
திரைப்படங்களில் நிறைய அரண்மனைகளை
பார்க்கிறோம்…. நமக்கு அருகிலேயே நேரில் ஒரு அரண்மனை
காண முடிந்தால் நமக்கு மகிழ்ச்சி தானே …!!!
பார்க்கலாமா தமிழ் வர்ணனையுடன் –
…….
.
…………………………………………..
திரைப்படங்களில் நிறைய அரண்மனைகளை
பார்க்கிறோம்…. நமக்கு அருகிலேயே நேரில் ஒரு அரண்மனை
காண முடிந்தால் நமக்கு மகிழ்ச்சி தானே …!!!
பார்க்கலாமா தமிழ் வர்ணனையுடன் –
…….
.
…………………………………………..
இந்த அரண்மனையை சென்ற வருடம் மே மாதத்தில் பார்த்தேன். காணொளி முழுவதுமாக விளக்கவில்லை. அரண்மனையை ஒரு சதுரமாக உருவகம் செய்துகொண்டால், அதன் நான்கு மூலைகளிலும் மிக அழகான கோவில்கள் (தங்க கவசங்களுடன்) உள்ளன. அரண்மனைக்கு முன்புறம் மிகப் பிரம்மாண்டமான பரந்தவெளி உள்ளது. அப்போதிருந்த டெக்னாலஜிக்கு ஏற்றவாறு hall நிறைய தூண்களோடு இருக்கிறது (இப்போ உள்ள டெக்னாலஜில தூண்கள் குறைவாகவும், ஹால் விசாலமாகவும் கட்ட இயலும்.
கானாடுகாத்தான் நாட்டுக்கோட்டைச் செட்டியார் இல்லம் போலவும் எனக்குத் தோன்றியது. (மொசைக் தரை மிகப் பழைய டிசைனாக என் கண்ணுக்குத் தோன்றியது. ஆனால் எல்லாமே பளப்பளா என இருந்தன, தரை, தூண்கள், சுவர்கள் என்று பலவும்) நிறைய புகைப்படங்கள் எடுத்தேன்.
பெரும்பாலான அறைகளுக்கு access கிடையாது. அதுபோல அரண்மனையின் பின்பக்கத்தில் அரண்மனையுடன், வேலைக்காரர்கள் மற்றவர்கள் தங்கும் குவார்ட்டர்ஸ் உள்ளது. பராமரிப்பு அவ்வளவாக இல்லாத பகுதி அது.
நேற்று நான் தார் பாலைவனத்தைப் பற்றிய ஒரு சீரீஸ் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் மார்வார் அரண்மனையை விஸ்தாரமாகக் காட்டினார்கள். அதில் எவ்வாறு தண்ணீர் மற்ற வசதிகள் அப்போது அமைக்கப்பட்டிருந்தன என்றெல்லாம். அதனை ஒப்பிடும்போது மைசூர் அரண்மனை பிரம்மாண்டமாக இல்லை.