இந்திய அரசு – தமிழீழத்திற்கு பச்சைக் கொடியா …???

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் முதல் தடவையாய்
விடுதலைப் புலிகளுக்கு நேசக் கரம் நீட்டி இருக்கிறது இந்தியா….

………………………………………………

சீனாவுக்கு இந்திய செக்..! தமிழீழத்திற்கு பச்சைக் கொடி…

விடுதலைப் புலிகளுக்கு நேசக் கரம் …

இதுகுறித்து தமிழீழ ஆதரவாளர்கள் தெரிவிக்கையில்,
“ஒக்டோபர் 10 ஆம் திததி டெல்லியை தலைமையிடமாக
கொண்ட தமிழர்கள் சமூக நல அறக்கட்டளையும், லண்டனைச்
சேர்ந்த சிறுதுளி அறக்கட்டளையும் இணைந்து டெல்லி
இராஜேந்திர பவனில் ஈழத் தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வு
குறித்து ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

லண்டனில் வாசிக்கும் ஈழத் தமிழர் நிலா தலைமையில்
நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி
தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி
கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்தில் இருக்கும் ஜனநாயக
போராளிகள் கட்சித் தலைவர் துளசி, செயலாளர் கதிர், வெளியுறவுத்துறை பொறுப்பாளர் நெல்சன், மட்டக்களப்பு –
அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் நடுவேல், கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஆகியோரும் கலந்து
கொண்டிருக்கிறார்கள். இந்த ஐந்து பேருமே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர்
விடுதலைப் புலிகளை அடியோடு வெறுக்கத் தொடங்கிய
இந்தியா விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடையும்
விதித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் வேட்டையாடப்பட்டனர்.

இந்த நிலையில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மாஜி
விடுதலைப் புலிகளுக்கு விசா கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுடன், சில வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியது சர்வதேச தமிழர்கள்
மத்தியில் பரபரப்பாகியுள்ளது.

இலங்கையில் சீன ஊடுருவலை தடுக்க தமிழீழம் அமைப்பது
தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு என்று இந்தக் கூட்டத்தில்
வெளிப்படையாக பேசப்பட்டுள்ளது” – என்றனர்.

இந்த நிலையில், ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் துளசி
இது தொடர்பில் தெரிவிக்கையில், “விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் தலைமையில் யுத்த களத்தை சந்தித்த போராளிகள் 2009க்கு பின் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு
ஜனநாயக பாதைக்கு திரும்பி தேர்தல் அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள்.

இப்போது இந்தியாவும் மாறி விடுதலைப் புலிகளான எங்களுக்கு
விசா கொடுத்து ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதித்திருக்கிறது.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாங்கள் பா.ஜ.கவைச்
சேர்ந்த சில சட்ட வகுப்பாளர்களை சந்தித்தோம். அவர்களிடம்
சமஸ்டி அமைப்பை அமைப்பதே ஈழத் தமிழர்களுக்கு தீர்வு,
அதற்காக 13 ஆவது சட்ட திருத்தத்தை செயற்படுத்த வேண்டும்,
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும்,
தொல்லியல் துறையினர் ஆய்வு என்கின்ற பெயரில் எங்கள்
நிலத்தை ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டும், ஜனநாயக வழிக்கு
திரும்பி இருக்கும் விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கும் விதமாக விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்கிற கருத்துக்களை வலியுறுத்தியிருக்கிறோம்.

35 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா எங்களுக்கு நேசக் கரம்
நீட்டியிருக்கிறது. அதை வலுவாய் பற்றிக்கொண்டு ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்போம்.

இலங்கை எப்போதுமே இந்தியாவுக்கு சாதகமாய் இருந்ததில்லை.
சீனா மற்றும் பாகிஸ்தான் போர்களில் இந்திய எதிர்ப்பு நிலையைத்
தான் அது எடுத்தது.

இப்போது தென்னிலங்கையை தன் கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்திருக்கும் சீனா இனிமேல் தமிழர்கள் வாழும் வட கிழக்கு மாகாணங்களில் ஊடுருவ முயற்சிக்கும். கடலட்டை தொழிற்சாலை
என்கிற பெயரில் வடகிழக்கு கடல் பகுதியை தன்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது சீனா.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் காலத்தில் இடம்பெற்ற
சில கசப்பான உண்மைகளை மறந்து இந்தியா நீட்டியிருக்கும் நேசக்கரத்தை பற்றி எழ நாங்கள் தயார். இன்னொரு ஆயுதப் போராட்டத்திற்கு சாத்தியமில்லை. யாரும் ஆயுதப் போராட்டத்திற்கு தயாராய் இல்லை. தேர்தல் பாதை தான் சிறந்த வழி” – என்றார்.

