஒரு நடப்புச்செய்தி –

    கரூர் கம்பெனி யார்?

    பாஜக செய்தி தொடர்பாளரும், அக்கட்சியின் மூத்த
    தலைவருமான நாராயணன் திருப்பதி –

    -மீண்டும் திமுக அரசு மீது முக்கிய குற்றச்சாட்டை
    வைத்துள்ளார்.. “கரூர் கம்பெனியிலிருந்து வருகிறோம்,
    பணம் கொடு” என்று சில ரௌடிகள் டாஸ்மாக் ஊழியர்களை
    பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுப்பதாகவும்,
    டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும்
    டாஸ்மாக் தொழிலாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

    காவல் துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த
    நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சாராய விற்பனையில்
    கடும் மோசடி நடப்பதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும்
    குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

    இது குறித்து புகார் தெரிவிப்பவர்களை,
    பணம் கொடுக்க மறுப்பவர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது
    டாஸ்மாக் நிர்வாகம்.

    கோவையில் அனுமதி வாங்கி போராட்டம் நடத்திய ஊழியர்களை
    காவல் துறை மேலிடத்தின் உத்தரவின் பேரில் கைது செய்துள்ளது.

    யார் இந்த கரூர் கம்பெனி?
    இந்த நிறுவனத்தின் பின்னணியில் யார்?

    கொலை மிரட்டல் விடும் அளவிற்கு பலம் வாய்ந்தவர்கள் யார்?

    கரூர் கம்பெனி துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தான்
    இதன் பின்னணியில் உள்ளதாக நேரடியாக குற்றம்
    சாட்டுகிறார்கள் டாஸ்மாக் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள்.
    திமுக அரசின் ஊழல் முறைகேடுகள் தொடர்கின்றன.
    இளம் விதவைகளை அதிகமாக்கும் மது விற்பனையிலும்
    ஊழல், முறைகேடுகளை செய்வது தான் திராவிட மாடல்
    அரசா?

    கரூர் கம்பெனியை கண்டுபிடித்து ரௌடிகளை கைது
    செய்ய வேண்டியது காவல் துறையின் கடமை என
    நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

    https://tamil.oneindia.com/news/chennai/who-is-this-karur-company-asks-bjp-narayanan-thirupathy-and-slams-dmk-minister-senthil-balaji/articlecontent-pf861946-498503.html

    .
    …………………………………………………………………………………

    • புதியவன் சொல்கிறார்:

      சவுக்கு சங்கர் ஒரு காணொளியில் சொல்லியிருந்தார், சாராயம் அமைச்சர் ஆவதற்கு முன்னால், 25C ஸ்டாலின் மனைவியிடம் கொண்டுபோய்க் கொடுத்தாராம். அவர், ஸ்டாலினுக்கு போன் செய்து இப்படி ரூபாயைக் கொடுத்தார் என்று சொல்லவும், சரி, உன் செலவுக்கு வச்சுக்கோ என்று சொன்னாராம். மா.சு. மாதம் 100 கோடி கொண்டுபோய்க் கொடுக்கிறார், (மா.சு கதையை சவுக்கு சொல்லும்போது மிகவும் சுவாரசியமாக இருந்தது. எப்படீல்லாம் அரசியல்ல மேல வர்றாங்க என்பது ஆச்சர்யம்தான்). அளவுக்கு அதிகமா பண வரவு இருந்தால், எப்படித்தான் செலவு பண்ணுவாங்க?

      எனக்கு சில சமயங்களில் தோணும். சட்னு உங்கள்ட 1 கோடியைக் கொடுத்து சும்மா செலவுக்கு வச்சுக்குங்க என்று சொல்றாங்கன்னு வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் ஓரிரு நாட்களில் இன்னொரு கோடியைக் கொடுப்பதற்குள் அதனை எப்படிச் செலவு செய்வீங்க? Asset வாங்க முடியாது, நினைவிருக்கட்டும் (காரணம்… Assetக்கு பணம் கொடுத்து வாங்கும் பழக்கமே கிடையாது, வருமான வரித்துறையும் பார்த்துக்கொண்டிருக்கும்)

  2. bandhu சொல்கிறார்:

    ஜெய்ஷங்கரின் சமீபத்திய ஆஸ்திரிய மீடியாவுடன் இன்டெர்வியூவை பார்க்க முடிந்தது. இன்டெர்வியூ எடுத்தவர் மற்றவரை பேசவிடாமல் குறுக்கே பேசி குழப்புபவர். இவர் ஏற்கனவே புடின் இன்டெர்வியூ எடுத்து அவரை frustrate செய்தவர். ஜெய்ஷங்கர் இவரை எந்த அளவு அழகாக ஹேண்டில் செய்கிறார் என்பதை பார்க்க பிரமிப்பாக இருக்கிறது!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.