ஆலோசனை கூட்டத்தை நடத்திய நிலா இது தொடர்பில் கூறுகையில், “கடந்த ஆறு மாதமாய் திட்டமிட்டு மிகச் சிறப்பாய் நடந்திருக்கிறது
ஈழத் தமிழர்கள் நலன் சார்ந்த ஆலோசனைக் கூட்டம்.

இந்தியாவில் தேசிய பாதுகாப்புக்கு ஈழத்தமிழர் பாதுகாப்பு
முக்கியம். எனவே தான் நாங்கள் பாஜகவைச் சேர்ந்த சில கொள்கை வகுப்பாளர்கள் வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசியிருக்கிறோம். தொடர்ந்தும் பேசி வருகின்றோம்.

தமிழ்நாடு எங்களின் தாய் மடி. ஓடி விளையாடும் இடம். எங்கள் தலைவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட அனைவரும் தமிழ்நாட்டிலிருந்த வரையிலும் பாதுகாப்பாக இருந்தார்கள். ஈழம்
சென்ற பிறகே கொல்லப்பட்டார்கள். எனவே எங்களுக்கு மத்திய அரசு மற்றும் வெளியுறவுத்துறையின் ஆதரவு அவசியம்.

150 ஆண்டுகளுக்கு முன்னர் பிழைக்கப்போனவர்கள் தனி நாடு கேட்கலாமா என்று சிலர் சந்தேகம் எழுப்புகின்றார்கள்.
அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை. அவர்களுக்கு தமிழர்கள்
தான் இலங்கையின் பூர்விகக் குடிகள் என்பதற்கான ஆதாரங்களை கொடுத்திருக்கிறோம்.

இன்று இலங்கையில் சீன ஊடுருவல் அதிகரித்து இந்திய தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. சீன ஊடுருவலைத் தடுக்க ஈழத் தமிழர்களால் மட்டுமே முடியும்.
ஈழத் தமிழர்கள் தான் இந்தியாவின் பாதுகாப்புக் கவசம்.

24 சதவிகிதமாக இருந்த ஈழத் தமிழர்களின் மக்கள் தொகை
இன்று 12 சதவிகிதமாய் குறைந்திருக்கிறது. இதை சரிப்படுத்த
என்ன வழி? ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்ன? என்கின்ற கலந்துரையாடல் தான் நடைபெற்றது.

புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு தமிழீழம் ஒன்றே தீர்வு.

இந்தியாவோ 13ஆவது சட்டத் திருத்தம் தான் தீர்வு என்கிற பல
கருத்துக்கள் இருக்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவிற்குப் பின் தமிழக
தலைவர்கள் சிலர் தாங்கள்தான் ஈழத் தமிழர்களின் பாதுகாவலர் என்கின்ற மனநிலையுடன் செயற்பட்டு வருகின்றனர்.

இது தவறு. எங்களுக்கு தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க,
நாம் தமிழர் என அனைத்து தரப்பினரது ஆதரவும் தேவை. வரும் காலங்களில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஈழத் தமிழர் கலந்துரையாடல் கூட்டம் நடக்கும்.

டெல்லியில் இந்தக் கூட்டத்தை நடத்தியதன் மூலம் எங்களை
இந்தியாவின் கைப்பாவை, உளவுத்துறை, சதி என்கிறார்கள். சொல்பவர்கள் சொல்லட்டும். எங்களைப் பொறுத்தவரை
ஈழத் தமிழர் நலம் தான் முக்கியம்” – என்றார்.

லிங்க் – https://ibctamil.com/article/green-flag-tamil-eelam-india-check-to-china-1667410217

.

…………………………………………………………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to இந்திய அரசு – தமிழீழத்திற்கு பச்சைக் கொடியா …???

  1. புதியவன் சொல்கிறார்:

    //இலங்கையில் சீன ஊடுருவலை தடுக்க தமிழீழம் அமைப்பது
    தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு //

    //விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கும் விதமாக விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்//

    //சீன ஊடுருவலைத் தடுக்க ஈழத் தமிழர்களால் மட்டுமே முடியும்.
    ஈழத் தமிழர்கள் தான் இந்தியாவின் பாதுகாப்புக் கவசம்.//

    //தமிழ்நாடு எங்களின் தாய் மடி. ஓடி விளையாடும் இடம். எங்கள் தலைவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட அனைவரும் தமிழ்நாட்டிலிருந்த வரையிலும் பாதுகாப்பாக இருந்தார்கள்.//

    பரவாயில்லையே…. நல்லா நகைச்சுவையாப் பேசியிருக்காங்க. முதலில் கிரேசி மோஹன் நாடகம் காணொளி போட்டிருந்தீங்க. இதற்கும் காணொளி போட்டிருந்தால், கொஞ்சம் மனதுக்கு ரிலாக்ஸாக இருந்திருக்கும்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      அவசரம், ஆத்திரம், ஏளனத்தில் –
      இதன் பின்னணியில், மத்திய பாஜக
      அரசு இருக்கிறது என்பதை
      மறந்து விட்டீர்கள் போலிருக்கிறதே…!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன் சொல்கிறார்:

        யாராக இருந்தால்தான் என்ன? அவரவர் நாட்டிற்கு, மக்களுக்கு, அவர்களுடைய குழுக்களுக்கு மாத்திரமே அவரவர் விசுவாசமாக இருக்க முடியும். ‘தாய் மடி’ என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சுக்கள். இதுல ‘வெளிநாட்டு’வாசிகள் வேற.. தனக்கு வாழ்க்கை கொடுத்த நாட்டை விட்டுவிட்டு, தங்கள் சொந்த நாட்டிற்கு, இன்னொரு நாட்டின் மூலம் நல்லது செய்யப்பார்க்கிறார்களாம். ரொம்பவே நல்ல நகைச்சுவைதான்.

        • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          அப்படியானால், மோடிஜி இதை முன்னின்று நடத்துவதை
          எப்படி பார்க்கிறீர்கள்… ?

          அதையும் சொல்லுங்கள் பார்ப்போம்…!!!

  2. புதியவன் சொல்கிறார்:

    ஆத்திரம், அவசரம், ஏளனம் என்றெல்லாம் இதுக்கு ரியாக்ட் பண்ணவேண்டாம்னு கேட்டுக்கறேன். அண்டை நாடான இலங்கைக்கு நாம் உதவவேண்டும் என்பதில் தவறில்லை. அவர்கள் அரசியலுக்குள் நாம் நுழைவதும், நம் இந்தியப் பாதுகாப்பை ஒட்டியதுதான். இராஜ தந்திரத்தில் ‘சரி’/’தவறு’ என்று எதுவும் கிடையாது. அதற்கு மேல், ‘தாய்’, ‘இந்தியா மீது பாசம்’, தமிழ் மண்ணில் பாதுகாப்பு, ‘கடந்த காலக் கசப்பான உண்மை’ என்றெல்லாம் ஜல்லியடிப்பதுதான் ஏளனத்துக்கு உரியதாக இருக்கிறது.

    பொதுவாக எந்த ஒரு மனிதனுக்கும் (இதுக்கு விதிவிலக்குகள் இருக்கின்றன. விமர்சனம் தள வாசகர்களுக்கு நிச்சயம் தெரியும்) அவனது நாட்டின்மீதுதான் விசுவாசம் இருக்கும். மதம், மொழி அவனுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தலாம், ஆனால் அவன் விசுவாசம் அவன் வாழும் நாட்டில்தான் இருக்கும். அவன் நாட்டுத் தலைவர்களிடம்தான் இருக்கும்.

  3. bandhu சொல்கிறார்:

    இலங்கைக்கு இந்தியா இதன்மூலம் செக் வைக்கிறது.

    2014-க்கு பிறகு இந்தியாவின் வெளியுறவு கொள்கை reactive and passive என்பதில் இருந்து carrot and stick என்று மாறி இருக்கிறது. இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்தித்த போது வலிய உதவிய இந்தியா, அதற்குப் பின்னரும் சீனாவுக்கு கம்பளம் விரித்த இலங்கைக்கு இப்போது நெருக்கடி கொடுக்கிறது. அதற்கு தமிழ் ஈழம் பிரச்சனை முடிந்தது என்றிருந்த இலங்கையை எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடிக்கிறது!

    இதன் மூலம் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றால் கிடைக்கட்டுமே!

    • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

      அப்படினா சீனா இந்த விசயத்தில் இலங்கைக்கு உதவ முன்வராதா… இது மேலும் பதற்றத்தைத் தானே அதிகரிக்கும்….

      • bandhu சொல்கிறார்:

        சீனா கண்டிப்பாக உதவாது. சீனா இந்த விஷயத்தில் மிகத்தெளிவாக வெளிப்படையாக இந்தியாவை பகைத்துக்கொள்ளாமல் காய் நகர்த்துகிறார்கள்.

        இதனால் வரும் விளைவு என்று பார்த்தால், இலங்கை இனிமேல் அடங்கிவிடும். தமிழர்களுக்கு வசதி , ஈழப்படுகொலைகளுக்கு நீதி விசாரணை, தமிழர்களுடன் அதிகார பகிர்வு என்பது நடக்கும்.

        இந்தியாவின் உலக அளவில் அசுர பலம் என்பது நம்மிடம் உள்ள அளவு பெரிய சந்தை இன்று வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமெரிக்கா பெரிய சந்தை என்பது டாலர் மதிப்பு அதிகம் உள்ளவரைதான். பிரிக்ஸ்+ ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது. அதில் ஒரு ரிசர்வ் கரன்சி வந்தால் அமேரிக்கா ஆட்டம் கண்டுவிடும்.

        பிஜேபி அரசு அதை முழுமையாக உணர்ந்து வெளியுறவு கொள்கைகளில் அடித்து ஆடுகிறார்கள்! ஜெய்சங்கரின் பேட்டிகளை பார்த்தால் மெய் சிலிர்க்கிறது. இந்தியா ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை ஆதரிக்கிறது என்று வெளிநாட்டு மீடியா பிரஸ் மீட்டிங்கில் சொன்னபோது, ஜெய்சங்கர், யூரோப் ரஷ்யாவிடம் இருந்து ஒரு மதிய நேரத்தில் வாங்கும் அளவு ஆயிலை இந்தியா ஒரு மாதத்தில் வாங்குகிறது. போய் அவர்களை கேளுங்கள் என்று முகத்தில் அடித்தார் போல் சொன்னார். அசந்து போனேன்!

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    //ஆத்திரம், அவசரம், ஏளனம் என்றெல்லாம் இதுக்கு ரியாக்ட் பண்ணவேண்டாம்னு கேட்டுக்கறேன். //

    இந்த இடுகையில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, மத்திய அரசின் போக்கில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம். அதை விட்டு விட்டு நீங்கள் ஈழத்தமிழ் அமைப்புகளை ஏளனப்படுத்துவதில் குறியாக இருந்தீர்கள். அதனால் தான் என் பதில் அப்படி இருந்தது…

    நண்பர் bandhu அதைச் சரியாக
    உணர்ந்து கொண்டு எழுதியமைக்காக அவருக்கு என் நன்றி.

    .
    -வாழ்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • Ganapathi Subramanian சொல்கிறார்:

      Cho always used to say that International Relationship or external affairs have to be approached only from the objective of what is required / good for our country. நம் நாட்டின் நலம் மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும் என்பார். In other words, சுயநலம். Current Modi government is clearly going in this direction and we have probably the ablest EAM in the history of India. In our own geo political interest we have to keep Sri Lanka at arms length and for that perhaps Indian government seem to realise supporting Tamil group and Northern and Eastern province of Sri Lanka is essential. I am recalling the visit of Annamalai to Srilanka recently and his speech in Mulli Vaikkal Mutram and perhaps some ground work done during his visit. Any way, let our Tamil brethren live a peaceful live in Srilanka. Personally I do not subscribe to separate Tamil ealem but Tamils enjoying full liberty in a federal set up could be the right solution. Ganapathi Subramanian

    • புதியவன் சொல்கிறார்:

      மத்திய அரசு (பாஜக) இலங்கை விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே சரியாக நடந்துவருகிறது. காங்கிரஸ் இந்த விஷயத்தில் மிக மோசமாகச் செயல்பட்டது (இந்திராகாந்தி காலத்திற்குப் பிறகு).பின்பு வந்த காங்கிரஸ் அரசு. அவர்களுக்குத் தொலைநோக்கு இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தையே, மறைமுகமாக ஆதரித்திருந்தால், ஒரு check & balance இருந்திருக்கும். தேவையில்லாமல் இலங்கை அரசுக்கு உதவினர். இதில் ஜெயவர்த்தனே தொடங்கி ராஜபக்ஷே வரையில், இந்தியாவின் think tankஐவிட மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டனர்.

      பாஜக முதலில் இலங்கை அரசுடன் carrot காண்பிக்கும் வேலையைச் செய்து அதில் பெரும் வெற்றி பெறவில்லை. அதனால் இப்போது ஈழத்தமிழர் நலன் என்று ஒரு துருப்புச் சீட்டை எடுத்துள்ளனர்.

      இதில் இந்தியர்களான நாம் புரிந்துகொள்ளவேண்டியது ஒன்றே ஒன்றுதான். இந்தியாவிற்கு, அதனுடைய நலன் மட்டுமே முக்கியம். அதற்காக இந்தியா எடுக்கும் எந்த நடவடிக்கையையும் இந்தியர்கள் ஆதரிக்கவேண்டும். அவ்ளோதான்.

  5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    // அதற்காக இந்தியா எடுக்கும்
    எந்த நடவடிக்கையையும் இந்தியர்கள்
    ஆதரிக்கவேண்டும்.அவ்ளோதான்…//

    அதாவது, இதில் ஈடுபட்டிருப்பவர்களை,
    எள்ளி நகையாடக்கூடாது ஏளனம் செய்யக்கூடாது…
    அவ்ளோ தான்…!!! 😊

    • புதியவன் சொல்கிறார்:

      நான் இந்தியப் பக்கத்தை மாத்திரம்தான் பார்க்கிறேன். இலங்கையின் பக்கத்தில், credible Tamil leaders யார் யார் இதில் கலந்துகொள்கிறார்கள் என்று பார்க்கணும். As a by product, if Srilanka Tamils are benefited it is welcome.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.